அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையினரான தென்னிலங்கை மாணவர் குழு ஒன்று அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தனர். தம்முடன் மூன்று லட்சம் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கையளிக்கவும் எடுத்துச் சென்றனர். யாழ்ப்பாணத்தல் தற்போது ஜனநாயக சூழல் நிலவுவதாக நம்பியே அவ்வாறு சென்றனர். ஆனால் யாழ் பல்கலைக்கழக வாசலில் இத் தென்னிலங்கை மாணவர் குழு தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. எவ்வளவோ முயன்றும் அவர்களால் உட்செல்ல முடியவில்லை. அவ்விடத்தில் வைத்து அங்கு வந்த ஊடகவியலாளர்க ளுக்கு தாம் தடுக்கப்பட்ட விடயத்தைக் கூறினர்.
இவ்வாறு தடுக்கப்பட்டமைக்கு யாழ் பல்கலைக்கழக நிர்வாகமே காரணமன்றி அங்குள்ள மாணவர்களோ பொதுமக்களோ அல்ல என்பது காண வேண்டியதொன்றாகும். அவ்வாறு நிர்வாகம் தடுத்தமைக்கு கொடுக்கப்பட்ட பதில் மேலிடத்து உத்தரவு என்பதாகும். அந்த மேலிடம் யார்? பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவா, உயர் கல்வி அமைச்சா, ராணுவ நிர்வாகமா, ஜனாதிபதி செயலகமா அல்லது வடபுலத்து ஆதிக்க அரசியல்வா திகளா என்பது புரியாத புதிராகவே உள்ளது.
மேலும் இவ் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் அரசியல் உள்நோக்கத்துடன் வந்தவர்கள் என்ற கண்டுபிடிப்பு சிரிப்பிற்கு இடமானது. பல்கலைக்கழக உயர் மட்ட நிர்வாகத்தில் இருப்பவர் தொடக்கம் மாணவர்கள் வரை யாரிடம் அரசியல் நோக்கம் இல்லாதிருக்கின்றனர்? கடந்த பொதுத் தேர்தலில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஆதரவு திரட்ட பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பல்கலைக்க ழகத்தினுள் வரவில்லையா? அமைச்சர்கள் என்ற பட்டயத்து டன் வருவோர் தமது அரசியலை வாசலில் கழற்றி வைத்துவிட்டா வருகிறார்கள்? எனவே மொட்டை நியாயங்களால் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைத்து விடமுடியாது.
அ.ப.க. கழக மாணவர் ஒன்றியத் தலைமையிடம் கேட்க வேண்டிய அரசியல் கேள்விகள் நிறையவே உண்டு. அதற்கான பதிலை கொடுக்க வேண்டிய கடமையும் அவர்களுக்கு உண்டு. இதனை அவர்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல் மூலமான கடந்த கால நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டியே அவற்றைச் செய்ய முடியும். அதனை விடுத்து தென்னிலங்கையின் சிங்கள மாணவர் பிரதிநிதிகளை யாழ் பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்து பேசவோ உறவு கொள்ளவோ தடுப்பது பழைய புலிகள் இயக்கம் கைக்கொண்ட ஆதிக்க அதிகாரத் தொனியின் தொடர்ச்சியை ஏனையோர் செய்ய முற்படுவதைப் போன்றதாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய செயற்பாடுகள் இன்னும் வடக்கு கிழக்கில் இயல்பு வாழ்வம் ஜனநாயக சூழலும் இல்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
அரசாங்க தரப்புகளில் இருந்து வந்தால் மாலைகள் தோரணங்கள் கட்டி வரவேற்பதும் எதிர்த் தரப்புகள் வந்தால் அரசியல் உள்நோக்கம் என நிராகரிக்கப்படுவதும் என்ன நியாயம்? தமிழ் மக்கள் அனைவருமே நியாய அநியாயத்தைப் பேசுவது மறுக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆயிற்றே. இப்போது இருப்பதாக நம்புவது தான் முட்டாள்தனம் போலும்.
இதே அ.ப.க. கழக மாணவர் ஒன்றியம் அண்மையில் காணாமல் போனோர், மீள் குடியேற்றம், மாணவர்கள் தடுத்துவைப்பு பற்றியெல்லாம் பகிரங்கமாகப் பேசி வருகிறார்கள். அவர்களது அரசியல் பின்புலமும் அவர்களது கோரிக்கைகளும் அரசாங்கத்திற்குச் சார்பானவையாக இல்லை. சிங்கள மக்கள் மத்தியில் அவரகளது பிரசாரம் போவதை யும் அரசாங்கம் விரும்பவில்லை. அதன் பிரகாரம் அவர்கள் வடக்கே போவதையும் அரசாங்கம் விரும்பவில்லை. அதன் ஒரு பகுதியே யாழ் பல்கலைக்கழகத்தில் தென்னில ங்கைப் ப.க.கழக மாணவர்கள் தடுக்கப்பட்டமையாகும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழர் வாழ்வில் ஒரு முக்கியமானதொரு பங்கை தொடர்ந்தும் பேணூகிறது இது யாழ்ப்பாண் மண்ணீன் பாரம்பரியமாய் இருந்து வருகிறது.அதனால் ஒரு பவர் யுத்தம் தொடர்ந்தும் நீடிக்கிறது.
தயவு செய்து யாராவது இதை மொழிபெயர்த்து உதவுவார்களா?
Jamis Friedfishஇன் கொட்டைப் பாக்கு இடுகையையும் இது மிஞ்சி விடும் போலுள்ளதே!
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்ட்ரியம் ஜெ வி பி யின் பின்புலம் கொண்டது. எதிர் காலத்தில் தமிழரின் சுயாட்சி மட்றும் உரிமை போர் தென் இலங்கை சக்திகளின் உத்வியுடன் முன்னெடுக்கப் பட வேண்டும். உரிமைகள் எல்லோருக்கும் பொதுவானவவை.
ஜே.வி.பி. சில வழிகளில் யூ.என்.பியையும் ஆளும் கட்சியையும் விட மோசமான பேரினவாதக் கட்சி என்பதை நினைவிற் கொண்டே அதன் மீதான அரச அடக்குமுறைகளைக் கண்டிக்க்க வேண்டும். எந்த விதமான அரச அடக்குமுறையும் யாரை இலக்கு வைத்தாலும் கண்டிக்கத்தக்கதே.
ஜே.வி.பி. தன்னை இனவாதச் சேற்றிலிருந்து மீட்டுக் கழுவியெடுக்க நீண்ட காலமாகலாம். ஆனால் ஜே.வி.பி. மீதான அரச அடக்குமுறைகளைக் கண்டிப்பதன் மூலமே அதன் பின்னாலும் பிறர் பின்னாலும் தனித்தும் நிற்கிற (அடிப்படையில் நல்ல) சக்திகளை வென்றெடுக்க இயலும்.
இந்த நிகழ்வு பற்றி எந்தத் தமிழ்த் தேசியக் கட்சியாவது வாய் திறந்துள்ளதா? இல்லையெனின், ஏன்?
அவர்கள் இன்னமும் ஆண்ட பரம்பரை கனவுகளில் மிதப்பவர்கள் .அவர்களிடம் எப்படி நல்லதை எதிர் பார்க்க முடியும் ?முன்பு இப்படியான பிரச்சனைகளில் அவர்கள் திருவாய் மலர்ந்து ஏதும் சொல்லியிருக்கிறார்களா ?………….!!!