புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் ஐந்தாவது பகுதி நாளை வெள்ளி (19.03.2010) 10:30 இலிருந்து இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.
“தேசிய இனப் பிரச்சனையும் இலங்கைத் தேர்தலும்” என்ற தலைப்பில் இடம்பெறும் இந்த நிகழ்ச்சியில் மே18 அமைப்பு சார்பில் ஜான் றஹ்மான் அவர்களுடன் கலந்துரையாடல் இடம் பெறும். இந்த நிகழ்வில் பங்காற்ற விரும்புவோர் நேரடியாக சன்றைஸ் வானொலியூடாகவோ அன்றி குரல்வெப் (kuralweb.com) இணையத் தளத்தினூடாகவோ தம்மை இணைத்துக் கொள்ளலாம்.
குரல்வெப் மற்றும் இனியொரு (inioru.com) இணையத் தளங்களூடாக முன்கூட்டியே தமது கருத்துக்களையும் வினாக்களையும் முன்வைக்கலாம். நிகழ்ச்சியைக் கேட்க விரும்புவோர் http://firstaudio.net ஊடாகக் கேட்கலாம்.
கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கூட பின்னூட்டங்களையோ கேள்விகளையோ பதிவு செய்து கொள்ள முடியும்.
நட்புடன் வீயூகம் நண்பர்களுக்கு….
நம்பிக்கையீனமான ஒரு சூழலில் நம்பிக்கையுடன் நீங்கள் செயற்படுவது மகிழ்வான விடயமே….
அதேவேளை தாங்கள் முன்வைக்கும் கருத்துக்கள் வேலைத்திட்டங்கள் மற்றும் தங்களது பொதுவான மற்றும் தனிநபர் செயற்பாடுகள் தொடர்பான கேள்விகள் பல எழுகின்றன…
இக்கேள்விகளை கேட்காமல் விடுவதும் நமது கருத்துக்களை முன்வைக்காது விடுவதும் பொறுப்பற்ற செயற்பாடு என்பதால் இங்கு முன்வைக்கின்றேன்….
ஏனனில் தமிழீழ மக்கள் கட்சியில் இருந்து விலகிய போது ஒரு கருத்தை முன்வைத்தேன். அதாவது புலிகள் போல் இன்னுமொரு இயக்கம் தமிழ் பேசும் மனிதர்களுக்குத் தேவையில்லை என. அதற்குப் புலிகளே போதும் என்றும் ஏனனில் புலிகள் போல் வருவதற்கான சாத்தியங்களை அக் கட்சி கொண்டிருந்தது என்பது ஒரு காரணம்;. அதேபோல் தமிழ் பேசும் மனிதர்களை பிரதிநிதித்துவப்படுத்த இருக்கின்ற தமிழ்க் கட்சிக்கள் போல் இன்னுமொரு கட்சி தேவையில்லை. இருக்கின்றவர்களே பொதும் என்பதனால் வீயூகம் தொடர்பான கருத்துக்களை முன்வைக்கவேண்டிய தேவை உள்ளது.
மழை ஓய்ந்தபின் கன கனவென காளான்கள் முளைத்தகணக்கில் பல கட்சிகள் முளைத்துள்ளன…
தவளைக் குஞ்சுகள் கத்துவதுபோல் வாக்குவேட்டைக்காக கத்திக்கொண்டு திரிகின்றன…
இவ்வாறன வேளையில் வீயூகம் – அல்லது மே18 இயக்கமான நீங்களும் உங்களுடைய கருத்தை முன்வைக்க நிலைநாட்ட முயற்சிக்கின்றீர்கள்…..
தமிழ் பேசும் மனிதர்களின் விடுதலைப் போராட்டம்…
புலிகள் தோல்வியுற்றதன் மூலம்; அல்லது தோற்கடிக்கப்பட்டதன் மூலம்;…
இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டது….
ஆதன் பின்….
தமிழ் பேசும் மனிதர்களுக்கு தமது அரசியல் நிலைப்பாட்டை வலியுறுத்த மீண்டும் நிலைநிறுத்த பல ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் நடைபெற்ற கடந்த சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தல்…
ஆனால் தமிழ் பேசும் மனிதர்களை அவர்களது ஏகபோக தலைமையாக புலிகளுக்குப் பின் நிலைநாட்ட முயற்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரத்பொன்சேக்காவிற்கு வாக்களிக்க கூறியதன் மூலம்…
ஆரசியல் ரீதியாகவும் தமிழ் பேசும் மனிதர்களின் விடுதலைப் போராட்டத்தை தோற்கடித்தது….
ஆல்லது
தமிழ் பேசும் மனிதர்களின் விடுதலைப்போராட்டம் சுயநிர்ணைய கோட்பாட்டிலிருந்து விலகிவிட்டதா என்பது கேள்விக்குறியது….
இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகள் ஆதிக்கத்தில் இருந்தபோது அவர்களை எதிர்த்து தமது கருத்தை நிலைநாட்ட முடியாதது மட்டுமல்ல அவர்களுக்கு முன்டுகொடுத்துக் கொண்டு முதுகெழும்பு இல்லாத ஒரு அரசியலை செய்துகொண்டிருந்தனர்…
இவ்வாறனவர்கள் இன்று எப்படி ஒரு நேர்மையாக அரசியலை செய்வார்கள் என எதிர்பார்ப்பது….
இவர்கள் நேர்மையான அரசியலை செய்யமாட்டார்கள் என்பது சரத்தை ஆதரித்ததன் மூலம் நிலைாநாட்டினர்…
இந்த நிலையில் தமிழ் பேசும் மனிதர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிற தமிழ் அரசியல் கட்சிகள் பற்றி குறிப்பிடத்தேவையேயில்லை…
அவர்களும் இவர்களுக்கு எந்தவகையிலும் சலைத்தவர்கள் அல்ல….
ஏல்லோரும் ஒரே குட்டையில் ஊரியவர்கள்..
இடதுசாரி கட்சிகளோ இன்னும் பழைய தத்துவங்களையே திரும்பதிரும்ப ஒப்பித்துக்கொண்டிருக்கின்றார்கள்…..
இந்த நிலையில் வீயூகம் என்ன செய்யப்போகின்றது…
புலம் பெயர் மனிதர்கள் என்ன செய்யலாம்…
குறிப்பாக இந்த பாராளுமன்ற தேர்தலில் எந்தவிதமான தாக்கத்தையும் யாரும் ஏற்படுத்த முடியாது….இதில் பிரதான முரண்பாடாக இருப்பது மகிந்தவினது அரசியலும் அதற்கு எதிரான அரசியலுமே…மேலும் குறிப்பாக சிறிலங்கா என்ற தேசத்திற்குள் இருக்கும் உள்முரண்பாடே இன்றைய பிரதான அரசியல் முரண்பாடாக இருக்கின்றது….
இந்தநிலையில் தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் அடிபட்டு போகின்றது..
இதற்கு காரணம் கடந்த ஜனநாதிபதி தேர்தலில் தமிழ் பேசும் மனிதர்கள் எடுத்த முடிவும்…
மற்றும் தமிழ் கட்சிகளுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமை இல்லாமையுமே…..
ஆகவே குறிகிய ;ஒரு காலத்தில் புலம் பெயர் மனிதர்களோ அல்லது வீயூகமோ எந்தவிதாமான தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு செயற்பாட்டை அரசியல் ரீதியாக செய்ய முடியாது……
ஆனால் தொடர்ச்சியான அரசியல் செயற்பாடு தொடர்பாக கதைக்களாம் கலந்துரையாடலாம்…..
இந்தக் கலந்துரையாடல்கள் மூலம் இனிவரும் காலங்களில் இலங்கை அரசியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாக சிந்திக்கலாம்…
ஆதை நோக்கமாகக் கொண்டு சில கேள்விகளும் கருத்துக்களும்…
மக்கள் புத்திசாலிகள் அல்லது முட்டாள்கள் அல்ல…
முதலில் மக்கள் கூட்டம் என்பது மந்தைக் கூட்டங்களா இல்லையா என்பதில் தெளிவான ஒரு நிலைப்பாடு இருக்கவேண்டும்.
மனிதர்களை மக்கள் கூட்டங்காளக பல்வேறு அடையாளங்களின் அடிப்படையில் ஒன்றினைத்து வைத்திருப்பது அவர்களை ஆதிக்கம் செய்வதற்கும் சுரண்டுவதற்குமான ஆதிக்க சக்திகளின் ஒருவிதமான சதிவலையே. குறிப்பாக மனிதர்களளை தனித்துவமானவர்களாக சுய பிரக்ஞையுள்ளவர்களாக சமூகம் மதிப்பிடுவதில்லை. அவ்வாறு உருவாகுவதற்கும் அனுமதிப்பதில்லை. இதற்குச் சாதகமாக இருப்பது மனிதர்களின் பிரக்ஞையில்லா தன்மை. அதாவது விழிப்புணர்வு அற்ற தன்மை. இதனால்தான் சமய மற்றும் அரசியல் நிறுவனங்களும் மனிதர்களை இலகுவாக தம்வசப்படுத்தி பயன்படுத்துகின்றனர் மற்றும் சுரண்டுகின்றனர்.
நான்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல்கள் வைப்பதும் அதில் இப்பொழுது இருக்கும் கட்சிக்கு மாற்றாக மற்ற கட்சியை மக்கள் தேர்ந்தெடுப்பது ஒரு முக்கியமான கனிக்கப்பட வேண்டிய விடயம். இந்த ;புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் புதிய கட்சி இப்பொழுது ஆட்சியிலிருப்பவர்களுக்கு முன்பு அதாவது ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் மட்டுமல்ல மனித விரோத ;செயற்பாடுகளில் ஈடுபட்டபவர்கள் என்பதை மனிதர்கள் தற்பொழுது மறந்துவிடுகின்றனர். இதற்கு காரணம் மனிதர்களின் பிரக்ஞையற்ற தன்மையே….இதுபோல் ;ஒரு சாமியார் பிழைவிட்டால் இன்னுமொரு சாமியாரிடம் எந்தக் கேள்வியும் இன்றி பின் செல்வதும் இந்த பிரக்ஞையின்மை;யால் தான் என்பதை நாம் என்றும் புரிந்துகொள்வதில்லை. ஆனால் எதானலோ மக்கள் புத்திசாலிகள் என ஏற்றுக்கொள்கின்றோம்.
இது ஒரு இரட்டை தன்மை நிலைப்பாடு என்றே கருதுகின்றேன்….
ஏனனில் ஒரு புறம் “முன்னேறிய பிரிவினர்” எனக் கூறுவதும்
மறு புறம் மக்கள் புத்திசாலிகள் எனக் கூறுவதும் இந்த நிலைப்பாட்டினாலையே….
மேலும் மக்கள் புத்திசாலிகள் எனக் கருதுவதாயின்…
அவர்களிடம் இருக்கும் பெண்களுக்கு சாதிகளுக்கு எதிராக கருத்துக்கள் செயற்பாடுகள் தொடர்பாக என்ன கூறுவது.
ஆல்லது மக்கள் மந்தைகள் இல்லை புறவயமான சமூக அடித்தளக் கட்டமைப்புதான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் எனின்
கடந்தகால ;புரட்சிகளின் தோலிவிகளுக்கு காரணம் என்ன?
புறவய சமூக மாற்றம் ஏற்பட்டபோதும் மனித வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவில்லையே ஏன்?
கட்சியும் தனிபரும் இந்தடிப்படையில் முக்கியத்துவம் பெறுகின்றது…
வீயூகம் சஞ்சிகையில் கடந்தகால அரசியல் வரலாறு தொடர்பான குறிப்பாக விடுதலைப்புலிகளினதும் அவர்களது தலைவர் பிரபாகரனினதும் மற்றும் பெண்களின் பங்களிப்பு அல்லது எவ்வாறு பயன்படுத்தப்பட்டனர் என்பது தொடர்பாகவும் ஒரு வரலாற்று சுருக்கத்தை விமர்சனத்துடன் முன்வைத்திருந்தீர்கள். இது முக்கியமானதே. அதேவேளை கோட்பாடு உருவாக்கபம் செய்தீர்களா என்பது கேள்விக்குறியதே?
ஆனால் தாங்கள் அதாவது வீயூகம் அல்லது மே 18 இயக்கத்தில் இருக்கும் மனிதர்கள் அவர்கள் சார்ந்த கடந்தகால இயக்கம் அல்லது கட்சி மற்றும் தனிநபர்கள் தொடர்பான விமர்சனங்களை முன்வைக்காமை நம்பிக்கையினத்தையே தருகின்றது.
தீப்பொறியாக இருந்து தமிழீழ கட்சியாக பரிணாமடைந்த போதும் தமீழீழ கட்சி கலைக்கப்பட்டதும் எதனால்? இதற்கான பதில் இல்லை. ஏன்?
இன்றுபோல் அன்றும் உயிர்ப்பு சஞ்சினை மூலம் “நாம் முன்னேறிய பிரிவினர்” எனக் கூறிக்கொண்டு செயற்பட்டீர்கள். ஆனால் அந்த செயற்பாடு வெற்றிபெறவில்லை. காரணம் என்ன?
முன்னேறிய கோட்பாட்டின் மீது தவறா?
ஆல்லது அக் கோட்பாட்டை முன்னெடுத்த தனிநபர்களின் தவறா?
ஆல்லது அக் கோட்பாட்டையே உள்வாங்காத தனிநபர் செயற்பாட்டாளர்களின் தவறா?
ஆல்லது எப்பொழுதும் குறிப்பிடுவது போன்று மனிதர்களின் பிரக்ஞையற்றதன்மையா காரணம்?
இதற்கு பதில் இல்லை.?
மேலும் புலிகள் தவிர்ந்து தமிழீழ மக்கள் கட்சி ஏன் கலைந்தது என்பது தொடர்பான விமர்சனமோ விளக்கமோ மட்டும் முன்வைக்கவில்லை…..
வீயூகத்துடன் இணைந்திருக்கும் நண்பர்களின் பிற இயக்கங்கள் தொடர்பானதும் அதில் அவர்களின் தனிநபர் பங்களிப்பு செயற்பாடுகள் தொடர்பான விமர்சனங்களும் முன்வைக்கப்படவில்லையே?
காரணம் என்ன?
தொடர்ச்சியான முன்னேறிய செயற்பாட்டிற்கு இந்த சுயஃவிமர்சனங்கள் முக்கியமானவை எனக் கருதுகின்றேன்.
ஏனனில் இப்பொழுதும் ஒருவிதமான குழுமனப்பான்மையே வீயூகம் நண்பர்களிடமும் தெரிகின்றது.
இது தொடர்பாக சில ;தனிப்பட்ட உதாரணங்களை முன்வைக்கலாம்….
குறிப்பாக இதுவரை (நான் ) முன்வைத்த எந்த விமர்சனங்களுக்கும் பதில் அளிக்காமை மட்டுமல்ல…..
ஆவை தமக்கு கிடைத்தன என்பதைக் கூட உறுதிசெய்யாமை இந் நண்பர்களின் பொறுப்புத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மேலும் தேர்ந்தெடுத்த நண்பர்களுக்கு கூட்டங்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுவிப்பதும் சிலருக்கு மின் அஞ்சல் மூலம் மட்டும் அழைப்பு விடுவிப்பதும் சிலருக்கு அழைப்பும் விடுக்ன்றார்களா என்பதை கேள்விக்குள்ளாக்கின்றது?
இது இவர்களது நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகின்றது.?
இங்கு தான் தனிநபர் செயற்பாடுகள் அவர்களது விழிப்புணர்வு அல்லது பிரக்ஞை தொடர்பான முக்கியத்துவம் பெறுகின்றது….
ஆனால் இது தொடர்பான அக்கறை இவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை.
மேலும் இதுவரை முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் வைக்காதது மட்டுமல்ல….
நடைபெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பாக….
எந்தவிதமான சாராம்ச குறிப்புகளைக் கூட ஆகக் குறைந்தது கலந்துரையாடல்களில் பங்குபற்றுபவர்களுக்கு கூட சுற்றுக்கு விடாமை இவர்களது செய்ற்பாட்டுத்தன்மையை கேள்விக்குள்காக்கின்றது…?
இவ்வாறு கேள்விக்குள்ளாக்குவது இழுத்துவிழுத்துவது நோக்கமல்ல….
மாறாக ஆராக்கியமான முன்நோக்கிய செயற்பாட்டிற்கான அக்கறையின் பாற்பட்டதே…
ஏனனில் பிரபாரகரனால் அல்லது புதிய விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட அவர்களது நான்கு அடிப்படை கொள்கைகளை அன்று கேள்வி கேட்காமல் விட்டமையே இன்றைய நிலைமை என்பதை கவனத்தில் கொள்வது மறக்காமல் இருப்பது நன்று.
மேலும் புலம் பெயர் நாடுகளில் செயற்படும் தமிழ் ;பேசும் மனிதர்கள் உதிரிகளாகவே அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இதற்குமாறகா இவர்களை ஒருங்கினைப்பதும் அதன் மூலம் இலங்கை அரசியிலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதுமான பெண்களை சம அளவிக் உள்ளடக்கிய சர்வதேச தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவது தொடர்பாக சிந்திப்பது எதிர்காலத்தில் நன்மையளிக்கும். ஏனனில் இனிவரும் காலங்களில் தேசிய மற்றும் சர்வதேசிய அளவிளான ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு செயற்பாடே ஆரோக்கியமானதாக இருக்கும்.
உரையாடல் தொடர்வோம்..
நன்றி
நட்புடன்
மீராபாரதி