மிஞ்சியிருப்பது
இரும்பும் சாம்பலுமே,
மாமிசத்தாலானதும்
சுவாசிப்பதுமாகிய
அனைத்தையும் சுட்டெரித்த பின்
தங்கத்தாலானதும்
துருப்பிடிக்காததுமாகிய
அனைத்தையும் கவர்ந்து சென்றுவிட்டார்கள்.
மாமிசத்தாலாகாததும்
துருப்பிடிக்கக் கூடியதுமாகிய
இரும்பையெல்லாம் சேகரித்து
உப்புக்களியில்குவித்து வைத்திருக்கிறார்கள்.
உப்புக்களியில்
இருபோக மழையில்
துருவேறிக் கிடக்கிறது
கனவு.
காடுகளின் சூரியன்
நந்திக் கடலில்
உருகி வீழ்கிறான்.
கானாங்கோழி
காணாமற்போனவரின்
கடைசிச் சொற்களை
அடைகாத்திருக்கிறது.
நிலாந்தன், 2012 – ஆவணி, யாழ்ப்பாணம்.
……………………………………………………………………………………………………..
உப்புக்களி – கடைசி யுத்தம் நிகழ்ந்த மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் கிராமங்களிற்கும், கடலேரிக்கும் இடைப்பட்ட உப்புச்செறிவானகளி மண் தரை.
கானாங்கோழி – நீர்க்கரைகளில் வளரும் சிறு பற்றைக்; காடுகளில் வசிக்கும் ஒரு வகைச் சிறு பறவை
May 18, 2009. Earnest de Che Guevarra and Rohana Wijeweera combined. As he said he was not caught alive. Tamilians do not have Family Name (Last Name in USA) to begin with as the that is an Aryan Tradition and not a Dravidian one.
‘கடலம்மா நீ மலடி
ஏனந்தத் தீவுகளை
அனாதரவாய்த் தனியே விட்டாய்? ‘
என்று ஆற்றாமையோடு 1985 ல் நடுக்கடலில் இனவெறியர்களால் குதறப்பட்ட குமுதினிக்காக கவியெழுதிய என்னரும் தோழரே…..இன்று எல்லாவற்றையும் இழந்தோம்.தமிழம்மா நீ மலடி என்று குரலெடுத்துப்பாட வேண்டிய பொழுது.கடைசிச் சொற்களை அடைகாத்த கானாங் கோழிகளும் கொலையாகி போன நாட்கள்.வேதனை மையெடுத்து எழுதிய தங்களின் கவிதைக்கு நன்றி.
நட்புடன் முகமிழந்த பிடுங்கி
நிலாந்தன் “‘கடலம்மாவுக்குப்” பிறகு திரும்பவும் பார்த்ததில் மிக மகிழ்ச்சி
கானாங்கோழி
காணாமற்போனவரின்
கடைசிச் சொற்களை
அடைகாத்திருக்கிறது.
மிகவும் துயரம்.
நண்பரே .