தீபம் தொலைக்காட்சி ஈழத் தமிழர்களின் எரியும் பிரச்சனைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட தொலைகாட்சி ஊடகம். போலித் தேசியம் தொழிலாளர்களை எவ்வாறு ஒட்டச் சுரண்டும் என்பதை தீபம் தொலைக்காட்சி முன்னுதாரணமாக முன்வைத்துள்ளது. பிரித்தானியாவில் அகதிகளாக வந்த பெரும்பாலானவர்களின் வாழ்க்கை கத்தி நுனியில் நடப்பதைப் போன்றது. சாமான்ய உழைப்பாளி ஒருவரின் மாதாந்த ஊதியம் அவரது குறைந்தபட்ச வாழ்க்கைச் செலவுகளுக்கே போதுமானதாக இருப்பதில்லை. ஒருவர் வேலையிழந்ததும் அக்குறைந்தபட்ச வாழ்க்கைச் செலவில் ஒருபகுதிக்கான செலவீனங்களை கவனித்துக்கொள்வதற்காக அரசாங்கத்தால் சமூக உதவித்தொகை வழங்க்கப்படும். வேலையிழந்தவர் புதிய வேலை ஒன்றைத் தேடிக்கொள்ளும் வரை அந்த உதவித்தொகையே அவர் வாழ்க்கையை ஓட்டுவதற்குப் பயன்படுகிறது.
இவ்வாறான ஒரு முறைமை ஏற்கனவே காணப்படுவதால் பாதுகாப்பிற்கான சேமிப்புப் பணம் என்பது மத்தியதர வர்க்கத்தின் கீழணிகள் மத்தியில் காணப்படுவதில்லை. தீபம் தொலைக்காட்சியின் தொழிலாளர்கள் இந்த சமூக உதவித்தொகையைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத அவல நிலைக்கு அதன் ‘தமிழ் உணர்வு மிக்க’ நிர்வாகம் தள்ளியுள்ளது.
தீபம் தொலைகாட்சி இலங்கை அரச சார்பு எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் புதிய தலைமுறை தொலைக்காட்சி, மற்றும் விஜை தொலைகாட்சி போன்ற தமிழகத்தின் கலைக் குப்பைகளின் தரகுகளாக செயற்படத் தீர்மானித்த பின்னரே தொழிலாளர்களை தெருவிற்குத் துரத்தியது. இதனால் அது தற்காலிகமாகச் செயற்பாடுகளை நிறுத்திவிட்டு தொழிலாளர்களுக்கு வேலை நீக்கக் உத்தரவை வழங்கவில்லை. வேலை நீக்கப்பத்திரமின்றி பிரித்தானிய அரசிடம் சமூக உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கக்கூட இயலாத நிலையில் தொழிலாளர்கள் நடுடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்களின் நாளந்த வாழ்க்கை கேள்விக்குள்ளாகியுள்ளது.
The country as a whole have not fully recovered from the traumatic past. We must give some more time before we start any other political activity that involves other people.
‘வேலை நீக்க உத்தரவு’ வழங்கவில்லை என்பது சட்ட விரோத செயற்பாடு.அது பற்றி பிரித்தானிய சட்டம் தெரிந்தோரை தொடர்பு கொள்க.தமிழக உறவு மட்டுமுள்ள ‘ஈழப்போராட்டம்’ என்பது வெறும் வியாபாரமே.
தீபம் ஊழியர்களின் வழக்கு வெற்றி பெற்றுள்ளதாகவும் 2 வாரமாக சம்பளம் வழங்கப்படுவதாகவும் பேசிக் கொள்கிறார்கள். தீபம் ரிவி வெறும் பாடல்களையே ஒளிபரப்புகின்றதாம். தழிழ் மக்களின் பேராட்டத்தை தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக பொய் புரட்டல் அதீத கற்பனைக் கதைகள் பொறுப்பற்ற தனம் நுனிப் புல் கூட மேயாத அரசியல் அறிவின்மை போன்ற காரணங்களால் சிதைத்தழிப்பதற்கு தீபம் ரிவி முதன்மைப் பங்காளியாகவே செயற்பட்டு வந்துள்ளது. இனியாவது மனித குலத்திற்கு நல்லது செய்யாவிட்டாலும் தீபம் ரிவி ஊழியர்கள் அழிவுகளுக்கு முண்டு கொடுக்கும் வேலையில் இருந்து ஒதுங்கி தங்கள் வயிறுகளை வளர்க்கட்டும்.