Wednesday, April 29, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

தொழிலாளி வர்க்கமே விழித்தெழு – மே தின அறைகூவல் : கு.கதிரேசன்

இனியொரு... by இனியொரு...
05/01/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
0
Home பிரதான பதிவுகள் | Principle posts

சென்னையில் உள்ள இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஆட்டோமொபைல் தொழிற்சாலை ஒன்றில் ஒரு பெண் தொழிலாளர் உதிரி பாகங்கள் பொருத்தும் பணியை செய்து கொண்டிருக்கிறார். அந்த இயந்திரம் உதிரி பாகங்களின் தேவையற்ற பகுதிகளை வெட்டக்கூடியது அதில் மனிதனின் சருமத்தை உணர்ந்து கொள்ளும் வகையிலான சென்சார் பொருத்தப்படிருக்கும்,அப்படி இருப்பது லாபவெறிபிடித்த முதலாளிக்கு உற்பத்தி குறையும் என்பதால் அந்த சென்சார் இணைப்பு அங்கு வேலை செய்யும் தொழிலாளிக்கே தெரியாமல் துண்டிக்கப்படுகிறது .

இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் பெண் தொழிலாளியின் கழுத்து அந்த இயந்திரத்தில் மாட்டிக்கொள்கிறது . சக தொழிலாளர்கள் , அந்த இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்கிறார்கள் , ஆனால் மேலாளரோ அந்த இயந்திரம் விலை மதிப்பற்றது, அந்த இயந்திரத்திற்கு சேதாரம் ஏற்படாமல் அந்த பெண் தொழிலாளியை மீட்டு விடலாம் என்று சொல்கின்றார். அப்படி மீட்கப்படுவதற்குள் அந்த பெண் தொழிலாளி அந்த இயந்திரத்தால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்படுகிறார். நிர்வாகம் அதிக லாப உற்பத்திக்காக தொழிலாளியின் உயிரே போனாலும் பரவாயில்லை தனக்கு அதிகமான லாபமே குறிக்கோள் என்று செயல்படுகிறது. அந்த பெண் தொழிலாளி கொல்லப்படுவதற்கு யார் காரணம் முதலாளித்துவ லாபவெறி தானே. இந்த செய்தி நாம் பார்க்கும் தொலைகாட்சிகளில் வருவதில்லை,இந்த கொலை ஒரு வழக்காக கூட பதிவு செய்யப்படுவதில்லை , நீதிமன்றம் இதை குறித்து எந்த விசாரணையும் செய்வதில்லை. இவை அனைத்தும் முடி மறைக்கப்படுகிறது, சக தொழிலாளர்கள் இந்த நிறுவனத்திற்கு எதிராக குரல் கொடுக்கா விட்டால் அந்த தொழிலாளிக்கு குறைந்த பட்ச இழப்பீடு கூட கிடைத்திருக்காது.

12 மணி நேர வேலை, வார விடுமுறை கிடையாது , பணி நிரந்தரம் என்பது மருந்துக்கு கூட செய்யப்படுவதில்லை, விபத்து உதவி தொகை, மருத்துவ காப்பீட்டு போன்ற எதுவுமே தொழிலாளர்களுக்கு கிடப்பதில்லை. இவை எல்லாம் கோருவது நமது உரிமை என்று கோரக்கூடிய தொழிலாளியை உடனடியாக வெளியேற்றப்படுகின்றனர். ஒரு போராட்டம் என்று அறிவித்தால் உடனடியாக காவல் துறை பறந்து வந்து தொழிலாளிகளை அடித்து நொறுக்குகின்றது.

இன்று வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ள துறையான சாப்ட்வேர் கம்பனிகளின் கண்ணாடி மாளிகைக்குள் தொழிலாளர் உரிமைகள் குறித்த குறைந்த பட்ச விழிப்புணர்வு கூட உள்ளே நுழையவில்லை. தொழிற்சங்கம் ஆரம்பிப்பதே சட்ட விரோதம் என்றல்லவா ஆகி விட்டது இன்றுள்ள நிலைமை. சிகாகோவில் ரத்தம் சிந்தி பெற்ற 8 மணி நேர உரிமைகூட பறிக்கப்பட்டுவிட்டது .

மே தினம் உழைக்கும் வர்க்கத்தின் நினைவுகளை போற்றும் கொண்டாட்டம் அல்ல, உழகமெல்லாம் உழைக்கும் வர்க்கம் செய்த மாபெரும் தியாகங்களை நினைவு கூர்ந்து தொழிலாளிவர்க்கம் ஓன்று பட்டு ஒரே குரலாக எழுந்து முதலாளித்துவத்திற்கு சமாதி கட்ட வேண்டியத்தை நினைவு கூறும் தினமாகும்.

அடிமை சமுதாயத்திடம் இருந்த குறைந்த பட்ச ஒற்றுமை கூட நம்மிடையே இல்லையே, முதாலாளிகள் குட்ட குட்ட அடிபணிந்து அவன் வளமாக வாழ, அவன் லாபம் பெருக அடிமைகளாக வேலை செய்து கொண்டே இருக்கப்போகிறோமா, வாழ் நாள் எல்லாம் முதாலாளித்துவம் வளம் பெற உழைத்து கொண்டிருக்கப்போகிறோமா, நம்மிடம் இழப்பதற்கு என்ன இருக்கிறது இந்த அடிமை கைவிலங்கை தவிர. நமது ஒற்றுமையில் தான் வருங்காலத்தில் புதிய வரலாறு உருவாகப்போகிறது. இந்த மே தினத்தில் அமைப்பாக திரண்டு பாட்டாளிவர்க்க அரசை அமைக்க, உழைக்கும் வர்க்கத்தை நாம் அறைகூவி அழைக்கிறோம்.

தொடர்பிற்கு
கு.கதிரேசன்
9843464246

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மேதினம் - புதிய வரலாறு ஆரம்பிக்கட்டும் : புலம்பெயர் அமைப்புக்களின் கூட்டறிக்க்கை

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...