வன்னி மக்களை கொன்றொழித்த இலங்கை அரசு தன் கொலை முகத்தை மறைக்க தமிழ் நாட்டு சினிமா நடிகர்களை வலை வீசிப் பிடித்து அவர்களை வைத்து போரால் பாதிக்கப்பட்ட மக்களை போக்குக்காட்டி வருகிறது. ராஜபட்சேவின் விருதினராக இலங்கை சென்ற கேரள நடிகை அசின். முகாம்களுக்குச் சென்று பொதுச் சேவை செய்ததாகவும் பலருக்கு தான் கண்சிகிச்சைக்கு உதவியிதாகவும் கூறி வந்தார். தமிழகத்தில் எழுந்த எதிர்ப்புகளின் அரசியல் நோக்கங்களை கணக்கில் எடுக்காத அசின். எதிர்ப்பவர்களை ஏளனம் செய்தார். இது தொடர்பாக தமிழ் சினிமாவிலும் தமிழகத்திலும் அவருக்கு எதிர்ப்பு உள்ள நிலையில் அசின் ராஜபட்சே மனைவியுடன் சென்று வன்னி முகாமில் கண் சிகிச்சை அளித்ததாக கூறப்பட்ட வன்னி மக்களில் 10 பேருக்கு பார்வை முழுமையாக பறி போய் விட்டது என்று மே-17 இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் ‘’ அசினின் செய்ததாகச் சொன்ன மருத்துவ முகாமில் சிகிச்சைப் பெற்ற 10 பேருக்கு பார்வை முற்றிலுமாக பறிபோய் உள்ளது. இன்னு் பலர் வெவ்வேறு சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர். அசின், இந்தி படப்பிடிப்புக்காக இலங்கை சென்றது தவறு. அசின் படங்களை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய தமிழ் பிலிம் சேம்பர் அனுமதிக்கக் கூடாது.படப்பிடிப்புக்கு இலங்கை செல்லும் நடிகர்நடிகைகளின் படங்கள் தென் இந்தியாவில் திரையிடப்படமாட்டாது என திரைப்படக்கூட்டுக்குழு அறிவித்தது. அதை மீறி அசின் இலங்கை சென்று வந்துள்ளார். எனவே ரெடி படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது.இந்தி நடிகர் விவேக் ஓபராயும் இலங்கை சென்று வந்துள்ளார். அவரது ரத்த சரித்திரம் படத்தையும் தென் இந்தியாவில் ரிலீஸ் செய்ய அனுமதிக்கக்கூடாது, என்றார்.அசின் சென்னைக்கு வந்தால் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிவரும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது அசின் பகதர்கட்கும் பக்தைகட்கும் எரிச்சலூட்டும் செய்தி.
ஆனால், அசினால் தான் பார்வை போனதா? செய்தித் தலைப்பு அவ்வாறான எண்ணத்தையல்லவா தருகிறது.
எத்தனை பேரில் எத்தனை பேருக்குப் பார்வை போனது?
மருத்துவர்களல்லவா பதில் கூற வேன்டியோர்?
வலிந்து குற்றங் காண்பது நல்லதல்ல.
முட்டையில மயிர்பிடுங்கிற வேலை இது. நீங்க செய்தாக்க அதுக்குப் பேர் உதவி மற்றவன் செய்தா கண்பார்வையை கெடுக்குறான் எண்ணுகத விடுவியளா?? நல்லகூத்தடா இது. கண்பார்வை குடுக்கிறோம் அகதிமுகாமிற்கு எண்ணு கதைவிட்டு ஐரோப்பாவில காசு சேர்த்து கடை போட்டு உட்கார்ந்திருக்கிற தியாகிகள் இதுவும் சொல்லுவினம்,இன்னமும் சொல்லுவினம். அவையள விட அசின் ஒண்ணும் குரைஞ்சு போகேல்லை.
நான் பார்த்த பிரபல இலங்கை ஊடகங்கள் எவற்றிலும் இச்செய்தி வெளியாகவில்லை. அப்படி இலங்கை ஊடகங்களில் இச்செய்தி வெளியாகியிருந்தால் தயவுசெய்து அந்த ஊடகங்களின் பெயரையும் திகதியையும் பிரசுரிக்கவும். அதுவரை இச்செய்தி நம்பகமற்றது. ஏன் என்றால் இந்த மே17 இயக்கம் புலி ஆதரவாளர்களால் ஆரம்பிக்கப் பட்டது.அவர்கள் உண்மை பேசுவதென்பது மிகவும் அரிதான விசயம். ஆகவே விசயத்தை உறுதிப்படுத்துவது நல்லது.
தயவு செய்து மே17 இயக்கப் புலி ஆதரவாளர்கள் யார் யார் என்று சொல்வீர்களா?
கண்டபடி யாரையும் முத்திரை குத்துவதுநல்லதல்ல.
தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ
பாராதியின் பாடலுக்கு மதுவின் மயக்கமும்,பால் புட்டின் சுவையும், குமுதத்தின் அழகும் உண்ட்.
குமுதம் பத்திரிகையை பாராட்டவேண்டுமென்பதற்காக மறைமுகமாக,குமுதம் பத்திரிகையின் அழகா, அல்லது குமுதமலர் எனப்படும் வெண் ஆம்பல் அழகை குறித்து சொல்லியிருந்தீர்களா,
பாரதி என் பாட்டன் அவன் முத்தாய் தந்த பாட்டில் நான் முத்துக் குளீக்கிறேன்.தமிழ் சொத்தாய் இருக்கும் அவன் கவிதையில் நான் என்னை இழக்கிறேன்.
கரம் மசாலா அவர்களுக்கு, இது மருத்துவத்தை பற்றிய செய்தியாக நாங்கள் வெளியிடவில்லை. மேலும் எண்களின் முழுமையான பத்திரிக்கை குறிப்பும் இங்கு வெளியாக வில்லை. (முழுமையான பத்திரிக்கை செய்தி http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=2730:2010-10-14-16-22-00&catid=1:aktuelle-nachrichten&Itemid=50 )அதை கண்டீர்கள் என்றால் எண்களின் நோக்கம் என்ன வென்று புரியும். வலிந்து குற்றம் காண வேண்டும் என்பது எங்களுக்கு அவசியம் இல்லை. எதனை பேருக்கு பார்வை போனது என்பதை பற்றி சொல்ல வேண்டியது மருத்துவரின் கடமை தான்… ஆனால் அவர் சிங்கள அரசிடம் வேலை செய்பவராகவோ அல்லது அந்த அரசின் கண்காணிப்பில் உள்ள குடிமக்களாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஐ.நா , செஞ்சிலுவை சங்கம் அனுமதிக்கபடாத இடத்தில என்ன நடந்தது என்பதை விளக்க வேண்டியது அரசின் அவசியம். அல்லது அவர்களை அனுமதித்து நேர்மையான, முழுமையான உதவிகளை செய்ய விடுவது எந்த சனநாயக அரசின் கடமை. அதுவும் சிங்கள இன வெறி அரசை விசாரிப்பது நம் கடமை கூட. அசின் எங்களுக்கு ஒரு பொருட்டு அல்ல. ஆனால் அவர் யாரை தமிழகத்தில் முன்னிலை படுத்துகிறார் என்பதே எங்களுக்கு முக்கியம். தமிழ்நாட்டு மக்களுக்கோ, இந்திய மக்களுக்கோ அல்லது அவர் சார்ந்த கேரளா மக்களுக்கோ எந்த தோண்டும் செய்ய தயாராக இல்லாதவர் தமிழ்நாட்டு மக்களை பார்த்து ஏளனம் செய்ய அவசியம் இல்லை. இங்கு எங்கள் மீது வைக்கும் ஸ்ரீலங்கா அரசின் சதிகளை முறியடிக்க எமக்கு தெரியும் . அதற்க்கு பின்னிருந்து உதவும் டெல்லி அரசின் , தமிழ் நட்டு அரசின் உதவிகளையும் வெல்லவும் முடியும்.
c .குமார் அவர்களுக்கு , இலங்கை ஊடகத்தின் மீதான அடக்குமுறை என்ன என்று உங்களுக்கு தெரியாதா? அல்லது அவர்கள் தமிழர்களை பற்றிய அக்கறையுடன் தான் செய்யல படுகிறார்களா? …. உங்கள் ஊடகத்தை நாம் தொடர்ந்து கவனித்து வரத்தான் செய்கிறோம், நங்கள் கேட்பதும் விஷயத்தை உறுதி செய்யுங்கள் என்று தான். ஆனால் மூன்றாம் நபர் செய்யட்டும். இலங்கை அரசு அல்ல. நீங்கள் ராஜபக்ச அதரவாளரா?….. அவரால் நீங்கள் பேனபடுகிறீர்களா? …. புலி ஆதரவாளர் மோசம் என்றால் , ராஜபக்ச ஆதரவாளர் எப்படி என்று உலகம் அறியும் ….
என் விமர்சனம் செய்தித் தலைப்புப் பற்றியது என விளங்காதிருக்க நியாயமில்லை
உங்கள் நோக்கம் நீங்களே அறிவீர்கள். அசின் உங்களுக்கு ஒரு பொருட்டு அல்ல. (எனக்கும் தான். நான் தமிழ் சினிமா பார்ப்பதில்லை).
எனின் செய்தித் தலைப்பு ஏன் அவர் பற்றியதாக இருக்க வேண்டும்?
அது ஒரு வாசகர் மனதில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் உங்களுக்கு அக்கறை இல்லையா? அல்லது அவர் உங்களுக்கு ஒரு பொருட்டு அல்ல என்பதால், எதையும் எழுதலாமா?
முழுமையான பத்திரிகைச் செய்தி என் முறைப்பாட்டுக்குரிய விளக்கமாகி விடுமா?
தலைப்பு வலிந்து அவர் மீது குற்றஞ்சாட்டுவது போல இல்லை என்றால் இங்கே ஒரு பாரதூரமான மொழிப் பிரச்சனை உள்ளது.
பரபரப்புத் தலயங்கங்கள் கீழ்த்தரமான பத்திரிகைட்ககுரியன. இனியொரு அப்படிப்பட்ட ஒன்றல்ல என நினைக்கிறேன். நீங்களும் உடன்படுவீர்களென நம்புகிறேன்.
ஒரு நல்ல நடைமுறை: எல்லாச் செய்திகட்கும் சான்றுகளையும் சேர்த்துத் தந்தால் வீண் வாதங்களுக்கு இடமிராது.
// இலங்கை சென்றபின் அங்குள்ள தமிழர்கள் படும் துயரங்களை கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தேன். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜாப்னாவுக்கு துணிச்சலாக சென்றேன். கடந்த 32 வருடங்களாக அந்த பகுதிக்கு எந்த ஒரு முக்கிய பிரமுகரும் செல்லவில்லை.
ஒரு பெண்ணாக இருந்தும் நான் துணிச்சலாக போனேன். ஜாப்னாவில் உள்ள ஆஸ்பத்திரியில் நோயினால் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பார்த்து கண்கலங்கினேன். அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறேன்.
அதன்மூலம் இலவச கண் சிகிச்சை நடத்தினேன். அதில் 300 தமிழர்களுக்கு என் சொந்த செலவில் ஆபரேஷன் செய்தேன். இந்தியாவில் இருந்து கண் மருத்துவத்தில் புகழ்பெற்ற 5 டாக்டர்களை என் சொந்த செலவில் வரவழைத்து இந்த இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினேன்.
ஒரு நோயாளிக்கான லென்சுக்கு ஆன செலவு ரூ.5 ஆயிரம். நான் 10 ஆயிரம் பேர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை நடத்த திட்டமிட்டு இருக்கிறேன்.
இப்படி இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்வது தவறா? இலங்கையில் நடந்த போரில் அம்மா – அப்பாவை இழந்த ஒரு வயது குழந்தை முதல் 16 வயது இளம்பெண்கள் வரை 150 பெண்களை தத்தெடுத்து இருக்கிறேன்.
இது தவறா? அங்குள்ள தமிழர்கள், ”அக்கா தமிழ்நாட்டில் இருந்து யாரும் எங்களை பார்க்க வராதது ஏன்?” என்று கண்கலங்கி கேட்கிறார்கள். எனக்கு சரி என்று தோன்றியதைத்தான் நான் செய்திருக்கிறேன். என் மீது சர்ச்சையை தூண்டிவிடுபவர்கள் பற்றி கவலை இல்லை.
//
இனியொரு சந்தேகம் கண் ஆபரேசன் செய்ததுக்கே இப்படிக்கூப்பாடு போட்டவர்கள் இப்ப150 தமிழீழப் பெண்களைத் தத்தெடுத்திருக்கிறாராம். அவர்களை இவள் பம்பாயில கொண்டு போய் விடப்போறாள் எண்டும் முன்கூட்டியே கத்துங்கோடா
அசினின் மனிதாபிமானத்தின் அரசியல் இன்னொரு விடயம்.
அசின் எவ்வளவு பெரிய மனிதாபிமானி என்று எஙக்குத் தெரியாது. தமிழகத்திலும் கேரளத்திலும் எத்தனை பேருக்கு அவர் சொந்தச் செலவில் கண்பார்வை வழங்கினார் என்றும் எனக்குத் தெரியாது.
அவரை வைத்து ஒரு அரசியல் கூத்து நடப்பது உண்மை.
அதை வெளிப்படுத்தும் தேவை மறுக்க இயலாதது.
அதே வேளை, அவரை வலிந்து தாக்குவது அவருக்குப் பின்னாற் செயற்படும் நோக்கங்களிலிருந்து கவனத்தை திருப்பவே உதவும்.
அசினை நடிகையாக மட்டுமே பார்க்க தெரிந்ததால் வரும் கருத்துக்கள் இவை. அசின் இலங்கை அரசிற்கு எதற்கு தேவைப்பட்டார் ?… கண் சிகிச்சை முகம் நடத்திய ஷிராந்தி ராஜபக்சேக்கு எதற்கு அசின் தேவை ?..அசின் டாக்டர் ஆ ?… அல்லது பணம் கொடுத்தவர? … அல்லது மருந்து அளித்தவர ?,…. இதன் பின்னியில் இருந்தவர்கல் எதற்காக அசின்ஐ பயன்படுத்தினார்களோ , இதன் மூலம் இந்தியாவின் மூலை முடுக்குகுக்கு ஊடகம் வாயிலாக கொண்டு சேர்க்க முடிந்ததோஒ அதற்காகவே இந்த செய்தி குறிப்பு… வட இந்திய ஊடகங்கள் ஏன் அசினின் கண் சிகிச்சை முகாமை பற்றி பலபக்க கட்டுரைகள் ஆங்கில, ஹிந்தி , மற்றும் இதர மொழிகளில் கொண்டு சேர்த்தார்கள்…? அதில் சொல்லப்பட்ட செய்தி என்ன என்று கவனிதிருன்தொமேன்றால் நாம் செயல் பாடு அதற்க்கு பதில் அளிபதாக இருந்திருக்கும். அப்படியாக வெளியிடப்பட்ட செய்தி இது. ..அவரை குற்றம் sattuvathu மட்டும் அல்ல அதற்கு பின்னல் இருக்கும் செய்திகளுக்கும் சேர்த்து தான் இது …. கண் பாதிக்கப்பட்ட செய்தி புதியதாக வந்தது அல்ல. இணையத்தில் வெளி வந்து ஒரு மாதம் ஆனா பின் இச்செய்தி ஐ வெளியிட்டோம். இதனை காலமும் அந்த செய்தி பிற இணையங்களில் வெளியிடப்படவில்லை. இப்பொழுது மட்டும் ஏன் அணைத்து ஊடகங்களும செய்தி வெளியிடுகின்றன? ..மாற்று ஊடகங்களும் செய்தி வெளியிடுவது அசின் என்கிற பரபரப்பு செய்திக்க்காகவா ?. இல்லை .. இதன் பின்னால் உள்ள அரசியல் இதற்க்கு காரணம். அந்த அரசியலை புரிந்து கொண்டவர்கள் வெளியிட்டார்கள். கிட்டத்தட்ட செய்தி வெளியிட்ட அணைத்து செய்தியாளர்களும் இதன் பின்னணியை புரிந்து தான் செயல்பட்டார்கள்.
சான்றுகளை தேடுவது மட்டுமா? அல்ல… அரசியலையும் புரிந்து கொள்வது , செயலாற்றுவது அவசியம். செய்தி வெளியிடும் நிறுவனமல்ல நாங்கள். நாங்கள் நடத்தி கொண்டிருக்கும் போராட்டதிற்கு இந்த செய்தி வெளியீடும், சில செய்யலாக்கதை செய்து கொண்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.அசினை வைத்து சில செய்திகளை வடஇந்திய ஊடகங்களுக்கும் கொண்டு சேர்க்க விளைந்தோம். அது நடந்தது.. நன்றாகவே நடந்தது. அசின் நடிகை அல்ல. அசினை நாங்கள் நடிகையாக பார்கவில்லை… அப்பாவியாகவும் பார்க்க வில்லை. ஒரு இனப்படுகொலை அரசை புரிந்து கொள்ள முடியாதவர் அல்ல அவர். நீங்கள் அசினை ஒரு பரபரப்பு கருவியாக பார்ப்பதால், ஒரு நடிகையாக பார்ப்பதால், இந்த கேள்விகள் என்று நினைக்கிறன். அசின், எம் . எஸ் சுவாமிநாதன், என்.ராம், முருக பூபதி, ராஜன் பாரதி மிட்டல், சரத்குமார், கமலஹாசன் , பாண்டியராஜன், சல்மான் கான், விவேக் ஒபரோய்,ராகவன், பாலச்சந்திரன், இவர்களை நாங்கள் அவர்களின் தொழில் ரீதியில் பார்ப்பதில்லை. அது அரசியலும் இல்லை. முகமூடிகளை புறக்கணித்து வேலை செய்யவும் முடியாது. அதை கிழிப்பது முதல் வேலை. ஆம் அது தான் முதல் வேலை. அசினின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் மிருகம் வெளிவரட்டும் அது வரை அசின் என்கிற முகமூடி கிழிக்கப்பட்டு கொண்டிருக்கும்.