தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை இன்டர்போலிடம் ஒப்படைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
கூடிய விரைவில் குமரன் பத்மநாதனை சர்வதேச காவல்துiயான இன்டர்போலிடம் ஒப்படைக்குமாறு காவல்துறை மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை நீதிமன்றம் இன்டர்போலின் ஊடாக குமரன் பத்மநாதனுக்கு எதிராக பிடிவிராந்து உத்தரவினை பிறப்பித்துள்ளது என ஜயலத் ஜயவர்தன கடந்த வாரம் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றில் கருத்து வெளியிட்டதனைத் தொடர்ந்து பலர் தம்மைத் தொடர்பு கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்களும் இது தொடர்பில் தம்முடன் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு அடைக்கலம் வழங்குவது தவறானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகளின் முன்னைநாள் உறுப்பினரும் நாடுகடந்த தமிழீழத்தை உருவாக்கியவருமான கே.பி இலங்கை அரசின் எல்லைக்குள்ளேயே தங்கியிருப்பது இன்டர்போலுக்கு மட்டுமல்ல சாதாரண மக்களுக்கே தெரிந்த விடயம். கே.பி குறித்த விடயத்தில் இலங்கை இனப்படுகொலை அரசும் இன்டர்போலும் ஒருங்கிணைதே செயற்படுவது தெளிவாகின்றது.