காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவையும், காவிரி கண்காணிப்பு ஆணையம் பிறப்பித்த உத்தரவையும் கர்நாடக அரசு ஏற்க மறுத்து வருகிறது. தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீர்ப் பங்கீடு தொடர்பாக இரு மாநில அரசு தலைமைச் செயலர்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஜனவரி 28-ந் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
இந்த ஆண்டு தமிழகத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தொடங்காத காரணத்தால் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே, காவிரி நதி நீர் தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவுப்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரையும் கர்நாடகம் வழங்கவில்லை. இதுபோன்ற குறிப்பிட்ட வறட்சிக் காலங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவு குறித்தும் ஒப்பந்தத்தில் தனியாக குறிப்பிடவில்லை.
இந்த வறட்சி காலத்தில் தனது அணைகளில் நீரை சேமித்து வைப்பதைத் தவிர்த்து, தற்போதுள்ள நீர்வரத்தை வைத்தே தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். நீர்ப் பங்கீடு தொடர்பாக காவிரி கண்காணிப்புக் குழு அளித்துள்ள உத்தரவை நிறைவேற்ற உதவும் வகையில், காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட உத்தரவிட வேண்டும். 24-வது காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை காவிரி நதி நீர் ஆணையத்திடம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இனவாத தேசிய வெறியாக வளர்த்தெடுக்கப்படும் காவிரி நீர் பிரச்சனை இதுவரைக்கும் தேர்தல் கட்சிகளின் வாக்குப் பசிக்கு தீனி போடும் ஒன்றாகவே இருந்து வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி நீர்ப் பகிர்வு குறித்து தமிழக கேரள முற்போக்கு இயக்கங்களின் போராட்டங்கள் மட்டுமே அரசுகளை அடிபணிய வைக்கும்.
I think they should translate the book written in Tamil by Kalaignar Karunanithy about Regional Autonomy and the Central Government into English and other Indian Languages..