செங்கடல் படப்பிடிப்பின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு படப்பிடிப்பு முடிந்த பின்னர் இப்போது லீனாவும் ஷோபா சக்தியும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வினவு இணையதளம் லீனா எழுதிய கவிதையில் காட்டமாகி எழுதிய பதிவிற்கு பதில் பதிவாக லீனா எழுதிய கட்டுரையில்’’டேப்பை எடுத்துக் கொண்டு ஓடியது குற்றம்’’ என்று எழுதியிருந்தார்.
வலுவான குரலில் குற்றப்பத்திரிகை வாசித்த லீனா பேட்டா கொடுக்காததை குற்றமாக பார்க்கிறாரா? உழைப்புச் சுரண்டலாகப் பார்க்கிறாரா? என்கிற கேள்விகள் எல்லாம் எழுந்த நிலையில் ஷோபா சக்தி தன் அடுத்தப்பதிவை எழுதியிருக்கிறார். இந்நிலையில் ஷோபா சக்தியிடம் அடி வாங்கியவன் என்ற முறையில் அங்கு என்ன நடந்தது என்பதை நானும் பதிவு செய்திட விரும்புகிறேன்.
ஷோபா சக்தி மற்றும் லீனா மீதான தனிப்பட்ட தாக்குதல் அல்ல என் பதிவு. அவர்கள் படமெடுத்து ஆயிரம் கூலி உழைப்பாளர்களை ஏமாற்றிவிட்டுப் போனால் கூட சகித்துக் கொள்ளலாம். செங்கடல் என்று படமெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவை செய்கிறோம் என்று போலி வேசம் போட்டுக்கொண்டு அரசியலைப் பாவித்து படம் காட்டுகிறார்கள் படுபாவிகள்.
உழைப்பையே மூலதனமாகக் கொண்ட எனக்கும் எழுத்துரிமை உண்டு என “தோழர்கள்” ஷோபா சக்தி லீனா போன்றோர் ஒத்துக்கொள்வார்களோ தெரியாது. தமிழ் நாட்டில் நாளாந்தம் ஏமாற்றப்படும் ஆயிரம் சினிமா தொழிலாளர்களுடன் நானும் ஒருவன்.
பொதுவாக தமிழ் சினிமா 24 சங்கங்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு. ஒவ்வொரு அமைப்பும் தனித்தனியாக செயல்படுவது போன்ற தோற்றம் இருந்தாலும், இவை ஒவ்வொன்றும் சங்கிபோன்ற பின்னலைக் கொண்ட அமைப்புகளே. பேட்டா பிரச்சனை, லேப் பிரச்சனை, சம்பளம் என, எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் தத் தமக்கான சங்கங்களில் போய் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரச்சனை சரி செய்யப்படும்.
சரி செய்யப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட படத்தை இயல்பாகவே முடக்கி விடும் சக்தி இச் சங்கங்களுக்கு உண்டு. இப்படி பல பிரச்சனைகளால் நூற்றுக்கணக்கான படங்கள் வராமால் போனதும் உண்டு.
பைசல் பண்ணி வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படங்களும் உண்டு. ஓடாத படங்களும் உண்டு. இது தான் தமிழ் சினிமா. வலுவான சங்க பின்னணியைக் கொண்ட தமிழ் சினிமாவின் இந்தச் சூழலைப் புரிந்து கொண்டே செங்கடல் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த பிரச்சனையை நீங்கள் புரிந்து கொள்ள முயல வேண்டும்.
லீனா எனது நண்பர். ஆமாம்! அப்படித்தான் நான் நினைக்கிறேன். ஆனால் நல்லவேளை “தோழராக” இருந்ததில்லை. அவர் என்னை ஷூட்டிங் அழைத்தார் நானும் ஒரு அசிஸ்டெண்டாகச் சென்றேன். குறைவான பட்ஜெட் சிக்கனமான செலவு என்பதால் எல்லாம் எனக்கு எதுவும் பிரச்சனை இருக்கவில்லை. நட்புக்காக, ஆமாம் லீனாவுக்காகச் சென்றேன். இருபது நாள் ஷூட்டிங் நடந்தது. முதல் ஒரு வாரம் பேட்டா எல்லாம் ஒழுங்காக கொடுத்தார்கள். மீதி ஒரு நாளும் பேட்டா தரவில்லை. கேமிரா அசிஸ்டெண்டாக இருந்தாலும் உதவி இயக்குநராக இருந்தாலும் அவர்களுக்கு அன்றாடம் கிடைக்கும் பேட்டா மட்டும்தான் வருமானம்.
இது லீனாவுக்கும் தெரியும் அவர் என்னைப்போல ஒரு ஏழை அசிஸ்டெண்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உண்மை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லையே?
சரவணன் என்பவர்தான் கேமிரா அனுப்பியிருந்தார். அவர் ஹைதராபாத்தில் இருந்து இவர்களின் படத்திற்காக கேமிரா வாடகைக்கு எடுத்துக் கொடுத்ததாகச் சொன்னார்கள்.
சென்னையில்ருந்து வந்திருந்த கேமிரா அஸிஸ்டன்டுக்குக் கூட பேட்டா கொடுக்கப்படவில்லை. அவர்கள் அதைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். பேட்டா இல்லாமல் வாழ்க்கை, தங்குமிடம், உணவு, உடை எல்லாமே கேள்விக்குரியதாகிவிடும்.
இதில் கேவலம் என்னவென்றால், ஹைதராபாத்திலிருந்து வந்திருந்த உதவியாளர்களுக்கு தமிழ் பேசக் கூடத் தெரியாது, தனி என்ற தமிழ் நாட்டுக்காரர்தான் அவர்களுக்குத் தொடர்பாளர். பேட்டா இல்லாமல் அவர்களும் தெருவிலே அலைய வேண்டியதாயிற்று.
தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய லீனா – ஷோபா கூட்டணி அவர்கள் கேட்ட, அவர்களுக்கு உரிய பணத்தைக் குறித்து எந்தப்பதிலும் சொல்லாமல் தொழிலாளர்களைத் தட்டிக்களிதனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தாங்கள் ஷூட் பண்ணிய பூட்டேஜை எடுத்துக்கொண்டு சென்னைக்குக் கிளம்பிவிட்டார்கள்.
அதிலும் இறுதி இரண்டு நாள் பூட்டேஸ் மட்டும்தான். இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை அவர்களுக்குப் பூட்டேஜ் கொடுக்க வேண்டும். அதற்கும் முன்னையவை எல்லாம் லீனா குழுவிற்குக் கொடுத்துவிட்டார்கள்.
இதைத் தான் லீனா டேப்பை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்கள் என்றார். இதற்கு பேட்டா கொடுக்காததே காரணம்.பேட்டா கொடுக்கப்படாததற்குப் பதிலடியாக அதனைப் பெற்றுக்கொள்ளும் போராட்டமாக டேப்பை எடுத்துக்கொண்டு ஓடியது குற்றமா அல்லது பேட்டாவே கொடுக்காமல் தொழிலாளர்களைத் “தோழர்கள்” ஏமாற்றியது குற்றமா? “தோழர்” லீனா தான் பதில் சொல்லவேண்டும்.
பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறு நடைபெறுவது எல்லாப் படப்பிடிப்புகளிலும் ஒரு பொதுவான நடைமுறை என்பது வேறுவிடயம்.
குறைந்த செலவுப் படம் என்பதால் எல்லா தொழிலாளர்களும் புரிந்துணர்வோடே நடந்து கொண்டார்கள். முதலில் அவர்கள் பல இன்னல்களுக்கு உள்ளான போதும் பெரிதாக வாக்குவாதப்படுவதில்லை. நானும் கூடப் பல தடவைகள் அவர்களைச் சமாதானப்படுத்துவது உண்டு. ஆனல் கேமிரா மறு நாள் ஒரு இடத்திற்குக் கொண்டுபோய் படம் பிடித்துவிட்டுக் திரும்பக் கொண்டுவர வேண்டிய தேவை இருந்ததால். தனி உட்பட்ட ஆசிஸ்டன்கள் லீனா குழுவிடம் 1500 ரூபாவைத் தரவேண்டிய பணத்திலிருந்து கேட்டார்கள் அதைக்கூட அவர்கள் கொடுக்க மறுத்து பல மணி நேரங்களின் பின்னரே கொடுத்ததால், அவர்களுக்கு கடுப்பு அதிகமாகிவிட்டது.
இவை அனைத்தையும் சேர்த்து கேமிராவை பூட்டேஜுடன் சேர்த்துக் கொண்டுபோய் விட்டார்கள்.
சரி, இதையெல்லாம் விடுங்கள். என்னில் என்ன குற்றம் கண்டார்கள்?
நான் என்ன தவறு செய்தேன். டேப்பை எடுத்துச் சென்ற உடன் நானும் லீனாவும் கேமிரா அசிஸ்டெண்டுக்கு போன் பண்னினோம். ஆனால் அவரது போன் ஸ்விட்ச் ஆப்ஃ ஆகியிருந்தது.ஆத்திரம் உச்சிக்கு ஏற லீனா தனது கையில் இருந்த செல்போனை தரையில் வீசி உடைத்தார். இது நடந்தபோது இரவு எட்டு மணியிருக்கும்.
லீனா கடுமையான டென்ஷனில் இருந்தார். ஷோபா சக்திக்கு அதை விட டென்ஷனாக இருந்தார். ஏதாவது செய்ய வேண்டும், லீனாவுக்கு தனது நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும். அல்லது சமாதானப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் தவிப்பும் அவருக்கு இருந்தது.
நான் அங்கிருந்து அகன்று சென்று விட்டேன். இரவு 10.30 மணியிருக்கும் ஷோபாசக்தியும் அவரது இரண்டு நண்பர்களும் வந்து என்னை தனியாக அழைத்தார்.அப்போது என்னுடன் இருந்த எடிட்டரையும்,போட்டோகிராப்பரையும் திரும்பிச் செல்லுமாறு அனுப்பி விட்டு என்னை மட்டும் மீட்டிங் இருக்கிறது என்று அழைத்துச் சென்றார்கள்.
ஷோபா சக்தி புல் போதையில் இருந்தார். எனக்கு அப்போதே அவர் மீது சந்தேகம் இருந்தது. புரடக்சன் வண்டி டிரைவர் எனக்கு நண்பர் ஆனால் அவர் என்னோடு வருவதை ஷோபாசக்தி அனுமதிக்கவில்லை, ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த அறையில் சுமார் 8 பேர் இருந்தார்கள். ஷோபா சக்தி, அசோசியேட் டைரக்டர் ரமேஷ், மற்றும் ஆர்டிஸ்ட் ( அவர் லீனாவுக்கு வேண்டிய இன்னொரு “தோழர்”) 3 பேரும் இருந்தனர். ஆக மொத்தம் எட்டு பேர்.
அதில் தலைமை நாட்டாமையாக ஷோபா சக்தி! அவரை அந்தப்பதவிக்கு உள்ளே போயிருந்த குரங்கு உயர்த்திவைத்திருந்தது.
அவர்கள் என்னை விசாரித்தார்கள். எனக்கு கொஞ்சம் பயம் இருந்தது. நான் ’’ஓனரிடம் பேசி விட்டேன். அவர் லீனாவின் கணவர் சி. ஜெரால்டிடம் கொடுத்து விடுவதாகச் சொல்லி விட்டார். அப்படியே டேப் ஜெரால்டின் கைக்குச் செல்லாவிட்டாலும் கேமிரா அனுப்பிய ஓனரின் கைக்குத்தான் செல்லும். அவரிடமிருந்து ஜெரால்சிற்குச் செல்லும். இதை நான் லீனாவிடமும் சொல்லி விட்டேன்’’ என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த ஆகச் சிறந்த மார்க்சியவாதியும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தீராத கரிசனமும் மாறாத காதலும் கொண்ட மனித் உரிமை வாதி ஷோபா சக்தி என்னை தாக்கினார்.
நான் இதை எதிர்பார்த்தாலும் என்னால் அதை எதிர்கொள்ள முடியவில்லை. என் மொபைலை மேனேஜர் தனுஷ் பிடுங்கிக் கொள்ள நான் பயந்து விட்டேன். அலறி என்னைக் காப்பாற்றுமாறு கத்தினேன். கதவை உடைத்து டிரைவர்கள் என்னைக் காப்பாறினார்கள். அப்போது ஒரு வேளை நான் கத்தாமல் அங்கிருந்தால் எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் அவ்வளவு கட்டுங்கடங்காத வெறி ஷோபா சக்தியிடம் இருந்தது.
ஷோபா சக்தி பெரும்பாலும் படப்பிடிப்பில் குடிபோதையில் தான் இருப்பார். மாலை நேரம் நெருங்கினால் போதும் போதை தலைக்கேறிவிடும். இப்போதெல்லாம் அவர் எழுதுவதைப் பார்த்தால் கார்ல் மார்க்ஸ் கூட குவாட்டர் அடித்துவிட்டுத்தான் எழுத ஆரம்பிப்பார் என்று கூட எழுதினாலும் ஆச்சரியப்பட முடியாது.
கதாசிரியர் என்ற வகையில் ஷோபாவோடு நான் பேச வேண்டும். ஆனால் ஆரம்பத்திலிருந்தே அவரிடம் பேசுவதில்லை. தொழிலாளர்களை அவர் மதிப்பதில்லை. எங்களை எல்லாம் ஏளனமாகத் தான் அணுகுவார். இவரோடு எப்படி நாங்கள் பழகுவது. அப்படியே உணர்வுகளை அடகுவைத்துவிட்டுப் பேசினாலும் பாதி நேரம் குடி போதையில் தன் உணர்வு இல்லாமல் அலையும் அவருடன் எப்படிப் பேசுவது. இது குறித்து லீனா பல தடவை என்னோடு கடிந்து கொண்டார். இதனால் ஷோபாவிற்கு என் மீது ஆத்திர உணர்வு இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தார்.
என்னை மீட்டவர்கள் ஷோபாசக்தியை எச்சரித்தார்கள். நள்ளிரவு 12 மணிக்கு அவர்கள் கிளம்பிவிட்டார்கள். நண்பர்கள் என்னை ரூமிற்கு அனுப்பாமல் அவர்களுடனே வைத்துக் கொண்டார்கள். அடி வாங்கிய பிறகு 12.30 மணிக்கு டேப்பை எடுத்துச் சென்ற அசிஸ்டெண்ட் எனக்கு போன் செய்து மதுரையைத் தாண்டிச் செல்வதாகவும் டேப்பை ஓனரிடம் கொடுத்து விடுவதாகவும் தெரிவித்தான். அவனிடம் இங்கு நடந்த அனைத்த விஷயங்களையும் சொன்னேன்.மேலும் லீனாவுக்கு போன் செய்து பேசு எனவும் கூறினேன்.
நானும் லீனாவின் மொபைலுக்கு அழைத்தேன் அது வேலை செய்யாததால் அறைக்குச் சென்றேன்.அப்போது இரவு இரண்டு மணி இருக்கும். அங்கே ஷோபா சக்தி என்னை அடித்தது பற்றி லீனாவிடம் விவரித்துக் கொண்டிருந்தார்.
என்னைப் பார்த்து ஷோபா சக்தி ‘‘என்னை திருப்பி அடிக்க வந்தயா? ’’ என்று கேட்டார். நான் டேப்பை எடுத்துச் சென்றவரிடம் பேசியதையும் சொல்லி விட்டு என்னை அடித்தது பற்றியும் லீனாவிடம் சொன்னேன். மேலும் நான் ஒரு அரசு ஊழியன் என்னை அடித்துவிட்டு அவர் எளிதில் பதில் சொல்லாமல் இருக்க முடியாது என்பதையும் நான் லீனாவிடம் தெரிவித்தேன்.
இப்படத்தின் இயக்குநர் என்ற முறையில் உங்களிடம் சொல்கிறேன் உங்கள் படத்தின், உங்கள் யூனிட்டின் ஒரு ஊழியன் என்ற முறையில் உங்களிடம் சொல்கிறேன், நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினேன். ஷோபா சக்தியை அடிப்பது ஒன்றும் எனக்கு அவ்வளவு பெரிய வேலை இல்லை என்றேன். ஷோபா சக்தியிடம் நீங்கள் செய்தது முட்டாள் தனம் என்று மட்டும் கூறினேன். டேப்பை எடுத்துச் சென்ற சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லாத போது எந்த முட்டாளாவது இப்படிச் செய்வானா? என்பதுதான் எனது ஆதங்கம்.
பிறகு நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். 4 மணியளவில் எனக்கு லீனா எனக்கு போன் செய்தார் எனது போன் ஆப்ஃஆகியிருந்ததால் எனது புரடொக்ஷன் அசிஸ்டண்டிடம் பேசினார்,பிறகு அவர் என்னிடம் போனைக் கொடுத்து பேச சொன்னார் அப்பொழுது லீனா என்னிடம் இந்த விஷயத்தை பெரிது பண்ண வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். தனக்கு இந்த விஷயம் நான் சொல்லித்தான் தெரியும் என்றும் கூறினார்.
எனக்கு பல பத்திரிகையளர்களையும், எழுத்தாளர்களையும் தெரியும் என்பதும் லீனாவிற்கு நன்கு தெரியும், அதனால் தான் விடியகாலையிலேயே எனக்கு போன் செய்தார்கள் மேலும் நான் இருக்கும் இடத்திற்கே வந்து பிரச்சனையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
நான் அவர்களை பார்க்க விரும்பவில்லை என்று கூறிவிட்டேன். எனது வருத்தம் என்னவென்றால் அவர் நான் சொன்னபோதே அங்கிருந்த ஷோபா சக்தியை அவர் கண்டித்திருக்க வேண்டும். பிரச்சனைகள் வேறு, அடித்தது தவறு என்று அந்த இடத்திலேயே அவர் சொல்லியிருந்தால் நான் அவரை மதித்திருப்பேன்.
இங்கே என மனதை நெருடுவது ஒன்றுதான் ஷோபாவை லீனா தோழர் என்று அழைப்பார். அவர் இவரை தோழர் என்றுதான் அழைப்பார்கள்.தோழர் என்றால் கம்யூனிஸ்டுகள் அல்லவா? இப்படியாக இரண்டு தோழர்களும் சேர்ந்து என்னை இப்படி டீல் செய்கிறார்களே என்பதுதான் எனக்கு நெருடலாகவும் வேதனையாகவும் இருந்தது.
அவர் காலையில் கண்டிப்பதாகச் சொன்னார் இரவில் கண்டிக்காத தோழர், எப்படி காலையில் காலையில் கண்டிக்க முடியும் என்பதால் எனக்கு அவமானமாக இருந்தது. நான் பெரிதும் மதிக்கும் மு. ராமசாமிக்கு தொலைபேசி எனக்கு நடந்ததைச் சொன்னேன். அவர் தமிழ் நாடு மதிக்கும் மிகப்பெரிய எழுத்தாளர். அவர் திட்டினார். அவர்கள் நேர்மையில்லாதவர்கள் நீ ஏன் போய் அவர்களிடம் வேலை பார்க்கிறாய் என்று என்னை திட்டினார். ஷோபா சக்தி, லீனா பற்றி எல்லாம் அவர் தெரிந்து வைத்திருந்தார். அவர் திட்டினாலும் அதுதான் அப்போது ஆறுதலாக இருந்தது.
ராமேஸ்வரம் ஸ்டேஷனில் போய் ஷோபா சக்தி மீது புகார் கொடுத்தேன்.நான் புகார் கொடுத்த விஷயம் ஸ்டேஷன் ஏட்டு மூலமாக அந்த ஏரியா கைடுக்கு தெரியவந்து அவர் மூலமாக லீனாவிற்குத் தெரியவந்தது ஆனால் அந்த இடத்தில் லீனாவிற்கு அதிக செல்வாக்கு இருந்தது. அரசியல் ரீதியாகவும் அந்தஸ்து ரீதியாகவும் செல்வாக்கோடு இருந்தார் லீனா. அந்தப் பகுதியில் உள்ள ஒரு இன்ஸ்பெக்டர் லீனாவின் கணவர் ஜெரால்டின் நண்பர் ஆகவே சம்பவ இடத்திற்கு என்னை அழைத்துக் கொண்டு அவர் சமாதானம் பேச வந்தார்.
அங்கே லீனா கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார். எஸ் ஐ வந்த பிறகும் அவர் எழுந்திருக்கவும் இல்லை காலை கீழே போடவும் இல்லை. இதில் எஸ் ஐ டார்ச்சர் ஆகி விட்டார்.
ஷோபா சக்தியை விசாரிக்கவே அவர் அங்கு வந்திருப்பதாகச் சொன்னார். இன்ஸ்பெக்டருடன் லீனா வாக்குவாதப்பட்டார் இதைக் கவனித்த ஏட்டு ஒரு மொபைல் போனில் நடப்பவற்றை படம் பிடித்தார். இதனைப் பார்த்த லீனா மேலும் டென்ஷனாகி பதிவு செய்யக்கூடாது எனவும் கோபப்பட்டார்.
எரிச்சலான எஸ் ஐ அந்த போனை லீனாவிடமே கொடுத்துவிடுமாறு ஏட்டிடம் கூற லீனா கொடுக்க வந்த ஏட்டை அடிக்க கை ஓங்கினார் இதப் பார்த்த எஸ். ஐ ஷோபாசக்தியை தரதரவென்று இழுத்து ஜீப்பில் ஏற்றினார் ஷோபாசக்தி அப்பொழுது போதையில் இல்லாமல் மிகவும் அமைதியாகவே நின்று கொண்டிருந்தார்.
அப்போது தன்னைக் கைது செய்ய வேண்டாம் என்று எஸ் ஐ யிடம் கும்பிட்டுக் கெஞ்சினார், ஆனால் அவரை வண்டியினுள் இழுத்துக் கொண்டுபோய் போட்டார்கள்.
என்னை சமாதானம் செய்ய லீனாவின் தம்பி என்னிடம் பேசினார். நான் என்னை அடித்தற்கு ஷோபாசக்தி பதில் சொல்லியாக வேண்டும் என்று விடாப்பிடியாக கூறி விட்டேன். தவிறவும் தலையில் பலமாக அடிப்பட்டதால் எனக்கு அரசு மருத்துவமனை சிகிச்சையும் அவசியம் என்பதுதான் சட்ட ரீதியாக என் வாதமும் விருப்பமும்.
கொஞ்ச நேரத்தில் மீண்டும் ஸ்டெஷனில் காட்சிகள் மாறியது. ஸ்டேஷன் ஏட்டு என்னை மிரட்டத் துவங்கினார். லீனாவின் அறைக்குள் இரவு இரண்டு மணிக்கு அத்து மீறி நுழைந்ததாக உன் மீது வழக்குப் பதிவு செய்து விடுவேன் என்றார்.ஒரு வழியாக எனது வாக்குமூலத்தை எழுதி வாங்கி விட்டு சிகிச்சைக்கு என்னை அனுப்பினார்கள்.
நான் சிகிச்சைக்குச் சென்றேன் லீனாவும் ஷோபா சக்தியும் ஸ்டேஷனில் இருந்து வெளிவந்து சென்னைக்குக் கிளம்பிவிட்டார்கள்.லீனாவின் வலைக்குள் இருந்த கைடும் என்னை மிரட்ட ஆரம்பித்தார். லீனாவும் அதைத் தட்டிக் கேட்கவில்லை. “தோழர்கள்” இருவரும் ஸ்டெஷனில் இருந்தும் வெளிவந்து விட்டார்கள். சாதாரணமாக இம்மாதிரி தாக்குதல் வழக்குகளில் ஸ்பாட் பைன் என்கிற மாதிரியான நடைமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படுவதில்லை.
ஆனால் அதிகார பீடங்கள் எனும் மந்திரக் கோல்கள் தட்டினால் எப்படியான காக்கிக் கதவுகள் கூட திறந்து விடும் இல்லையா?அப்படியாகத்தான் தோழர்கள் தங்களின் மேல்மட்டத் தொடர்புகளைப் பயன்படுத்தி வெளிவந்தார்கள். எவ்வித அதிகாரமும் அற்ற நான் இன்று வரை ஷோபா சக்தியிடம் உதையும் வாங்கி விட்டு அதற்கான நீதியோ, அறத்தின் பார்பட்ட கரிசனமோ கூட இன்றி கிடக்கிறேன். இப்போது அவர்கள் பல் வேறு சமூக பிரச்சனைகளுக்காவும் எழுதத் துவங்கி விட்டார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக நான் பத்திரிகைகளுக்கு மற்றி மாற்றி சொன்னதாக ஷோபாசக்தி கூறியுள்ளார் நான் தமிழ்க அரசியல் பத்திரிகைக்கு என்ன கூறினேனோ அதையேதான் நம் தேசத்திற்கும் கூறினேன் ஆனால் நம் தேசத்தின் ஆசிரியருக்கு லீனா மீது ஏற்கனவே கோபம் உண்டு. லீனா அவரை ஏமாற்றியிருக்கிறார்.
அதனால் அவரை பழி வாங்க வேண்டும் என்பதற்காக அவர் நான் கூறியதை திருத்தி எழுதி, நான் சொல்லாத சில விடயங்களையும் எழுதியுள்ளார். சேர்த்து எழுதியதை ஷோபாசக்தி இப்பொழுது சுட்டி காட்டியுள்ளார் நான் அப்பொழுதே அந்த ஆசிரியரிடம் கூறினேன். நான் நினைத்தது போல் நடந்து விட்டது..
இப்போது விரிவாக பத்திரிகைகளில் இது பற்றி பேச விரும்பினேன் அதுதான் இந்தப் பதிவு. இனியொரு இதனை வெளியிட்டு உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் என நம்புகிறேன். நான் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருக்கும் போது இனியொருவில் வெளியான செய்தியை எனது மாமா பிரதியெடுத்து வந்து காண்பித்தார்.
செங்கடல் அல்ல சுரண்டல் கடல்.
பணம் இல்லாமல் கூட பலர் சினிமா எடுக்கிறார்கள். ஆனால் அதைச் செய்வதற்கும் சில நட்பு சக்திகளும் தொழில் நுட்பக்கலைஞர்களும் உண்டு.ஆனால் லீனா நினைப்பதோ வெறுங்கையாலே முழம் போடுவது என்பார்கள் அல்லவா? அப்படித்தான். அவர்கள் இருவருக்குமே தொழிலாளர்கள் பற்றிய சிந்தனையே கிடையாது. பத்து ரூபாய் செலவு செய்ய வேண்டிய இடத்தில் எட்டு ரூபாய் செலவு செய்வார்.
ஆனால் லீனா அளவிற்குக் கூட வசதியில்லாத சிலர் ஊதியம் கொடுக்காவிட்டாலும் தொழிளார்களை மரியாதையாக பிரெண்லியாக நடத்துவார்கள். ஆனால் இவர்கள்?எனக்கு மொத்தம் 35,000 சம்பளம் என்று பேசப்பட்டது ஆனால் இதுவரை நான் 10,800ரூபாய் தான் ஊதியம் பெற்றிருக்கிறேன் மீதி பணத்தை நானே வேண்டாம் என்று கூறிவிட்டேன்.எனக்கு பணம் ஒரு விஷயம் அல்ல ஆனாம் மான அவமானம்,
நான் லீனாவிடம் கொண்ட நட்பின் காரணமாக மட்டுமே ஷோபா சக்தியை மதித்தேன். மற்றபடி அவர் மீது எனக்கு எந்த மரியாதையும் கிடையாது. அவரை அடிப்பதும் பெரிய விஷயம் அல்ல. ஆனால் மூச்சுக்கு முன்னூறு தடவை தோழர், தோழர் என்று சொல்லும் ஒரு “முற்போக்கு வாதி” இப்படி கீழ்த்தரமான ஆளாக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. லீனாவுக்கு உலக அளவில் புகழ் பெற வேண்டும் என்ற ஆசை. ஆனால் அதற்கு அவரும் அவர் “தோழர்களும்” தொழிலாளர்களை அல்லவா விலை பேசுகிறார்கள்!
நான் மு.ராமசாமி அவர்கள் போலெல்லாம் எழுத்தாளர் இல்லை. ஆனால் என்மீது தொழிலாளர்களை ஏமாற்றியவர்கள் சேறு பூசினால் எனது நியாயத்தையும் நான் சொல்வேன்.
சகோதரர் தீபக் உங்களுடைய நியாயத்தையும் மன உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடிகின்றது.உங்களுக்கு எங்கள் நாட்டவனால் ஏற்பட்ட துன்பத்திற்கு நான் மன்னிப்புகேட்கிறேன்.
தீபக்கின் வார்த்தைகள் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. சென்னையில் மூன்றூ சொந்த வீடுகளை வைத்து மிக மிக வசதியான நிலையில் வாழும் லீனாவும், கோவை நந்தன், டக்ளஸ் பணத்தில் வாழும் ஷோபாவும் சில் நூறு ரூபாய்கள் கூடவா? பேட்டா கொடுக்க முடியாமல் போனார்கள். இவர்களின் முற்போக்கின் யோக்கியதை இதுதானா?
இதைத்தான் பாருங்கோ சொல்வது
உண்மைகளுக்கு அழிவில்லை என்று.
சோபா அம்பலப்பட்டு வெகுகாலமாகிவிட்டது.
இனி அம்பலப்பட அவரிடம் எதுகும் இல்லைப்போல.
இரவு பண்ணிரண்டு மணி….மீட்டிங் என்று சோபா சக்தி கூட்டிக் கொண்டு போனார்…..”கிட்டதெட்ட இரவு பண்ணிரண்டு மணிவரைக்கும் வே.பிரபாகரன் மீட்டிங் என்று கூறி ….பற்குணத்துடன் பேசிக்கொண்டிருந்தார்…. என்னடா இது குழப்பம்!….இலங்கைத் தமிழரை இந்த இணையதளத்தில்,எந்த வட்டத்திற்குள் குறியிட முனைகிறீர்கள்!.
லீனா மணிமேகலைக்கு அடேங்கப்பா இவ்வளவு அரசியல் செவாக்கா?.நானும் ஒரு கட்சியின் பிரிவுக்கு தமிழ்நாட்டின் மாநில செயலாளராக இருந்திருக்கிறேன்!.போலீஸ் மீது கைவைத்தாரா?,கவுண்டர் வீட்டு பொண்ணா?.
புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள்,இந்தியாவில்,தமிழ்நாட்டில் தங்கள் பணங்களை(காசை),முதலீடு? செய்யும் போது,”நாயுடுடுகளிடம்தான்(ஆந்திர தொடர்புள்ள)” கொடுத்துவைக்கிறார்கள்!- இது என்ன உள் பாலிட்டிக்ஸ்!?.பல்வேறு பின்ணணி கொண்டவர்கள்,என்னிடம் ஆத்திரப்பட்டு கூறினார்கள்….இலங்கைக்கு இந்தியாவிலிருந்து பல்வேறு பொருள்கள் அபிவிருத்திக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது,ஆனால் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய பொருள் ஒன்று உள்ளது அதுதான் “வெள்ளை வேன்”.நான் இதை எழுதுவது,இத்தகைய சூழலை தவிர்க்கவேண்டும் என்பதால்தான்.தமிழர் மீதான படுகொலை,ஒடுக்குமுறைகளுடன் சம்பந்தமிருந்தால்,இப்படி” முட்டள்தனமாக” எழுதவேண்டிய அவசியம் இல்லை!.தனிநபர்களால் விஷயங்கள் நடத்தப்படுவதில்லை,சூழ்நிலைகளின் நிர்பந்தங்கள் மெதுமெதுவாக துவங்கி,தங்க முடியாமல் யாருக்கு ஆகியிருக்கிறது?.நீங்கள் கூறும் சிங்கள பேரினவாதத்திற்கும்,இந்திய அதிகாரவர்கத்திற்கும்!.இதிலிருந்து எங்களைப் போன்றோர் வேறுபட்டு நட்புக்கொள்ள விரும்புகிறோம்!.
சோபாசக்தி ஒரு நித்தக்குடிகாரனா? வெட்ககேடான விடயம், உழைப்பளரை சுரண்டும் இவர் ஒரு உண்மையான கம்யூனிஸ்டாக இருக்க வாய்பே இல்லை.
…………………………. நமது நாட்டின் ஏழைகள், உழைக்கும் மக்களின் வறுமை, தலித்துக்கள் மீதான சாதிக்கொடுமை, பெண்கள் மீதான வன்முறை, விளிம்பு நிலை மனிதர்கள் என 90களுக்குப் பிற்பகுதியில் தன்னார்வக்குழுக்கள் எப்படி இவர்களை குறி வைத்து பணம் பண்ணியதோ அதே வேலையை செய்து கொண்டுருப்பவர்தான் லீனா. சிறிதும் நேர்மையற்ற லீனா தனது படங்களில் வேலை பார்க்கும் யாருக்கும் முறையான ஊதியம் கூட வழங்குவதில்லையாம். எவனாவது ஊதியம் கேட்டால் தனது ‘பெண்மையை’ அவனுக்கு எதிரான ஆயுதமாக மாற்றி அமர்க்களம் பண்ணி விடுவாராம்.-வினவு.காம்
இப் படத்தை எந்த திரைப்படவிழாவிலும திரையிடப்படமால் பாதிக்கப்பட்ட தொழிலாளா;களுக்காhக குரல் கொடுக்க வேண்டும்.
காசின் மேலே இலக்காய் இருப்போரால்தான் கலை செய்ய நினைக்கும் லீனா காயப்படுகிறார்.
கன்றோடு சேர்ந்த பன்றீயும் சேறாகும் என்பதுபோல் லீனா மீது சேறூ வீசப்படுவதை அனுமதிக்க முடியாது.
“கன்றோடு சேர்ந்த பன்றீயும் சேறாகும் என்பதுபோல் லீனா மீது சேறூ வீசப்படுவதை அனுமதிக்க முடியாது.”
என்னா சாமி, புதுசு புதுசர் பழமொழில்லாம் அவுத்து வுடுறே.
நம்மூர்லேல்லாம் “பன்னியொடே சேந்த கன்னுக்குட்டி மலம் திங்கும்” எம்பாங்க.
ஓன் ஊர்லே பன்னி தான் யோக்கியமா?
லீனா பன்னியா கன்னுக்குட்டியா?
வெளிநாடுகளில் அசைலம் கேஸ் வாசிப்பவர்களுக்கு எமது பிரச்சனை எப்படி விளங்கப்போகுது என நினைப்பேன்.இன்றுதான் விளங்கியது எப்படி என்று.
தீபக்கின் வாக்குமூலம் என்ன நடந்தது
என்பதில் பல தெளிவற்றதாக இருக்கின்றது.எல்லாம் கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
பன்றீக்கூட்டத்தோடு சேர்ந்தால் கன்றூம் சேறாகும் என்பர்.இதையே தமிழ் சேரிடம் அறீந்து சேர் என்றது.மார்க்ஸ்ஸீசத்தில் நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் மார்க்ஸ் மீது மரியாதை உள்ளவர்கள் அவரை மதிப்பவர்கள் ஆனால் இவர்கள் அவர் மீது கல்லெறீவதோடு தமது ஒழுக்க குரைபாடுகலையும் நியாயப்படுத்துகிறார்கள். தம்மையே திருத்தாதவர்கள் எப்படி சமூகத்தை திருத்தப் போகிறார்கள்.கார்ல் மார்க்ஸீன் மூலதனம் என்ற் முதலீட்டில் வாழ்பவர்கள் உண்ணூம் இலையிலே மலம் கழிக்கிறார்கள்.சுயநலமும் புகழ்போதையிலும் தம்மை மறந்து போனவர்க்ளா சமூகத்தை திருத்துவார்கள்.
இந்த ஷோபா சக்தியைப் போல புலியெதிர்ப்பு வாதம் கூறி பிழைப்பு நடத்தும், மார்க்கசிய, லெனினிச, கம்யுனிச, இடதுசாரி தத்துவம் பேசும், எழுதும், கவிதை பாடி மாற்றான் முதுகில் பிழைப்பு நடத்தும் சிலர் எம்மிடையே இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு இத்தளத்திலேயே பேராசிரியர் அ. மார்க்ஸ் (ஆதவன் தீட்சணயா) (https://inioru.com/?p=11249) அவர்கள். இப்படி சுதந்திர ஊடகவியலாளர் (மாற்று) என்ற போர்வையில் ஒருவர் தன் குடும்பத்தை புலம்பெயர் நாட்டில் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, “கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் உருவத்தில், இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்படும் ஒரு சூழ்நிலை உருவான போதும், நாட்டு மக்களில் பெரும்பாலோர் எடுத்த, புத்திசாலித்தனமானதும், தீர்க்கதரிசனமிக்கதுமான முடிவால், அவர் தோற்கடிக்கப்பட்டு, ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டமை, நமது நாட்டு மக்கள் ஜனநாயகத்தின் மீது கொண்டிருந்த அசையாத பற்றுறுதியை எடுத்துக்காட்டியது.” என்றும்.
1. “தமிழ் பேசும் மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் விட்ட தவறை, மீண்டும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலும் விடாது, பொது சன ஐக்கிய முன்னணிக்கு வாக்களித்து, அதை அமோக வெற்றியீட்ட வைப்பதின் மூலம், தேசத்தின் முன்னேற்றப் பாதையில், அனைத்து முற்போக்கு மக்களுடனும் கைகோர்த்து முன் செல்ல, இத் தேர்தலை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்த வேண்டும் என ‘கனடியத் தமிழர் ஜனநாயக விழிப்புணர்வு மன்றம்’ வேண்டிக் கொள்கிறது.” (http://www.thenee.com/html/040310-2.html) என்று கூலிக்கு மாரடிக்கிறவர்களும் (https://inioru.com/?p=11249 – Posted on 02/25/2010 at 5:47 am )
உள்ள நிலையில், இன்னுமோர் ஓர் மாற்று ஈழத் தமிழனால் பாதிக்கப்பட்ட தீபக்கின் நம்தேசத்தில் வந்த பேட்டி:
நம்தேசம்:
இப்படம் எதற்காக எடுக்கப்படுகிறது? வணிக நோக்கமா அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்தவா?
தீபக்:
கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான் லீனா மற்றும் சோபாசக்தி ஆகியோரின் நோக்கம். மற்றபடி விழிப்புணர்வு ஏற்படுத்துவது இவர்கள் நோக்கம் என்று நான் நினைக்கவில்லை.
’நுண் அரசியல், தலித்தியம், விளிம்பு நிலை மக்களின் உரிமைகள், மனித உரிமைகள், பெண்ணியம்’ உள்ளிட்ட ஏராளமான ‘புரட்சிகர’ சரக்குகளின் மொத்த வணிகர்களான ’கொரில்லா’ சோபா சக்தி, லீனா மணிமேகலை இருவரும் தாங்கள் ‘எவ்வளவு ஜனநாயகமானவர்கள்’ என்பதை வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர்.
’கொரில்லா’ சோபாசக்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் நபர். ’விடுதலைப் புலிகள் ஜனநாயம் அற்றவர்கள்’ என்பது அவரது பிரபலமான ’கண்டுபிடிப்பு’ ஆகும். சம்பளம் கேட்டால் குடித்துவிட்டு அடிப்பதுதான் ஜனநாயகம் போலிருக்கிறது. அப்படிப்பட்ட ஜனநாயகம் விடுதலைப் புலிகளிடம் இல்லை என்பதுதான் ‘கொரில்லா’ சோபாசக்தியின் விசனமோ!
லீனாவைப் பொறுத்தவரை, அதிகார மையங்களுக்கு நெருக்கமாக இருந்துகொண்டு ‘முற்போக்கு’ பேசுவது அவரது ’புரட்சிகர’ நடவடிக்கைகளில் ஒன்று. இந்த இருவரும் ‘இணைந்து’ ஈழம் பற்றியும் மீனவர்கள் பற்றியும் படம் எடுக்கிறார்களாம்!
விதியே விதியே
என்செய்ய நினைத்தாய்
தமிழ்ச் சாதியை!
மேலும் முழுப் பேட்டிக்கு:
http://namthesam.com/?p=857
முற்போக்கு என்பது மேடைபேச்சிலும், எழுத்திலும் இல்லை; நடைமுறையில் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு இன்று மார்க்கசிய, லெனினிச, கம்யுனிச, இடதுசாரி தத்துவம் பேசுகிறவர்கள் எல்லோரும் எங்கிருந்துகொண்டு பேசுகிறார்கள்? இரஷியாவிலோ, சீனாவிலோ, கியூபாவிலோ, வடகொரியாவிலோ இருந்து அல்ல, எல்லோரும் மேற்க்கத்திய நாடுகளிலேயே இருந்து. அதுமட்டுமல்ல இந்த கொள்கையை எழுதும், நடத்தும் இணைய தளங்கள் எங்கிருத்து இணைக்கப்படுகின்றன? முக்கியமாக blog ன் தளம் எங்கே உள்ளது?
ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் (EPRLF) மக்கள் படைக்கு (PLA) தலைமை வகித்து தற்போது EPDPயை தோற்றுவித்த இடதுசாரி டக்கிளசுவின் தற்போதைய நிலை. அதைவிட டக்கிலசுவினால் பயிற்றுவிக்கப்பட்ட மக்கள் படையை (PLA) மண்டையன் குழுவாக களமிறக்கிய சுரேசு இன்று எங்கு நிற்கிறார்? இவர்களின் இன்றைய சொத்தின் மதிப்பு?….இப்படி பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம்.
எல்லாவற்றிற்கும் மனிதாபிமானமும், மனித நேயமும் வேண்டும்.
– அலெக்ஸ் இரவி.
அ .மார்க்ஸ், ஆதவன் தீட்சணயா, ஷோபா சக்தி போன்றவர்கள் மார்க்சியம் பேசுவது மார்க்சிய நடைமுறையை எதிர்க்கவே.
பின்னவீனத்துவம், தலித்தியம் என்ற பேர்களில் நேர்மையான இடதுசாரிகளை ஓரங்கட்டுகிற வேலைகளை விட இவர்கள் எதையுமே செய்ததில்லை.
என்.ஜி.ஓ. பணமும் இப்போது இலங்கை அரசின் பணமும் புகுந்து விளையாடுகிறது.
மேலும் ஷோபாசக்தியைப் பற்றி அறிய:
” ‘‘ பாரிசில் சோபாசக்தி இந்த நூல் எம்.சி.சுப்பிரமணியம் சாதி ஒழிப்பிற்காக எதுவுமே செய்யவில்லை என்று கூறுவதாகச் சொல்லியிருந்தார் அவர் நிச்சயமாக நூலை வாசிக்கவில்லை என்பேன்‘‘ என்று சம்புகன் குறிப்பிட்டுள்ளார். இதே சோபாசக்திதான் ‘‘இது வந்து மிக முக்கியமான புத்தகம். கிட்டத்தட்ட இலங்கையிலுள்ள சாதியமைப்பின் தோற்றம், அதனுடைய போராட்டங்கள் பற்றிய தகவல் அடங்கிய மிகக் கடுமையான உழைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு ஆவணம்…..இந்தப் புத்தகம் வந்து ஒரு ஆவணக் களஞ்சியம். கடந்த நூறு வருடங்களாக இலங்கையில் நடந்த தலித் போராட்டங்கள்…, எத்தனை தலித் அமைப்புக்கள் இருந்தன, அவை எங்கே முடக்கப்பட்டன, 1966 இன் ஒக்டோபர் எழுச்சி என்ற பலவகையான விடயங்களைக் கொண்ட ஆவணம். சாதி ஒழிப்புப் போராட்டத்தில் எங்களைப்போல சமூக அக்கறையுடையோருக்கு இது ஒரு கைநூல்…., ஒரு பைபிள்…‘‘.
http://www.dalitnet.net/2009/01/blog-post_7414.html
மேலும் ஷோபாசக்தியின் அறிக்கையும் , ஷோபாசக்தி, அ. மார்க்ஸ் பற்றிய கருத்துக்களத்திற்க்கும்:
“உதாரணமாக புலிகள் ஒரு லட்சியத்துகாக போரடியவர்கள், தங்கள் சுயநலத்துக்காக லட்சியத்தை பயன்படுத்துவராக மாறி சீராழிந்து அழிந்தனர். இது போல் சோபா சக்தியின் கலை இலக்கியமும். அவரின் தனிமனித பாலியல் நடத்தைக்கு பெண்ணை இணங்க வைக்க, கலை இலக்கியம் அவருக்கு உதவுகின்றது. இதற்காக அவர் கலை இலக்கியத்தை பயன்படுத்துகின்றார். அவரின் பாலியல் நடத்தைகள், தேவைகளையும் இந்த கலை இலக்கிய உலகின் ஊடாவே நடக்கின்றது. அதற்காக அவர் பெண்களை அனுகுகின்றார்”.
http://www.tamilcircle.net/index.php?option%3Dcom_content%26view%3Darticle%26id%3D6827:2010-03-12-08-10-51%26catid%3D322:2010
“சொகுசு போர்க்கப்பலின்” “பெண்ணியிம் & தலித்தியம் & கம்பெனிகளின்” (கவிஞர் கனிமொழி எம்.பி, தமிழச்சி தங்கப் பாண்டியன் போன்று) ,”அடியாளாக, பெண் ரவுடியாக” செயல்படுபவர், லீனா மணிமேகலை!.
http://thesamnet.co.uk/?p=18553
ஷோபாசக்தியின் ‘அம்ருதா’ இதழிற்கான பேட்டி:
http://www.psminaiyam.com/?p=501
ஷோபாசக்தி பற்றி அசோக்:” புலிகள் வன்முறைத் தர்பார் நடாத்திக்கொண்டிருந்த 80 களில் சிறிலங்கா அரசைக் காரணம் காட்டியே மௌனிகளாக்கப்பட்டோம். மீண்டும் ஜனநாயகத்தின் பேரால் அதே வன்முறை தலைவிரித்தாடும் போது புலிகளைக் காரணம்காட்டி புத்தர்களாக தியானிக்கக் கோருவது நியாயமற்றது”.
https://inioru.com/?p=1403
ஷோபா சக்தி லீனாவுக்காக அடியாள் வேலை பார்த்து லீனாவுடனான தன் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருகிறார் என்பதோடு இம்மாதிரி கூலி ஆண்களை லீனா வைத்துக் கொண்டு. இதில் வேறு ஆண் குறி பற்றி எல்லாம் கவிதை எழுதுகிறார். அம்மாதிரி எழுதும் கவிதையில் பல தனக்கு வேண்டிய ஆண்களின் பெயர்களை தவிர்த்து விடுகிறார். வினவு தோழர்கள் இது குறீத்து கேள்வி எழுப்பினால் அது இலக்கியமில்லை. தனிப்பட்ட தாக்குதல் என்கிறார். மார்க்ஸ் பெயர், தோழன் ,புரட்சிவாதி இவர்கள் எல்லாம் ஆண்குறிதான் என்றால் அந்த லிஸ்டில் ஏன் சி.ஜெரால்ட் பெயரோ, பாரதிராஜா பெயரோ இல்லை என்றூதானே வினவு கேட்டது. எவ்வளவு ஆழமான பொலிட்டிக்கல் கேள்வி..இக்கேள்வி எப்படி தனிப்பட்ட தாக்குதலாகும். தவிறவும் கவிதையில் அண்டிப்பிழைக்கும் அதிகார பீடங்களை ஆண் குறி என்று தந்திரமாகத் த விர்த்து விட்டு மக்களுக்காக போராடுகிற போராளிகளை ஆண் குறி என்று சொல்கிற லீனா ஒரு குறி லோகி…..சாரி மோகி……
/ விதியை மாற்றிய ராகுல்: மேலிடத் தலைவர்கள், அமைச்சர்களால் புறக்கணிக்கப்பட்ட சத்தியமூர்த்தி பவனின் மீது தனது பார்வையைச் செலுத்தினார் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ராகுல் காந்தி. தமிழக இளைஞர் காங்கிரஸில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கட்சிக்குள் இளைஞர்களை ஊக்குவிக்கவும் அண்மையில் தமிழகம் வந்தார் அவர். நேராக சத்தியமூர்த்தி பவன் சென்றார்./–/டக்கிலசுவினால் பயிற்றுவிக்கப்பட்ட மக்கள் படையை (Pளா) மண்டையன் குழுவாக களமிறக்கிய சுரேசு இன்று எங்கு நிற்கிறார்? இவர்களின் இன்றைய சொத்தின் மதிப்பு?…./–
இலங்கைத் தமிழரை இயக்கும் “பிரேம் அஃப் ரெஃபரன்ஸ்” “தமிழீழ தாகம்” அல்ல ஜே.ஆர்.ஜெயவர்த்தனே அன்றே கூறியது மாதிரி,ஒரு சிலரின் “டை ஹார்ட்” பணத்தாசை!.ஆனானப்பட்ட கே.பி யே சொத்துக்களை பாதுகாக்க இலங்கை அரசாங்கத்துடன் நிற்கும் போது….”இலங்கை அரசாங்கத்தின் அடுத்தக் கட்ட போர்” விடுதலைப்பு(ளி)லி வியாபாரிகள் பதுக்கி வைத்துள்ள சொத்துக்கள் மீதுதான்!.முள்ளிய வாய்க்காலில் “வன்னி மக்களுக்கு” பாதுகாப்பு கொடுக்காத தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி,வி.சி.குகநாதன்,கைலைப்புலி எஸ் தாணு(நாயுடு?),கலைப்புலி சேகரன்(முன்பு வைகோவுடன் இருந்தவர்கள்) ஆகியோர் உதவியுடன்,இந்த “சொத்துக்களுக்கு” பாதுகாப்பு கொடுக்கிறேன் பேர்வழி என்று,தமிழகத்தில் பதுக்குகிறார்!.ஆனால்,கே.பியே மகிந்தாவுடன் சேரும்போது,கலாநிதி மாறன் சோனியா காந்தியுடன் சேரமுடியாதா!.இவைகளுக்கான வருங்கால பின்ணணி என்ன உலக செந்தமிழ் மாநாட்டில் தெரியும்!.ஆனால் தமிழர்களின் அரசியல்……எல்லாம் போச்சு…..
எதுக்கு கதையை மாத்துகிறாய். ஏ உயிரோட இருக்கிற சோபா சக்தியை காறித்துப்பு. எதுக்கு செத்துப்போன புலியை இழுத்து கதையை மாத்திறாய். இந்த புடுங்கி எழுத்தாளங்கனள திட்ட மோசமான வார்த்தை இந்த மொழியில போதாமையா இருக்கு. தீபக் போன்றவர்கள் எப்படி லீனாவுடன் நட்பாக இத்தனை காலம் இருந்தீர்கள். ஏன் வேலை செய்ய சென்றீர்கள்.
தலித்தியம்> பெண்ணியம்> மார்க்ஸியம்> புண்ணாக்கு எண்டிறதை விட்டுட்டு உன்னை திருத்திறது எப்படி எண்டு எழுதுங்கடா. தலித்தில்லாதவை தலித்தாய் உணர்தா பிலிம் காட்டுறதும் பெண்ணில்லாதவ பெண்ணயாய் உணர்ரதா பிலிம் காட்டுறதையும் நிற்பாட்டினீங்கள் எண்டா முழு உரிமை எங்களுக்கு கிடைச்சமாதிதான்.
நான் தெரிஞ்ச வகையில புரட்சிப் புயல் ஒரு பொப்புலாரிட்டிக்கு இதையெல்லாம் எழுதுது.
எதுக்கு சீரியஸா எடுக்கிறீங்கள்.
திசை!,திசை தெரியாமல் கோபப்படவேண்டாம்.செத்த புலியை நாங்கள் இழுக்கவில்லை.ஏன் சாகடித்தீர்கள் என்றுதான் கேட்கிறோம்!.
“விடுதலை” என்ற பெயரில் முள்ளிய வாய்க்காலில் ஒன்று சேர்த்த “வன்னி மக்களை” காப்பாற்றாத நீங்களும்,உங்கள் தமிழக “பதுக்கல் வங்கிகளும்”,”விடுதலை” என்ற பெயரில் “சேர்த்த பணத்தை” மட்டும்,காப்பாற்ற நினைப்பதேன்!.பணத்தை காப்பாற்ற நினைப்பது இந்தியர்கள் பிரச்சனை அல்ல,உங்கள் பிரச்சனை.ஆனால்,அந்த பணத்தை “மிச்சமுள்ள தமிழர்களான எங்களை” அழிப்பதற்கு பயன் படுத்தினால்,அதை நாங்கள் கேட்காமல் யார் கேட்பது!.”இதற்கு “சிங்களவர்களது” ஆதரவும் உள்ளது!,அதுதான்….இரு சமூகங்களுக்கும்(தமிழர் & சிங்களவர்) பயன்படாத,திராவிட? முன்னோடி? “அயோத்திதாசன் அவர்களை” “தெரவாடா புத்தமதத்திற்கு” மாற்றிய,தற்போது இலங்கையில் பணத்துடனும்,செல்வாக்குடனும் இருக்கும் சிங்களப் பிரிவு!.
உமக் கு மண்டை கழண்டு போட்டுதே, இவன் சோபாசக்தி குடிச்சுப்போட்டு தம்பி தீபக்கிற்கு அடித்தது பற்றீயே பேச்சு.
திசை விடாதீங்கோ இவங்கலை ஒரு வழி பண்னோணூம் பேசுறது ஒண்டு செய்யிறது இன்னொண்டு.எதுக்கு தாணூவின்ரா சாதியை இங்கே இழுக்கோணூம்.இது இவன் சோபாசக்தி பற்றீய பட்டி மன்றம் இங்கே என்னத்துக்கு வைகொ,தாணூ எண்ட பணீயாரம்.
நீர் இவ்வளவு நாளும்,”தெலுங்குகாரர்களுக்கு எதிராக” பின்னோட்டம் விட்டுக் கொண்டிருந்தீர்!,இப்போது உமது “மடியுள்ள கனத்தை” சுட்டிக் காட்டியவுடன்” தமிழனுக்கு எதிராக தாண்டவமாடுகிறீர்!….தொப்புள் கொடி உறவே?!…தொடப்பகட்டையே!….
மடியுள்ள கனம் விளங்கவில்லை ஜேம்ஸ். தமிழனுக்கு எதிராக தாண்டவமா ஜேம்ஸ்? நீங்கள் குழம்பிப்போயுள்ளீர்கள்.தன்னைப் புனிதனாக்கி மற்றவரை மடையனாக்கி தொடர்ந்தும் புத்தர் வேடம் போடுவது சரியென்றால் நான் ஏன் சூடாகிரேன் ஜேம்ஸ்.சோபாசக்தி சரியான தமிழெ பேசாதவர் தூசண வார்ததையில் எழுதுபவர் அவருக்காக நீங்கள் வரிந்து கட்டுவதுதான் ஏன் என்றூ புரியவில்லை.
தமிழனின் போரட்டதை காட்டி கொடுத்து அதில் சாரயம் குடிக்கும் ஷோபாசக்தி
******* தயவு செய்து சேந்து இயங்குவதை நிப்பாட்டுக்கல் ..
தயவு செய்து ஷோபாசக்தியை பெரிய மனிதர் ஆக்க வேண்டாம். அவன் ஒரு காம கடுவன்.
நண்பன் தீபக் இங்கு சொல்லியிருக்கும் அனைத்து விஷயங்களும் முற்றிலும்உண்மை. லீனா மணிமேகலையும் ஷோபா சக்தியும் மிகுந்த சமூக அக்கரையில்எடுத்திருக்கும் இந்த படத்தின் படபிடிப்பின் ஒவ்வொரு நாள் மாலையும்ஷோபா ஷக்தி பாட்டிலும் கையுமாக இராமேஸ்வர வீதிகளில் அலைந்து திரிந்ததுஇந்த படத்தில் வேலை செய்த மனசாட்சியுள்ள மிக சிலர் மட்டுமே ஒத்துக்கொள்வர். லீனாவும் ஷோபா சக்தியும் இதை சமூக அக்கறையுடன் தாங்கள்எடுத்திருக்கும் படம் என்று மார் தட்டிக் கொள்கிறார்கள்தானே..அப்படியானால் அவர்களை நம் அனைவர் சார்பாகவும் ஒன்ரே ஒன்று கேட்ககடமைப்பட்டுள்ளேன். இந்த செங்கடல் திரைப்படத்தை முதலில் தமிழகத்தில்பொதுதிரையிடல் செய்து வெளியிட்டபின் பிற நாடுகளில் உங்கள் சமூக பணியைதொடருங்கள். (உண்மைகள் தொடரும்
இங்கே வெளிநாட்டு இணய தளங்களில்,ஒரு தனி மனிதன் “சோபாசக்திக்கு” (யார் அவன்?!*)” எதிராக எழுதுகிறார்கள் என்றால்,ஒன்று இந்த இணைய தளத்தை நடத்துகிறவர்கள் மடையர்களாக இருக்கவேண்டும்,அல்லது,இணைய தளம் நடத்துகிறவருடைய சொந்தக்காரராக இருக்கவேண்டும்.மக்கள் படுகொலை என்கிறீர்கள்!,உலக நீதிமன்றத்திற்கு இந்தியாவையே இழுக்கவேண்டும் என்கிறீர்கள்!.இலங்கை அரசாங்க வாகனங்களுக்கு கண்ணிவெடி வைத்துக் கொண்டு,”பல் இளித்தப்படி” இலங்கை இராணுவ ஹெலிகாப்டரில் பயண்ம் செய்த “பிரிகேடியர்? தமிழ்ச்செல்வனின் ” கதியை நினைத்துப் பாருங்கள்!.இந்திய இராணுவம் அடிக்கிறது,இலங்கைக்கு போனால் கொலைசெய்து விடுவார்கள்,என்று ஐரோப்பாவிலும்,கனடாவிலும் அகதி விண்ணப்பம் கொடுத்துதானே வந்து விழுந்தீர்கள்!.விழுந்த இடத்தில் சாப்பிட்டுவிட்டு உயிரை பாதுகாக்க? வேண்டியதுதானே.பிரகு ஏன் ஒட்டு மொத்தமாக இந்தியாவுக்கு ஓடுவானேன்,இப்படி விளம்பரம் தேடுவானேன்!.சுகனும்,சோபாவும் டக்ளஸ் தேவானந்தா ஆள் என்கிறார்கள்?.கே.பி.,ராஜபக்ஷே ஆள் என்கிறார்கள்?(கே.பி. யை இவ்வளவு கீழிறக்குவது பாவம்தான்).இராஜீவ் காந்தி கொலைவழக்கில்,19,20 வயதில் பிடிபட்டு இன்றுவரை,19 ஆண்டுகளாக சிறையில் வாடும் அப்பாவி இரு தமிழக இளைஞர்களாகவே(ஒருவர் பேரறிவாளன் மற்றவர்நெல்லை ராஜேந்திரன் என்று நினைக்கிறேன்),இந்த “தீபக்கை” பார்க்கிறேன்!.இவர்களுக்கு ஏதாவது விளம்பரம் தந்தீர்களா?.இந்த சாக்கடையில் நான் எழுதுவதே,கவனத்தை வருங்கால நகர்வுகளின் மீது ஒளிப் பாய்ச்சத்தான்!.இந்த கழிச்சாடைகளை வைத்து பொழுது போக்குவது,பிரச்சனைகளை மறைக்கும் “புகைமூட்டம்”,மயக்கும் “மானாட்டம்,மயிலாட்டம்”!.இந்த முக்கிய காலகட்டத்திலும்,”தானுண்டு,தன் பாடுண்டு” என்று இருங்கள்,ஆனால் நாங்கள் தப்பிக்க அங்கும்,இங்கும் வழிதேடுகிறோம் அவ்வளவுதான்!- தமிழனாக பிறந்த குற்றத்திற்காக!.
அடிமைக்கூட்டுக்குள் இருந்து அடிமை போல சிந்திக்காது சுதந்திர மனிதனாய் மாறப் பாருங்கள் ஜேம்ஸ். உங்கள் கருத்துக்கலை ஏற்க வேண்டுமென்றூ எங்கலை கட்டுப்படுத்தப் படுத்தாது நீங்கள் கட்டி வைத்திருக்கும் கட்டுக்களீல் இருந்து வெளீயே வாருங்கள்.எருமைக் கூட்டத்து எருமையாக இருக்காது சிங்க கூட்டத்து ராஜாவாக முயலுங்கள்.
ஐரோப்பாவிலும்,கனடாவிலும் அகதி விண்ணப்பம் கொடுத்துதானே வந்து விழுந்தீர்கள்!.விழுந்த இடத்தில் சாப்பிட்டுவிட்டு உயிரை பாதுகாக்க? வேண்டியதுதானே.பிரகு ஏன் ஒட்டு மொத்தமாக இந்தியாவுக்கு ஓடுவானேன் : யாருக்கும் இந்தியா வர விருப்பம் இல்லை,
இந்தியா தமிழ் ஈழத்தின் அருகில் இருப்பதே பாவம் என நினைக்கிரோம் ஜேம்ஸ்
சிங்கமா!?,முன்பு புலி என்று கூறிக்கொண்டு திரிந்தீர்கள்!.ஓ!,புலியை அழித்துவிட்டு,வாலில் பணம் கட்டியிருந்ததால் வலைமட்டும் வைத்துக்கொண்டு,சிங்கள தேசிய கீதம் பாடுகிறீர்கள்!.”சிங்கக் கூட்டத்து தலைவனா”!,எனக்கு வேண்டாம் அந்தப் பதவி,மகிந்த ராஜபக்ஷே “நாலாம் மாடியில் வைத்து” டின்னு கட்டிவிடுவார்!.அவர்தான் அதற்கு தலைவர்.தமிழர்களின் “தலைமை பதவிக்கு” மோதியே இத்தனைப் பேர் காலியாகிவிட்டார்கள்,இதில் சிங்களத் தலைமைக்கு போட்டியா?,நீங்கள் போங்கள் நான் பின்னால் வருகிறேன்!.MORE OVER…..
“NOBODY IS FREE EXCEPT IF YOU ARE A LORD YOURSELF”.
எல்லோரும் சேர்ந்து தமிழரை வில்லுங்கள்.
ஜேம்ஸ்
ஏன் உங்கள் கருத்துக்களில் இவ்வளவு வன்மம். சட்டென்று சிலிர்த்துக்கொண்டு சரமாரியாக சொற்களை கற்களாக வீசுகிறீர்கள்.நாங்கள் தான்நொந்து போய் சிதறிப்போய் எதையோ பிதற்றிக்கொள்கிறோம்.
உங்கள் கோபத்தின் ஊற்றுக்கண் ஏதோ. அது உங்கள் தனிப்பட்ட சிக்கலாகக்கூட இருக்கக்கூடும்.
எதுவோ அந்தக்கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு வடிகாலாக இந்த பின்னூட்டஙளை பயன்படுத்துகிறீர்கள்.அதனால்தான் விவாதத்துக்கு சம்பந்தமில்லமல் கருத்துக்கள் வந்து விழுகின்றன.
நண்பர்களே
அவர் தன் ஆன்மாவை இளைப்பாற்ற விடுங்கள். அவரின் ரணங்கள் எழுத்துக்களினூடாக ஆறட்டும்.
தீபக் தன் எழுத்தின் மூலமாக தன் ரணத்தை ஷோபா ஏற்படுத்திய காயத்தை ஆற்றுகிறார்.
ஜேம்ஸும் அவ்வாறே
வார்த்தைகள் சொல்வதவிட வார்த்தைகளுக்கிடயில் தோண்றுவதை பார்ப்போமா?
இதையே உங்களுக்கும் நான் திருப்பிக் கூறுகிற்ன்!.ஆனால் “சமுதாயக் கண்ணாடி யார் அணிந்திருக்கிறார்கள்” என்று காலம் பதில் சொல்லட்டும்!.
இது முன்னமே எதிர்வு கூறப்பட்டதுதான்.
………………….” தமிழக ,ஈழத் தமிழர்கள் இனி மோதிக்கொள்ளப் போவது எசமானர்களின் காலடி அணைப்புக்காகத்தான்.”………….
எதிர்வு
Posted on 03/10/2010 at 2:56 pm
//
பிரபாகரன்-துசரா பீரிஸின் திரைப்படம்:யமுனா ராஜேந்திரன்//
நெருஞ்சி/எதிhவு புலம் பெனயா மக்களும் அதைத்தனே செய்கின்றார்கள். நாங்கள் எல்லோரும் திட்டுவ|து என்றால் வரிந்து கட்டிக் கொண்டு வரிசையில் நிற்போம். செயற்படுவதுக்கு தான் பல்லாயிரம் தயக்கங்கள்.
எதிhவு
இந்த ஜேம்ஸ்க்கும்,தமில்மாறன்கும் வேலை வெட்டி இல்லை போல.. கத்தி கத்தி குலைக்கிராங்க..ஏன் எண்டால் இவங்க இரண்டு பேரும் எப்போ பாத்தலும் , எந்த விடயம் எண்டாலும் கருத்து சொல்லுராங்க சண்டை போடுராங்க புரியல எதுவும்..
நல்லா இருக்கா இது உங்களுக்கே.. கருத்து சொன்னால் அதை எதுக்கு வெட்டி கொத்துறீங்கள்.. அப்படினா நான் சொன்னது எல்லாம் உண்மைதானே??????
அப்படினா இங்கேஉம்
கருத்து சுதந்திரம் இல்லயா??????????????????????????????????????????????????????????????????
முட்டும் மாடும், மோதும் மூர்க்கர்களூம், சிக்காத இரையென சிலிர்க்கும் கொக்குகளூம் ஒருநாள் முழுதும் ஓய்வாக யோசித்தால் இதற்காகத்தானா? இந்த ஈகோ தானா மனிதரை, மண்னை பிரித்தது எனபதை உணர்வர்.கருத்து மோதல்களீல் பிறபபது தெலிவு என்பதால் எல்லாம் நன்மைக்கே.
கருத்து மோதல்களில் பிறப்பது தெளிவு.
உளறல்களில் பிறப்பது கால விரயம்.
அய்யா என்ன தத்துவம் என்ன சிந்தனை.
சண்டியர் சோபாசக்தி தீபக்கை தாக்கியதை ‘மனித உரிமைவாதி’ அ.மாக்ஸ் லண்டன் சனநாயகவாதி ராகவன் அறிவார்களா? இவர்கள் என்ன சொல்லுகிறார்கள். சோபாவை வைத்து அடிக்கடி சினிமா காட்டுபவர்கள் இவர்கள்தானே. சோபாவின் சண்டித்தனத்திற்கு புதிய புதிய சனநாயக மனித உரிமை விளக்கங்களை இவர்கள் விரைவில் கொடுப்பார்கள் பொறுத்திருந்து பாருங்கள்.
கலையின் (கவி)தைத் தம்பி ரூபவாகினியில் திருவாய்மலர்ந்துள்ளார். முன்னால் புலி எதிர்ப்பு வேசதாரிகள் இன்று இலங்கை அரசின் உளவாளிகளாகவும் தமிழ் தேசியத்தை அழிப்பவர்களாகவும் செயல்படுகின்றார்கள். பணம் பாதளம் வரையும் பாயும். இவர்களை விட சோபா பரவாயில்லை. அவருக்கு சக்தி தேவையெனில் ம மா எல்லாம் தேவைப்படும். சோபாவுக்கு மனித உரிமை என்பது அடி தடி. கொலை செய்தால் அது மனித உரிமை. அ.மார்க்ஸ் இலங்கை அரசின் விருந்தினர். அவரது மொழியும் இலங்கை மொழியும் கொலை – மனித உரிமை.
கவி என்றால் குரங்கு. குரங்கு கொப்புத் தாவும்.
ஏன்டா உங்களூக்கு ஷோபாவில பொறாமை?
கிளியை கிளியென்று சொன்னால் புகழ்ச்சி? குரங்கை குரங்கென்று சொன்னால் பொறாமை?
அண்ணேய் அண்ணேய் சிப்பாய் அண்ணேய் நம்மவூரு இப்போ நல்லா கெட்டுபோயிட்டுது அண்ணே………..
சோபா தண்ணி அடிப்பார் வேலை பார்த்தவா;களுக்கு அடிப்பார் பணம் கொடுக்கமாட்டார் அதைக் கேட்டால் பொறாமை என்பீர்கள். புலிக்கு எதிராக கருத்து தெரிவித்த பொழுது இந்த பொறாமை என்ற சொல் கிணற்றுக்குள் விழுந்து விட்டதா?
திருமா புலிக் சவிதை எழுதுவார். மகிந்தவிடம் பணமுடிச்சு பெறுவார். அரச தொலைக்காட்சியில் ச..ரி..க…ம.. என்பார் தமிழ்த் தேசியம் செத்துவிட்டது. ஒருதரும் உருப்படியாய் எதுவும் செய்யவில்லை. ..என்பார் தண்ணியடிப்பார் கவிதை எழுதுவார். அவருக்கு சோபாவில் பொறாமை என்பீர்கள்………
சிலா; சிரிபப்hர் லீனா சிரித்துக் கொண்டே அழுவார். சோபா அழுது கொண்டே அடிப்பார் வாங்கிக் கொள்ளுங்கள்…………
புலிகளை அழிக்க வேண்டும் என்பதற்காக மகிந்தவின் .. (ஆனால் வெளியில சிங்கள இனவாதத்தை எதிர்க்கிறோம் என்ற வேசம் வேறை)கொண்டு திரிந்த – விளைவாக 50000 மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டதது குறித்த எந்தவிதமான குற்றவுணா;வுமில்லாத ஒருத்தாpடம் “பேட்டா” குறித்த நியாயத்தை எதிர்பார்ப்பது சின்னப்புள்ளத்தனமா இல்லை… செங்கடல் படம் கூட உண்மையான தமிழக -ஈழ மீனவா; பிரச்pனையை புலிகள் மீது பழி போட்டு சிங்கள – இந்திய ஏகாதிபத்தியங்களை காப்பாற்றும் முயற்சி என்றல்லவா அறிந்தோம். மகிந்தவின் கோவணத்திற்கு இப்படியொரு வாசமா…. வாழக ஜனநாயகம்
அட இப்பிடி நாறுது.
பலநாள் கேள்விப்பட்டு இன்றைக்குத்தான் படித்தேன்.