மன்னார் வளைகுடாவின் தென்மேற்குப் பகுதியைச் சுற்றி மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கு நோக்கி நகர்ந்ததால் சென்னை, புறநர் பகுதியிலும், தமிழகத்திலும் படிப்படியாக மழை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு நோக்கி நகர்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது கேரளா மற்றும் கர்நாடகம் இடையே மையம் கொண்டுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், தமிழகத்தின் உட்புற பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மேக மூட்டம் இருக்கும் என்றும் அவ்வப்போது மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.