சமீபத்தில் மலையாள நடிகர் ஜெயராம் தமிழ் பெண்களை இழிவு படுத்தி தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்துத் தெரிவிக்க தமிழகத்தில் அது கடும் கொந்தளிப்புகளை உருவாக்கியது.
. நடிகர் ஜெயராம் வீட்டில் புகுந்த சிலர் தாக்கி கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். தாக்குதலுக்குப் பொறுப்பாக நாம் தமிழர் இயக்கத்தினர் 16 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் நடிகர் ஜெயராமை அண்ணாதுறைய் பாணியில் மறப்போம் மன்னிப் போம் என்று அறிவித்து மன்னித்தும் விட்டார் கருணாநிதி. கருணாநிதி மன்னித்த அன்று மாலையே ஜெயராம் கருணாநிதிக்கு நடத்திய பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டார். ஆனால் அதே திரைத்துரையைச் சார்ந்த சீமான் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் பல வழக்குகளையும் போட்டு, அவரைக் கைது செய்யத் தேடிக் கொண்டிருக்கிறது தமிழக போலீஸ். சீமானைக் கைது செய்யச் சொல்லி சில தமிழ் சினிமா பிரமுகர்களே கருணாநிதிக்கு அழுத்தம் கொடுத்ததாகவும். சினிமாத் துறையினரின் மீதான நம்பிக்கையை மேலும் வலுபப்டுத்த சீமானை கைது செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த கருணாநிதி. சீமானைக் கைது செய்ய ஆறு தனிப்படைகளை அமைத்து விரைவில் கைது செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருபப்தாகத் தெரிகிறது.
தமிழ் சினிமாவே மலையாளீகள் கையில் இருக்கும் போது முதல்வரால் கூட ஒன்றூம் செய்ய முடியாத அரசியல் சூழலே தமிழகத்தில் உள்ளது.வைகோ குரல் எழுப்பினாரா?விஜயகாந்த் குரல் எழுப்பினாரா? தமிழனின் தமிழ் உணர்ச்சிதான் திராவிடதால் அழிந்து போயிற்றே.தமிழ் சினிமாவில் மூழ்கி தமிழ் அல்லாத் தமிழனுக்கு காவடி தூக்கும் தமிழன் தன்னைத் தமிழனாய் உணரும் போதெ தமிழனை இகழும் மலையாளீ ஜெயராமுக்கும் தமிழன் மீது பயம் வரும்.
வாழ்வினில் செம்மையை செய்பவள்நீயே மாண்புகள்நீயெ என் தமிழ்த்தாயே, வீழ்வாரை வீழாது காப்பவள்நீயே ,வீரனின் வீரமும் வெற்றீயும்நீயெ. தாழ்ந்திடும்நிலையில் உனை விடுப்பேனோ, தமிழன் எந்நாளூம் தலை குனிவெனோ. சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய், செந்தமிழெ உயிரே நறூந்தெனே செயலினை மூச்சினை உனக்களீத்தெனே நந்நிலை உநக்கிலை எனக்கும் தானே.
முந்திய நாளீல் அறீவும் இலாது மொய்த்தனர் மனிதராம் புது புனல் மீது செந்தாமரைக்காடு பூத்த்து போல் செழித்த என் தமிழெ மொழியெ வாழி.
தமிழ்நாட்டில் ” தமிழனாய் ” இல்லாட்டித்தான் வாழலாம். கருனானிதி, முன்னாடி “மக்கழுக்காக “ஆட்சி நடத்தினார், நடுவில ” கட்சிக்காக” ஆட்சி நடத்தினார். ஆனால் இப்ப எல்லாம் தன் ” குடும்பத்திற்காகவே” ஆட்சிநடத்துறாறு. அண்ணா சீமான், பேசாமே கருணானிதைய் புகழ்ந்து படம் எடுத்திட்டு, பேசாமே வீட்டில இருந்து ” மான் ஆட , மயில் ஆட ,மார்பாட பாடுங்க சேர்………..பிழைக்கத் தெரியாத மனுசனைய்ய நீங்க சீமான்.
அரியம் வென்றது. திராவிடம் துணை நின்ரது. தமிழ் பெண்களை இழிவு செய்த ஜெயராமுக்கு மன்னிப்பு…தட்டிக்கேட்ட சீமானுக்குச் சிறை…. ட்
தமிழ்மாறன் நீங்கள் என்ன முட்டாளா? தமிழ் சினிமா திராவிட ஆதிக்கத்தில் உள்ளது என்கிறீர். கருணாநிதியை தமிழ் தலைமகன் போல் சித்தரிக்கிறீர். கருணாவே தன்னை ஒரு திராவிடத் தலைவராகத்தானே காட்டிக் கொள்கிறார்.
மதி கெட்டுப்போன தமிழன் உலகமெங்கும் இருக்கிறானே,இதில் நான் மட்டும் அறீவாளீயாகி என்ன செய்யப் போகிறேன்.ஆனால் கலஜருக்குப் பின்னால் தமிழில்லை என்ற கலக்கம்தான் என் தூக்கங்கலை கெடுக்கிறது.