கண்ணீரோடு புலர்கிறது பொழுது;
மூஞ்சி நூலில் வடிகிறது,
பலஸ்தீன குழந்தைகளின் குருதி.
புதுக் குடியிருப்பு ஆஸ்பத்திரியில்
விழுந்த ஷெல்லில் அரபிய குழந்தைகள்
உடல சிதறி பலியாகினர்.
புது மாத்தளன், அம்பலவன் பொக்கனை,
ரெட்டை வாய்க்கால் வட்டு வாகல்
அங்கும் இங்கும் மாறி ஓடுகின்றனர்
பாலஸ்தீனியர்.
முள்ளி வாய்க்கால் சாவோலம்
காசா
பள்ளத் தாக்கு எங்கும் எதிரொலிக்கிறது.
ஈச்ச மர புதர்கள் எங்கினும்
இசைப் பிரியாக்களும் பாலச் சந்திரன்களும்.
பாலஸ்தீனிய அரபியர் உடல்கள்
நந்திக் கடலில் மிதந்து வருகிறது
மஹிந்தவின் அதே வார்த்தைகளை ஹிப்ரு மொழியல்
சொல்கிறான் நெதன்யஹு
“ஆடுஅமைதிப் பேச்சுக்கு வரதாம்”
ஓநாய் சொல்கிறது.
மத்தியஸ்தம் செய்ய தயார் என்கிறது கழுகு
நந்தி கடல் வெளியும் காசாவின் மலைச்
சரிவுகளும் சிவந்து போனது ஒரே மக்கள்
குருதியில்
ஈழத்தில் பெய்யும் மழையில் பாலஸ்தீனிய
ஒலிவ் பூக்கும்
பாலஸ்தீனத்தில் தூறும் வெயிலில்
எங்கள் பனைகளின் பாளைகள் விரியும்.
அருமையான கவிதை.