தென்பகுதியுடன் ஒப்பிடுகையில் வடக்கில் அரசியல் சுதந்திரம், கூட்டங்களில் பங்கேற்கும் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக கபே அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்நிலைமை எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்குப் பாதகமாக இருக்கும் என்பதையும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் நிலைவரம் குறித்து கபே அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘யாழ்.குடாநாட்டில் அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரங்களுக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஜே.வி.பி.யும் குற்றம் சுமத்தியிருந்தன. அத்துடன் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சிலர் தாக்கப்பட்டுள்ளனர்.