Thursday, April 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தேசியப் போராட்டத்தின் அடிப்படையும் இன்றைய நிலையும் : சபா நாவலன்

இனியொரு... by இனியொரு...
10/14/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
22
Home பிரதான பதிவுகள் | Principle posts

மனிதர்கள் ஆதிகாலத்தில் உண்பதற்காக மட்டுமே உழைத்தார்கள். அவர்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக அவர்கள் கூட்டாக உழைத்தார்கள். மனித குலத்தின் இந்த உற்பத்தியானது அவர்களின் தேவைக்கும் அதிகமாக எஞ்சிய போது இந்த எஞ்சிய பகுதி யாருக்கு உரிமையானது என்ற போட்டி உருவாகிறது. இந்தப் போட்டியின் விளைவாக மனித குலம் வர்க்கங்களாகப் பிளவுறுகிறது. காடுகளில் சுய நலமற்றவர்களாக அலைந்து திரிந்த மனிதக் கூட்டம் இறுதியில் ஒரு குறித்த இடத்தில் நிரந்தரமாகக் குடியேறுகின்ற நிலை உருவாகிறது. எஞ்சிய சொத்துக்களைப் பாதுகாக்க வாரிசு ஒன்று தேவைப்படுகின்ற போது குடும்பத்தின் தேவை உருவாகிறது. மனித குலம் குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டு அவற்றிற்கான சொத்துரிமை நிரந்தரமானதாக்கப்படுகின்றது.

மனித குலத்தின் சிறு பான்மை சொத்துக்களை உரிமையாக வைத்துக்கொள்ள அதன் பெரும்பான்மை சிறுபான்மைக்காக உழைக்கின்ற நிலை உருவாகிறது. மனித குல வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் பெரும்பான்மை சிறுபான்மைக்கு எதிராகப் போராடி வெற்று பெற்றிருக்கின்றது. இவ்வாறு வெற்றி பெறுகின்ற ஒவ்வொடு கட்டத்திலும் புதிய சமூக அமைப்புக்கள் உருவாகின்றது. இவ்வாறான போராட்டங்களின் விளைவாக நில உடமையாளர்கள் அதிகாரம் செலுத்திய சமூக அமைப்பிற்கு எதிராக உருவானதே நாம் வாழுகின்ற முதலாளித்துவ சமூகத்தின் ஆரம்பம்.

ஒவ்வோர் தடவையும் முதலாளித்துவ சமூகங்கள் நிலைகொள்ள முடியாமல் போகின்ற போது அது மறு சீரமைக்கப்படுகின்றது. மறு ஒழுங்கமைக்கப்படுகின்றது. இவ்வாறு ஒவ்வோர் தடைவையும் ஒழுங்கமைக்கப்பட்ட முதலாளித்துவ உற்பத்தி முறையானது இன்று மீள முடியாத நெருக்கடிக்குள் வந்து சேர்ந்திருக்கின்றது.இனிமேல் புதிய உலக ஒழுங்கு ஒன்றை ஏற்படுத்த முடியாத அளவிற்கு அது அழிவுகளையும் அவ நம்பிக்கைகளையும் மனித குலத்தின் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது.

முதலாளித்துவம் முதலில் முளைவிட்ட நாடுகளில் பல ஏக போக அரசுகளாக மாற்றமடைந்தன. வளர்ச்சியடைந்து கொண்டிருந்த நாடுகளை ஆக்கிரமித்து அவற்றின் மூலவளங்களைச் சுரண்டி அவற்றில் வளர்ச்சியையும் சமூக மாற்றங்களையும் அழித்துச் சிதைத்தன.

நாடுகளைத் தொடர்ச்சியாகச் சுரண்டுவதற்காகவும் அவற்றைத் தமது தேவைக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்வதற்காகவும் மக்கள் மத்தியில் திட்டமிட்டுப் பிளவுகளை உருவக்கின.

இவ்வாறு தம்மிடையே மோதிக்கொண்ட சுரண்டப்பட்ட வறிய நாடுகளின் மக்கள் தமது முதன்மையான எதிரியான ஏகாதிபத்தியங்கள்ளை மறந்து விட்டு தம்மைத் தாமே அழித்துக் கொண்டனர்.

உதாரணமாக இலங்கையைச் சுரண்டும் நோக்கோடு அங்கிருந்த மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தியது பிரித்தானிய ஏகாதிபத்தியம்.
பாளி மொழியில் ஆங்காங்கே காணப்பட்ட மகாவம்சம் என்ற கற்பனைக் கதைகளை பிரித்தானி அரசாங்கம் சிங்களத்தில் மொழிபெயர்த்தது. அவ்வாறு மொழிபெயர்ப்பதற்காக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்த இரண்டு பௌத்த மதகுருக்களை நியமித்தது. மகாவம்சம் என்ற கற்பனைக் கதைகள் சிங்களப் பகுதியிலிருந்த விகாரைகளுக்கு விநியோகம் செய்யபட்டது.

இதே வேளை ஹெலேனா பிளவாற்ஸ்கி போன்ற மனித விரோத நிறவாதச் சிந்தனை கொண்டவர்களூடாக சிங்கள பௌத்த சிந்தனை வளர்க்கப்பட்டது. சிங்கள பௌத்ததின் தேசியத் தந்தை என அழைக்கப்படும் அனகாரிக தர்மபால என்பவர் பிளவாற்ஸ்சி உருவாக்கிய தியோசோபிகல் அமைப்பில் பயிற்றுவிக்கப்பட்டார். தமிழ் நாட்டில் அடையாறில் தங்கியிருந்து பயிற்சி பெற்ற பின்னர் இலங்கை சென்ற அனகாரிக அங்கே முதலில் தமிழர்களுக்கு எதிராகவும் குறிப்பாகத் தமிழ்ப் பேசும் முஸ்லீம்களுக்கு எதிராகவும் தனது இனவாத நஞ்சைப் பரப்ப ஆரம்பித்தார். பௌத்தம், ஆரியத் தூய்மைவாதம், சிங்களம் என்ற சுலோகங்களின் அடிப்படையில் சிங்கள -பௌத்த பெருந்தேசிய வாதத்தை கட்டியெழுப்ப ஆரம்பித்தார்.

தாம் ஒன்று சேராவிட்டால் சிறுபான்மைத் தமிழ்ப் பேசும் மக்களால் அழிக்கப்பட்டுவிடுவோம் என்ற பய உணர்வைச் சிங்கள மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. இன்று வரைக்கும் இதுவே இலங்கை அரசியலில் சிங்கள மக்களின் அரசிற்கு எதிரான போராட்டங்களை சிதைக்கும் ஆயுதமாகவும் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கான கருவியாகவும் பயன்படுகின்றது.

மறுபுறத்தில் ஆறுமுக நாவலர் போன்ற சாதி வெறிகொண்டவர்களின் ஊடாக தமிழ் இனவாதம் உருவாக்கப்பட்டது. இனவாதம் ஒரு புறத்திலும் பெருந்தேசியவாதம் மறுபுறத்திலுமாக ஒன்றை மற்றொன்று வளர்க்க அதன் அழிவில் உலகின் அதிகார மையங்கள் அனைத்தும் இலங்கையைச் சிதைத்துச் சீரழித்துக்கொண்டிருகின்றன.

இவ்வாறு ஏகாதிபத்தியங்கள் திட்டமிட்டுக் கூர்மைப்படுத்திய முரண்பாடுகள் இன்று வரை அவர்களது நலன்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய நலன்களுக்காக குறித்த நாடு ஒன்று திட்டமிட்டுச் சுரண்டலுக்கு உட்படுத்தப்படும் போது, அந்த நாட்டில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான தேசிய உணர்வு உருவாகிறது. இவ்வாறான உணர்வைச் சிதைப்பதற்காக ஏகாதிபத்தியங்கள் பெருந்தேசிய இனத்தைச் சிறுபான்மை இனங்களுக்கு எதிராகத் திசை திருப்பி மோதலை உருவாக்குகின்ற போக்கு காலனி ஆதிக்கத்தின் பின்னான காலப்பகுதி முழுவதும் ஏகாதிபத்தியங்களின் தந்திரோபாயமாக அமைந்திருக்கின்றது.

அன்னியத் தலையீடற்ற நாடுகளில் தேசிய இனங்களிடையே மோதல் என்பது இருக்காது என்பது மட்டுமல்ல தேசிய இனங்கள் காலப்போக்கில் ஒருங்கிணைந்து ஒரே தேசிய இனமாக உருவாகிவிடுகின்றது. பிரான்சில் 50 வீதமானவர்கள் மட்டுமே உபயோகப்படுத்திய கோலுவா என்ற மொழியும் பிரஞ்சு மொழியாக மாற்றமடைந்து பிரான்ச் ஒரு தேசிய இனத்தைக் கொண்ட நாடாக மாற்றமடைந்ததும் இவ்வாறே. பொதுவாக அனைத்து ஐரோப்பிய நாடுகளும் இவ்வாறே ஒரு தேசிய இனத்தைக் கொண்ட நாடுகளாக மாற்றமடைந்தன. இவ்வாறான நாடுகளில் சுரண்டும் சிறுபான்மையினருக்கும் சுரண்டப்படும் பெரும்பான்மையினருக்கும் இடையேயான முரண்பாடே பிரதான முரண்பாடாக இருந்து வந்திருக்கின்றது.

வறிய நாடுகளான மூன்றாம் உலக நாடுகளில் வர்க்கங்களிடையேயான முரண்பாடு உருவாகிப் உள்னாட்டு ஆதிக்க அரசுகளுக்கு எதிராகவும் ஏகாதிபத்தியங்களுகு எதிராகவும் மாற்றமடைந்த வேளையில் தான் தேசிய இனங்களிடையேயான முரண்பாடு திட்டமிட்டு உருவாக்கபட்டது. வர்க்க முரண்பாடு மழுங்கடிக்கப்பட்டது. அனைத்துத் தேசிய இனங்களிடையேயும் தேசிய உணர்வு உருவானது. தேசிய உணர்வானது அடிப்படையில் வர்க்க உணர்வை மழுங்கச் செய்ய்யும். தேசிய முரண்பாட்டையும் அதனூடாகத் தேசிய உணர்வையும் உருவாக்கிய அதிகார வர்க்கம் அதனூடாக வர்க்கப் போராட்டத்தைச் சிதைத்தது. அதிகார வர்க்கம் அடிப்படையில் தனது வெற்றியை உறுதி செய்துகொண்டது.

ஒரு குறித்த பிரதேசத்தைச் சார்ந்த மக்கள் தமக்குக் குறிப்பான அடையாளத்தைத் திட்டமிட்டு அழிக்க முற்படுகின்ற அதிகாரத்திற்கு எதிராக ஒன்றிணைகின்ற போதே தேசியம் என்ற கருத்து மூன்றாம் உலக நாடுகளில் வலுப்பெறுகிறது.

அதே வேளை பெருந்தேசிய ஒடுக்கு முறையையும் தேசிய உனர்வையும் வர்க்க உணர்வை மழுங்கடித்துத் தமக்கு ஏற்ற ஆட்சியை உருவாக்குவதற்கு உரிய கருவியாக ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன என்ற அடிப்படை உண்மையை ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் உணரும் போது மட்டுமே ஒடுக்கு முறைக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சரியான பாதையில் திட்டமிட முடியும். தவறின் தேசிய விடுதலைப் போராட்டங்கள் ஏகாதிபத்தியங்கள் சுரண்டலுக்கான கருவியாகப் பயன்பட்டு இறுதியில் அழிந்துவிடும்.
ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை ஏகாதிபத்தியங்களின் கபட நாடகங்களைப் புரிந்துகொள்ளாத ஒரு பிரிவும் அதனைப் புரிந்தே கொண்டே சமூக விரோதக் கருத்துக்கள் ஊடாக மக்களை நச்சூட்டுகின்ற இன்னொரு பிரிவும் தமது எதிரிகளிடமே தமது தலைவிதியை ஒப்படைக்கின்ற துயரம் சூழந்த சூழலைக் காண்கின்றோம்.

இந்தியா,சீனா,ஐரோப்பா, அமரிகா என்ற இனவழிப்பின் பின்னணியில் செயற்படுகின்ற ஒவ்வோர் அரசுகளதும் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்வது போராட்டத்தை வெற்றிகொள்வதற்கான முதல் அடிப்படையாகும்.

சுவீடன் தொழிலாளர்களின் அரசிற்கு எதிரான போராட்டமே நோர்வே சுவீடனிலிருந்து பிரிந்து செல்வதை விரைபடுத்தியது.
அறுபது வருடங்களுக்கு மேலாக ஏகாதிபத்தியங்களாலும் அதன் உள்ளூர்

அடிவருடிகளாலும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவரும் இலங்கையின் சிங்கள மக்களின் பெரும்பகுதி, தமிழ் மக்களைப் போன்றே தம்மீதான ஒடுக்கு முறையின் அடிப்படைக் காரணங்களைப் புரிந்துகொண்டதில்லை. ஏகாதிபத்தியங்களே அவர்களின் பிரதான எதிரி என்பதை உணர்த்துவதற்கு முப்பது வருடப் போராட்ட அனுபவத்தை உள்வாங்கிக் கொண்ட தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருக்கும் முன்னணி சக்திகளுக்கு மலையை கிளப்பும் வேலையல்ல.

வன்னிப் படுகொலைகளைத் தொடர்ந்து இலங்கையில் திட்டமிட்டு நடைபெற்றுவரும் இன சுத்திகரிப்பு நடவடிக்கை போன்றன சிங்கள மக்களையும் ஒடுக்குவதற்கான ஆயுதமாகப் பயன்படுகிறது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளும் நிலையை உருவாக்குவது மக்கள் பற்றுள்ளவர்கள் உடனடி வேலைத் திட்டமாக முன்னெடுக்க வேண்டும்.
பெருந்தேசிய வாதத்திற்கு எதிராக இனவாதத்தை விதைக்கும் செயற்பாடானது ஏகாதிபத்தியங்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் எம்மை உள்நுளைத்துக் கொள்வது போன்றதாகும். அவர்களைத் திருப்திப்படுத்துவதாகும். அவர்களின் சுரண்டலுக்கான வெளியை மேலும் விரிவடையச் செய்வதாகும். இவை அனைத்திற்கு அப்பால் ராஜபக்ச அரசைப் பலவீனப்படுத்க்தும் திறன்கொண்ட அனைத்து இலங்கை மக்களையும் இணைத்து தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலையைப் போரை புதிய வழிகளில் முன்னெடுப்பது இன்றைய எமது அவசரத் தேவையாகும். இதன் மறுபக்கம் உலகம் முழுவதுமுள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் இணைவிலிருந்து ஆரம்பமாகும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டுமாயின் அனைத்து நாடுகளும் ஒரே விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்மோகன் சிங் ..

Comments 22

  1. நிர்மலன் says:
    15 years ago

    //தாம் ஒன்று சேராவிட்டால் சிறுபான்மைத் தமிழ்ப் பேசும் மக்களால் அழிக்கப்பட்டுவிடுவோம் என்ற பய உணர்வைச் சிங்கள மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. இன்று வரைக்கும் இதுவே இலங்கை அரசியலில் சிங்கள மக்களின் அரசிற்கு எதிரான போராட்டங்களை சிதைக்கும் ஆயுதமாகவும் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கான கருவியாகவும் பயன்படுகின்றது.

    மறுபுறத்தில் ஆறுமுக நாவலர் போன்ற சாதி வெறிகொண்டவர்களின் ஊடாக தமிழ் இனவாதம் உருவாக்கப்பட்டது. இனவாதம் ஒரு புறத்திலும் பெருந்தேசியவாதம் மறுபுறத்திலுமாக ஒன்றை மற்றொன்று வளர்க்க அதன் அழிவில் உலகின் அதிகார மையங்கள் அனைத்தும் இலங்கையைச் சிதைத்துச் சீரழித்துக்கொண்டிருகின்றன.//

    தமிழ் போலிக் கொம்னியூஸ்ட்டுக்களால் மூளைச்சலவைக்குள்ளான கட்டுரையாளர் அதிலிருந்து மீளமுடியாது இருப்பதையே/தமிழ் போலிக் கொம்னியூஸ்ட்டுக்கள் வழியிலேயே தொடர்ந்தும் தமிழரை மூளைச்சலவை செய்யும் கட்டுரையாளரிடம் எத்தனமென நிரூபித்துக்கொள்கிறார்.
    காரணங்கள்.

    1)சிறிலங்கா ஆட்சி பீடமேறும் எவரும் சிங்கள பெளத்தர்களாக இருக்க வேண்டும் என எழுதாத நியதி ஒன்று சிங்களவர் மத்தியில் இன்றுவரை உள்ளது. அதனாலேயே கிறிஸ்தவ பண்டாநாயக்கா ஜேஆர் மகிந்தாவின் மனைவி என்பவர்கள் அரசியலுக்காக தமது மதத்தை பெளத்தமாக மாற்றிக்கொன்டவர்கள். இது ஒரு அப்பட்டமான பெளத்த சிங்களப் பேரிவாத நிலைப்பாடே.இது அநாகரீக தர்மபாலவினால் மிகப்பெரும்பாலான சிங்களவர் மூளைச்சலவைக்குள்ளான நிலையையே காட்டுகிறது.

    2)ஈழத்தமிழர் தமது அரசியல் தலைமையிடம் அரசியல் நேர்மையையும் தமிழ்தேசீயத்தை விட்டுக்கொடுக்காத தியாகத்தையும் மட்டுமே எதிர்பார்த்தனர். அதனாலேயே “யாழ்வெள்ளாள இந்து” எனகுறுகிய வட்டத்திற்குள் சிக்காது அரசியல் நேர்மையுடன் ஈழத்தமிழரால் அரசியல் தளத்தில் இயங்க முடிகிறது.
    அரசியல் நேர்மையற்ற ஜீஜீபொன்னம்பலம் “யாழ்வெள்ளாள இந்து” எனும் அரசியல் அடையாளத்தை வைத்து ஈழத்தமிழரின் அரசியல் தலைமையாக வர மக்கள் அனுமதிக்கவில்லை. மாறாக அரசியல் நேர்மையுடைய கிறிஸ்தவ செல்வாதான் ஈழத்தமிழரின் அரசியல் தலைமையாக இருக்க முடிந்தது. இதிலெங்கே போனது ஆறுமுகநாவலரின் இந்துமத இனத்தாக்கம்???
    செல்வா-பண்டா ஒப்பந்தம் மாகட்டும் தவிகூட்டணியின் நிலைப்பாடு ததேகூட்டமைப்பின் நிலைப்பாடு ஆகட்டும் தமிழர்தாயகத்திலுள்ள சிறிலங்கா முஸ்லீம்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தே உள்ளனர். என்றும் ஈழத்தமிழரின் அரசியல் என்பது நவீன நாகரீக ஐனநாயகமாகவே இருக்கிறது.

    3)சிறிலங்கா முஸ்லீம்களின் சிங்களப்பேரினவாதத்திற்கு முண்டுகொடுத்து உரிமையை இழந்து சலுகையை பெறும் சோர அரசியலையும். ஒரு மதத்தை இனமாக்கி அந்த மதஅடிப்படை வாத அரசியலை மேற்கொள்வது பற்றி ஏன் கட்டுரையாளர் கள்ள மெளனம் சாதிக்கிறார்!

    4)பேரினவாதிகளின் இனவெறியையும் மதவெறியையும் அதிகாரவெறிக்கும் ஏகாதிபத்தியமென வெள்ளையடிக்கப்படுகிறது. சிங்கப்பூரும் பிரித்தானியா பிடிக்குள்ளிருந்த சீனர்களை பெரும்பான்மையாக கொண்ட பல்லின நாடுதானே? அங்கு மாத்திரம் எப்படி அமைதியும் துரித அபிவிருத்தியும் அடைய முடிந்தது! பெளத்தசிங்களப்பேரினவாத+சிறிலங்கா முஸ்லீம் கூட்டினால் திட்டமிட்டு இலங்கையின் அமைதியும் அபிவிருத்தியும் சீரழிக்கப்பட்டது என்ற உண்மையும் மறைக்கமுடியாது.

    5)சுவிசிலும் 4 இனங்கள் கூடி வாழ்கிறார்கள். கனடாவில் ஆங்கில மாநிலங்களும் பிரெஞ்ச் மாநிலமும் கூடித்தானே கனடாவாக இருக்கிறது. பிரெஞ்ச் மாநிலமும் பிரிந்து போக தனது சுயநிர்ணய உரிமையை பாவித்த போது ஏற்கப்பட்டது. அமெரிக்கா பிரெஞ்ச் மாநில சுயநிர்ணய உரிமையை மறுக்கும் படி கனடாவிற்கு அழுத்தம் கொடுத்தபோது கனடா எனது அலுவல் எனக்கு தெரியும் உனது உபதேசம் தேவையில்லை என்றுதானே சொன்னது. ஆக நாகரீகமான நவீன ஐனநாயக போக்குடைய பல்தேசீயயினங்கள் வாழும் நாடுகள் வெற்றிகரமாக இயங்க முடியும் என்பதே உண்மை. எங்களின் தவறுகளை ஏற்காது பழியை ஏகாதிபத்தியங்கள் மீது சுமத்துவது கையளாகத்தனமே.

    பெளத்தசிங்களப்பேரினவாத+சிறிலங்கா முஸ்லீம் கூட்டு என்று அடுத்தவர்களின் உரிமையை ஐனநாயகத்தை மதிக்கிறதோ அன்று உலகின் அதிகார மையங்கள் இலங்கையைச் சிதைத்துச் சீரழிப்பதை சுலபமாக தவிர்க்கலாம்.

    இல்லையேல் நவீன நாகரீக ஐனநாயகத்தன்மையுடைய இலங்கைத்தமிழர்களின் ஆரோக்கிய அரசியலும் பெளத்தசிங்களப்பேரினவாத+சிறிலங்கா முஸ்லீம் கூட்டின் இனமத அடிப்படைவாத அநாகரீக அரசியலும் என்றுமே எதிர்திசைகளிலேயே பயணிக்கும். எனவே சிறிலங்கா உன்ற கட்டமைப்பிற்குள் கூடி வாழ்தல் என்பது கானல் நீரே.

    • chandran.raja says:
      15 years ago

      நிர்மலன் கைகால் மூக்கில்லாமல் கருத்துகளை கடகம்கடகமாக அள்ளிக் கொட்டுவதில் சலிப்பில்லாதவர்.
      மற்றவையெல்லாவற்றையும் விட தாங்கள் அடிக்கடி உதிர்க்கும் போலிக்கம்யூனீஸ்டுகள் என்கிற வார்த்தை பிரயோகங்களே எம்மை நிலை குலைச்செய்கின்றன.

      அதாவது போலிக்கும் நிஜத்திற்கும் இருக்கும் வேறுபாடுகள் தான் என்னா? மகிந்தாராஜயபக்சாவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி வைத்தால் மட்டும் நிஜகொம்யூனீஸ்ட் ஆகிவிட முடியுமா? உங்கள் பதில் எதுவாக இருக்கும்?.

      • நிர்மலன் says:
        15 years ago

        சந்திரன்ராசா! உங்களிடம் பல தடவை கேட்டுவிட்டேன் கிரிமினல் ஈபிடிபி (உங்களிற்கும்) கும்பலுக்கும் கொம்னிஸ்த்திற்கும் என்ன தொடர்பு? உங்களை போன்றவர்கள்கொம்முனிசம் கதைப்பது போலித்தனமானது ஏமாற்றுதனமானது.
        நிஜமான கொம்னிஸ்ட் சிறிலங்கா அரசபயங்கரவாதத்தை கிரிமினல் கும்பல்களை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார் .
        போலிக்கொம்னிஸ்ட்க்கள் அமெரிக்காவை எதிர்ப்பதற்காக எந்தக்கூச்சமுமின்றி இனவழிப்பு மனிதவுரிமைமீறல்கள் ஐனநாயகமறுப்பு போன்றவற்றை செய்பவர்களை ஆதரிக்கிறார்கள். கியூபா வெனிசுலா …. போன்றவை இதற்கு நல்ல உதாரணங்கள்.
        இன்றைக்கு வேண்டுமானால் தமிழின அழிப்பின் தலைமை மகிந்தாவாக இருக்கலாம். 1948லிருந்து தமிழின அழிப்பை தலைமையேற்று செய்தவர்களும் அதில் பங்கெடுத்தவர்களும் தமிழின அழிப்பு குற்றவாளிகள்தான். சந்திரிக்கா ரணில் வாசுதேவநாணயக்கார டியு குணசேகரா திசவிதாரண சிறிலங்கா முஸ்லீம்களின் அனைத்து மதத்தலைவர்களும் அரசியல்வாதிகளும் டக்ளஸ் கருணா சித்தார்த்தன் வரதராசாபெருமாள் கும்பல்கள் இந்திய காங்கிரஸ்கட்சி …… என பட்டியல் மிக நீளமானது.
        பரந்துபட்ட மக்கள் நலனை எந்நேரம் எவருக்கும் எந்த விட்டுக்கொடுப்பும் இல்லாது முன்னிறுத்தி இயங்குபவன் நிஜகொம்யூனீஸ்ட் ஆக இருப்பதற்கு தகமையுள்ளவன்.

        • chandran.raja says:
          15 years ago

          திரும்பவும் கடகம் நிறைய சூத்தைபழத்தைதேயோ கொட்டிருக்கிறீர்கள் நிர்மலன். உங்களது வரலாற்று அறிவியலில் இப்படியோ இப்படிபட்ட கட்சிகளோ இருந்ததில்லை என எடுத்துக் கொள்ளலாமா?
          உங்களின் கருத்துக்கள் உலகின் பரந்துபட்டமக்களின் நலன்களின் பெயரில் தான் வெளிவருகின்றனவா? ஆகக் குறைந்தது இலங்கைவாழ் பரந்துபட்ட மனிதர்களின் நலன்களிலாவது தங்கியிருக்கிறதா? இத்தளத்தில் சிங்கள முஸ்லீம் விரோதித்து கருத்து சொன்னவர் நீங்களே முதல் மனிதராக கருதப் படுகிறீர்கள். திரும்பவும் அழுக்குநிறைந்த கூடைகளுடன் திரும்பவும் வாருங்கள் திருவாளர் நிர்மலன் அவர்களே!.
          உங்கள் பலவீனமே! பெரும்தொகை மக்களை முட்டாளாக கருதுவதுதான்.

  2. Kumar says:
    15 years ago

    இரு நண்பா்கள், அவா்களில் ஒருவன் பற்றற்று வாழ்வதே சிறந்தது ஏனெனில் யாருக்கும் கீழ்பட்டு வாழவோ சுரண்டலுக்கு உட்படவோ வேண்டியதில்லை என்று கூறி கோவணத்துடன் இமயத்திற்கு சென்றுவிட்டான்,அடுத்தவன் எதிரான திசையில் பயணித்து நான் ஏன் பிறந்தேன் என்று எனக்கு தெரியவில்லை இருந்தாலும் என் முன்னே இந்தப்பூமியில் கிடக்கும் செல்வங்களை நான் அனுபவித்துவிட்டே இறக்கவேண்டும் என்று முடிவெடுத்து சுரண்டலுக்கும் ஏமாற்றுப்போ்வளிகளிற்கும் முகம் கொடுத்து உலகைப்படித்து படிப்படியாக முன்னேறி இறுதியில் தன் நண்பனிடம் வருகிறான் நண்பனோ இவனைப்பார்த்து ஏழனமாக பாவம் நீ என்கின்றான் ஆனால் இவனோ கோவணத்துடன் இருக்கும் நண்பனைப்பார்த்து பாவம் நீ என்கின்றான். இதில் யார் பரிதாபத்திற்குரியவா்?? நம்மால் கூற முடியாது. 
    கியூபாவில் மக்கள் ஏகாதிபத்தியங்களை சுரண்டவிடாமல் பார்த்துக்கொள்கின்றார்கள் ஆதலால் பள்ளிப்பிள்ளைகளை ஏற்றிச்செல்லும் வாகனம் இத்துப்போய் இயங்க மறுத்தாலும் அதை ஒரு ரக்ரரின் மூலம் இழுத்து சென்று பிள்ளைகளை பாடசாலையில் இறக்கியம் ஏற்றியும் வருகின்ற பரிதாப நிலை.
    ஏகாதிபத்தியங்களை சுரண்டவிட்ட நாடுகளான தென்கொரியா,சிங்கப்பூா்,கொங்காங்.மலேசியா போன்ற நாடுகளில் நிலை எப்படி உள்ளது என்பது நாம் அறிந்ததே.

    வெறுப்பு,பயம்,என்பது இலங்கையிலுள்ள இனங்களிற்கிடையே எப்படியோ உருவாகிவிட்டது இவை இரண்டையும் வெற்றி கொள்ளும் நிலையில் மக்கள் வழா்ச்சி அடையவில்லை வழா்ச்சிகாண யாரும் விடப்போவதும் இல்லை.  
     ஆதலால் பிரிவு என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக முன்பைவிட இன்றுள்ளது.

    ராயபக்ஸ அரசை பலவீனப்படுத்தினால் பிரச்சனைகள் தீா்ந்துவிடுமா??இன்னுமொரு வீரபக்ஸ வந்து அவரையே பின்பற்றமாட்டாரா??சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுதானே நடக்கின்றது. யே.வி.பி யின் உடைவை வைத்து சிலா் கனவு காணத்தொடங்குவது மிகவும் ஆச்சரியமான விடயம்.

  3. யோகன் says:
    15 years ago

    அறுபது வருடமாக தமிழ் சிங்கள அப்பகாத்துமார் இந்த நாட்டை சீரழித்ததை தவிர சாதித்தது என்ன ?இடது சாரிகள் மீது வெறுப்பு அவநம்பிக்கை ,இனவாத கருத்துக்களில் மோகம் ,இனவாதிகளை வளர்க்கும் அமைப்புக்களை பலமாக்குவது,ஏகாதிப த்தியங்களுக்கு வால் பிடிப்பது.திரும்ப திரும்ப தோற்றுப்போன கொளகைகளை காவித்திரிவது என்று பாவ மூட்டைகளை சுமக்கும் தமிழ் அன்பர்கள் தமிழ் சினிமாக்காரர்கள் சொல்வது போல ” மிகவும் வித்தியாசமாக ” சிந்தித்தால் “நலம்”.
    இல்லை என்றால் நீங்கள் வணங்கும் ஏகாதிபத்தியங்களால் உங்கள்” நலம்” எடுக்கப்படும்.நீங்கள் குழறக் குழற தான் வன்னியில் வன்னியில்தமிழ் தேசியத்தின் “நலம் ” எடுக்கப்பட்டது.இன்னுமொருக்காவா ……..!!!???
    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
    வருந்தாத உருவங்கள் வாழ்ந்தென்ன லாபம்

    • நிர்மலன் says:
      15 years ago

      கலாநிதிகள்(?) பேராசிரியர்கள்(?) என்ற பட்டத்துடன் ஆளும் சிங்கள இனவாதத்திற்கு ஆலவட்டம் பிடிப்பதோ இடதுசாரியம்! இல்லை இனவாத சிறிலங்கா குடியரசுயாப்பு வரைவதோ இடதுசாரியம்! அல்லது துணைஇராணுவகுழுவாக இருந்து இந்திய சிங்களபேரினவாத சேவகராய் இருந்து தமிழரை அழித்ததுதான் இடதுசாரியமோ!
      கியூபா வெனிசுலா வியட்நாம் ரசியா சீனா இஸ்லாமியநாடுகள்தான் தமிழின அழிப்பு குற்றச்சாட்டிலிருந்து சிறிலங்காவை பாதுகாக்க முனைப்புக்காட்டும் நாடுகள்.

  4. manithan says:
    15 years ago

    சந்திரன் ராசா,
    நிர்மலன் ஒன்றில் உலகம் அறியாத அப்பாவியாக இருக்க வேண்டும் இல்லையேல் கை தேர்ந்த வியாபாரியாக இருக்க வேண்டும். ஆனால் நீங்களோ கொலைகாரன் ராஜபக்சவிற்கு அவனின் அடிவருடிகளுக்கும் தாளம் போட்டுக்கொண்டு இதுதான் இடதுசாரி தனம் என்று சொல்கிறீர்களே .. நீங்கள் தான் உண்மையான இடது சாரிகளின் விரோதி. பலர் கூறுவது போல நீங்கள் ஒன்றில் பணம் பெற்றுக்கொள்ளும் ஏஜண்டாக இருக்க வேண்டும் இல்லையேல் மனநோயாளியாக இருக்க வேண்டும். ஒன்று மட்டும் உண்மை! நீங்கள் அப்பாவி அல்ல. இலங்கையை சின்னாபின்னமாக்கும் ரவுடிக் கும்பல் மூச்சுக் கூட விடாத நீங்கள் கம்யூனசம் பேசினால் அது கம்யூனிசத்துக்கு அவமானம். அழிவு.

    • chandran.raja says:
      15 years ago

      நோயை குணப்படுத்துகிற மருந்துகள் எப்பவும் கசக்கத்தான் செய்யும் மனிதன் அவர்களே! நீங்கள் மட்டுமல்ல எத்தனையோ பெயர் குறைகூறிவிட்டார்கள். நாங்கள் சளைத்தா? போய்விட்டோம். நீங்கள் கூறும் கம்யூனீசம் தான் என்னவோ? மனிதா? மனிதமுகத்துடன் முகம் கொடுங்கள்.

      எனது கருத்து தமிழ்மேட்டுக்குடியின் ரோமங்கள் இலங்கை முழுவதிற்கும் ஒரு பயங்கரதோற்றத்தை உருவாக்கியிருந்தது. அந்த ரோமத்தை துணிகரமாக சவரம் செய்து சீர்படுத்தியவன் மகிந்தாராஜபச்சா அவர்களே! மொத்தமாக சொன்னால் இலங்கை பாட்டாளிவர்கத்திற்கு ஈடையூறுவிளைவித்த சகலத்தையும் தனது நீதியில் துடைத்தெறிந்து விட்டார். இனி எமது நீதிக்கான போராட்டமே! இதற்கும் தாங்கள் மனவலிமையுடன் தமிழ்பிற்போக்குவாத கருத்துக்களுக்கு உட்படாமல் பொதுநலநோக்கில் கம்யூனீஸ்ச பாஷையில் உங்கள் பதிலை எதிர்பார்கிறேன்.

    • நிர்மலன் says:
      15 years ago

      மனிதன் அவர்களே!என்னைப்பற்றிய தங்கள் முத்திரை குத்தல் ஒரு புறமிருக்கட்டும். எனது கருத்துடன் உடன்பாட முடியாத விடயங்களை முடிந்தால் சுட்டிக்காட்டுங்கள் விவாதியுங்கள்.

  5. நிர்மலன் says:
    15 years ago

    //உங்களது வரலாற்று அறிவியலில் இப்படியோ இப்படிபட்ட கட்சிகளோ இருந்ததில்லை என எடுத்துக் கொள்ளலாமா?//
    எனக்கு “வரலாற்று அறிவியல்” படிபிக்கிறதை விட்டிட்டு ஈபிடிபி கிரிமினல் கும்பலை சேர்ந்த தங்களிற்கும் மார்க்சிசத்திற்கும் எந்தவகையில் தொடர்பிருக்க முடியும் என்பதை முதலில் சொல்லுங்கள்!

    //உங்களின் கருத்துக்கள் உலகின் பரந்துபட்டமக்களின் நலன்களின் பெயரில் தான் வெளிவருகின்றனவா? ஆகக் குறைந்தது இலங்கைவாழ் பரந்துபட்ட மனிதர்களின் நலன்களிலாவது தங்கியிருக்கிறதா?//
    நானெங்காவது என்னை கொம்னிஸ்ட் ஆக சொல்லிக்கொண்டேனா? இல்லையே அத்துடன் நானெங்காவது சிறிலங்கா எனும் இனவாத கட்டமைப்பை வரவேற்பதாக காட்டிக் கொண்டேனா? இல்லையே. இந்நிலையில் என்னிடமிருந்து உலகின் பரந்துபட்டமக்களின் நலன்களில் சிறிலங்காவாழ் பரந்துபட்ட மனிதர்களின் நலன்களில் பிரத்தியேக அக்கறையை எப்படி எதிர்பார்க்க முடியும்?
    எனது முதல் அக்கறை என்னினம் சார்ந்தது. அது எந்தவகையிலும் உலகமக்களின் நலனை சிறிலங்கா மக்களின் நலனை பாதிக்காது.உதவி செய்யாது விட்டாலும் அடுத்தவருக்கு உபத்திரவம் செய்யாத கோரிக்கையே என்னுடையது. அந்த மட்டிலாவது எனக்கு திருப்தி.
    மறுபுறத்தில் தாங்கள் ஈபிடிபி கிரிமினல் கும்பலிருந்து கொண்டு தமிழின அழிப்பாளர்களை ஆதரிக்கிறீர்கள். உங்கள் சுயநலத்தால் தமிழினம் மட்டுமல்ல சிறிலங்கா உட்பட மொத்த உலகமே பாதிக்கப்படுகிறது. இந்த கேவலத்தை செய்து கொண்டு உங்களிற்கு போலி மார்க்சிச வெட்டிப்பேச்சு ஒரு கேடா!
    சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தமிருத்தல் வேண்டும். அது சாதாரண மனிதநேர்மை. ஆனால் தாங்கள் பேசுவது பெரும் பேச்சு செய்வது அதற்கெதிர்மறையான இழிவான செயல்.

    //இத்தளத்தில் சிங்கள முஸ்லீம் விரோதித்து கருத்து சொன்னவர் நீங்களே முதல் மனிதராக கருதப் படுகிறீர்கள்//
    எனது ஆதாரமிக்க உண்மையான கருத்துக்கள் தங்களிற்கு விரோதமாகத்தானே இருக்கும். எனது கருத்துடன் உடன்பாடத பெரும்பாலனோர் அதை ஆதாரத்துடன் தர்க்கரீதியில் சுட்டிக்காட்ட வக்கற்றுதானே வெறும் சேறடிப்பை மட்டும் செய்கிறீர்கள்.
    சூத்தையில் ஒரு பக்கமாவது நல்லதிருக்கும். அழுகிபோன தங்களிடமிருந்து எதுவும் உருப்படியாய் கிடைக்காது.

    //உங்கள் பலவீனமே! பெரும்தொகை மக்களை முட்டாளாக கருதுவதுதான்//
    தமிழ்தேசீயத்தை ஆதரிக்கும் 90 வீதத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழரில் ஒருவனாக நானிருக்கிறேன். அதை காட்டிக்கொடுத்து வயிறு வளர்க்கும் கும்பலில் ஒருவனாக நீங்கள் இருக்கிறீர்கள். சொந்த இனத்தையே வயிற்றுப்பிழைப்புக்காக தூசிப்பது காட்டிக்கொடுப்பது அல்லவா தங்கள் புத்திசாலித்தனம் என வெட்கமில்லாது பின்னூட்டமூலம் காட்டிக்கொள்கிறீர்கள்.

    • chandran.raja says:
      15 years ago

      கொலைகளில் மனநோய் கொண்ட உங்களை போன்றவர்களாலேயே தமிழ் பிரதேசத்திற்கு செல்லடி பீரங்கிகள் குண்டுவீச்சு விமானங்கள் கொண்டு வரப்பட்டன. இன்று அதுதெல்லாம் எங்கு போயிற்று?.
      நீங்கள் செய்தது அத்தனையும் கிறிமினல்தனம் மற்றவனைப் பார்த்து….?
      உங்களுக்கு எப்பவும் வசூலைப் பற்றியே அக்கறை செலுத்தும் போது அப்பாவி மக்களைப் பற்றி எப்படி கருசரணை வரும்? பல கல்லறைகளை உருவாக காரணமாக இருந்தவர் வெள்ளைக் கொடியுடன் கல்லறையில்லாமலே காணமல் போனார். இம்முறை கல்லறை நிகழ்வில் பெரிதாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள் நிர்மலன். மண்டப பணம் கூடா முன்னைய இருப்பு நிதியில் இருந்துதான் கொடுக்க வேண்டும். அது போக…

      கொத்துரொட்டியை வீட்டிலேயே கொத்திவருவீர்களா? அல்லது கல்லறை மண்டபத்திலேயே கொத்துவீர்களா? நிர்மலன். இப்படி பட்ட விஷயங்களைத் தானே உங்களிடம் அறிந்து கொள்ள முடியும். விரும்பமிருந்தால் இதையும் விபரமாக கூறுங்கள். கார்த்திகை பூ என்னவிலைக்கு விற்கிறதாக யோசனை?
      வாங்வதற்கும் சில ஏமாந்த சோனகிரிகள் இருக்கத்தானே செய்வார்கள். குட்லக்.

      • நிர்மலன் says:
        15 years ago

        தமிழர்கள் ஆயுதத்தை கையிலெடுக்க முதல் “இனக்கலவரம்” எனும் பெயரில் நடந்த தமிழின படுகொலைகள் உங்களதும் உங்களது எசமாரினதும் “மனநோய்” யின் வெளிப்பாடா! போர்க்களத்தில் இறந்த புலிகள் 35000 ஆனால் சிறிலங்கா அரசபயங்கரவாதத்தால் பலியெடுக்கப்பட்டவர்கள் 3 1/2 இலட்சம் தமிழர்.
        சிங்கள ஆக்கிரமிப்பை எதிர்க்க புலிகள் போராடியபோது சிங்களப்படைக்கு தமிழின அழிப்பு செய்ய “செல்லடி பீரங்கிகள் குண்டுவீச்சு விமானங்கள்” இப்போதானே ஊர் ஊராக ஆக்கிமிப்பு முகாம்கள் வீதி ஒழுங்கை வீட்டுப்படலையில் கொலைகார படை குத்தியிருந்து பலியெடுப்பு பாலியல் வல்லுறவு கைது காணமல் போதலென நடக்கிறது. பிறகெதற்கு “செல்லடி பீரங்கிகள் குண்டுவீச்சு விமானங்கள்” தமிழின அழிப்பு செய்ய ஒதுக்கப்ட்ட நிதி 22000 கோடி கல்விக்கு 3000 கோடி. புரிகிறதா சிங்கள இனவெறி எந்தளவு உருகொண்டு அலையுதென!

        மாவீரர்கள் பற்றி அவர்களிற்கான அஞ்சலிபற்றி ஈபிடிபி கும்பலுக்கு என்ன அக்கறை வேண்டியிருக்கு?பிணத்தை புணர்ந்த சிங்கள சைக்கோபடைக்கு பெண்சப்ளை செய்யும் உங்களிற்கு மாவீரர் தியாகம் எங்கே புரியப்போகிறது!

        அவர்கொத்துரொட்டி கார்திகைப் பூ விற்றுத்தான் நிகழ்விற்கான செலவை ஈடுசெய்கிறார்கள்.வாங்குவதும் விடுவதும் அவர்அவர் விருப்பம். ஒருவர் தனது மனதிற்கு விருப்பான செயலுக்கு தனது சொந்தப்பணத்தை செலவிட்டால் அது ஏமாந்த சோணகிரிகள் என்கிறது ஈபிடிபி கிரிமினல் அகராதி

        ஈபிடிபி கும்பலின் வயிற்றுப்பிழைப்பே சிங்களப்படைக்கு பெண்சப்ளை கடத்தல் கப்பம் கூலிக்குகொலை கொள்ளை ஊழல் இலஞ்சம் மணற்கொள்ளையென அல்லவா இருக்கிறது.

        பக்கா கிரிமினலான ஈபிடிபி கும்பலுக்கும் நேர்மையாய் உழைக்கும் பாட்டாளிகளுக்கும் என்ன சம்பந்தம்?

    • veeran says:
      15 years ago

      இன்றைக்கு வேண்டுமானால் தமிழின அழிப்பின் தலைமை மகிந்தாவாக இருக்கலாம். 1948லிருந்து தமிழின அழிப்பை தலைமையேற்று செய்தவர்களும் அதில் பங்கெடுத்தவர்களும் தமிழின அழிப்பு குற்றவாளிகள்தான். சந்திரிக்கா ரணில் வாசுதேவநாணயக்கார டியு குணசேகரா திசவிதாரண சிறிலங்கா முஸ்லீம்களின் அனைத்து மதத்தலைவர்களும் அரசியல்வாதிகளும் டக்ளஸ் கருணா சித்தார்த்தன் வரதராசாபெருமாள் கும்பல்கள் இந்திய காங்கிரஸ்கட்சி …… என பட்டியல் மிக நீளமானது.

      அட என்ன அருமையான ஆராய்வு, அப்ப இந்த புலி தமிழர்களுக்கு என்னநன்மை செய்ததது, 

      • நிர்மலன் says:
        15 years ago

        யாழிற்கான சிறிலங்கா அரசபயங்கரவாத ஏஜென்ட் அழித்த ஒப்புதல் வாக்குமூலம்.
        “முல்லைத்தீவில் அரச அதிபராகத் தான் இருந்த காலப் பகுதியில் அங்கு பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக தன்னிடம் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை எனவும்இ அங்கு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என்றும் யாழ்ப்பாண அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்”–
        உதயன் இணையம்.
        நீங்கள் இந்தியனுக்கும் சிங்களவனுக்கும் காட்டியும் கூட்டியும் தானே கொடுத்தீர்கள்/ கொடுக்கிறீர்கள்.

        • veeran says:
          15 years ago

          தங்கள் புலிக்கும் புலி பிரேமடாசவுக்கும் கூட்டி கொடுத்தீர்கள் தானே,நோர்வே காரனுக்கு கூட்டி கொடுத்தீர்கள், இப்பபோது அமெரிக்காவுக்கு,நீங்கள் அதில் வல்லவர் என்று தெரியும், கொமிசன் எவ்வளவு,

        • chandran.raja says:
          15 years ago

          முறைப்பாடு கொடுப்பதற்தற்கு ஆளை உயிருடன் வெளியில் விட்டால் தானே!
          கீழுக்கு டேவிட் கொடுத்த இணையத்தள முகவருக்கு சென்றால் வீடியோ காட்சியுடன் பதிவாகியிருக்கிறது.
          கையோடை கைம்மாரிசு. இனியும் உங்கள் எழுத்தில் ஏதாவது நேர்மை இருக்கமுடியுமா? நிர்மலன். வக்கிரபட்டபுத்தியும் வெறியுணர்வும் மட்டுமே!.

  6. david says:
    15 years ago

    தயவு செய்து இதனை வாசிக்கவும் http://www.tamilnewsweb.com/

  7. நிர்மலன் says:
    15 years ago

    லங்காபுவத் வீரனே!
    பிரேமதாசாவை கொன்றதே புலிகள். புலிகளை தான் மட்டும் தடைசெய்தது போதாதென்று கனடா மற்றும் ஐரோப்பிய யூனியனையும் தடைசெய்ய வைத்து தமிழினவழிப்பிற்கு சிறிலங்காவிற்கு உதவியது அமெரிக்கா . புலியை பேச்சுவார்த்தை பொறிக்குள் சிக்க வைத்து பிளவுபடுத்தி அழிக்க சிறிலங்காவிற்கு உதவியது நோர்வே இவையெல்லாம் உலகறிந்த உண்மை. நீங்கள் லங்காபுவத் பாணியில் கதைசொல்வதில் வல்லவர்தானே.

    இன்று அமெரிக்காவை நோக்கி தமிழர்கள் போகிறார்கள் என்றால் சிறிலங்கா அரசபயங்கரவாதத்தை பணிய வைப்பதற்கே தவிர உங்களை போல் தமிழரை சிறிலங்காபயங்கரவாத அரசிற்கு காட்டிக்கொடுக்கவில்லை.

    சந்திரன்ராசா! யாழ் சிறிலங்கா அரசபயங்கரவாத ஏஜென்ட் மகிந்தாவை மகிழ்விக்க சுவிசில் பெண்கள் தங்கநகை அணிந்து செல்ல முடியாது அவ்வளவிற்கு ஆபத்தங்கே என புழுகினவர். அதே பாணியில் விரும்பினால் புலிகளின் நிர்வாகத்தை குறை சொல்லலாம்தானே. இப்போதானே அங்கு புலிகளின் செயற்பாடே இல்லையே. அவர் ஈபிடிபி கும்பலின் பாலியல் வன்முறையை தாங்க முடியாத இக்கட்டிலேயே உண்மையை சொன்னார். அவரொன்றும் அந்நிய தேசத்தவரல்ல முல்லை மக்களோடு மக்களாக வாழ்ந்தவர். நீங்கள் லங்காபுவத் பாணியில் எப்படியும் புரட்டலாம் உண்மையை உரிய மக்களறிவார்கள்.
    உங்களை போன்றவர்கள்தான் டேவிட் கொடுத்த இணையத்தளத்திற்கு வாசகராக இருக்க தகுதியானவர்கள்.

    • chandran.raja says:
      15 years ago

      லங்காபுவத் வெளியிடுகிற செய்திகளை புலிபுவத்தாலான உதயன் தமிழ்வின் தமிழ்நெற் புதினம் அதிர்வு வெளியிடுகிற செய்திகள் தமிழ்மக்களுக்கு மீண்டும் ஒரு முள்ளிவாய்கால்லை காட்டுவதற்கு முயல்கின்றன. அத்துடன் தமிழ்நீயூஸ்வெப் இத்தகைய இனவெறியூட்டும் சமாச்சாரங்களை ஒப்பிடும் போது தன்தரத்திற்கு உயர்ந்தே நிற்கிறது.
      அதுபோக நிர்மலன் பாலியல்வன்முறைகளை அரசியல்யாக்க முனையும் அறிவீனத்தை புலிகளின் காமலீலைகளை சொல்லும் போது ஏன் வெட்கப்பட்டு
      பிரச்சனை திசைதிருப்புவதும் அல்லாமல் முழுபூசணிக்காயை சோற்றில் புதைக்கிற மாதிரி கதை அளக்கிறீர்கள்.
      எங்களுக்கு லங்காபுவத் பிடிக்கும். உங்களுக்கு புலிபுவத் பிடிக்கும். புலிபுவத்தின் நடவடிக்கைகள் ஒரு சிலரின் சுயநலத்தால் இழுத்துச் செல்வதும் அல்லாமல் எஞ்சியிருக்கிற தமிழருக்கும் பேராபத்தை விளைவிக்க கூடியவை. இதை எதிர்த்து சண்டை இடுவதற்கு எமக்கும் உரிமையிருக்கிறது. தமிழ்நீயூஸ்வெப்ற்கும் உரிமை இருக்கிறது. வெங்கலக் கடைக்குள் யாணை புகுந்தமாதிரி கதையளக்காதீர்கள்.
      எந்நேரமும் தமிழ்மக்கள் ஆழ்ந்தநித்திரையில் இருப்பார்கள் அடிமுடிச்சை அவிழ்த்துக் கொண்டு ஓடலாம் என இனியும் கனவு காணாதீர்கள் நிர்மலன்.

  8. veeran says:
    15 years ago

    பிரேமதாசாவை கொன்றதே புலிகள். அட என்ன அருமையான் ஆராய்வு, இப்படி கொல்லும் போதேல்லாம் உங்களுக்கு இப்படிநடக்கும் என்றுநினைக்கவில்லை தானெ, என்னநடந்தது இறுதியில், தேசிக்காய் தலை பிரபாவும் பொட்டனும் மே 16 ம் திகதி சிதம்பரத்திடம் கெஞஞினார்களாம் இந்தியாவிடம் சரன் அடைகின்றோம் என்று, பின்பு கோவனம் கட்டி எதிரியின் காலில் விழுந்து கெஞஞினார்கள், இறைவன் இருக்கின்றான் என்று அப்போது தான் புரிந்தது,  இலங்கை அமெரிக்கா சார்பானநாடாக மாறினால் புலி பினாமிகலின் பேச்சு அமெரிக்காவிடம் எடு படாது

  9. david says:
    15 years ago

    மாவீரர் சூதாட்டம் சம்பியன்லீக் 201115 ஒக்டோபர் 2011 00:21:48 திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் 47944944 ‘தன்னலமற்று வீழ்ந்தவர்கள் எவரும் மற்றவர்களின் போற்றுதலுக்காக வீழவில்லை.  ஆனால் 2009 மே.19 உடன் எல்லாமும் தலைகீழானது.  முள்ளிவாய்க்காலில் மூலத்தை வேரறுத்தவன் சிங்களவன் என்றால் புலம்பெயர் தேசங்களில் அதனைச் செய்துகொண்டிருப்பவர்கள் சதா பிரபாகரன் நாமம் ஓதிய அவரின் விசுவாசிகள் என்பதுதான் நமது அவலத்திலும் பெரிய அவலமாகும்.  ‘மாவீரர்கள் நினைவு தினம்’ என்னும் படத்திற்கான இரு திரையரங்குகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. பினாமிகளாக இருந்தவர்கள் இறுதிக்காலத்தில் வீதி ஊர்வலங்களை ஒழுங்கு செய்தவர்கள் சில மாதங்கள் தமிழ்த் தேசியம் பேசியவர்கள் என்று ஒரு சிறு கூட்டம் இப்போது புலிப் போர்வைப் போர்த்தியிருக்கிறது.  இன்றைய சூழலில் புலம்பெயர் நாடுகளில் தமிழீழம் காண்போம் என்று உளறிக் கொண்டிருக்கும் இவ்வகை ஆசாமிகள் அனைவரும் பஞ்சத்துப்புலிகளே ஆவர். இந்த பின்புலத்தில்தான், சரணடைந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் ஒரு வேளை உணவுக்கே அல்லாடிக் கொண்டிருக்கின்ற நிலையில் அது குறித்து எந்தவிதமான குற்றவுணர்வுமற்று உயிர்நீத்த போராளிகளைப் பாகப்பிரிவினை செய்யும் போராட்டம் புலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. http://www.tamilnewsweb.com

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...