Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

நடிகர் சல்மான்கானை இலங்கையிலிருந்து உடனடியாக வெளியேற்றிய காரணங்கள்

இனியொரு... by இனியொரு...
01/03/2015
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

acc-1நடிகர் சல்மான்கான், தமிழக அரசியல்வாதிகளின் நிர்ப்பந்தம் காரணமாகவே இலங்கையிலிருந்து வெளியேறினார் எனச் சொல்லப்படுவது உண்மைக்குப் புறம்பானதாக இருக்கிறது. தமிழக அரசியல்வாதிகள் இவ்வாறு கூறிக் கூறியே தமது சாதுர்யம் குறித்து மார்தட்டிக் கொள்கிறார்கள். உண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, நடிகர் சல்மான்கானை சன்மானங்களும் வெகுமதிகளும் வழங்கி உடனடியாக இலங்கையை விட்டும் அனுப்பி வைத்தமைக்கான காரணங்கள் மூன்று.

முதல் முக்கியமான காரணம், சல்மான்கானின் வாகனத் தொடரணி ஏற்படுத்திய விபத்து. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்ட நடிகர் சல்மான்கானைக் காண, வெலிகடை மாமரச் சந்தியில் வீதியோரமாக மக்கள் நின்று கொண்டிருக்கும்போது வேகமாக வந்த அவரது வாகனம் இரண்டு சிறுவர்களை மோதித் தள்ளியது. சிறுவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், அங்கிருந்தவர்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்ய முற்பட்டனர். சல்மான்கான் இன்னும் இலங்கையிலிருந்தால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படுமெனக் கருதி சூட்சுமமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவரை இந்தியாவுக்கு அனுப்பி விட்டார்.

இரண்டாவது காரணம் நடிகர் சல்மான்கான், இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான வியாபார ராஜதந்திரி எனவும், 650 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டமான “Krrish Square” திட்டத்தின் பின்னணியில் சல்மான்கான் இருப்பதாகவும் எதிர்க் கட்சியானது பகிரங்கமாகக் குற்றம் சாட்டியது சிக்கலை உண்டுபண்ணியது. இவ்விடயம் சல்மான்கானுக்கு எட்டியதும் அதிர்ந்து போனார்.

மூன்றாவதாக கௌரவமாக அழைத்து, அவமானப்படுத்தியது போல பொரள்ளையில் சல்மான்கான் கலந்துகொண்ட கூட்டத்தில் அவரை மேடையில் வைத்துக் கொண்டு, அவரைப் பாராட்டிப் பேசுவதாக எண்ணிக் கொண்டு, மஹிந்தவின் அமைச்சரான திலங்க சுமதிபால, சல்மான்கானை ஷாரூக்கானென விளித்தார். ஷாருக்கான்ட ஜயவேவா (ஷாருக்கானுக்கு வெற்றி கிட்டட்டும்) என வாழ்த்துச் சொன்னார். இது மேடையிலிருந்த சல்மான்கானுக்கு பெரிதும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சல்மான்கானுக்கு அவர் இந்தியாவில் ஏற்கெனவே ஏற்படுத்திய விபத்துக்களின் வழக்குகளே இன்னும் அவப் பெயரைத் தேடித் தந்துகொண்டிருக்கையில், இலங்கையில் ஏற்படுத்திய விபத்தின் சிக்கலிலும் மாட்டிக் கொள்ள அவரும் விரும்பவில்லை. எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பரிசுகளோடு, இலங்கைக்கு வந்த அன்று இரவே இந்தியா கிளம்பிவிட்டார் நடிகர் சல்மான்கான். அவர் நாட்டை விட்டும் உடனடியாகச் செல்ல இவ்வளவு காரணங்கள் இருக்கையில், தமது குற்றச் சாட்டுக்களால்தான் அவர் இந்தியாவுக்குத் திரும்பி வந்தார் என தமிழக அரசியல்வாதிகள் முழங்குவது வேடிக்கைக்குரியதாக இருக்கிறது.

– எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com

acc-4

acc-3

acc-2

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
நிறைவேற்றதிகாரமுடைய “சனாதிபதி”க்கான தேர்தல்:2015 :ப.வி.ஶ்ரீரங்கன்

நிறைவேற்றதிகாரமுடைய "சனாதிபதி"க்கான தேர்தல்:2015 :ப.வி.ஶ்ரீரங்கன்

Comments 4

  1. lala says:
    11 years ago

    சல்மானின் கார் விபத்தை ஏற்படுத்தவில்லை , பாதுகாப்புக்கு வந்த வாகனத்தில் ஒன்றே விபத்தை ஏற்படுத்தியது.இங்கு கூறப்பட்டவைகளிலும் முக்கியமான காரணமாக தமிழ்நாட்டில் இந்தி திரைப்படங்களை  திரையிடாமல்  செய்வதற்கு போராடுவோம் என வந்த அறிவிப்பாக இருக்கலாம்..

    • Kumar says:
      11 years ago

      இலங்கைக்கு வந்த அந்த நடிகா் வாகனத்தை தானே ஓட்டவேண்டிய நிலையை இட்டு ஆச்சா்யப்படுவது மட்டுமல்ல அரசாங்கம் அழைத்த ஒருவரை இலங்கை போன்ற நாட்டில் கைது செய்வதென்பது வேடிக்கை.

  2. niyayam says:
    11 years ago

    தங்களுடைய எச்சரிக்கையால் தான் சல்மான் இந்தியா திரும்பினார் என வைகோ சீமான் போன்றோர் கூறுகிறார்கள்

  3. mannan says:
    11 years ago

    புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தமிழகநடிகர்களை  காட்டி பிழைப்பு
    நடத்துவதும்,  மகிந்த  இந்துநடிகர்களை  அழைத்து  அர்சியல்  நடத்துவதும்
    ஒன்றுதான். இருவருமே  பயங்கரவாத்த்தின் தூண்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...