பிரியாவிடை
வைக்காமலே
எல்லைப்புறத்தில்
சண்டை தொடங்கிய
ஏதோ
ஒரு நாளில்
முதல் சிலிப்பர் கட்டையும்
அதைதொடர்ந்து
தண்டவாளமும்
கழட்டப்பட்டது..
பெரும்பான்மையின்
பிடிவாதம்
இறுக்கி அறையப்பட்ட
ஆணிகளைப்
பிடுங்கி
சிறுபாண்மையின்
காவலரண்களில்
இறையாண்மையைக்
காப்பாற்றியது…
இடைப்பட்ட
குருதி வழிந்தோடிய
வரலாற்றில்
உன்
வருகை
எங்கள்
தேசத்தின்
வாசலோடு நிக்க
பெயரை
மனிதாபிமானமும்
காப்பாற்றவில்லை
தமிழர்களை
நீயும் காப்பாற்றவில்லை…
மொழியல்ல
இனமல்ல
மனிதமே
அடையாளமென்று
வடக்கையும்
தெற்கையும்
இணைத்த கதைகள்
கால் நூற்றாண்டுக்கு
அழுது வடிந்து
அழிக்கப்பட்டது…
தோல்வியை
ஒப்புக்கொண்ட
கடைசி நாளில்
இனிச் செய்வதுக்கு
ஒன்றுமேயில்லை என்று
ஆனபின்
மறுபடியும்
விசில் சத்தம்…..
பழையபடி
நிலம் அதிர
உன் வருகை
நேற்றுப் பிறந்தவர்களின்
குதூகலம்
எல்லாத்தையும்
கொடுத்துத்
தோற்றுப்போனவர்களின்
அவமானம்.
ஒஸ்லோ 13.10.14.
தோற்றுப் போனவர்களின் அவமானம் எனும் பதிவை சமூக வலைத்தளத்தில் பார்வையிட்டேன். நாவுக் அரசன் என்பவரால் பதிவிடப்பட்டது. அப்பதிவு அவர் சொல்லிய விடயங்களையும் தாண்டி என்னுள் பல விடயங்களையும் பேசவைத்தது.இதனால் இதனை இனியொரு வாசகர்களுடன் பகிர்கிறேன்.
S.G.Ragavan.