ராஜபக்ச அரசாங்கத்தில் இராணுவப் பேச்சாளரகப் பணிபுரிந்த ரூவான் வணிகசூரியவுடன் இணைந்து ராஜித சேனாரத்ன நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் ராஜபக்சவின் இறுதி நேர இராணுவத் தலையீடு குறித்துக் கருத்து வெளியிட்டிருந்தமை தெரிந்ததே. ரூபவாகினியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ரதன தேரர் இதே கருத்தைத் தெரிவித்தார்.
இறுதி நேரத்தில் அமெரிக்கா நேரடியாகத் தலையிட்டதாக ஊடகவியலாளர் குசால் பெரார கூறினார்.
அவரின் தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை எனினும் பாரதூரமானவை. குசால் பெரேராவின் தகவல்கள்:
மகிந்த தோல்வியடைவது உறுதியானதும் தேர்தல் ஆணையகத்துள் புகுந்த அதிரடிப்படையினரால் வாக்கு எண்ணும் பணி தாமதப்படுத்தப்பட்டது. அதே வேளை இராணுவத் தளபதி தயா ரத்னாயக்கவைத் தொடர்புகொண்ட மகிந்த கொழும்பு முழுவதையும் இராணுவக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முயற்சித்தார். இதனை அறிந்த பிரித்தானிய மற்றும் அமெரிக்கத் தூதுவர்கள் மகிந்தவைச் சந்தித்து இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு கூறினர்.
அதே வேளை மகிந்தவைத் தொடர்பு கொண்ட அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி மகிந்த இரணுவத்தைப் பயன்படுத்தினால் இலங்கையில் நிலை கொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தை தாம் செயலில் ஈடுபடுத்துவோம் என்று எச்சரித்ததார். இதனை அடுத்து தயா ரத்னாயக்கவைத் தொடர்புகொண்ட அமெரிக்கத் தூதுவர் இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு எச்சரித்தார். இவ்வேளையில் தெருவிற்கு வந்த இராணுவத்தினர் உள்ளே அழைக்கப்பட்டனர்.
இனப்படுகொலையின் பின்புலத்தில் செயற்பட்ட நாடுகளில் அமெரிக்கா பிரதானமானது. மேலுள்ள தகவல்களை உறுதிப்படுத்துவதற்கு இனியொருவிடம் குறிப்பான பொறிமுறைகள் இல்லை எனினும் இவை வாசகர்களின் பார்வைக்கு விடப்படுகின்றது.
இலங்கை மீது அமெரிக்காவினதும் மேற்கினதும் நேரடித் தலையீடு ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும். வட-கிழக்கில் தமிழர்கள் அழிக்கப்பட்டு இலங்கை முழுவதும் அழிவுக்கு உள்ளாகும் சூழல் தோன்றும்..
இலங்கையில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவம்:
இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் அமெரிக்க இராணுவமும் ராஜபக்ச பாசிஸ்டுக்களின் இராணுவ வியாபாரமும்
பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள்
இலங்கையில் குடிகொள்ள ஆரம்பித்துள்ள அமெரிக்க இராணுவமும் அமெரிக்கத் தீர்மானமும்
“இலங்கை மீது அமெரிக்காவினதும் மேற்கினதும் நேரடித் தலையீடு ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.”
உங்கள் ஊகம் எதிர்காலத்தில் நடக்கலாம்… நடக்காதும் விடலாம்.
ஆனால் இலங்கையில் இரத்த ஆறு ஓடுவதை அமெரிக்கா தடுத்து நிறுத்தியது உண்மையானால் அதற்க்கு நாம் நன்றி சொல்வோம்.
நன்றி சொல்வதற்கும் அடிமையாய் நடப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு .
(இதற்க்கு புதிய இலங்கை அரசு செய்யும் கைமாறுக்கு நாம் ஏதும் செய்ய முடியாது )
அமெரிக்கா செய்யும் 100% செயல்களையும் எதிர்க்க வேண்டியது தான் இனிஒருவின் ஒரே நோக்கமா? அது தான் உங்கள் நடுநிலயா?
நான் கேள்விப்பட்டவை இத்தனை பாரதூரமானவை அல்ல.
தேர்தலிற்கு முன்னரே அமெரிக்கா ஐநா மற்றும் பல அமைப்புகள் நீதியான தேர்தல் அமைதியான அதிகார மாற்றம் குறித்து மகிந்தவிற்குப் போதனை நடத்தின.
வாக்குகள் எண்ணும் பணி தாமதப்படுத்தப்பட்டது. ஆனால் அதிரடிப்படை புகவில்லை.
அதிகாரத்தைப் பயன்படுத்துவது பற்றி ஆலோசனை நடந்தது. ஆனால்
இராணுவத் தளபதிகள் பொலிஸ் மா அதிபர் சட்டமா அதிபர் ஆகியோர் மகிந்த கோத்தபாய ஆகியோரின் கட்டளைகளிற்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டார்கள்.
முடிவுகள் முழுமையாக வெளிவர முன்னரே மோடி மைத்திரியை அழைத்து வாழ்த்துத் தெரிவித்ததாக டுவீட்டர் மூலம் தெரிவித்தார்.
இந்த நிலையில் மகிந்த நிலையைப் புரிந்து கொண்டு ரணிலுடன் பேச்சு நடத்தி அமைதியாக வெளியேறினார்.
ஏறத்தாள அவர் வெளியேறிய நேரத்தில் கொழும்பு நகரின் முக்கிய இடங்களில் இராணுவம் நிலை கொண்டு அவர் வெளியேறிய பின்னரே முகாமிற்குத் திரும்பியது என நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தன.
எனது முந்திய கருத்தில் தவறு இருக்கிறது: வாக்குகள் எண்ணும் பணி நடக்கையில் முதல் கட்ட எண்ணிக்கையில் மைத்திரி முன்னணியில் இருப்பது தெரிந்த மகிந்த தமது கட்டுப்பாட்டில் இருந்த இராணுவ அதிரடிப்படையை அனுப்பி வாக்கு எண்ணும் இடங்களையும் தேர்தல் செயலகத்தையும் சுற்றி வளைத்தார். அத்துடன் வாக்குகளை அறிவிப்பதும் (எண்ணுவதல்ல) தாமதப்படுத்தப்பட்டது.