அமரிக்க அரசின் நிறுவன மயப்பட்ட பொய்கள் இதுவரை ஆயிரமாயிரம் மக்களை கொன்று போட்டிருக்கிறது. தோல்வியில் முடிவுற்ற நடவடிக்கையான ஒசாமா பின்லாடனைக் கைது செய்யும் நடவடிக்கை குறித்து அமரிக்க அதிபர் பரக் ஒபாமா அன்றிரவே மக்களுக்குப் பொய் சொல்லியிருப்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளான கிராமவாசி ஒருவர் பாக்கிஸ்தானி தொலைக்காட்சியில் தான் நேரில் கண்ட சாட்சியத்தைக் கூறியுள்ளார். அவர் சம்பவத்தை நேரில் கண்டுள்ளார். அமரிக்க அரசு இந்த நடவடிக்கைக்காக இரண்டு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டதாக் அறிவித்திருந்த போதிலும், அங்கு ஒரு வானூர்தியே தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கிறது.
முன்னதாக அமரிக்க இராணுவத்தினரை வானூர்தியில் தரையிடக்கிய பின்னர் படையினர் ஒசாமா தங்கியிருந்ததாகக் கருதப்படும் கட்டடத்தினுள் சென்றுள்ளனர் அங்கிருந்து திரும்பியவர்களை மீண்டும் அதே வானூர்தி ஏற்றிக்கொண்டு மேலெழுந்துள்ளது. உடனடியாகவே அது நிலத்தில் விழுந்து பெரும் தீப்பிழம்பாக எரிந்துள்ளது. பின்னதாக மனித உடலின் பாகங்களை மட்டுமே காணக்கூடியதாக இருந்ததாக அவர் தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். ஆக, ஒசாமா பின்லாடன் மீதான அத்தனை நடவடிக்கைகளையும் இது கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. இது குறித்த எந்தக் கருத்தையும் அமரிக்க ஊடகங்கள் எதுவும் வெளியிடவில்லை. அதே வேளை கடந்த வாரம் அமரிக்க ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்கையில் ஒசாமா பின்லாடன் கொல்லப்படும் முன்னர் அவர் அந்தக் கட்டிடத்தினுள் இருந்தாரா என உறுதிப்படுத்த முடியாதிருந்தது எனத் தெரிவித்திருந்தார்.
அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டதாக தொலைக்காட்சி சாட்சி கூறுகிறது.