தேர்தல் : தோட்டத் தொழிலாளர் அடையாள அட்டை பறிப்பு

சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களில் அடையாளஅட்டைகளை பறிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக இ.தொ.கா. தேசிய அமைப்பாளர் ஆர்.யோகராஜன் தெமுவித்தார்.
நிவித்திகலை, கஹவத்தை ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு அடையாள அட்டைகளைப் பறிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

மேற்படி இரு இடங்களிலும் தோட்ட மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்ற கும்பல் அவர்களை அச்சுறுத்தியமையினால், பெரும்பாலானவர்கள் வாக்களிக்கச் செல்லவில்லை என அவர் கூறினார்.