யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தென்னிலங்கை வியாபாரிகளின் விற்பனை நிலையங்கள் இனந்தெரியாத நபர்களால் நேற்று மாலை 7.00 மணியளவில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.
நாச்சிமார் கோவிலின் தேர் முட்டி அருகில் கடந்த சில வாரங்களாக தென்னிலங்கை வியாபாரிகளுக்கென விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றையே மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் தீப்பந்தங்களைக் கொளுத்தி மேற்படி கடைகளுக்கு மேல் எறிந்துவிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடைகள் முற்றாக எரிவதற்குள், வியாபாரிகள் தீயை அணைத்து விட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
It shows the growing tension between communities. Unfortunately, none of the “Tamil” progressive groups condemn this action. They will till talk about the 1983 ethnic cleansing.
This type of actions, whether irrespective of who was attacked, should e condemned.
“a voter”
You are dead right. It should be unconditionally condemned.
Sadly, not many of the “Tamil” progressive groups are progressive. Their kind of response will be exatly as you anticipate.
Some sick minds may think that thisis the ‘correct’ response for Sinhala settlements in the North & East.
The mischief makers want to stir violence in the South and create something like 1983 –but perhaps less violent– so that their narrow Tamil natinalist projects could take off.
The people in Jaffna have more sense than that.
இந்த காரியத்தை தமிழர்கள் செய்திருந்தால் அதை விட முட்டாள்தனம் எதுவும் இல்லை அரசு சார்பானவர்கள் செய்திருந்தால் பின்னணியில் தமிழர்களின் ஏதோ ஒன்றை இடித்துத் தள்ளுவதற்கு திட்டமிடுகின்றார்கள் என்று கருதலாம்.
யாழ் நூலகம் எரிக்கப்பட்டது முக்கியமான ஒரு நிகழ்வு தற்போது போராளிகள் கல்லறைகளை அப்புறப்படுத்திவரும் இலங்கை அரசு நல்லூர கோயிலை குறிவைத்துள்ளது. ஒருவகையில் போராளிகள் கல்லறையை அகற்றுவதை விட நல்லூர் கோயில் மேல் கைவைப்பது சிங்களத்திற்கு முக்கியமான ஒன்றாகும். ஆனல் இது குறித்த நடவடிக்கை நுட்பமான திட்டமிடலுடன் தான் அரங்கேற வாய்ப்புள்ளது. எது நடந்தாலும் ஆச்சரியப்படவோ தடுக்கவோ முடியாது. பொழுதுபோவதற்கும் நடக்கும் சம்பவங்களின் தலைப்புகளின் கீழ் கதைப்பதற்கும் ஒரு சந்தர்ப்பமாக சுவார்சியமக இருக்கும் .
இதை விட முட்டாள்தனமான காரியங்களைச் செய்த தமிழர்களைத் தானே நாம் தலைமுறைகளாகத் தலைவர்களாகக் கொண்டிருந்திருக்கிறோம்.
யார் என்று கண்டறிந்து தலைவராக்கிவிட்டால் நிச்சயம் விடுதலை கிடைக்கும்.
தலைவர்கள் எனப்பட்டோரின் தில்லுமுல்லுகள் உட்பட எல்லாச் செயல்களையும் நியாயப்படுத்த நம்மிடம் ஒரு புத்திஜீவிப் படையே உள்ளது. ஊடகங்கள் உள்ளன. போதாதா?
உண்மையில் சிங்கள மக்களின் கடைகளை ஆக்கிரமிப்பு போல வர்ணித்து ஒரு “தமிழ்” அரசியல்வாதி பேசியதாக சமீபத்தில் படித்த ஞாபகம்.
அவர்கள் இப்போது மெளனமாக இருக்கிறார்கள்.
இதனால் லாபம் அடைபவர்கள் தமிழ் குட்டி முதலாளிகளும் சகல இனவாதிகளுமே.
அண்ணேய் பரமாவோ பரமாத்மாவோ,
சங்கிலியன் தொப்புள்ல நல்லூர் ராஜதானி உள்ள இடம் எண்டு தமிழரெலாம் பெருமை சொல்லற இடத்தில மூண்டு ஸ்டார் ஹோட்டல் கட்டினம். இதை பற்றி அரசாங்கத்தோட இருக்கிறவையோ, இந்த கூட்டமைப்பு காரரோ, இந்த இலக்கசன்ல நிண்ட ஒருத்தருமோ கதைக்கேல்ல. இப்ப இலக்கசனுக்கு இந்தியாவில இருந்து டூர் வந்து இருக்கிற பெருமாளும் கதைக்கேல்ல.
இந்த ஹோட்டல் கட்ட வேறை இடம் கிடைக்கேல்லையோ? ஒரு நல்ல கடக்கரை பக்கம் கட்டலாம். எல்லாம் அபிவிருத்தி எண்டு சொல்லி சொல்லி திட்டமிட்டு இனக்கலப்பும் கலாசார சீரழிவோட சேத்து ஒரு கலாச்சார கலப்புக்கும் தான்.
என் இந்த நாடு கடந்தவையும் இதுகளை பற்றி ஒரு கதையும் இல்லை. எல்லாம் பம்மாத்துதான். எதோ பிழைக்கிறவை பிழைச்சுகொண்டு போகட்டும்.
எங்களுக்கு இங்கை ஆறு நாள் வேலை செய்து இண்டைக்கு ஒரு நாள் லீவு. அதில இங்கை இன்டர்நெட் பாக்க நேரம் சரி. இங்கை இருந்துகொண்டு நாங்கள் என்ன செய்ய முடியும். ஒரு அமைப்பும் ஒழுங்கா இல்லை. அங்கை இருக்கிற சனம் தான் ஏதாவது மறியல் போராட்டம் எண்டு ஏதாவது செய்ய வேணும். நிஇங்கள் பரமா நாட்டில இருக்கிரநீங்கலேண்டா இதை முன்னெடுத்து நடத்தலாமே. நல்லூர் கோயிலுக்கு விரதம் இருக்கிரவ, திருவிழா காலத்தில பெட்டையள பாக்க போற பெடியளும் பெடியல பாக்க போற பெட்டையளும் எண்டு வயசு வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் நன்றியா இருப்பினம்.
ஆனா பாருங்கோ பரமாவோ பரமாத்மாவோ நிங்கள், பொழுதுபோவதற்கும் நடக்கும் சம்பவங்களின் தலைப்புகளின் கீழ் கதைப்பதற்கும் ஒரு சந்தர்ப்பமாக சுவார்சியமக இருக்கும். எண்டு சொல்றிங்கள். இது உங்களுக்கு பொழுதுபோவதற்கும் சுவார்சியமாகவும் இருக்கோ? உங்களை போல படம் பாக்கிற ஆக்களால தானே ஆரம்பத்தில இருந்து இந்த பிரச்னை. கொன்ஷபேர் அவங்கள் பெடியள் அடிப்பங்கள் எண்டு. மற்றவைய எங்களுக்கு ஏன் இந்த பிரச்னை எண்டு ஒதுங்கி. எல்லாம் ஒற்றுமையா இது எங்கடை பிரச்னை எண்டு வெளிகிண்டு இருந்தால் இண்டைக்கு ஏன் இந்த நிலைமை.
மண்டை கழண்டவ பார்க்க வேண்டியர் வைத்தியர் மட்டுமே கனவு கண்டு கொண்டிருக்காம யதார்த்தமாய் யோசியும் மணீயம் இல்லையெண்டால் ஏழு நாளூம் வேலை செய்து தொலையும்.நீர் சொல்லுற மாதிரி எல்லால் குரோஸ் வீதியில் வரும் யோசியாதேயும்.இந்த இடிந்து விழுகிற சங்கிலியன் கோட்டைகள விட்டிப் போட்டு எழுந்து வரும் புதிய உலகைப் பாரும்.சும்மா உங்கள மாதிரி ஆக்கள் இருந்து கொண்டு யோசியாமல் நின்றூ கொண்டு யோசியுங்கோ.
மிகவும் கண்டிக்கப்படவேண்டிய செயற்பாடு இது.
தமிழர் தரப்பு பிரதிநிதிகள் இச்செயலை கண்டிக்க வேண்டும்..
இதற்குப்பின்னால் சதித்திட்டம் இருக்கிறதென்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
கண்டிக்க வேண்டியது எம் கடமை.
கண்டி தலதா மாளிகை மீதான குண்டு வீச்சு முதல் ராஜீவ் காந்தி கொலை வரை விமர்சிக்கப் பட்ட போது விமர்சித்தவர்கட்குத் துரோகிப் பட்டம் சூட்டிய பாரம்பரியமும் நமக்குண்டு.
சந்திரிகா மீதான குன்டு வீச்சில் அவர் கண்ணிழந்த போது, சந்திரிகாவைக் கேலி செய்து எழுதப்பட்ட ஒரு கவிதை தரக் குறைவான சிந்தனையை வெளிப்படுத்துவதாக விமர்சித்த ஒருவர் அதற்காக மிக அண்மையிற் கூடக் கண்டிக்கப்பட்டார்.
மயூரன், வருத்தத்தக்க விதமாக, நீங்கள் சிறுபான்மையான ஒரு சிந்தனைப் போக்குக்குரியவராக இருக்கிறீர்கள். அச் சிறுபான்மையைப் பெரும்பான்மையாக்குவதிலேயே தமிழ் மக்களின் எதிர்கால உயர்வு தங்கியுள்ளது.
யாழ் நாயன்மார்கட்டு செம்மணி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து மாணவி ஒருவர் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார்.
19 வயதுடைய யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவியான ஜேம்சலா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
கவலையான ஒரு செய்தி.தன்னை நேசிக்க தன்னம்பிக்கை வளர்க்கப்பட் வேண்டிய சூழலில் நம் சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
யாழ் குடாநாட்டில் கொள்ளைச் சம்பவங்களுக்காக கொலைசெய்யப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
யாழ் பத்தாவத்தை இளவாலைப் பகுதியில் கொள்ளையிடும் பொருட்டு நேற்றுமுன்தினம் இவ்வாறானதொரு கொலைச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
44 வயதுடைய இந்துமதி குணரட்னம் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருப்பதாக யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன.
குறித்த பெண்மணியின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
களவு எடுப்பவர்கள கட்டி வைத்து அடிக்கும் கலாச்சாரம் கொலை செய்யவும் துணீவது நமது மக்களீன் வாழ்வியலைக் காட்டுகிறது.
//ஆனா பாருங்கோ பரமாவோ பரமாத்மாவோ நிங்கள், பொழுதுபோவதற்கும் நடக்கும் சம்பவங்களின் தலைப்புகளின் கீழ் கதைப்பதற்கும் ஒரு சந்தர்ப்பமாக சுவார்சியமக இருக்கும். எண்டு சொல்றிங்கள். இது உங்களுக்கு பொழுதுபோவதற்கும் சுவார்சியமாகவும் இருக்கோ? உங்களை போல படம் பாக்கிற ஆக்களால தானே ஆரம்பத்தில இருந்து இந்த பிரச்னை. கொன்ஷபேர் அவங்கள் பெடியள் அடிப்பங்கள் எண்டு. மற்றவைய எங்களுக்கு ஏன் இந்த பிரச்னை எண்டு ஒதுங்கி. எல்லாம் ஒற்றுமையா இது எங்கடை பிரச்னை எண்டு வெளிகிண்டு இருந்தால் இண்டைக்கு ஏன் இந்த நிலைமை.//
மணியண்ணை நீங்கள் கிடைக்கிற ஒரு நாள்ள ஏன் கொதிக்கிறீங்கள்? முள்ளிவாய்க்கால் உட்பட நடந்து முடிந்த எல்லம் சம்பவம் தான். செய்தி தான். வருத்தமான துன்மான உணர்வுகளை ஏற்படுத்தியவைதான் ஆனால் இவ்வாறன உணர்வுகளை வைத்து ஏதென்றும் செய்ய முடியாது என்பதையே சுட்டிக்காட்டினேன். வேதனைகளையும் கோபங்களையும் நெறிப்படுத்த எம்மிடம் தளம் இல்லை. அது இலங்கையில் உள்ள தமிழர்களிடமானாலும் சரி புலம்பெயர்ந்தவர்களிடமானாலும் சரி. ஒரு சம்பவத்தின் விழைவு ஏக மக்களையும் பாதிக்கச்செய்கின்ற போதும் அதற்கு மறுதாக்கம் ஏற்படக் கூடிய ஒருங்கிணைவு எம்மிடம் இல்லை. அதற்கான சாத்தியப்பாடும் இல்லை. இது புலிகள் காலத்திற்கு முற்பட்ட வரலாற்று வழியான எமது இருப்பாகும். சிங்கள ஒடுக்கு முறை என்னும் தாக்கத்தின் விழைவு பல இயக்கங்கள் அவர்களுக்குள் மோதல்கள் புலிகளின் முனைவு அவர்களுக்குள் முரண்பாடு என தாக்கத்தின் விழைவை அனுபவித்த போதும் ஒருங்கிணைய முடியாத அடிப்படையையே நாம் ஆதாரமாகக் கொண்டிருந்தோம். எங்களிடம் இருக்கும் பிரச்சனை புலிகளை கடந்த ஒன்று. அந்தவகையில் நடந்தவையும் இனி நடக்கப்போகின்றவையும் எமக்கு வெறும் சம்பவங்களே. செய்திகளே . அதைக்கடந்து நாம் ஒன்றும் புடுங்கப்போவதில்லை.
முரண்பாடுகள சமூகத்தின் குறபாடுகளாக அணூகாது அவை மனித இயலபுகளாக ஏற்றூக் கொண்டு நம்மை நாம் மீளாய்வு செய்ய வேண்டும் இதனுடாகவே நம்மை நாம் கட்டி எழுப்ப முடியும்.புலம் பெயர்ந்துள்ள நமது குரலே ஈழத்தில் வாழ்கின்ற தமிழ்ச் சமுகத்தின் பலம் என்பதால் தொடர்தும் நமது குரல் நம்து மக்களூக்காக் ஒலிக்கட்டும்.
அலெக்ஸ்
இந்தப் பிரச்சனைக்கும் உங்கள் இடுகைக்கும் தொடர்புண்டா?
இது பாரதூரமான பிரச்சனைகட்குக் கொண்டு செல்லக் கூடிய சம்பவம்.
மயூரன், வோட்டர் ஆகியோரின் கருத்துகள் விரிவாகப் பேசப் படவும் பரமா, மணியம் ஆகியோரின் முரண்பாடான ஆனால் முக்கியமான கருத்துக்கள் விவாதிக்கப் பட வேண்டியவுமான இடத்தில் உங்கள் இடுகை ஒரு முன்யோசனையற்ற திசைதிருப்பல் இல்லாவிடின் அச் சம்பவத்தை நியாயப்படுத்தும் நோக்கிலானதாகவே தெரியும்.
உங்களுக்கு ஒரு நிலைப்பாடு இருந்தால் தயங்காமல் சொல்லலாமே!
துக்ளக் ஆசிரியர் சோவைப் பற்றி தாங்கள் என்ன சொல்கிறீர்கள்?
இந்து மதம் குறீத்து நிறய தெரிந்து வைத்துள்ளார் அதற்காகவே நான் துக்ளக் படிக்கின்றேன்.தமிழ் வளம் கொண்ட எழுத்தாளர்.அவரது எங்கே பிராமணன் தொடரை விடாமல் பார்த்தேன்.சிறந்த அறீவாளீ.துக்ளக் படிப்பதால் சொல்கிறேன் சோ வின் பெருமை அவரின் இறப்பின் பின்னரே உணரப்படும்.
அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று சொல்லுங்கள் அப்போது சொல்கிறேன்.
எனக்கு பிடித்த ஓர் நடிகர், விமர்சகர்.
அலெக்ஸ் நன்றி
உங்களுக்கும் எனக்கும் பிடித்த பிடிக்காத பல விடயங்கள் உள்ளன அவற்றைப் பற்றிய நம் எண்ணங்களை நாமேன் இங்கு பரிமாற வேண்டும்?
குறிப்பிட்ட ஒரு விடயம் இடப்படுமிடத்துக் கருத்துக்கள் விடயத் தொடர்பாக இருப்பது நல்லது.
சோ. ராமசாமியைப் பற்றி இவ்விடத்துக் கருத்துரைக்க எனக்கு ஒரு நியாயமோ தேவையோ தெரியவில்லை.
Shiva, விடயத்திற்கு வருவோம்.
இந்தச் செய்திக்கும் எனது இடுகைக்கும் தொடர்புண்டா என்று கேட்கிறீர்கள்.
ஆம்,
செய்தி:
தென்னிலங்கை வியாபாரிகளின் விற்பனை நிலையங்கள் இனந்தெரியாத நபர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.
இடுக்கை:
1 ) யாழ் நாயன்மார்கட்டு செம்மணி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
2 ) யாழ் குடாநாட்டில் கொள்ளைச் சம்பவங்களுக்காக கொலைசெய்யப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
யாழ் பத்தாவத்தை இளவாலைப் பகுதியில் கொள்ளையிடும் பொருட்டு நேற்றுமுன்தினம் இவ்வாறானதொரு கொலைச் சம்பவம் இடம்பெற்றிருப்பது, 44 வயதுடைய இந்துமதி குணரட்னம் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
– எல்லாம் சட்டத்திற்கு அப்பாற்பட்ட வன்முறைகள்.
இரு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தீ வைத்த சம்பவ இடத்திற்கு வந்த யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இனி இவ் மூன்று சம்பவங்களும் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாத, தீ வைத்தவர்களை கண்டுபிடிக்க முடியாத சம்பவங்களாகுமே ஆகும். இதுதான் இன்றைய எம் நிலை. எல்லாம் செய்திகளாக வருகின்றன. ஆனால் குற்றவாளிகள் ஒரு போதும் கண்டுபிடிக்கப்படுவதில்லை, இவ் வன்முறைகள், இனம்தெரியாதோர் என்பவர்களால் நடாத்தப்படும் கொலைகள் தொடந்துகொண்டே இருக்கின்றன.
இதுதான் ஒற்றுமை… தொடர்பு.
“இது பாரதூரமான பிரச்சனைகட்குக் கொண்டு செல்லக் கூடிய சம்பவம்” என்று கூறுகிறீர்கள். ஏன் என்று சற்று விளக்கமாக கூறுங்கள். நானுன் எதிர்காலத்தில் இப்படியான மனித விரோதமான செய்திகளை சக வாசகர்களுடன் தவிர்த்து மகிழ்சிக் கடலில் வைக்கக்கூடிய சினிமா செய்திகள் சாமியார் தேவானந்தா போன்ற செய்திகளைப் பகிரலாம்.
“மயூரன், வோட்டர் ஆகியோரின் கருத்துகள் விரிவாகப் பேசப் படவும்…… பரமா, மணியம் ஆகியோரின் முரண்பாடான ஆனால் முக்கியமான கருத்துக்கள் விவாதிக்கப் பட வேண்டியவுமான இடத்தில்….. உங்கள் இடுகை ஒரு முன்யோசனையற்ற திசைதிருப்பல் இல்லாவிடின் அச் சம்பவத்தை நியாயப்படுத்தும் நோக்கிலானதாகவே தெரியும்” என்று கூறுகிறீர்கள். பரமா, மணியம் ஆகியோரின் முரண்பாடான ஆனால் முக்கியமான கருத்துக்கள் விவாதிக்கப் பட வேண்டியவுமான இடத்தில் என்னுமிடத்தில் என்ன முக்கியமான கருத்துக்கள் என்று கூறுவீர்களா?
அத்துடன் என் இடுகை ஒரு முன்யோசனையற்ற திசைதிருப்பல் இல்லாவிடின் அச் சம்பவத்தை நியாயப்படுத்தும் நோக்கிலானதாகவே தெரியும், என்று கூறுகிறீர்கள். அது என்ன முன்யோசனையற்ற திசைதிருப்பல்?
“அச் சம்பவத்தை நியாயப்படுத்தும் நோக்கிலானதாகவே தெரியும்” என்றும் கூறுகிறீர்கள். ஓர் செய்தியை சக வாசகர்களுடன் பகிர்வது எப்படி அச் சம்பவத்தை நியாயப்படுத்துவதாக அமையும்?
சரி கடைசியாக எனக்கு ஒரு நிலைப்பாடு இருந்தால் தயங்காமல் சொல்லலாமே! என்கிறீர்கள். இதில் என் நிலைப்பாடு முக்கியமாக நடக்கும் மனித உரிமை மீறல்களை….. நான் அறிபவற்றை சக வாசகற்குளுடன் பகிர்வது.
இனி இதற்கும் தாங்கள் கேட்டதற்கும் என்ன தொடர்பு என்று கேட்காதீர்கள்…. கேட்டால் அதற்கு பின் பதில் தருகிறேன்.
பல சமயங்களில் தமிழ் வன்முறையாளர்கள் அப்பாவி முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் கொன்றும் துன்புறுத்தியும் செயற்பட்ட நேரங்களில் அவை தவிர்க்கப் பட வேன்டும் என்றும் கண்டிக்கப் பட வேன்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.
அப்போதிலெல்லாம் முஸ்லிம் ஊர்காவற் படையினர் அப்படிச் செய்தார்களே சிங்களப் படையினர் இப்படிச் செய்தார்களே என்ற பதில்கள் வரும்.
அவற்றைக் கடந்த 20 ஆண்டுகட்கு மேலாகக் கேட்டு வந்ததனாலேயே உங்கள் இடுகை கவலை தந்தது.
தமிழருக்குக் கேடாக எதிர்காலத்தில் அமையக்கூடியதும் தவிர்க்கக் கூடியதுமான தமிழரின் ஆளுமைக்குட்பட்ட விடயங்கள் பேசப்படும் போது தமிழருக்கெதிரான நிகழ்வுகள் நினைவூட்டப் படும் நோக்கம் பற்றி நாம் அறிவோம்.
உங்கள் நிலைப்பாட்டை விளக்கியதற்கு நன்றி.
பரமா, மணியம்
விவாதத்தின் சூட்டில் பிரச்சனை பற்றியும் அதன் பாடங்கள் பற்றியும் நாம் கவனமிழக்கக் கூடாது.
எந்தப் போரட்டமும் எடுத்தஎடுப்பில் சரியான நிலைப்ப்பாட்டை வந்தடைவதில்லை. ஓற்றுமை என்பது தானாக நிகழ்வதில்லை.
நாம் வரலாற்றிலிருந்து கற்கவேண்டியவர்கள். எந்தக் கனதியான விவாதமும் பயனுள்ளதே. தவறுகளினூடாகவே சரியானது வந்தடையப் படுகிறது. போராடியே ஒற்றுமை வெல்லப் படுகிறது.
சில விடயங்களைச் சினக்காமல் அசட்டை செய்வதுநல்லது.
நேற்றைய தினம் துணைவியில் ஒரு இல்லத்திற்கு சென்றிருந்தேன். வன்னியுத்தத்தில் இருந்தும் தப்பித்துவந்த குடும்பத்தை சந்தித்தேன். தொழில் தேடி மூன்று வருடத்துக்கு முன் வன்னி சென்ற குடும்பம். குடும்பத்தலைவரின் தொழில் மேசன் தொழில். வட்டுக்கோட்டை தொழில் நுட்பக்கல்லூரியில் மேசன் தொழிலை பயின்று இருக்கிறார். தொழில் தேடி சென்று தமது இருப்புக்களையெல்லாம் வித்துச் சுட்டு எல்லாவற்றையும் இழந்து உயிருடன் தப்பித்து இராமநாதன் முகாமில் தங்கி தமது மனைவியின் தாயாரின் இல்லத்திற்கு மீண்டிருக்கிறார்.
நான் சொன்னேன் நல்லூர் முருகன் வீதியில் கடைபோட்டிருந்த தென்னிலங்கைப்பிரசைகளின் கடைகளை யாரோ தீ வைத்துக்கொழுத்திவிட்டார்கள். பின்பு அதை கண்டு பரவாமல் அணைத்துவிட்டார்கள் என்று.
அப்போது அந்த வன்னியிலிருந்து மீண்டுவந்த பெண்மணி வேதனைப்பட்டார், அவர்களும் கஸ்டத்தின் மத்தியில் தானே இங்குவந்து கடைபோட்டார்கள். இப்படிச் செய்யலாமோ. இவ்வளவு அழிவுக்குப்பின்னும் எங்கடை சனம் திருந்தேல்லையோ என்று வேதனைப்பட்டார். திரும்பவும் சண்டையைத் தொடங்குறதுக்கோ உந்த வேலையோ என்று கூறினார். யாழ்ப்பாணத்திலேயே வாழ்ந்த தாயாரும் அதையே தான் கூறினார்.
எப்போது தான் எம்மவர்கள் திருந்துவார்கள்