ஏகாதிபத்திய நலன்களுக்காகத் தனி நாடாக்கப்பட்ட தெற்கு சூடானிலிருந்து அகதிகளாக இடம்பெயர்ந்த படகு ஒன்று மூழ்கியதில் 200 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அந்த நாட்டின் இரணுவப் பேச்சாளர் தெரிவித்தார். கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இந்த விபத்தில் பல குழந்தைகளும் பெண்களும் பலியாகியுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். தென்சூடானின் அரச படைகளுக்கும் அரசை எதிர்த்துப் போராடிவருபவர்களுக்குமிடையே மோதல்கள் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து நைல் பெரி வழியாக தப்பிக்க முயன்றவர்களே இவ்வாறு கொல்லப்பட்டனர் என அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. மலாக்கல் பகுதியை தாம் கையகப்படுத்தியுள்ளதாக அரச எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றன. மேல் நைல் பகுதியில் எண்ணைக் குதங்களின் நுளைவாசலான இப் பகுதி முக்கியத்துவம் வாய்ந்தது என இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தனிநாடாக்கப்பட்ட தென் சூடனிலிருந்து குறுகிய கால எல்லைக்குள் 35 லட்சத்து 50 ஆயிரம் பொதுமக்கள் இது வரை வெளியேறியுள்ளனர். மேலும் அங்கிருந்து வெளியேற முற்படும் பல பொது மக்கள் பண வசதியின்மையால் வெளியேற முடியவில்லை எனத் தெரிவிக்கின்றனர். தன்னார்வ நிறுவனங்கள், ஐ,நா போன்ற பல அமைப்புக்கள் பொது மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்துவருவதாகத் தெரிவிக்கின்றன.
இரு தரப்பினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த பிற ஆப்ரிக்க நாட்டுத் தலைவர்களும், ஐ.நா குழுவினரும் தொடர்ந்து முயன்று வருவதாகக் கூறுகின்றனர்.