பொதுமக்கள் விரட்டியடிக்கப்பட்ட யாழ். கொட்டடிப் பகுதியில சுற்றுலா விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. 1983 மே தொடக்கம் இங்கு குடியிருந்த 28 குடும்பங்கள் வலுக் கட்டாமயமாக இங்கிருந்து படையினரின் உதவியுடன் வெளியேற்றப்பட்டனர்.
அந்த இடத்தில் இன்று 250 மில்லியன் ரூபாவில் சுற்றுலா விடுதி அமைப்தற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்த விழாவில் யாழ் படைத்தளபதி ஹத்துருசிங்க மற்றும் யாழ் மேயர் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டியுள்ளனர்.
அத்துடன் நிரந்தரமாக அங்கு அமைக்கப்பட்ட வீடுகளுக்கு எந்தவிதமான நஸ்டஈடுகளும் வழங்கப்படவில்லை, என்றும் அஙகிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு தனியார் காணி ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அத்துடன் இது தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகஸ்தரிடம் கேட்டபோது, இது தொடர்பாக பிரதேச செயலகத்துடன் தொடர்புகொண்டு அரச காணியா? தனியார் காணியா? என்று பார்க்கவேண்டுமே தவிர அது தங்கள் வேலை இல்லை என்று பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்துள்ளார்.
This is also a Provincial Level Problem. It is time to hold the elections to the Northern Provincial Council.