ஒரு நாட்டின் தேசிய கீதத்தை இருமொழிகளில் பாடும் நாடு ஏதேனும் இருந்தால் அந்த நாட்டின் பெயரைத் தனக்குக் கூறுமாறு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கை சிங்களம் பேசுபவர்களுக்கான நாடு என்பதையும் சுய நிர்ணய உரிமைக்காக ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் போராடுவதைத் தவிர வேறு வழிகள் இல்லை என்பதையும் ராஜபக்ச இதனூடாகத் தெரிவித்துள்ளார். தமிழிலும் பாடப்பட்ட ‘நமோ நமோ தாயே’ என்ற இலங்கைத் தேசிய கீதத்தை பேரினவாத பாசிஸ்டுக்களான ராஜபக்ச பயங்கரவாதக் குடும்ப ஆட்சியே சிங்களம் மட்டும் என மாற்றியமைத்தது.
இலங்கையின் தேசிய கீதத்தில் சிங்களமொழியுடன் தமிழ்மொழியையும் சேர்த்துக் கொள்வது தொடர்பில் கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவையின் போது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு காட்டமாக தெரிவித்துள்ளார்.
தான் இவ்வாறானதொரு தீர்மானத்துக்கு வந்தால் சிங்கள பௌத்த மக்களுடன் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிவரும்.
இல்லாத ஒரு பிரச்சினையை உருவாக்க தான் தயார் இல்லை என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் தெரிவித்துள்ளார்.
பேரினவாதத்தை ஆளும் அரசுகளே வெளிப்படையாகத் தூண்டும் நாடுகளில் இலங்கை பிரதானமானது. சிங்கள மக்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக பேரினவாதிகளின் உணர்ச்சியூட்டும் நடவடிக்கைகள் குறித்து சிங்கள மக்களுக்குச் சொல்லப்பட வேண்டும்.
நமோ நமோ நமோ நமோ தாயே
நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதோர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறி துணிவருளே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதோர் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே.
இது ஈழ தமிழ் தேசிய கீதம்
முற்றும் சூழ் அலைகடல்
முடிவடையா பெரும் ஓசை
குறைவில்லா தமிழ் எனவே
கொடி நிமிர்த்தும் பரிதிக்கும்
காடு திறந்து வளி மிதந்து
காத்து நிற்கும் உயிர் மூச்சில்
ஓங்கி நிற்கும் வெயிலுக்கும்
உரத்து சொல்லும் மழைக்கும் எம்
பொன்னுடல் வியர்வை பூத்து
போற்றி நிற்போம் ஈழ பூமி
எதிரிக்கும் தர்ம வழியில்
ஈழத்தில் அமர வைத்து
போதிக்கும் பொற்காலம் கல்வி
புதுமை நூல்கள் செய்வித்து
எம் பூமி சட்டங்கள் என்றும்
இந்த உலகத்திற்கே வழிகாட்டும்
போர் வெறியில் பூவைத்து நாம்
பொறுமையிலே அணு உலகை
அறிவியலின் அழிவினைக்கு
ஆற்றலில் மாற்றி வைப்போம்
பொருளாதார பெரும் வேகம்
புரிந்து செல்லும் இலக்கிலே
பசி கொடுமை ஏழ்மையெல்லாம்
பகுத்தறிவின் தாழ்மையெல்லாம்
இல்லாதொழிக்கும் ஈழத்தாயே நீ
என்றும் வாழ வாழ்த்துகின்றோம் !
ஈழ தாயே வாழ்கவே! வாழ்கவே !
எம் தமிழ் தாயே வாழ்கவே ! வாழ்கவே !
விடுதலை தாளில் என்றும் விழுந்து பணிந்து
வெற்றி வெற்றி நித்தம் வினைகளாய் எழுவோம் !
எம் மக்களை கொன்று குவித்த உனக்கு… ஒரு தமிழனால் தான் மரணம் என்பதை எப்பொழுதும் நினைவிலேயே வைத்துக்கொள்…காலம் கூடி வருகிறது உன் மரணம் கொடூரமானது… சிங்கள வசை பாடும் உன் இனமும் விரைவிலேயே அழிந்துவிடும்…எம் தமிழ் தனி ஈழம் விரைவிலேயே மலர்ந்துவிடும்…காலம் பதில் சொல்லும் நேரம் வந்துவிட்டது…எம் மக்களும் சுதந்திர காற்றை சுவாசிப்பார்கள்…