முத்துக்கிஷ்ணா சர்வானந்தா இலங்கையில் பிரதான பொருளிளார்களில் ஒருவர். துறைசார் பொருளியல் ஆய்வுகளில் ஈடுபடுபவர். பல புள்ளி விபரங்களையும் தகவல்களையும் உள்ளடக்கிய ஆய்வுக் கட்டுரை ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். முடிவுகளுக்கு அப்பால் விவத நோக்கத்திற்காக கட்டுரை பதிவிடப்படுகிறது.
உள்நாட்டுப் போர் நிறைவடைந்ததன் பின் 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) தொடர்ச்சியாக இரண்டு வருடங்களில் சாதனை மிகு எட்டு வீதம் அல்லது அதற்கு மேலான வருடாந்த பொருளாதார வளர்ச்சி வீதத்தினை இலங்கை எய்தியது. குறிப்பாக 2011ஆம் ஆண்டுக்குரிய பொருளாதார வளர்ச்சி வீதமான 8.3மூ என்பது இலங்கையில் இதுவரை பதிவான அதி உச்ச பொருளாதார வளர்ச்சி வீதமாகும். எவ்வாறாயினும், 2012ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 6மூஇனை கடப்பதே சந்தேகத்திற்குரியதாக உள்ளது. அத்துடன், 2013ஆம் ஆண்டுக்கான வளர்ச்சியும் 2012ஐ விட குறைவதற்கான சாத்தியங்களே காணப்படுகின்றன. இதற்கு அப்பால், பொதுவாக யுத்தத்திற்கு பின்னரான பொருளாதார வளர்ச்சி வீதமானது உலகெங்கிலும் இரட்டை இலக்க வளர்ச்சி வீதத்தினை காண்பதே சர்வ சாதரணமாகும். எனவே, உயர் ஒற்றை இலக்க வளர்ச்சியை 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் இலங்கை எட்டியமை தொடர்பில் அதிக பூரிப்பு கொள்வது அவசியமற்றது.
2012ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுப் பகுதியில், காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதமானது 4.8மூஆக திடீரென சரிந்தது. இது 2009ஆம் ஆண்டு மூன்றாவது காலாண்டு GDP வளர்ச்சிக்குப் (4.2மூ) பின்னரான மிகவும் குறைந்த காலாண்டு GDP வளர்ச்சி வீதமாக காணப்படுகின்றது. கடும் வரட்சியின் காரணமாக விவசாயத் துறையில் 2012ஆம் ஆண்டு மூன்றாவது காலாண்டு எதிர்மறையான வளர்ச்சி வீதமான (-)0.5மூ இனை வெளிப்படுத்தியிருந்தது. 2012ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில், நாட்டின் கிழக்கு, வடக்கு, வடமத்திய, மற்றும் தென் மாகாணங்களின் பிரதான விவசாய மாவட்டங்களில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக விவசாயப் பயிர்கள் பெருமளவு பாதிப்பை எதிர்கொண்டமையினால் விவசாயத்துறை மேலும் வீழ்ச்சியடைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எமது நாட்டில் வருடமொன்றின் கடைசி மற்றும் முதலாவது காலாண்டுகளே பிரதான விவசாய பருவகாலங்களாகும் (பெரும்போகம்).
அதிபிரதானமாக, சேவைகள்துறையில் 2012ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் எட்டப்பட்ட 4.6மூ என்ற வளர்ச்சி வீதமானது, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் சேவைகள்துறையில் எட்டப்பட்ட மிகவும் குறைவான காலாண்டு வளர்ச்சி வீதமாகும். சேவைகள் துறையின் வீழ்ச்சியானது மிகவும் பாரதூரமானதாக கருதப்படுகின்றது. ஏனெனில், இலங்கையின் 2011ஆம் ஆண்டுக்குரிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 58மூ சேவைகள்துறை சார்ந்ததாக இருந்ததுடன், 12மூ மாத்திரமே விவசாயத்துறையின் பங்களிப்பாக இருந்தது.
பொருளாதாரத்தின் புறத்துறைகள் (external sector – வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள்) மேற் கூறப்பட்ட உள்ளு_ர்துறையை (domestic sector) விட நிச்சயமற்றதாக உள்ளன. ஏனெனில், 2012ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் வெளிநாட்டு வர்த்தக பற்றாக்குறையானது (trade deficit) (-)8.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 2012ஆம் ஆண்டின் இறுதியில் வெளிநாட்டு வர்த்தக பற்றாக்குறையானது (-)9.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்து இருக்கலாம் என நம்பப்படுகின்றது. 2012ஆம் ஆண்டின் முதல் பதினொரு மாதங்களில் மொத்த ஏற்றுமதிகள் (அமெரிக்க டொலர்கள் பெறுமதி அடிப்படையில்) (-)6.6மூ வீழ்ச்சியடைந்ததுடன், மொத்த இறக்குமதிகள் (-)4.5மூ இனால் வீழ்ச்சியடைந்துள்ளன. சேவைகள் வர்த்தகத்தின் மூலமான மொத்த வருமானம் மற்றும் நிகர பரிமாற்றங்கள் (net transfers) (வெளிநாட்டுப்பண வருகைகள்-foreign remittances) என்பனவற்றினால் அரைவாசி வெளிநாட்டு வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியும். இருப்பினும் 2012ஆம் ஆண்டு புறத்துறை வெளிக்கொடுப்பனவு நிலையின் (balance-of-payments) நடப்புக்கணக்கில் (current account) (-)4.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பற்றாக்குறை ஏற்படும்.
வெளிக்கொடுப்பனவு நிலையின் மூலதனக் கணக்கின் (capital account) நிகர வருமானம், நடப்புக்கணக்கில் ஏற்பட்டுள்ள பாரிய பற்றாக்குறையை ஈடுசெய்ய இயலாதுபோகும். எனவே, 2012ஆம் ஆண்டின் இறுதியில் ஒட்டுமொத்த வெளிக்கொடுப்பனவு கணக்கில் (overall balance-of-payments accounts) பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் பெருமளவு காணப்படுகின்றன. இருப்பினும் 2011ஆம் ஆண்டின் இறுதியில் காணப்பட்ட ஒட்டுமொத்த வெளிக்கொடுப்பு கணக்கின் பற்றாக்குறையான (-)1.1 பில்லியன் அமெரிக்க டொலர்களைவிட குறைவானதாக இருக்கலாம்.
2013ஆம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) 1பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்த்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளதானது (‘வரவுச் செலவுத்திட்டத்திற்கான உதவி (budgetary support) மற்றும் நாட்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கடன்களை வழங்குவதற்குIMF விரும்புமாயின்’) ஒட்டுமொத்த வெளிக்கொடுப்பனவு கணக்கின் துர்ப்பாக்கிய நிலையை மறைமுகமாக ஏற்றுக்கொண்டதற்கு சமனாகும். அங்கத்துவ நாடுகளுக்கு அபிவிருத்திக்கான நிதியுதவி வழங்கும் உரிமைக்கட்டளை (mandate) சர்வதேச நாணய நிதியத்திற்கு இல்லை. ஒட்டுமொத்த வெளிக்கொடுப்பனவு கணக்கில் பாரிய பற்றாக்குறை அல்லது தமது வெளிக்கடன்களை மீள்செலுத்த (external debt repayments) முடியாதவாரு வெளிநாட்டு செலாவணி இருப்புக்களில் வீழ்ச்சியை எதிர்நோக்கும் நாடுகளுக்கு கடனுதவி வழங்குவதே ஐஆகுஇன் உரிமைக்கட்டளை ஆகும்.
உலகின் இரண்டு பிரதான பன்நாட்டு நிதி நிறுவனங்களான (multilateral financial institutions) சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் நீண்டகாலமாக பணியாற்றும் நிதிச்செயலாளர் அறியாதிருப்பது துரதிஷ்டவசமானது. நிதிச்செயலாளரின் மேற்படி கருத்தானது 2009ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்தது முதல் அரசினால் முன்னெடுக்கப்படும் பொது உட்கட்டமைப்பு அபிவிருத்தி முன்னிலையான பொருளியல் தந்திரோபாயத்தின் நிலையற்றத் தன்மையை ஏற்றுக்கொள்ளும் கருத்தாகவும் பொருளாதார நன்னிலை உணர்வு நலிவுறுதலின் பிறிதொரு வெளிப்பாடாகவும் காணப்படுகின்றது.
நிதித்துறையில் அரச வர்த்தக மற்றும் சிறப்பு வங்கிகளி;ன் ஆதிக்கத்தினாலும் தனியார் வங்கிகளின் பங்குகளை வாங்கும் அரசாங்கம் தமது ஆதரவாளர்களை அத்தனியார் வங்கிகளின் ஆளும் குழுமங்களுக்கு நியமித்து தனியார் வங்கிகளின் செயற்பாடுகளில் தலையீடு செய்வதன் காரணமாகவும் இலங்கையில் நிதித்துறை நெருக்கடிக்குள்ளாகலாம் எனவும் குவைஉh சுயவiபௌ இனுடைய அறிக்கை அண்மையில் எச்சரித்துள்ளது. மேலாக, பிரதம நீதியரசரின் வங்கிக்கணக்கு விபரங்களை நியாயமற்ற மற்றும் சட்டவிரோதமாக வெளிப்படுத்தியதன் மூலம் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளடங்கலான செல்வந்தர்கள் வெளிநாடுகளில் தமது பணத்தை பதுக்கும் செயற்பாட்டை ஊக்குவித்து நிதித்துறை மேலும் சீர்குலைக்கப்பட்டுள்ளது.
பணவீக்கமானது 2012 ஆனி மாதத்திலிருந்து 8.9 வீதத்திற்கும் 9.8 வீதத்திற்கும் இடையே காணப்பட்டு சந்தை உணர்ச்சிமிக்க இரட்டை இலக்கை குறுகியமாக தவிர்த்துள்ளது. 2009 ஆம் ஆண்டு தைமாதத்திற்கு பின்னர் அதிஉச்ச பணவீக்கத்தை 2012ஆம் ஆண்டு மார்கழி மாதத்தின் பணவீக்கமான 9.2மூ காட்டுகின்றது. 2011ஆம் ஆண்டின் இறுதியில் வருடாந்த சராசரி பணவீக்கம் 6.7மூ ஆக இருந்தபொழுதிலும் 2012ஆம் ஆண்டின் இறுதியில் வருடாந்த சராசரி பணவீக்கம் 7.6மூ ஆக உயர்வடைந்திருந்தது. 2008ஆம் ஆண்டு இறுதிக்குப் பின்னரான அதிகூடிய பணவீக்கமாக 2012ஆம் ஆண்டு வருடாந்த சராசரி பணவீக்கம் காணப்படுகின்றது. கடந்த நான்கு வருடங்களில் (2009-2012) 2012ஆம் ஆண்டு இறுதியிலேயே அதிகளவான பணவீக்கம் பதிவாகியுள்ளது.
பிரதம நீதியரசர் மீதான தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான குற்றப் பிரேரணையினால் ஏற்பட்டுள்ள பரந்தளவான அதிர்ப்தியை கட்டுப்படுத்தும் முகமாக அரசதுறைக்கு ஆட்சேர்ப்பு செய்து மற்றும் சம்பள உயர்வு வழங்கி; நடுத்தர வர்க்கத்தினரையும், கிராமப் புற மக்களுக்கு மானியங்கள் மற்றும் ஆடம்பரமான கொடைகளையும் வழங்கி மக்களின் ஆதரவை தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கும் என்பதனால் பொருளாதாரத்தின் உள்ளகத்துறை (domestic sector) தொடர்ந்தும் பாதிப்புக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையானது நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பதற்கு வழி வகுக்கும். மேலும், பிரதம நீதியரசர் மீதான தன்னிச்சையான மற்றும் சட்டவிரோத குற்றப்பிரேரணையினால் ஏற்பட்டுள்ள ஆளுமை சிக்கல்கள், நாட்டில் வணிக நம்பிக்கையை (business confidence) சீர்குலைப்பதாக இருப்பதுடன் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் (குனுஐ) நாட்டிற்குள் வருவதினை பாதிக்கும். நாட்டின் அரசியலமைப்பினை நிறைவேற்று அதிகாரமும் சட்டமன்றமும் அப்பட்டமாக மீறும் நாடொன்றில் எந்தவொரு விவேகமுள்ள வெளிநாட்டு முதலீட்டாளரும் முதலீடு செய்யமாட்டார்கள்.
2013ஆம் ஆண்டில் பொருளாதாரத்தின் புறத்துறைகள் மீண்டும் எழுச்சி பெறுவதற்கான சாதகத்தன்மைகள் எதுவும் இல்லை. ஏனெனில், இலங்கையின் ஏற்றுமதியின் பிரதான சந்தைகளில் (ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம்) தொடரும் நெருக்கடி நிலை, இலங்கையில் சட்ட ஒழுங்கில் மீறல் ஏற்படுத்தியுள்ள எதிர்மறையான எண்ணங்களின் (ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில்) காரணமாக உருவாகியுள்ள நிலை, மற்றும் வெளிநாட்டு செலாவணி சந்தையில் இலங்கை மத்திய வங்கியின் தன்னிச்சையான தலையீடுகளின் காரணமாக ரூபாய் மதிப்பேற்றம் செய்யப்பட்டுள்ளமை என்பன இதற்கான காரணங்களாக உள்ளன. உதாரணமாக, தமது ஏற்றுமதிகளை வளர்ச்சி பெறச் செய்வதற்கு தமது நாணயத்தை சீனா மதிப்பிறக்கம் செய்துள்ளது. இதற்கு முரணாக, இலங்கையில் பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்தில் வைத்துக் கொள்ளும் நோக்குடன் ரூபாய் செயற்கையாக மதிப்பேற்றம் செய்யப்பட்டுள்ளது (இறக்குமதி செலவினை குறைப்பதற்காகவும் மற்றும் வெளிநாட்டு கடன் மீள்செலுத்தலின் சுமையை குறைப்பதற்காகவும்).
2000ஆம் ஆண்டு 6மூ பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டதன் பின்னர் சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் எதிர்மறையான வளர்ச்சியை பொருளாதாரத்தில் பதிவு செய்த 2001ஆம் ஆண்டு பொருளாதார நிலை (-1.5மூ) 2013ஆம் ஆண்டில் மீண்டும் ஏற்படாததாக பொருளாதாரக் கொள்கைகள் அமைதல் வேண்டும்.
Muttukrishna Sarvananthan is a Development Economist by profession and the Principal Researcher of the Point Pedro Institute of Development, Point Pedro, Northern Province. His research publications can be viewed at http://scholar.google.com/ He can be contacted at sarvi@pointpedro.org




முத்துக்கிஷ்ணா சர்வானந்தா இலங்கையில் பிரதான பொருளிளார்களில் ஒருவர். துறைசார் பொருளியல் ஆய்வுகளில் ஈடுபடுபவர். பல புள்ளி விபரங்களையும் தகவல்களையும் உள்ளடக்கிய ஆய்வுக் கட்டுரை ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். முடிவுகளுக்கு அப்பால் விவத நோக்கத்திற்காக கட்டுரை பதிவிடப்படுகிறது.



It is so nice that there is a Point Pedro Institute of Development. I have an Eastern Province Academy of Sciences in my mind. Shirathi is Bandaranaike. 1952. Political Pluralism. D. A. Rajapakse – 8 kids – 5 boys and 3 girls. Electric Chair is still in New York, USA. The only Federal Penitentiary for Capital Punishment is in Terre Haute, Indiana, USA. Dr. Swapan Kumar Ghosh is like Pranab Mukerji. Phone: 812-237-2418. E-mail: Mulkey@biology.indstate.edu. Muttukrishna and Sarvananthan are also familiar names to me. Mother Language Day. 1952. Dhaka, Bangladesh.
கலாநிதி முத்துக்கிருஷ்ணா சர்வாந்தா பொருளியலாரென்பதும்,ஆய்வாளரென்பதுஞ்சரிதாம்.ஆனால், இவரை வழி நடாத்திக் கொண்டிருக்கும் என்.ஜீ.ஓ.க்களையும் அதன் அரசியலையும் எப்படிப் புரிந்துகொள்வது?
கடந்த 2004 களிலிருந்து இவரது ஆய்வுகள் தமிழர்களது சுயநிர்ணயத்துக்கெதிரான திசைவழியிNலுயேதாம் நகர்த்தப்பட்டது. அவரது பெருந்தொகையான ஆய்வுக் கட்டுரைகளைத் தேனி இணையத்தின் ஆசிரியர் ஜெமினி விரும்பிப் பிரசுரித்திருக்கிறார்.
இங்கு கருத்துக்கள்,அது முன்வைக்கும் தரவுகள்-உண்மைகளது திசையில் இலக்கு வைக்கப்படும் புள்ளியே பிரதானமானது. முத்துக்கிருஷ்ணா சர்வாநந்தாவின் சார்பு-அவரது அரசியல் குறித்து என்ன தெரிவோடு நாம் அவரை அண்மிக்க வேண்டும்?
உங்க்ளகது கருத்து சரியானதே! மேலுள்ள கட்டுரை கூட ஒட்டுமொத்த இலங்கையையும் விற்பனைக்குரிய பிரதேசமாக மாற்றுவது எப்படி என்பதையே கூறுகிறது. மறு புறத்தில் இலங்கை எப்படி அடகுவைக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. கட்டுரை விவாத நோக்கத்திற்காகவே பதியப்பட்டது.