விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்கள், பா.நடேசன், மற்றும் புலித்தேவன் ஆகியோர் படையினரிடம் உயிருடன் சரணடைந்ததை நேரில் பார்த்த இரண்டு சாட்சிகள், முதல்முறையாக சாட்சியமளிக்க முன்வந்துள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் ‘தி இன்டிபென்டென்ட்’ நாளேடு தெரிவித்துள்ளது. பிபிசியின் முன்னாள் செய்தியாளர் பிரான்சிஸ் ஹரிசன், ‘தி இன்டிபென்டென்ட்’ நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் இது தொடர்பாக விபரங்களை வெளியிட்டுள்ளார்.
சரணடைய வந்த புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்களை அவர்களின் ஆதரவாளர்களே சுட்டுக் கொன்றதாக இலங்கை அரசு கூறியதை நிராகரிக்கும் வகையில், அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த இருவர் சாட்சியமளிக்க முன்வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் வெள்ளைக் கொடியை ஏந்தி சரணடைய சென்ற விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் மற்றும் சமாதான செயலக தலைவர் புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சாட்சிகளாக செயற்பட முன்வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் தற்போது லண்டனில் வசித்து வருகின்றனர். எனினும் இலங்கையில் உள்ள தமது உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்காக இவர்கள் தமது பெயர்களை வெளியிட மறுத்துள்ளனர்.
முதலாமவர், விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களுக்கு மெய்காவலராக செயற்பட்டு வந்தார். இறுதிப்போரின் போது காயமடைந்த அவர், படையினரிடம் சரணடைந்த நிலையில் படையினரால் தமக்கு விடுதலைப்புலிகள் தொடர்பில் தகவல் தருபவராக பயன்படுத்தப்பட்டார்.
இந்தநிலையில், தாம் எதிர்ப்பார்க்காத வகையில் நன்கு ஒழுங்கமைப்பட்ட வகையில், விடுதலைப்புலிகள், படையினரிடம் சரணடைய ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார
இந்தநிலையில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பின்னர் சடலங்களாக கிடந்தமையை தாம் கண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆசிரியராக செயற்பட்ட ஒருவர், தாம் விடுதலைப் புலிகளின் நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் சரணடைவதை கண்டதாகவும் பெருமளவான இராணுவத்தினர் முன்னிலையில் இந்த சரணடைதல் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சரணடைந்தவர்கள், கொல்லப்பட்ட நிலையில், சுமார் 40 விடுதலைப்புலிகளின் குழு ஒன்று படையினரிடம் சரணடைய பேச்சுக்கள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள குறித்த ஆசிரியர், அவர்கள் தொடர்பில் இன்று வரை தகவல்கள் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார
இது ஏற்கன்வே தெரிந்த விட்யம் தானே, இது புது செய்தி அல்ல, ஆனால் புலிகலிடம் சாரனடைந்தவரகளுக்கும் இது தானேநடந்தது, தெய்வம்நின்று கொன்று விட்டது அவ்வளவு தான், வினை விதைத்தவர்கள் வினை அறுத்தார்கள், வருத்தப்பட ஒன்றுமில்லை
No Veeran. They were gunned downed with the White Flag for a valid reason. Balasingham Nadesan formerly of the Sri Lanka Police once talked about recapturing lost territory. All knew that was not possible. Then he called Vaiko and noting happened. It was a take no prisoners situation. Pulidevan once talked about giving the Sinhalese the last chance. Nobody else ever said that before. It was a fight to the finish at all costs.
I AGREE,
Thanks Veeran. 1972. Dr. Wickremabahu Karunaratne said we must wither ourselves. His Ph.D. is in Engineering Mathematics.