ஜனநாயகம், புரட்சி,மார்க்சியம் என்ற தலையங்ககளோடு இலங்கை அரச ஆதரவு சக்திகள் மீண்டும் இலங்கையிலும் புலம் பெயர் நாடுகளிலும் தலையெடுக்கின்றன. இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்த தீபாவளிக் கொண்டாட்டங்களில் பங்கெடுத்திருந்த சிலர் 18.08.2012 அன்று ரொரன்டோ நகரில் இடம்பெற்ற தேடகம் குழுவினரால் ஒழுங்கு செய்ய்ப்பட்ட ஒன்று கூடல் ஒன்றில் வன்முறையில் ஈடுபட்டனர். புலம் பெயர் நாடுகள் முழுவதிலும் ஐந்திற்குக் குறைவான தனிநபர்களின் அரச சார்புக் கூட்டணி ஒன்று மிரட்டல், வன்முறை, காட்டிக்கொடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக இடதுசாரி, ஜனநாயக முற்போக்கு சக்திகளைக் குறிவைக்கும் இவர்கள் ஏகாதிபத்திய நிதிக் கொடுப்பனவு நிறுவனங்கள் உட்பட பெரும் பணபலத்தைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். போராட்ட சக்த்திகள் மீதான தனிநபர் தாக்குதல்கள் இவர்களின் முதன்மைத் தந்திரோபாயமாகக் காண்படுகிறது.
தவறான தகவல்களை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் வெளியிடுதல், ஜனநாயக முற்போக்கு சக்திகளை அன்னியப்படுத்தல் போன்ற அனைத்து தளத்திலும் இயங்கும் இந்தச் சிறிய மாபியாக் குழுக்கள் சட்டரீதியாகவும் வெகுஜன மட்டத்திலும் எதிர்கொள்ளப்பட வேண்டும்.








காட்டிக்கொடுத்தல்.குழப்பியடித்தல்,காலைவாரிவிடுதல் எல்லாம் நம் மூதாதையர் வழிவந்த தொற்றுநோய்தான் இது உள்ளூரில் ஒட்டுகுழுவாகவும் வெளியூரில் மாபியவாகவும் குணம்கொள்ளும்.சளி,தடிமனுக்கு ஒப்பான சாதாரண வியாதிதான் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.
காட்டிகொடுப்பு என்றவுடன் பொருத்தமான கட்டுரை தேனியிலிருந்து இங்கு பதிவிடுகின்றேன்
தாக்குதலின் உச்சக்கட்டத்தில் திடீரென செல்லக்கிளி மீது சரமாரியான துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டு, அவர் அந்த இடத்திலேயே சரிந்து விழுந்து இறந்துவிட்டார். அந்த மர்மமான சூட்டை செல்லக்கிளி மீது நடாத்தியவர் பிரபாகரன் தான் என்ற விடயம், பிற்காலத்தில் பரவலாக எங்கும் பேசப்பட்டது. அவ்வளவு உறுதியாக பிரபாகரன் மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.
ஒன்று, பிரபாகரன் செல்லக்கிளியைச் சுட்டதை அவருடன் கூட இருந்த சிலர் கண்டதாகச் சொல்லப்பட்டது.
இரண்டாவது, செல்லக்கிளி மீது பிரபாகரனுக்கு எப்பொழுதுமே ஒர் அச்சம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. அதற்குக் காரணம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்லக்கிளி அந்தச் சமூகத்துக்குப் பொதுவாக உள்ள போர்க்குணம் மிக்கவர். புலிகள் இயக்கத்தில் அஞ்சாமையுடன் வீரதீரமாகச் செயல்பட்ட ஒருவராகவும், பிரபாகரனைவிட உயரமானவராகவும், ஆளுமை மிக்கவராகவும் அவர் இருந்தார். இயக்கத்தில் எல்லாவிடயங்களிலும் தன்னையே முதன்மைப்படுத்துபவராக இருந்த பிரபாகரனுக்கு செல்லக்கிளியின் வளர்ச்சி பிடித்திருக்க நியாயமில்லை. எனவே இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரைத் தீர்த்துக்கட்டிவிட்டதாக செய்திகள் உலாவின.
இந்த விடயம் உண்மைதானா என்பதை என்னால் உறுதியாகச் சொல்வதற்கு என்னிடம் ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால் சந்தேகப்படுவதற்குப் பல காரணிகள் உள்ளன. இந்தத் தாக்குதல் சம்பவத்தின்போது புலிகளுக்குப் பின்னணியிலிருந்து உதவுவதற்காக யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் சென்றிருந்தனர். (இப்பொழுது அவர்கள் மூவரும் வௌ;வேறு வெளிநாடுகளில் வாழ்வதாகத் தகவல்) அவர்கள் மூவரும் எனக்கு நன்கு பழக்கமானவர்கள். அவர்களிடம் பிரபாகரன் செல்லக்கிளியைச் சுட்டது உண்மைதானா என்பதை அறியப் பல தடவைகள் முயன்றேன். நான் அந்த விடயத்தை அவர்களிடம் நேரடியாகக் கேட்காதபோதும், விடயத்தை அவர்கள் புரிந்துகொண்டு பதில் ஏதும் கூறாமல் தட்டிக்கழித்துவிட்டார்கள்.
செல்லக்கிளியின் அண்ணன் ஒருவரை எனக்குத் தெரியும். திருமணம் செய்து கொள்ளாத அவர், மேசன் வேலை செய்து வந்தார். அவர் வேலை முடிந்து வந்து இரவில் நல்லூர் பண்டாரக்குளம் ஒழுங்கையிலுள்ள எனது நெருங்கிய உறவினர் ஒருவரின் வீட்டில்தான் படுப்பது வழமை. நான் அங்கு செல்லும் நேரங்களில் அவருடன் கதைத்துப் பழகியதால், செல்லக்கிளியின் மரணம் குறித்து அவரிடமும் ஒருமுறை கேட்டேன். அவர் பிரபாகரனை நேரடியாகக் குற்றம் சாட்டாமல், இயக்கத்தில் அவரது வளர்ச்சி பிடிக்காத உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் சிலர் அவரைத் திட்டமிட்டுச் சுட்டுக் கொன்றதாகத் தான் கேள்விப்பட்டதாகச் சொன்னார்.
இது ஒருபுறமிருக்க பிரபாகரனின் சொந்தக் குணாம்சம்கள் பற்றி முன்னரும் நான் சில சம்பவங்கள் கேள்விப்பட்டிருந்தேன். ஆரம்ப காலத்தில் பிரபாகரனும் அவருடைய சகாக்கள் சிலரும் ஒரு இடத்தில் மறைவாக இரவு படுத்திருந்திருக்கின்றனர். நள்ளிரவில் எழுந்த பிரபாகரன் தன்னுடன் படுத்திருந்தவர்களில் தனக்குப் பிடிக்காத ஒருவரைத் தயவு தாட்சண்யமின்றி சுட்டுக் கொன்றிருக்கிறார். இந்தச் சம்பவம் பரவலாகப் பேசப்பட்ட ஒரு விடயம்.
பிரபாகரனும் குட்டிமணியும் சேர்ந்து நீர்வேலி வங்கிக் கொள்ளையைச் செய்த நேரமும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. கொள்ளையின் பின்னர் கொள்ளையடித்த நகைகள், பணம் என்பனவற்றுடன் பிரபாகரன், குடடிமணி போன்றோர் ஒர் இடத்தில் இரவு தங்கி இருந்திருக்கின்றனர். எல்லோரும் படுத்துத் தூங்கிய பின்னரும் பிரபாகரன் மட்டும் தூங்காமல் அவர்கள் தங்கியிருந்த கொட்டிலைச் சற்றிச்சுற்றி வந்திருக்கிறார்.
இதை அவதானித்த குட்டிமணி “தம்பி (பிரபாகரனை சிறுவயதில் ஊரிலுள்ளவர்கள் தம்பி என்று அழைப்பது போலவே, புலிகள் இயக்கத்திலும் ஆரம்ப காலத்தில் அன்ரன் பாலசிங்கம் முதற்கொண்டு எல்லோரும் ‘தம்பி’ என்று அழைப்பதே வழமையாக இருந்தது. பின்னர் அவர் ‘தலைவர்’ ஆனதும் ‘தம்பி’ என அழைத்தால் தண்டனைதான் கிடைக்கும்) நீ இன்னும் படுக்கல்லையா?” எனக் கேட்டிருக்கிறார்.
அதற்கு பிரபாகரன், “எல்லாரும் படுத்தால் இந்தப் பொருட்களைப் பாதுகாப்பது ஆர்?” எனக் கேட்டிருக்கிறார்.
பிரகாகரனின் இந்த எதிர்க் கேள்வி குட்டிமணியின் சிந்தனைப் பொறியைத் தட்டிவிட்டிருக்கிறது. பிரபாகரன் நள்ளிரவில் தனது சகாவையே சுட்டுக்கொன்றதை அறிந்திருந்த குட்டிமணி, பின்னர் அன்றிரவு தானும் தூங்கவில்லை. தங்கள் எல்லோரையும் சுட்டுக்கொன்றுவிட்டு, கொள்ளையடித்த நகைகளையும் பணத்தையும் பிரபாகரன் எடுத்துச் சென்றுவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமே, குட்டிமணியையும் அன்றிரவ தூங்காமல் செய்துவிட்டது.
எனக்கு இந்த விபரத்தைச் சொன்னவர் குட்டிமணியின் நெருங்கிய சகா ஒருவரின் நண்பராக இருந்தவர்.
ஆனால் குட்டிமணி அன்று இரவு சந்தேகித்தது சரியாகப் போய்விட்டது. அந்த நீர்வேலி வங்கிக் கொள்ளையில் கிடைத்த பணம், நகைகள் என்பனவற்றைப் பிரபாகரனும் குட்டிமணியும் சில வாரங்களில் பாகப்பிரிவினை செய்தனர். பின்னர், அவற்றை எடுத்துக்கொண்டு இந்தியா செல்வதற்காக குட்டிமணி வல்லிபுரக் கோவிலுக்கு அருகிலுள்ள கடற்கரையிலிருந்து பயணம் மேற்கொண்டபோது, இலங்கைக் கடற்படையால் துரத்தப்பட்டு, திரும்பி அவர் கரைக்கு ஓடியபோது அங்கு பதுங்கியிருந்த பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார்.
பின்னர் வெலிக்கடைச் சிறையில் குட்டிமணி தடுத்து வைக்கப்பட்ட நிலையில், பிரபாகரன் குழுவினர் திருநெல்வேலியில் இராணுவத்தினர் மீது மேற்கொண்ட தாக்குதலின் எதிர்விளைவாக, அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசின் அனுசரணையுடன் சிங்களச் சிறைக் கைதிகளால் அவரும், தங்கத்துரை போன்ற போன்றவர்கள் உட்பட 53 கைதிகளும் சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட விடயம் எல்லோரும் அறிவர்.
குட்டிமணி இந்தியா செல்லும் விடயம் மிக இரகசியமாக இருந்தும், பொலிசாருக்கு எப்படி அந்த விடயம் தெரிந்தது என்பது எல்லோருக்கும் அந்த நேரத்தில் வியப்பாக இருந்தது. ஆனால் சிறிது காலத்தின் பின்னா உண்மை வெளியான போது எல்லோருக்கும் அதிர்ச்சியாகப் போய்விட்டது. அந்த நேரத்தில் வல்லிபுரம் பகுதியில் கிராமசேவை அலுவலராக இருந்த கோவளத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்த தகவலின்படி, பிரபாகரன் குழுவினரே குட்டிமணியின் பயணம் பற்றி பொலிசாருக்குத் தகவல் சொன்னதாகத் தெரிய வந்தது!
எனவே இத்தகைய ‘பண்புகள்’ நிறைந்த ஒருவர் தனது சகா செல்லக்கிளியை தானே வேட்டையாடி இருப்பார் எனப் பலரும் கருதியதில் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.
சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கத்தின் “தேனீ”யில் தேடித் தருவது தித்திக்கிறது.இந்த எழுத்தில், “நேரில் சம்பந்தப்பட்ட ஒருவர் தெரிவித்தார்.” என்ற ஒரு வரி கூட இல்லை.
நல்ல “வீரன்”தான் போங்கள்.
வெத்து வீரா..நல்லாதான் ரூம் போட்டு:) சிந்திதிச்சு இருக்கிறீர். கதை , வசனம் , கற்பனை நல்லாய்தான் இருக்கு. பேசாமல் படம் எடுக்க கொலிவூட் போகலாமே 😀 . நீர் எல்லாம் படம் எடுத்தால் , படம் சும்மா பிச்சுகிட்டு ( தியற்றரை ) விட்டு ஓடும். அது என்ன செல்லக்கிளியின் ஒரு அண்ணனை தெரியும், குட்டிமணியின் ஒரு சகாவைத் தெரியும், மாத்தையாவின் ஒரு மச்சானை தெரியும்… என்ன மாஸ்ரர், எப்படி மாஸ்ரர் , உங்களால் எல்லாம் இப்படி முடியுது.
செய்தியில் ஒரு தகவல் தவறு. இலங்கை அரச எம்பசி நட்டத்திய திவாளிக் கொண்டாடங்களில் கலந்த்து கொண்டதும், கூட்டத்துக்கு இஸ்குருட் ட்றெளவரோடு வந்து மிரட்டியதும் ஒரு குழு அல்ல. நோர்வே சிறி ரயாகரன் ஆகியோரது இணையங்களில் எழுதிவரும் (?) நேசன் என்பவரே. இவரது அடிதடிக்கு தத்துவ விளக்கம் கொடுப்பது நோர்வே சிறியும் ரயாகரனும். இவர்கள் பற்றி வருமான வரி துறைக்கு எழுதினாலே போதும் அடங்கிவிடுவார்கள்.
ஒருவரைக் குழுவாகப் பார்க்கும் இனியொரு செய்தி இதுவா?
“மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.” என்பது இதுவோ
மறுதலிக்கப்பட்ட மற்ற என் இரு கருத்துகளும்,இனியொருவின் இரண்டக நிலையை வெளிப்படுத்தி விடும் என்ற பயப்பிராந்தியா?
விளக்கம் அளிப்பது விவேகமானது.நன்றி.
தலைப்புக்கு கீழே தொங்கிற கருத்துகளின் உண்மைத்தன்மைகளை ‘இனியொரு’ இன்னும் ஒரு தடைவை தயவுசெய்து சரிபார்த்து பிரசுரிக்கவும்.
சுப்பு,நெருஞ்சி, சின்ன சசி,
செய்தியில் கூறப்பட்ட தகவல்கள் சரியானவையே. சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரங்களின் பின்னர் பல தரப்புக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே வெளியிடப்பட்டது. தவிர, ஒன்று கூடலைக் குழப்புவதற்கு ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் சென்றார்கள் என்பதே சரியானது.
ஒரு வன்முறை நடந்துள்ளது. அது எப்படி நடந்தது. ஏன் நடந்தது. இதை கையாள்வது எப்படி என்று கதைக்காமல் பின்னூட்டம் போட்டு அலட்டுகிறார்கள்.
என்ன பினாத்துகிறாய். இனியொருவா நடத்துகிறாய்? நீ என்னா பெரிய இவனா? கொஞ்சம் பொறு நாங்கள் நடத்திக் காட்டுறம்.
நீங்கள் குறிப்பிடும் எல்லா வன்முறைகளையும் நாமும் எதிர்கொள்ளத் தயார். நீங்கள் நிறுத்தத் தயாரில்லை என்பது புலனாகிறது. ஆக, நாங்கள் எதிர்கொண்டே ஆகவேண்டும் என்பது தெளிவு.
ஐயா லோகநாதா என்னப்பா இதெல்லாம் நீங்கள் வளரவே மாட்டீா்களா??
லொக்குநாதா…என்னப்பா நடத்திக் காட்டப் போகுறாய்.? முதல்ல..இதுவரை நீ என்ன தமிழ் மக்களுக்கு நடத்தி இருக்குறாய் என்று சொல்ல முடியுமா? செய்ய்து இருந்தால் தானே சொல்வதற்கு. அவ்வளவு வீரம் இருந்தால் , போய் மகிந்த அன் கோ விடம் காட்டு. நாலு தமி சனமாவது உன்னை வாழ்த்தும்….!
லோகநாதன் என்னத்தை நடத்தி காட்டப்போரீங்க? 50 பேரைக் கூப்பிட்டு தீபாவளிக் கொண்டாட்டமா இல்லாட்டி அடிவருடி வேலையா?
உங்களுக்கு எல்லாம் சுய புத்தி இல்லையா? ஜனநாயகம் என்றால் என்னவெண்டு தெரியாதா.
முதல்ல நாட்டில அநியாயமா சிறையில வாழ்க்கையை அழிக்கிற சமுதாயத்தை உங்கடை ஆட்களை கொண்டு வெளியில எடுத்து வாழ்வு கொடுக்க பாருங்கோ.
எல்லாதுக்கை முதல்ல ஒழுங்கா கோவணம் கட்டப் பழகுங்கோ.
சும்மா எல்லாம் வெத்து வேட்டு. மக்களுக்கு என்னப்பா செய்தீங்கன்னா ஒண்ணுமே பண்ணலைம்பாங்க. இனிஒரு இந்தப்பசங்களுக்கெல்லாம் பயப்படக்கூடாது.
அப்பு வீரன் நீங்க டக்லஸ்,வரதர், கருணா விடம் கேட்டா இன்னும் விளக்கம் தருவார்கள் எப்பிடி காட்டி கொடுப்பது என்று. அது சரி உங்களுக்கு தெரியாததா? இந்த செய்திக்கும் நீர் கொடுத்த தேனீ செய்திக்கும் என்னப்பா சம்மந்தம்?
“சுற்றி சுற்றி சுப்பற்ரே கொல்லைக்கே”` என்பது போல், நேசன் என்பவர் நோர்வேகாரனின் வலது கையாகசசெயல்ப்படுபவர்.
நோர்வேகாரன் 80களில் உமாவுக்கு ரகசிய விசுவாசியாக இருந்ததால் பல்கலைக்கழகத்தில் `பதுங்கள் சி…` என்னும் பெயரை எடுத்தவர்.
90களில் நோர்வேக்கு தப்பிஓடி தீவிர புலி எதிர்பாளராக தன்னை முன்னிருத்துவதற்காக இவர் கையில் எடுத்த மருந்து கதிரை.!
சங்கக் கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் எதுவானாலும் மற்றவர்கள் கருத்துச் சொன்னால் கதிரையை தூக்குவார். இந்த ஈனச்செயலை தனக்கு பெருமை சேர்ப்பதற்காக ஊர் எல்லாம் தான்னுடைய வாயாலேயே சொல்லித்திரிந்தவர்.
இதே காலகட்டத்தில் இவர் புலிகளின் ஜனநாயக மறுப்பு, வன்முறை என்பவற்றை எதிர்ப்பதாக சொன்ன போது மக்கள் சிரித்தார்கள்!
இரண்டு வருடங்களிற்கு முன்னர் கூட நோர்வேகாரன் இருக்கும் ஊரில் தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினர்கள் தங்களின் பிள்ளைகளிற்கு தமிழ்க்கல்வி ஆரம்பிக்கக்கோரி ஒரு ஜனநாயகக்கோரிக்கையை முன் வைத்தனர், இதற்கு நோர்வேகாரன் ஆத்திரம் கொண்டு தன் கையை தூக்கி முட்டியை மடக்கி கோரிக்கையை முன்வைத்தவரின் முகத்தில் குத்துவதற்கு போனார்….!
இது 10 குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னால் நடந்த உண்மை. இதை நீங்கள் யாரும் நேரிலோ தொலைபேசி மூலமோ அறிந்து கொள்ளலாம்!
இது பற்றி திரித்து பொய்யை தமது புரட்சித்தளத்தில் எழுதி, உண்மையை மறைத்தனர்.. சுற்றி சுற்றி சுப்பற்ரே கொல்லைக்கே….. உண்மைகள் இன்னும் வரும்…..
நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன!
உமாவுக்கு ரகசிய விசுவாசியாய இருந்த பலபேர் இப்ப இப்படி திரியினம். ஆட்களிண்டை வண்டவாளங்களை அவன்கலண்டை பெயரை நேரடியாக போட்டு எழுதுங்கோ. அப்பத்தான் இவங்கள் திருந்துவாங்கள். சனத்துக்கும் இவன்களைண்டை வண்டவாளங்கள் தெரியவேண்டும்.
இவங்களை போன்ர்வங்கலாளைதான் இயக்கமே துண்டு துண்டாய் அழிந்தது. இப்ப இங்கயும் வந்து அதே அதாவடிதனம். சுகுறுடிரைவர் தூக்கி திரியிறவர் மட்டுமில்ல மே 19 மட்டும் புலிக்கு வேலையில காசு சேர்த்து கொடுத்தவை உமாவுக்கு விசுவாசியா இருந்து இரகசியமா சிங்கபூருக்கால ஓடி வந்தவயையும் இப்ப வெளிக்கிட்டு இருக்கினம்.
எல்லா நாட்டுக் காரனும் அமைதியா வாழ வாற நாட்டிடில இவங்களைக் போல ஆக்களாலதான் ஜனநாயக மறுப்பு.
இவங்களை இவங்கள் இயக்கத்தில இருக்கேக்கையும் என்ன செய்தாங்கள் என்று வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும்.
“நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன!” விஜை தொலைகாட்சி கோபினாத் சொல்கிறமாதிரி, இது நல்லா இருக்கே.
அந்த “ஐந்திற்குக் குறைவான தனிநபர்கள்” பெயர்களை வெளியிடாது,”மொட்டைப் பெட்டிசன்” அடிக்கும் முறை ஏன்?
நெருஞ்சிக்கு பெயர்களை தெரிந்து கொள்வது அவ்வளவு அவசரம் என்றால் முதலில் உங்களது பெயருடன் தொடங்குவோமே.
(1) கண்….
(2) ………….
இனி மற்றவை தமது தகவல்களை முன்வைக்கலாம்.
ஜனநாயக மறுப்பு, வன்முறை :Please define these two terms.What is democracy?and what is violence? denying or respecting Democratic rights to whom? by whom?
using violence by whom? against whom?and for what purpose
?
அறிவுக்கும் ஆட்களுக்கும் சம்பந்தமில்லை என்பதில் நம்மவர்கள் அப்பப்ப அங்கயிங்கை என்று நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
தலைப்பு எங்கயோ கிடக்க சம்பந்தமில்லாத இடங்களை தடவுவதில் அப்படியென்ன சுகம்?
இனியொரு வளர இன்னொரு யுகம் வேண்டும் என்பதே மேலேயுள்ள “மொட்டைப் பெட்டிசன்” சாட்சி.
இந்தச் செய்தி யாரைக் காப்பாற்ற? என் எழுத்து மீதான தணிக்கை வன்முறை ஏன்?
“அரச சார்புக் குழு”க்கள் விரல் நீட்டிப் போடும் சண்டையில்,லோக நாதங்களே விளங்கும்.
நெருஞ்சிக்கு பெயர்களை தெரிந்து கொள்வது அவ்வளவு அவசரம் என்றால் முதலில் உங்களது பெயருடன் தொடங்குவோமே.
(1) கண்….
(2) ………….
இனி மற்றவை தமது தகவல்களை முன்வைக்கலாம். Ramanan Posted on 08/28/2012 at 3:41 pm
இதுதான் ஜனநாயகம்,முற்போக்கு,இடதுசாரித்தனம்.
இதுதான் ஒரு “மஞ்சள் பத்திரிகை” என்பதன் வரைவிலக்கணமும்,அதன் வாசகர் தரமும்.
ஐயோ நெருஞ்சி,
புல்லரிக்க வச்சுட்டியல் போங்கள்.
சாத்தான் வேதம் ஓதுரது என்றது இதுதானோ?
பல்வேறு புனைபெயரில வந்து வெவ்வேறு வலைப்பக்கங்களில வெலுத்து வாங்கினபோது எங்கபோச்சு இந்த மஞ்சள் பத்திரிகை, ஜனநாயகம் பத்தின அக்கறை?
வாசகர பத்தி ரொம்பத்தான் கவலப்படுறியல். நீங்க மொட்டக்கடதாசி போடுறத நிறுத்தினா போதாதே?
“மஞ்சள் பத்திரிகை”,”மொட்டைப் பெட்டிசன்”,ஜனநாயகம் என்பதன் வரைவிலக்கணம் தெரியாத குஞ்சு ரமணா!
“கெடுகுடி சொற்கேளாது;சாகுடி மருந்துண்ணாது.”
`என்.டி.பி.எப்` அமைப்பினர் தேடகம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் இலங்கை அரச சார்புக் குழு வன்முறையை இது வரை கண்டிக்காதது ஏன்?
வ்ரும் ஆனால் வராது!
நிமல், ஏன் தயங்கித் தயங்கி எழுதுகிறீர்? பொய்யை உண்மை போல் எழுதும் புரட்(சி)டுக்கார்களுக்குப் பயம் ஏன்?
இது நடந்தது துரொம்சோ தமிழ்ச்சங்கத்தில்! எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். ஆனால் புலிகளின் ஜனநாயக மறுப்பு, வன்முறை என்பவற்றை எதிர்ப்பதாக சொல்லும் `என்.டி.பி.எப்` அமைப்பினர் இத்தகைய வன்முறையை இது வரை கண்டிக்காதது ஏன்?
இது மட்டும் அல்ல நோர்வே சிறி அண்மையில் புலி ஆதரவாளர்களால் நடாத்தப்படும் தமிழ்ப் பாடசாலையின் ஆண்டுவிழாவிற்கு புலி ஆதரவாளர்கள் என்று நன்கு தெரிந்தும் ( ஆதாரம்; அவர்களின் இணையத்தளம்) பிரதம விருந்தினராக பங்கேற்று தன்னை பிரமுகனாக பிரகடணப்படுத்திக் கொண்டார். இதனால் அதிருப்தி அடைந்த என்.டி.பி.எப் அமைப்பினர் சிலர் நேரில் சொல்லப் பயந்து நோர்வே, நாட்டிலும், லண்டன் நகரிலும் திட்டித்திரிகின்ரனர்! பாவம் சொந்த அமைப்பினர்களுக்கே பயம்……
நோர்வே சிறியனின் மனைவி துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் போது புலிகள் மிரட்டியதாக சொல்லி அனுதாபம் பெற முனைந்தது பெரிய கதை. இதில் உண்மை, பொய் ஒரு புறம் இருக்க, மக்கள் அவையை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் `மெய்ல்` மூலம் தொடர்பு கொண்டு `இது பற்றி கதைத்து தீர்க்க விரும்புவதாக` கேட்டிருந்தார். கதைத்து தீர்க்கும் ஜனநாயக வழிவகையில் நம்பிக்கை இல்லாததால் இது வரை அவர்கள் தொடர்பு கொள்ளவில்லை. அதற்குப்பதில் பொட்டுஅம்மான் -பிரபாகரன் என்னும் பெயரில் `ஈமெய்ல்`கள் அனுப்பி தமது கைவரிசையை காட்டி வருகின்றனர்.!
முள்ளிவாய்க்கால் முடிந்து வருடங்கள் மூன்றாகிவிட்ட நிலையில், இந்த இடைக்காலத்தல் வலைத்தளங்களில் ஜனநாயகம், கருத்துப்பரிமாற்றம் என்பதன் பெயரில் நடந்துமுடிந்துள்ள விடயங்களை ஒரு தடவை ஐந்தொகை கணக்கெடுத்துக் கொள்வது அவசியமானதாகிறது.
இந்த இடைக்காலத்தில் இரயாகரன், சிறீ, நேசன், சீலன், கண்ணாடி சந்திரன், நியூட்டன் போன்றோர் தமது தேவைக்கேட்ப அரச ஆதரவு குழுக்களுடனும், புலிகளுடனும் சேர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் உள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு எதிராக செய்த கயமைத்தனங்கள் அதிகம். தமது சொந்த பெயர்களிலும், புனைபெயர்களிலும் வந்து இந்த வலைத்தளங்களில் செய்தவை மிகவும் அயோக்கியத்தனமானவை. அவதூறு பரப்புவது, போராளிகளையும் போராட்டத்தையும் சிறுமை படுத்துவது தொடக்கம் சிலருக்கு ஆபத்துக்களையும் உருவாக்க முனைந்துள்ளார்கள். இப்போது இது வன்முறை வடிவை எடுத்துள்ளது. இதனை இத்துடனேயே முடிவுக்கு கொண்டுவருவது தமிழ் மக்களது ஜனநாயகம் மிக்க எதிர்காலத்தை நேசிக்கும் அனைவரதும் கடமையாகும்.
ஆதலால், இந்த நபர்களை அம்பலப்படுத்தி, ஓரம்கட்டும் பணியை இனியொரு ஆரம்பித்து வைக்கவேண்டும். இப்பணியில் அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும் இணைந்து செயற்படுவது அவசியமானது.
Is it true Noel, Daniel and one other person involved in this rowdies act?
And I heard form the sources all are decedents of PLOTE group, now have alliance with EPDP and some EPRLF decedents. And EPDP backed all this.
If anyone knows more about these people’s background, the third guy’s name and about this incident in detail please post it here.
– Anton
Is it true Nesan, Daniel and one other person involved in this rowdies act?
And I heard form the sources all are decedents of PLOTE group, now have alliance with EPDP and some EPRLF decedents. And EPDP backed all this.
If anyone knows more about these people’s background, the third guy’s name and about this incident in detail please post it here.
– Anton
They are sharing information and they will put an end all violent activities all over the world. There is a reason that CSIS (Cabadian Security Intelligence Services) and ASIO (Australian Security Intelligence Organisation) came into being.
kannai moodikkonda poonai sonnathaam ulagam erundu vittathu
Sri Lankan Tamil Diaspora is now a big international phenomenon. They need a lot of leisure activities and may be some political adventure too. In Sri Lanka they will do anything to protect the unitary state structure that had withstood a lot of pressure since 1948
றமனன் தம்பிககு,
//இந்த இடைக்காலத்தில் இரயாகரன், சிறீ, நேசன், சீலன், கண்ணாடி சந்திரன், நியூட்டன் போன்றோர் தமது தேவைக்கேட்ப அரச ஆதரவு குழுக்களுடனும், புலிகளுடனும் சேர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் உள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு எதிராக செய்த கயமைத்தனங்கள் அதிகம். தமது சொந்த பெயர்களிலும், புனைபெயர்களிலும் வந்து இந்த வலைத்தளங்களில் செய்தவை மிகவும் அயோக்கியத்தனமானவை. அவதூறு பரப்புவது, போராளிகளையும் போராட்டத்தையும் சிறுமை படுத்துவது தொடக்கம் சிலருக்கு ஆபத்துக்களையும் உருவாக்க முனைந்துள்ளார்கள்.//
இவர்களில் பாவம் நியூட்டனை விட்டுவிடுங்கள். இவர் முன்னர் அரசு சார்பு தேனீ இணையத்தளம், `ஐ.பி.சி` வானொலி ஆகியோருடன் மிக நெருக்கமாக இருந்து கொண்டு அவர்கள் பற்றி வெளியே போட்டுக் கொடுத்தது போல் திட்டமிட்டு `என்.டி.பி.எப்` அமைப்பின் இரகசியங்கைள வெளியே கசிய விட்டதினால்த் தான் `என்.டி.பி.எப்` அமைப்பை பற்றி எமக்கெல்லாம் ஒரு சரியான ( முரண்பாடுகளின் மூட்டை) மதிப்பீட்டிற்கு வரமுடிந்தது.
உதாரணத்திற்கு சில:
1.ரூபன், சுதேகு என்னும் பெயரில் எழுதுவது என்.எல்.எப்.டி குமார் என்பதும், (வேறு பலரின் புனைபேர் உட்பட).
2. சுவிசு நாட்டில் நடைபெற்ற என்.டி.பி.எப் அமைப்பை தள மகா(??)நாட்டின் விபரங்களை வெளியிட்டது.
ஆதாரம்; இது பற்றி இனிஒருவில் குறிப்பு வெளிவந்தது. ( ரூபன் தன்னை யார் என்று ஒத்துக்கொண்டது நினைவிருக்கா? )
3. நோர்வே சிறியின் வீட்டின் கீழ் தளதில் நிலவரையில் வைத்தே தமிழ் அரங்கம் இயங்குவதும். குடும்பத்தாரிற்கே அனுமதி இல்லை என்பதும்.
4. என்.டி.பி.எப் அமைப்பினர் சிலர் முழுநேரம் பணம் சேகரிப்பதே பிரதான நோக்கமாக உள்ளனர் என்பதும், பொழுது போக்கு மாக்சியவாதிகள் என்றும், இப்பொழுது இலங்கையில் முதலீடு செய்து பணதை பெருக்குவதே சிந்தனையாக உள்ளனர் என்றும் தோழர் ரூபன் இலங்கைக்கு முதலீடு செய்ய போவது பற்றியும்…
5.என்.டி.பி.எப் அமைப்பினர் சிலர் பினாமிகள் பெயரில் பணத்தை வட்டிக்கு விட்டு சுரண்டுவது பற்றி..( பெயரகள் தவிரக்கப்பட்டுள்ளது.)
6.நோர்வே சிறி புலி ஆதரவாளர்களால் நடாத்தப்படும் தமிழ்ப் பாடசாலையின் ஆண்டுவிழாவிற்கு புலி ஆதரவாளர்கள் என்று நன்கு தெரிந்தும் பிரதம விருந்தினராக பங்கேற்றது.
7. அருள் செழியன், அருள் எழிலன் விடயத்தில் ராயாகரனுடன் ரூபன் சேர்ந்து செய்த சுத்துமாத்துகள்….
8. ராயாகரன் எழுதி பெயர் எடுப்பார் ஆனால் நாட்டுக்குப் போய் ஒன்றும் செய்ய மாட்டார்……
9. சிறியர் தான் இருக்கும் ஊரில் இருக்கும் 12 குடும்பங்களில் 11 குடும்பங்களுடன் முரண்பட்டுள்ளார். இதே போல் ராயாகரனுக்கும் பரிசில் ஒருநண்பர் கூடக்கிடையாது, மக்கள் தொடர்பு இல்லாமல் எப்படி புரட்சி செய்வார்கள்?…..
இப்படி பல விடயங்கள் இருகிறது….. எழுத இடம் இல்லை……
ஆகவே கனவு காணுங்கள் புரட்சி வரும்…..
After 1983 it is you know who in Thimbaktu for Sri Lankan Tamils who are only 18 % of the population. Some one talked about the Controlable Minority. The government of Sri Lanka – Shri Lanka is not through with mapping in the East and North. Lt. General Lionel Balagalle created the Directorate of Military Intelligence. The real situation is Throwing the Baby out with the Bath Water. They have to start from the beginning. Peoples Bank Cash Transport in Jaffna. I was one of the first guys to open an account at the newly opened Nallur Branch on Palaly Road and at Parameswara Junction. .
சத்தியமா நம்ப முடியவில்லை. ஏமாற்றமும், அவநம்பிக்கையுடன் இருந்த எங்களுக்கு `என்.டி.பி.எப்` அமைப்பு சிறிது நம்பிக்கை தந்தது. எழுத்துக்கும் செயலுக்கு சம்பந்தம் இல்லை என பொட்டர் போல் பொட்டில் அடித்து சொன்னீர்கள். 30 வருடங்களாக இயக்கங்களிடம் பட்டபாடும், ஏமாற்றங்களும் போதும்…..போதும்…..போதும்…..!!!!!
இரகசியங்கைள வெளியே கசிய விட்ட நியூட்டனுக்கு நன்றி,நன்றி,நன்றி,நன்றி,
புலிகள் தாம் செய்யும் ஜனநாயக மறுப்பு, மிரட்டல் போன்றவற்றை கண்டிப்பதில்லை.
அதேபோல் என்.டி.பி.எப் அமைப்பினரும் பலநாள் ஆகியும் கண்டிக்கவில்லை. புலிகள் போல் என்.டி.பி.எப் அமைப்பினரும் ஜனநாயக மறுப்பு, மிரட்டல் போன்றவற்றை விரும்புவது தெட்டத்தெளிவாகி விட்டது.