தெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் மிக மோசமான வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் இலங்கை இரண்டாம் நிலை.

30.8.2008.
தெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் மிக மோசமான வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் இலங்கை இரண்டாம் நிலையை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த எட்டு மாதங்களில் 249 குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றதாகவும் இதில் 273 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இம்மாதம் 15ம் திகதி வரையில் இடம்பெற்ற தாக்குதல்களில் இரண்டு அமைச்சர்களும், ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் கொல்லப்பட்டுள்ளனர்.சுமார் எட்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும், தெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் முதன் முதலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட நாடாக இலங்கை கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

1987ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் திகதி முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. தெற்காசிய வலய பிராந்திய நாடுகளில் மிகவும் மோசமான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்ற நாடாக பாகிஸ்தான் கருதப்படுகிறது. முதல் மூன்று மாதங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 355 பேர் கொல்லப்பட்டதுடன்ää அடுத்த மூன்று மாதங்களில் மேலும் 108 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் சுமார் 156 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் கடந்த எட்டு மாதங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 139 பேர் கொல்லப்பட்டதுடன், 272 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை கடந்த எட்டு மாதங்களில் மிகவும் அமைதியான வலயமாக பங்களாதேஷ் அறிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் வன்முறைச் சம்பவங்கள் மிகவும் சொற்ப அளவில் இடம்பெற்ற நாடாக பங்களாதேஷ் இனங்காணப்பட்டுள்ளது.