Tuesday, May 5, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

தோழர் தங்கவடிவேல் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி

இனியொரு... by இனியொரு...
08/03/2014
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

thangavadiveluதோழர் கணபதி தங்கவடிவேல் கடந்த 29.07.2014 இல் தனது எண்பத்திமூன்றாவது வயதில் இயற்கை எய்தினார். அவர் இளமைக்காலம் முதல் மாக்சிசத்தை ஏற்று அதன் வழியில் வடபுலத்து பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். சுமூக ஏற்றத்தாழ்வையும் அதன் காரணமான சாதிய தீண்டாமைக்கெதிரான வன்மத்தையும் கொண்டிருந்தமை மட ;டுமன்றி அதனை எதிர்த்து உடைத்தெறியவேண்டும் என்ற புரட்சிகர உணர்வையும் கொண்டிருந்தார். அதன் காரணமாக சமூக அக்கறையாளனாகவும் சமூக விடுதலை நோக்கிய பாதையில் இளைஞர்களையும் மக்களையும் அணிதிரட்டி அமைப்பு வாயிலாகச் செயற்படுவதில் முன்னின்று வந்தவர். 1964இல் தோழர் நா.சண்முகதாசன் தலைமையில் புரட்சிகர கம்யூனிசக் கட்சியாக முன்சென்ற வேளை தோழர் தங்கவடிவேல் வடபுலத்து தலைமைத் தோழர்களான மு.கார்த்திகேசன், டாக்டர் சு.வே.சீனிவாசகம், கே.ஏ.சுப்பிரமணியம், கே.டானியல் போன்றவர்களுடன் இணைந்து செயல்படுவதில் முன்னின்றவர ;. அவ்வேளை ‘சாதி அமைப்புத் தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும்’ என்ற குறிக்கோளை முன்வைத்து எழுந்த 1966 ஒக்ரோபர ; 21 எழுச்சியைப் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. அவ ; எழுச்சி உருவாக்கிய புரட்சிகரப் போராட்டங்களின் மத்தியில் 1967ஆம் ஆண்டில் தீண்டாமை ஒழிப்பு வேகுஜன இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் தலைமைக் குழுவில் எஸ்.சி.என்.நாகரட்ணம், கே.டானியல், கே.ஏ.சுப்பிறமணியம், டாக்டர் சு.வே.சீனிவாசகம், மான் நா.முத்தையா, சி.கணேசன், மு.சின்னையா, கே.கிருஸ்ணப்பிள்ளை போன்றவர்களுடன் தங்கவடிவேல் இணைந்து நின்று தீவிரமாகச் செயற்பட்டுவந்தார். 1969இல் அவ் இயக்கம் நடாத்திய இரண்டாவது மாகாநாட்டின்போது சாதியத்தையும் தீண்டாமையையும் அம்பலப்படுத்தும் ஒரு ஓவியக்கண்காட்சி நடாத்தப்பட்டது. அவ் ஓவியக் கண்காட்சி வெற்றிபெறுவதற்கு தோழர் தங்கவடிவேல் தனது பங்களிப்பை வழங்கியதோடு ஏனையோரின் பங்குபற்றலையும் வழிநடத்திநின்றமை நினைவுகூரத்தக்கதாகும். இவ் ஓவியக் கண்காட்சி யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் சாதிய தீண்டாமைக்கு எதிரான கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். தோழர் தங்கவடிவேல் சமூக அக்கறையாளனாக, விளையாட்டு வீரனாக, பொதுவுடைமைவாதியாக, நல் ஆசிரியனாக, கிராமப்புற மக்களின் நண்பனாக, ஓவியனாக, பாடகனாக, நல்ல குடும்பத் தலைவனாக, சமூகமாற்றத்திற்கான விடுதலைப் போராளியாக தனது ஆற்றலுக்கும் சக்திக்கும் ஏற்றவாறு நம்பிக்கையோடும் துணிவோடும் வாழ்ந்துவந்த ஒருவராகத் திகழ்ந்தார். ஆத்தனைக்கும் அடித்தளமாக அவர் மாக்சிசம் லெனினிசத்தையும் மாவோ சேதுங் சிந்தனையையும் இறுதிவரை உறுதியாகப் பின்பற்றுபவராக இருந்துவந்தார். தமிழ்த் தேசியத்தின் பெயரிலான தவறான கொள்கையைப் பின்பற்றி ஆரம்பமான போராட்ட அலைகளால் எழுந்த கடும் சவால்களின் மத்தியிலும் தனது பொதுவுடமை நிலைப்பாட்டை இழக்காத தோழராகத் தங்கவடிவேல் இருந்துவந்தமை அவருக்குரிய விசேட சிறப்பாகும். அத்தகைய தோழர் தங்கவடிவேலின் மறைவு ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்கும் பொதுவுடமை இயக்கத்திற்கும் கவலை தரும் இழப்பாகும். அவருக்கு எமது கட்சி தனது செங்கொடியைத் தாழ்த்தி புரட்சிகர செவ்வஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கின்றது. அவரது துணைவியார், பிள்ளைகள், குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கின்றது.

-புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி-

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
குத்தாட்டம் போட அழைத்த இராஜ் – நாமலுக்கு எதிராக மாணவிகள் போராட்டம்

குத்தாட்டம் போட அழைத்த இராஜ் - நாமலுக்கு எதிராக மாணவிகள் போராட்டம்

Comments 1

  1. Kumar says:
    12 years ago

    ‘தமிழ் தேசியத்தின் பெயரிலான தவறான கொள்கை……..’

    அஞ்சலி செலுத்துங்கள், ஆனால் அரசியல் வாதம் இப்போது வேண்டாம்.

    சாதிய  ஒடுக்குமுறைக்கு எதிரான அவரின் போராட்ட உணர்வினை மதிக்கிறோம்.
    ஆனால் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி மரணித்த மாவீரர்களை , தோழர் தங்க வடிவேல் மாஸ்டரின் பெயரால் கொச்சைப்படுத்த வேண்டாம்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
விஜய் vs சீமான்  vs பொடெமோஸ்  வரை: அரசியல் எதிர்பார்ப்புகள் தேர்தல் யதார்த்தத்தை மீறும்போது…

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ்  வரை: அரசியல் எதிர்பார்ப்புகள் தேர்தல் யதார்த்தத்தை மீறும்போது…

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...