Friday, May 9, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தோழர் டக்களஸ் தேவாவிற்கு ஒரு பகிரங்க வேண்டுகோள்! : வட்டக்கச்சியான்

இனியொரு... by இனியொரு...
07/11/2009
in போராளிகள் டயரி
0 0
18
Home அரசியல் போராளிகள் டயரி

Douglas,mahinda,Manmohanவட்டக்கச்சி – மானிப்பாய் நோக்கிய பயணத்தில் சோர்வடைந்திருந்தோம். சாவக் கச்சேரியில் அருள் தோழரையும் அழைத்துக்கொண்டு மானிப்பாயை அண்மித்ததும் பச்சைப் பசேலென்ற நீண்ட வயல் வெளியின் வரப்பில் கண்களை இறுக மூடிக்கொண்டு மாலை வெய்யிலை அனுபவித்தவாறே உறங்கிவிடலாம் போலிருந்தது. தேவா தோழரைச் சந்திக்கப் போகிறோம் என்ற அவசரமும் ஆதங்கமும் ஆனைக்கோட்டை மூலைக்கடையில் தேனீர் கூட அருந்த மனமின்றி சைக்கிளை இறுக மிதித்துக் கொண்டிருந்தோம். ஒருவாறாக மானிப்பாய் முகாமை அடைந்தபோது சற்றேறக்குறைய மலை ஏழு மணியை அண்மித்திருக்கும்.
அப்போது எங்கள் இயக்கத்தினுள் முரண்பாடுகள் உச்சமடைந்திருந்த காலகட்டம். தோழர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும் உங்களுக்கும் எட்டாப்பொருத்தம் என்று எல்லாருமே பேசிக்கொண்டார்கள்.
தோழர் தேவா எங்களைப் போன்ற கடைனிலைத் தோழர்களைக் கூட பொருட்படுத்திப் பேசக் கூடியவர் என்பதையும் எல்லோரும் பேசிக் கொண்டார்கள். அங்கு உங்களைச் சந்திக்க வந்திருந்த நான் உட்பட மற்றைய நான்கு பேரில் உங்களிடம் யாருமே முன்னெப்போதும் பேசியிருக்கவில்லை.
நீங்கள் இன்னமும் முகாம் திரும்பியிருக்கவில்லை. காத்திருந்தோம்.. எமக்கு உடம்ப்பு பூராவும் நம்பிக்கை இருந்தது. நீங்கள் வந்ததும், சுரேஷ் தோழர் வட்டக்கச்சியில் என்னென்ன தவறுகள் செய்தார் என்பதையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட வேன்டுமென்று.
முகாமில் ஒரே உச்சாகம்! வரவேற்பு!! சில தோழர்கள் புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருந்தார்கள். உலகின் சர்வாதிகாரிகள் பற்றிய நூலொன்றுள் மூழ்கிப்போன ஒரு தோழனைப் பேச்சுக்கொடுத்து குழப்ப விரும்பாமல் தூர இருந்து எட்டிப்பார்த்தது இன்னமும் நினைவிருக்கிறது.
ஒன்பது மணியளவில் நீங்கள் கருப்பு நிற பஜரோ வாகனத்தில் கம்பீரமாய் முகாமை அடைந்தபோது எமது நம்பிக்கை நரம்புகள் மேலும் முறுக்கேறி முஷ்டி பிடித்துக்கொண்டன.

நாங்கள் பேசிக்கொண்டோம். உட்கட்சிப் போராட்டம், சுரேஷ் தொழர், நாபா தோழர் இப்படி எல்லாவற்றைப் பற்றியும்..
நாங்கள் கேட்டவை பற்றி எந்த முடிபும் கிடைக்கவில்லை என்றாலும் நீங்கள் எங்கள் பக்கம் எனத் தெரிந்து கொண்டு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நிம்மதியாக உறங்கப்போனோம்.

நீங்களும் நாங்களும் இலங்கை அரசின் இன அடக்கு முறைக்கெதிராகப் போராடுவதற்கு எமக்குள்ளேயெ உருவாகும் தடைகளைப் பற்றியே பேசிக்கொண்டோம் என்பதை மட்டும் நான் மறந்துபோய்வில்லை.

ஆனால் தோழரே,
எமது இயக்கத்துள் ஏற்பட்ட வாசிக்கும் பழக்கத்தில் இரு தினங்களின் முன்னர் வெளியான ரைம்ஸ் சஞ்சிகையில் வெளியான கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தோ அல்லது பெயர்க்கப்பட்டோ தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மூன்று லட்சம் தமிழ் மக்களில் 1400 பேர் ஒவ்வொரு வாரமும் ஆடுமாடுகள் போலச் செத்துக்கொண்டிருப்பதாக அல்லவா அக்கடுரையில் சொல்லப்பட்டிருக்கிறது. பிரபாகரன் குழு செத்துப் போன பிறகு நீங்கள் மட்டும்தான் தமிழ் மக்கள் சார்பாகப் பேச வல்லவராக மார் தட்டிக்கொள்கிறீர்கள். ஏகப்பிரதினிதி நிலையிலிருந்து சில அங்குலங்கள் மட்டுமே கீழே இருப்பதாகத் தெரிகிறது?

தோழரே, யாரோ ஒரு வெள்ளைக் காரப் பத்திரிகையாளன் எனது சொந்த மக்களின் அவலம் குறித்து மனம் வெந்து துயர்கொண்டு எழுதிய அதே நாளில் யாழ்ப்பாணத்திற்கு சொகுசு பஸ் ஓட்டுவதற்கு உங்கள் சனநாயகக் காவல்காரன் மகிந்தவிடம் அனுமதி வாங்கிவிட்டதாக பெருமையடித்து அறிக்கை விடீர்கள்.

ஒரு இனத்தின் பெரும் பகுதியொன்றை துடிக்கத் துடிக்க அழித்து மகிந்தவும் நீங்களும் புலியிடமிருந்து பெற்றுக்கொடுத்ததாகக் கூறும் சனநாயகம் இன்று முகாம்களில் மரண ஓலமாக ஒலிக்கிறதே!
90ஆம் ஆண்டிலிருந்து நீங்கள் முன்வைக்கும் வாதம், அரசுடன் சார்ந்துதான் “ஏதாவது” செய்யலாம் என்பதே.
பாருங்கள் தோழரே அரசுடன் சார்ந்து நீங்கள் ஏற்படுத்திய மரண ஓலத்தை!!

நீங்கள் போராட்டம் என்று ஏமாற்றியதில் 85 ஆம் ஆண்டு வரை அழிக்கப்பட்ட தோழர்களை எல்லாம் மறந்து விடுவோம். கூட்டம் கூட்டமாக மக்கள் கொல்லப்படும் போதுமா நீங்கள் மகிந்தவுடன் குலாவித் திரிகிறீர்கள்?
சரி உலகின் எந்த மூலையிலிருந்தாவது செத்துக் கொண்டிருக்கும் உயிர்களுக்காக யாராவது குரல் எழுப்பினால் கூட மகிந்த மனித இனத்தின் காவல்காரன் என்று “ஒரு தமிழனாகக் கூறியே” அவர்களை மௌனமாக்கி விடுகிறீர்கள்.
தோழரே,
ஏன் தமிழ் மக்கள் மீது அத்தனை வெறுப்பு உங்களுக்கு? அல்லது மனித குலத்தையே வெறுக்கிறீர்களா?

உங்களின் எசமானர்கள் இன்னும் எத்தனை ஆயிரம் பேரைக் கொலை செய்யப்போகிறார்கள். அபிவிருத்தி என்ற பெயரில் எத்தனை தமிழர்களை அவர்களின் இரத்த வெறிக்குப் பலி கொடுப்பதாக உத்தேசம்?
உங்களுக்குத் தெரியுமா ஹில்டரின் காலத்தில் தான் யேர்மனியில் மிகப்பெரிய அபிவிருத்தி நடந்ததாமே?ஹம்பேர்க் கின் தெற்க்குக் கிராமம் ஒன்றில் நாஸி சின்னம் கொண்ட சுவரொட்டிகளை யாரோ ஒட்டியதற்காக கிராமமே திரண்டு அவற்றை அகற்றிவிட்டது.

தேர்தல், அபிவிருத்தி, வெற்றிலைச் சின்னம், சொகுசு பஸ் .. எல்லாவற்றையும் ஒருகணம் மறந்து விட்டு உங்கள் சொந்த மண்ணிலேயே உங்கள் காலடியில் வந்து விழும் ஆயிரமாயிரம் உயிர்களைப் பற்றியும் சிந்திக்க நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
இப்போது புலிகள் இல்லை! மக்கள் மட்டும்தான்!!அழிக்கவேண்டிய அவசியம் இல்லையே!!!
தோழரே,
இத்தனை ஆயிரம் உயிர்கள் கொல்லப்பட்டாயிற்று.. ஒரு கண்துடைப்புக்காகவேனும் ஒரு அறிக்கை விடத் தயாரகவில்லையே. கொலையாளிகளை வாழ்த்தி மட்டும் நூற்றுக்கணக்கில் அறிக்கை விட்டாயிற்று.!
உங்களுக்கு மகிந்த ராசபக்ச என்ற கொடிய மிருகத்தை விட்டால் வேறு போக்கிடம் இல்லை என்றெல்லாம் எண்ண வேண்டாம். உங்கள் கண்முன்னாலேயெ மூட்டைப் பூச்சிகளைப் போல அழிக்கப்பட்ட தமிழர்களை இனி நீங்கள் உயிர்ப்பிக்க முடியாது தான். ஆனால் உங்களது தவறுகளுக்குப் பாவ மன்னிப்பாக இன்னும் கொல்லப்படுதலைக் குறைக்க முயற்சியுங்கள். இந்த எண்ணத்தோடு உங்கள் முன்னைய தோழர்களைக் அணுகினால் உங்களுக்குப் புலம் பெயர் தேசத்திலிருந்து முதலமைச்சர் நிதியை மட்டுமல்ல…. உயிரைக் கூடத் தர ஆயிரக்கணக்கில் தயாராக இருக்கிறார்கள்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இந்தியாவில் திருமண உதவித் திட்டம் தொடர்பில் பெண்களை இழிவுபடுத்தும் அரசு.

Comments 18

  1. cherankrish says:
    16 years ago

    //உங்கள் கண்முன்னாலேயெ மூட்டைப் பூச்சிகளைப் போல அழிக்கப்பட்ட தமிழர்களை இனி நீங்கள் உயிர்ப்பிக்க முடியாது தான். ஆனால் உங்களது தவறுகளுக்குப் பாவ மன்னிப்பாக இன்னும் கொல்லப்படுதலைக் குறைக்க முயற்சியுங்கள். இந்த எண்ணத்தோடு உங்கள் முன்னைய தோழர்களைக் அணுகினால் உங்களுக்குப் புலம் பெயர் தேசத்திலிருந்து முதலமைச்சர் நிதியை மட்டுமல்ல…. உயிரைக் கூடத் தர ஆயிரக்கணக்கில் தயாராக இருக்கிறார்கள்//

    உண்மையான வேண்டுகோள்

  2. venkattan says:
    16 years ago

    இதல்லாம் வாசித்து உணர்வு வரக்கூடும் என்றால் என்றோ வந்திருக்கும். வீண் வேலை. அடிமையாக வாழ கற்றுக்கொள்ளவேண்டும். முதல். நம் தமிழருக்கு.

  3. Ashok -Jaffna says:
    16 years ago

    உங்கள் ஆதங்கமும் அபிப்பிராயங்களும் நியாயமானதுதான். இதுவரை போனவர்களின் வழியில் தமிழ் மக்கள் இன்றுவரை துன்பப்படுகிறார்களே என்று தான் ஒரு வழியை வகுத்துக்கொண்டு டக்ளஸ் செல்கிறார். அவர் வழியில் ஏதாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் அவரைத் தனியாக செல்ல விடுவதில் உள்ள ஆபத்தை> தமிழ் மக்களின் விடிவு பற்றி அக்கறை கொண்டவர்கள் உணர வேண்டும். ஏற்கனவே ஏகப்பிரதிநிதித்துவத்தின் அவலங்களை சந்தித்தவர்கள் தமிழர்கள். அதே ஏகப்பிரதிநிதித்துவத்தை கையில் எடுத்துக்கொண்டிருக்கும் மகிந்த அரசு பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். அதை வெறுமே தமிழர்கள் மீதான தாக்குதலாகப் பார்ப்பது தவறு.

    நீங்கள் அடிப்படையாகக் கொண்டு பேசியிருப்பது ஒரு தவறான தகவல். அதாவது முகாம்களில் தினமும் 1400 பேர் வரை இறக்கிறார்கள் என்பது ஓர் அதீத கற்பனை. இப்படியான தகவல்களைச் சொல்பவர்கள் உண்மையான பிரச்சினைகளை மறைத்து திசை திருப்புபவர்கள் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நான் யாழ்ப்பாணத்தில் இருக்கிறேன். முகாம்களில் உள்ள உறவினர்களுடன் தொடர்பு கொள்ளும் பலர் இங்கிருக்கிறார்கள். முகாம்களிலிருந்து வெளியே வந்த சிலருடன் தொடர்பு கொண்டிருக்கிறோம்.

    முகாம்கள் சரியல்ல. தொற்று நோயால் 50 வரையானவர்கள் இறந்திருக்கிறார்கள். ஒரு நாளில் 15 பேராவது ஏதாவது காரணத்தினால் இறக்கிறார்கள். சுகாதாரச் சீர்கேடு முக்கிய காரணம். தினமுரசு பத்திரிகையிலும் இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினை வருகிறது. (இது டக்ளசின் பத்திரிகை தானே?)

    • Soorya says:
      15 years ago

      ஆனால் மக்கள் பல வருட காலமாக காத்திருக்கிறார்களே, இன்னும் எவ்வளவு காலம் அவர்கள் காக்கவேண்டுமென்று சொல்வீர்களா?

  4. karunan says:
    16 years ago

    //இதுவரை போனவர்களின் வழியில் தமிழ் மக்கள் இன்றுவரை துன்பப்படுகிறார்களே என்று தான் ஒரு வழியை வகுத்துக்கொண்டு டக்ளஸ் செல்கிறார்//
    அவர் வழி தனி வழி அசோக்! அந்த வழியில் போய்த் தான் வன்னியில் குழந்த்தைகளும் பெண்களும் முதியோரும் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்ட போது கம் என்று பேசாமல் இருந்து கொலைகளை நியாயப் படுத்தும் தனி……… வழி!!

    முகாம்களில் இனச்சுத்திகரிப்பு நடக்கும் போது வெளி வெளி நாடுகளுக்கு மகிந்தவை சனநாயக வாதியாகக் காட்டும் தனீ வழி……….

    தமிழ் மக்களைக் கொல்லும் கொலைகாரர்களுக்கு முண்டு கொடுக்கும் டக்ளஸ் வழி தனி வழி…….

    அசோக், அவர் வழி தனீ ……… வழி….
    மகிந்த சொல்றான் டக்ளஸ் செய்யுறன்……
    அவர் ஒரு தடவை சொன்னா நூறு பேர் செத்த மாதிரி…….

  5. vaishnavi says:
    16 years ago

    //1400 பேர் வரை இறக்கிறார்கள் என்பது ஓர் அதீத கற்பனை. இப்படியான தகவல்களைச் சொல்பவர்கள் உண்மையான பிரச்சினைகளை மறைத்து திசை திருப்புபவர்கள் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்//
    வாரத்தில் 1400 பேர் இறக்கிறார்கள் என்பது ரைம்ஸ் இல் வந்த கட்டுரை.
    ரைம்ஸ் கட்டுரையாளர் ஏன் மிகைப்படுத்த வேண்டும். அவருக்கும் முதலமைச்சர் பதவியா தேவை?
    பாருங்கள் ! யாரோ வெள்ளைக் காரன் எமது மக்களுக்காக எழுதும் போதும் நீங்கள் அவரையும் நம்பாமல் அரசாங்கத்தை நியாயப் படுத்துகிறீர்களே?

    நீங்கள் யார்?

    • Soorya says:
      15 years ago

      நானா? சிங்கம். எழுதிய வெள்ளைக்காரன் வெள்ளைப்புலி!

  6. ashok-Jaffna says:
    16 years ago

    நீங்கள் யார்? என்ற கேள்விக்குப் பதிலாக சொல்வதென்றால்> மக்கள் விடுதலைக்காக போராட்ட அமைப்புகளை நாடிச் சென்று மீண்டு வந்து> தமிழ் மக்களைத் தலைநிமிரச் செய்ய ஏதாவது செய்ய முடிந்தால் செய்துகொண்டிருக்கிறேன். நீங்கள் நான் சொன்னதை மீண்டும் வாசித்தால் நல்லது> அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்குகிறேனா?

    இன்னொரு விடயம்> நீங்கள் புலம்பெயர் தமிழர்களாக இருப்பதால் வெள்ளைக்காரர்கள் சொல்வதை வேதவாக்காக எடுக்கலாம்> நாங்கள் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த முகாம் மக்கள் சொல்வதைத் தான் நம்புவோம்.

  7. rajan says:
    16 years ago

    I say ltte is responsible to all the miseries of tamils. They never respect the peace and other procedures. They thought that if singala racists is enthorned in colombo they can grow themselves. i directly observed the personal talking of ltte leaders during the 2005. after that my hopes on Ltte have been collapsed.

  8. p.loganathan says:
    16 years ago

    இவ்வேண்டுகோளை செவி சாய்க்கும் நிலையில் இவ்வீனப்பிறவிகள் இல்லை இந்த ஜென்மங்களையும் தமிழர்கள் எனக்கூறி தமழர்களை மீண்டும் கொச்சைப்படுத்தாதீர்

  9. Ramesh says:
    16 years ago

    The one and only leader for tamil people is Prabhakaran. We can not believe the people like Devananda. If anybody opposes my statement please mail me. ersram@gmail.com

  10. Ramesh says:
    16 years ago

    பிரபாகரன் மீண்டும் வருவான். தமிழ் ஈழம் தருவான் ersram@gmail.com

    • Soorya says:
      15 years ago

      உங்கள் மொழிபெயர்ப்பு நல்லாகவே இல்லை. இப்படித்தான் இருக்கவேண்டும்: பிரபாகரன் வருவார், தமிழீழம் தருவார்.
      ஆனால் நீங்களும் அதற்காக சிறிது முயற்சி எடுக்கவேண்டும். செய்கிறீர்களா?

    • Garammasala says:
      15 years ago

      எப்படியான முயற்சி?
      செத்தவர்களப் பிழைக்க வைத்தவர்களென ஒரு பட்டியல் உண்டு.
      அவர்களில் யாரையாவது உயிர்ப்பிப்பதா?

      பிரபாகரனை மட்டும் பிழை சொல்லி என்ன பயன்?
      இன்னமும் கனவு காணுகிறது தமிழ்ச் சமூகம்.
      பெரிய புள்ளிகள் தமிழனை ஏய்த்துப் பிழைக்கிறர்கள்.
      புதிய கனவுகளைக் காட்டுகிறார்கள்.

      நாம் விழிப்பது எப்போது?

      • Soorya says:
        15 years ago

        பிரபாகரன் இருக்கிறாரா அல்லது இறந்துபோய் விட்டாரா என விவாதிக்க நான் இங்கு வரவில்லை. முயற்சி என நான் சொன்னது, தமிழன் நிம்மதியாக சுதந்திரமாக வாழ்வதற்கு ஒவ்வொருவரும் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும் என்பதுதான். பிரபாகரன் கையிலே தமிழீழத்தைக் கொண்டுவந்து இந்தா பிடியுங்கோ எனத் தரப்போவதில்லை. விளங்கி விட்டதா அன்பரே? கறிக்கு எப்போது கரம்மசாலா போடுவீர்கள்?

      • Garammasala says:
        15 years ago

        “பிரபாகரன் வருவார், தமிழீழம் தருவார்.”
        இதன் அர்த்தம் என்ன?
        மசாலா போடாமலே மணக்கிறதே.

        முடிந்தவரை செய்யுங்கள்.
        முட்டாள்தனமான முயற்சிகள் பற்றி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
        பட்டது போதாதா.

  11. thamilmaran says:
    15 years ago

    கரம் மசாலா அவர்களே, புதிய கனவுகள் புதியநம்பிக்கைகளீன் தொடக்கம்.னேற்றூ மழை இன்றூ வெய்யில் என்றூ காலனிலைகளே மாறூம்போது தமிழரை மட்டும்நீங்கள் விழிக்கச் சொல்கிறீர்கள்.இலங்கையில் தமிழ்ர் முள்ளீ வாய்க்காலில் இருந்து வெளீயே வந்து விட்டார்கள். இன்னும் தூங்கிக் கொண்டிருப்பது யார் என்றூ உங்கலை உற்றூப் பாருங்கள்.

  12. thamilmaran says:
    15 years ago

    வைமன் றோட் புலிகள் முகாமில் வரிசையாய் கை கட்டிநின்ற தாடி வைத்தவர்கள் அந்த வீதியில் வாழ்ந்தவர்கள் அறீவார்கள் அங்கிருந்து வரும் ஓலங்களால்நித்திரை இழந்தவர்களூம் அந்த வீதியில் வாழ்ந்த தமிழர்களே.அப்பர் என்றூ அப்போது அழைக்கப்பட்ட தேவா அய்யனார் கோயிலடியில் உயிர் தப்பியதும் அவர் வந்த வெளலைக்கலர் வான் உயிர் இழந்ததும் வண்ணார் பண்னை மக்கள் அறீவர்.அப்போது யாழ் பொருப்பாளராக பாலச் சந்திரன் இருந்தார்.பின்னேரம் பெண் பிள்லைகள் எல்லாம் படலையில்நிற்கும் பின்னேரமாகப் பார்த்து புலித்தலைவர்களீன் மோட்டார் பைக் பவனிநடக்கும்.எம் வயிரெல்லாம் எரிந்த காலம் அது.வீதியில்,எங்கள் வீட்டுப் படலையில்நாங்கள் நிற்பதற்கே புலிகள் தடை விதித்தார்கள் தாங்கள் போராடநாங்கள் விலையாடுகிறோமாம்.சக தோழன் அகிலன் பின்னாளீல் கொலையானான்.இன்றீருந்தால் அவனும் இங்கிலாந்தில் இருந்திருக்கலாம்.ஒரு இஞினியராக் அல்லது அவன்நண்பன் சஞிவன் போல் ஒரு கண்க்காளனாக.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...