சிறீ லங்கா தெற்காசியாவில் அதக வளங்களைக் கொண்டு வேகமாக விரிவடையும் இராணுவத்தைக் கொண்டுள்ளது எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. உலக இராணுவமாக்கல் சுட்டி Global Militarization Index என்ற அளவிட்டு முறையின் அடிப்படையில் இத் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு முன்னணியில் திகழும் இலங்கை 36 ஆவது காணப்படுகிறது. பாகிஸ்தான் 47 ஆவது இடத்திலும் ஆப்கானிஸ்தான் 58 ஆவது இடத்திலும் பின் தள்ளப்பட்டுள்ளன.
மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (GDP) ஒப்பிட்டு இராணுவச் செலவைக் கணிப்பிடும் இந்த விகிதாசார அளவீட்டு முறையில் இலங்கை இராணுவமயமாவதில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு முன்னணியில் திகழ்கிறது.
இராணுவத்தினரின் தொகை அளவீடு மொத்தச் சனத்தொகையோடு ஒப்பிட்டு அளவிடப்படுகிறது.
Bonn International Center for Conversion என்ற அமைப்பு இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.
இராணுவமயமாக்கல் என்பது ஒரு இரவுக்குள் நடைபெறும் நிகழ்ச்சியல்ல. திட்டமிட்ட அடிப்படையில் மக்களின் நாளாந்த வாழ்க்கையுடன் இரண்றக் கலந்துவிடும் வகையில் படிப்படியாக வெளித் தெரியாமல் நிகழ்த்தப்படும் நடவடிக்கையாகும்.
போரின்றிச் சமாதானம் நிலவுவதாகக் கூறப்படும் இலங்கை என்ற நாட்டில் வரலாற்றில் அதியுயர் இராணுவச் செலவு இறுதியாக நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. 1,95 பில்லியன் டொலர்கள் இராணுவத்தில் முதலிடப்பட்டுள்ளது.
பிரிதானிய அரசு 8 மில்லியன் பவுண்ஸ் பெறுமதியுள்ள 48 அனுமதிப் பத்திரங்களை இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதற்காக வழங்கியுள்ளது.
ஒரு புறத்தில் நாட்டைப் பாதுக்காக்கிறோம் என்ற பெயரில் சிறுபான்மைத் தேசிய இனங்களை அழிக்கும் மகிந்த அதிகாரம், மறுபுறத்தில் அமரிக்கா, பிரித்தானியா உட்பட பல நாடுகளுடன் இராணுவ வியாபார ஒப்பந்தங்களைச் செய்து வருகிறது.