தென் ஆப்ரிக்காவில் தொழிலாளர்கள் மீது அந்நாட்டு பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 30க்கும் அதிகமானோர் பலியாயினர்.
தென் ஆப்ரிக்காவின் மரிகானா பகுதியில் உள்ள ப்ளாட்டின சுரங்கத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மத்தியில் கடந்த 1 வாரமாக போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இப்போராட்டம் நேற்று உச்ச கட்டத்தை அடைந்தது. இப்போராட்டத்தை ஒடுக்க பொலிஸார் இவர்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்..
தகவல் தொளில்நுட்ப்பம் வர்க்க ஒற்றுமையைத்தான் வலியுறுத்துகின்றது.
தென்னாபிரிக்க பிளாட்டினம் சுரங்கத் தொழிலாளரின் போராட்டம் என்றாலும் சரி ஸ்பானிய நிலக்கரி சுரங்கப் போரரட்டங்கள் என்றாலும் சரி. இல்லை… மாருதி கார்யிணைப்பு தொழிலாளர்களின் போராட்டம் என்றாலும் சரி எல்லாம் ஒரே தன்மை வாய்ந்தவையே!
இந்த வர்க்கப்போராட்டம் தொழிலாளர்கள் கூட்டாக அமைப்பாக இல்லாத இடங்களில் இனக்கலவரங்களாகவும் இல்லையேல் மதக்கலவரங்களாகவும் உருவெடுக்கின்றன.(உதாரணம் நேற்றைய பெங்குளுர் இடபெயர்வுகள்)
ஒட்டுமொத்தத்தில் முதாலித்துவ சுரண்டல் தோற்றிவிக்கப் பட்ட விளைவுகளே ஒழிய வேறு ஒன்றுமல்ல. இதற்கான தீர்வு சர்வதேச- தொழிலாளர் ஐக்கியத்திலும் அதற்கு தலைமை ஏற்கப்போகும் சர்வதேச வரலாற்று பாரம்பரியம் மிக்க கட்சியாலேயே சாத்தியமாகும்.