இலங்கையில் மகிந்த ராஜபக்ச அரசின் பொருளாதாரக்கொள்கைகள் இலங்கை மக்களை மேலும் வறுமையின் விழிபினுள் அழைத்துச் செல்கின்றது. குடும்ப சர்வாதிகாரத்திலிருந்து பல் தேசிய நிறுவனங்களுக்கு இலங்கையை விற்பனை செய்யும் திட்டங்கள் வரை இலங்கை மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றது. இதற்கு எதிரான தொழிற்சங்கப் போராட்டங்கள் அதிகரிக்கின்றன. மக்கள் எழுச்சிகள் உருவாகும் சூழல் உருவாகி வருகின்றது. பல் தேசிய நிறுவனங்களின் வசதிக்காக உருவாக்கப்படும் நகரங்களும், நிலப்பறிப்பும், தெருக்களும் மக்களை மேலும் வறுமைக்குள் உள்ளாக்கும் நிலையில் புதிய அரசியல் தலைமையின் அவசியம் உணரப்படுகிறது. இதேவேளை தொழிற்சங்க போராட்டம் நடத்துவோருக்குஎதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அரசாங்கத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.