தேர்த்தலை வெற்றிகரமாக நடத்தியதற்காக இந்திய நாட்டிற்கும் இந்திய மக்களிற்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்துத் தெரிவித்தார். உலகம் முழுவதும் பாசிஸ்டுக்களின் ஆட்சி அமெரிக்க அரசின் தலைமையில் தோற்றுவிக்கப்படுகிறது. இந்தியாவில் தேர்தல் நடத்தப்படுவதையும் அது முடிவடையும் நாளையும் இந்திய மக்களை விட அமெரிக்கா அதிகமாக அக்கறைப்படுகிறது. இம்முறை நடைபெற்ற தேர்தலில் அமெரிக்கத் தலையீடு நேரடியாகவே காணப்பட்டது.
வரலாற்றில் மிகப் பெரிய ஜனநாயக தேர்தலை நடத்தியதன் மூலம் உலக நாடுகளுக்கு ஜனநாயக வழிகாட்டியாக இந்தியா திகழ்கிறது என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் தேர்தல் முடிவுகளை ஆர்வத்துடன் நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அமைய உள்ள இந்தியாவின் புதிய அரசு நிர்வாகத்துடன் வருங்காலத்தில் ஒத்துழைப்பு தந்து பணியாற்ற விரும்புவதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.