அரச துணைக்குழுக்களான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (பிள்ளையான் குழு) மற்றும் சிறீ ரெலொ போன்றவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயாராவதாக அறிவித்துள்ளன. மகிந்த ராஜபக்சவின் அதி நம்பிக்கைக்கு உரிய பயங்கரவாத, மக்கள் விரோதக் குழுக்களாகச் செயற்பட்டுவந்த இக் குழுக்கள் தமது இருப்பைத் தொடர்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடியுள்ளன. இலங்கை இந்திய அரசுகளுக்கு தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளை விற்பனை செய்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிள்ளையான் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே வேளை புளட் தலைவர் சித்தார்தனுக்கு இலங்கை மகிந்த அரசு துணை மந்திரிப் பதவி வழங்குவதற்காக அவரை அணுகியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதிலென்ன அதிசயம். சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட ஒருகாலத்தில் மண்டையன் குழு என்ற துணை ஆயுதக் குழுவை நடத்தியவர் தானே. (புலிகள் பின்னர் எப்படி இவர்களுடன் சேர்ந்திருந்தார்கள் என்றெல்லாம் கேட்கக்கூடாது.) நாங்களெல்லாம் பிசாசுடனும் (பிரேமதாஸவுடனும் அல்லது மகிந்தவுடனும் என்று நீங்கள் மொழிபெயர்த்தால் நான் பொறுப்பில்லை.) கூட்டுச்சேருவோமில்ல.
விடுதலைப் புலிகள் தானே எல்லாம் கூட்டுச்சேருவோமில்ல துதுது____
என்ன a voter சார், தமிழ் முஸ்லீம் மக்களுடையிலான சமாதான முயற்சி பார்த்த போது வரவேற்கின்றீர்கள் அருமையாயச்சொன்னீர்கள் இளிக்கின்றீர்கள் பாடாத பாடல்லாம் பட்டு துடிக்கின்றீர்கள், அது நல்ல விசயம்தான் ஆனால், தமிழர்கள் இருவர் நெருங்குகிறார்கள் என்றவுடன் ஏன் சிணுங்குகின்றீர்கள் எதற்காக புளுங்குகின்றீர்கள் என்பது விளங்கவில்லை. இது எங்கேயோ உதைக்கிறதே? அதற்காக அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதாக எண்ண வேண்டாம்.