கடந்த காலங்களில் நடந்த தவறுகளை தொடர்பில் சுயவிமர்சனங்களை ஏற்றுக்கொண்டு, நல்லிணக்க செயற்பாடுகள் மூலம் இணக்கத்தை ஏற்படுத்தி கொள்ள முன்வருமாறு, சகல அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை விடுப்பதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான டீயூ. குணசேகர விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினை ஒன்று இலங்கையில் இல்லை என கூறுபவர்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்திருப்பது குறித்து நாம் ஆச்சரியமடையவில்லை. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரையில், ஆணைக்குழுவின் அறிக்கையானது பரிபூர்ணமான, தர்க்கரீதியான,யதார்த்தமான சாதகமான பரிந்துரைகளை கொண்ட குறுகிய மற்றும் நீண்டகால நலன்களை அடிப்படையாக கொண்டது என கருத்துகிறது.
முதலாளித்துவத்துக்கும், பன்னாட்டு தரகுக்கும் முண்டு கொடுக்கும் அரசவையில் இருந்து கொண்டு கம்யூனிசம் பேசும்
திரிபுவாதிகளிடமிருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும்?