மட்டக்களப்பு, கல்லடியில் இராவணன் என்ற தென்னிந்திய தமிழ் திரைப்படம் வெளியிடப்பட இருந்த சாந்தி திரையரங்கு இனந்தெரியாத நபர்களால் கடந்த நள்ளிரவு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசுக்கு ஆதரவான இராணுவத்தரப்பே இச்செயலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை நேற்று தென்னிந்திய தமிழ் சினிமா எதிர்ப்பு வாரம் என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரம் ஒன்று மட்டக்களப்பில் உள்ள திரையரங்குகளுக்கு இராணுவத்தினராலும் இராணுவத்தினருடன் இணைந்து செயற்படும் குழுக்களாலும் விநியோகிக்கப்பட்டிருந்தது.
தமிழிலும் சிங்களத்திலும் பிரசுரிக்கப்பட்டிருந்த அந்த துண்டுபிரசுரத்தில் அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஐஐகுயு இந்திய சர்வதேச திரைப்பட விழாவை இலங்கையில் நடைபெற விடாது தடுத்து இலங்கை ஜனாதிபதியையும் இலங்கை அரசையும் அவமானப்படுத்த முனைந்த தென்னிந்திய தமிழ் சினிமா சமூகத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கவும், இந்திய சினிமா வியாபாரம் இலங்கையிலும் தங்கியுள்ளது என்பதை காண்பிக்கவும் எதிர்வரும் 18.06.2010 தொடக்கம் 30.06.2010 வரை வடகிழக்கில் தென்னிந்திய சினிமா எதிர்ப்பு வாரமாக பிரகடனம் செய்து 18.06.2010 தொடக்கம் 30.06.2010 வரை வடகிழக்கு சினிமா அரங்குகளில் இந்திய தமிழ் படங்களை திரையிடுவதை தவிர்த்து எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு படமாளிகையினரையும் ரசிகர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இராணுவத்தினரால் வெளியிடப்பட்ட இந்த துண்டு பிரசுரத்தின் கீழ் சுதந்திர இலங்கையின் தமிழர்கள் என எழுதப்பட்டிருந்தது.
இந்நிலையில் மட்டக்களப்பு சாந்தி திரையரங்கில் இராணுவன் என்ற தென்னிந்திய தமிழ் திரைப்படம் திரையிடப்பட இருந்தது.
இதை தடுக்கும் முகமாகவே திரையரங்கிற்குள் கடந்த நள்ளிரவு புகுந்த சிலர் திரையரங்கின் திரைக்கு தீவைத்துள்ளனர். இதனால் திரை முற்றாக எரிந்துள்ளது.
சுதந்திரம் மறூக்கப் ப்ட்ட இலங்கையில் தமிழ்ருக்கு ஏது சுதந்திரம் இதில் சினிமா பார்க்கவும் தடையா தமிழனுக்கு? பொங்கி எழுந்து புயலாக் மாறீ போர்க்குண்ம் காட்ட மாட்டான் தமிழ்ன் என் எத்தனை கால்ம்தான் நினைத்துக் கொண்டிருப்பர்,ஒரு நாள் வரும் ந்ம் உற்வெல்லாம் உண்ர்வு கொண்டு எழும்.
தமிழர்களின் சிந்தனை ஆற்றலை மந்தப் படுத்திச் சீர்குலைக்கும் தமிழக சினிமாவுக்கு மட்டுமல்ல, சின்னத் திரைக் குப்பைகளுக்கும் தடை போடுவர் என்றால் தமிழ் மக்களுக்கு அது ஒரு பெரிய சேவையாக இருக்கும்.
அதைச் செய்பவன் எதிரி என்றாலும் நம் நன்றிக்குரியவனே.
இலங்கைன் முன்னேற்றத்துக்கு ஆப்பு வைத்த சுயநல தமிழ் நாட்டு திரைஇனருக்கு மானமுள்ள இலங்கை தமிழனின் பதில். அந்த IIFA நிகழ்வுக்கு வந்த ஒபரை ஒருவரினால் கொடுக்கப்பட்ட 50 மில்லியன் போல் எத்தனையோ நன்மைகள் வந்திருக்கும். இலங்கை தமிழனை ஓடாண்டிகளாக வைத்திருக்க விரும்பும் தமிழர்களுக்கு இது ஒரு சாட்டை அடி. அங்கு கனடாவில் எ ஆர் ரகுமானும் , புலி வ்வால் புடிக்கும் வானொலிகளின் நட்சத்திர விழாவும் எட்டுத்து கூத்து அடிப்பது எந்த வகையல் நியாயம்.(உங்கள் நியாயப்படி வன்னிமக்கள் அராதுயரில் இருக்கும் பொது ) ஒபரையும் சூரியாவும் நடித்த படத்தை மட்டும் தமிழ் நாட்டில் “சூரியா தம்பிக்காக ஒபரையை இந்த தடவை மன்னித்து ஒபரைன் படத்தை திரை இட அனுமதிப்போம் ” என்கிறார் தற்போதைய தமிழர்களின் கேடையம் , “வாரிசு” சீமான். உலக தமிழனே கேனப்பயல்கள் ஆனாலும் இனி இலங்கை வாழ் தமிழன் மசிய மட்டானுங்கோ.
உங்களுக்குத் தெரிந்த ஒரே முன்னேற்றப் பாதை இந்தியாவிடம் பிச்சை எடுப்பது தானா?
உங்களுக்குத் தெரிந்த ஒரே முன்னேற்றப் பாதை ? Kill.. hate.. bloodbath.. what else ?.
தல பிடிச்ச வெள்ளைக்கொடி கூட வெளிநாடில் தமிழன் வெள்ளைக்காரன் திண்ட பீங்கானை கவுவி உழைத்த காசில் அவர்கள் போட்ட பிச்ச்சைல் எடுத்ததாக சொலராங்கள்ளே ? உண்மையா ?
இந்த “XXX” என்பவர் ஒரு விடுதலைப் புலி? போராளியாக இருந்தால் நான் அதிர்ச்சி அடைகிறேன்!.
என்னுடைய அனுபவ விரக்தியை நான் “அரசியல் கருத்தாக” மாற்ற விழைகிறேன்.இந்த “XXX” அதுபோல் செய்ய வேண்டும் – இன்னும் காட்டுக்குள் இருப்பதாக கருதிக் கொள்ளக் கூடாது!.
நான் கேள்விப் பட்டவரை,”ஏகபோக அரசாங்கத்திற்கு?”,கனரக ஆயுதங்களை,ஆயுத விற்பனையால் இலாபமடைந்த நிறுவனங்கள்,தங்களுக்கு இந்தியா – இலங்கையில் மேல்மட்டத்தில் இருந்த செல்வாக்கால்,முல்லை தீவு கடற்கரை வரை வந்து கையளித்துதானே தவிர,அது,”கடத்தல் மன்னர்களின்” திறமையினால் அல்ல!.
“இந்திய எதிர்ப்புணர்வு” என்பதற்கு சரியான விளக்கங்கள் முன் வைக்க வேண்டும்!.”தோட்ட காட்டன்” பாணியில் அரற்றக்கூடாது!.– ஜெய்ஹிந்த்!.
எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள(போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை.குர்ஆன் (8:53)
அப்துல்லா உஙள் கருத்துக்களூடன் உடன்படாதவர்களுக்கு புலி முத்திரை குத்துவது வசதியானது..
வலிந்து புலிகளைத் தாக்கிக் கொண்டிருக்கிறவர்கட்கும் மூர்க்கத்தனமான புலி ஆதரவாளர்கதும் இடைவெளி சொற்பமே.
ஒவ்வொரு அயற் குறுக்கீடும் ‘உதவியும்’ முழுநாட்டுக்கும் கேடானது என்பது அனுபவத்தில் விளங்காவிட்டால் எங்கே போய்ப் பிச்சை எடுப்பது என்று தான் தேடிக் கொண்டிருக்க வேன்டும்.
முப்பது வருடமாக சீரழிக்கப்பட்ட நாட்டில் ஒரு தடவைலயே லட்ச்ச கணக்கான
அகதிகள் அன்ன பொது …வெளிநாட்டில் பிட்சாவை ஒரு கையுளும் பியர் போத்தலை மறு கையுளும் வைத்துக்கொண்டு “சிங்களவன் ஒண்டும் செய்றான் இல்லை” என்று கத்தும் பொது வேற வழி ? வெட்கமில்லையா இப்படி சொல்ல ?
உங்கள் பித்ஸாவும் உங்கள் பிரியாணிப் பொதியும் உங்கள் பியர்ப் போத்தலும் உங்கள் பிரச்சனை.
அவைக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லை.
உளறல்களுக்கு அர்த்தம் தேட நான் முயலப் போவதும் இல்லை.
அமெரிக்க,பிரித்தானிய,இந்திய ஏன் உலகத்தின்ரை கண்ணுக்கே முஸ்லீம் என்றால் பயங்கரவாதி, மதவாதி, தீவிரவாதி எங்கை குண்டு வச்சுடுவானோ என்று ஒரே அச்சம். லண்டனில் சிலவருடங்களுக்கு முன்னர் ஆசிய இனத்தவர் பையுடன் பஸ்ஸிலோ ரெயினிலோ ஏறினால் ஏனய பயணிகள் அச்சத்துடன் பஸ்ஸிலிருந்து முண்டியடித்துக்கொண்டு இறங்கிய சம்பவங்கள் பல உண்டு. அதற்கு மேலாக தலைப்பாகையுடன் காட்சிதரும் சீக்கிய இனத்தவர்களை “பின் லாடான்” என தெருவில் நையாண்டி செய்த சம்பவங்களும் போத்தலால் தாக்கப்பட்ட சம்பவங்களயும் சொல்லிக்கொண்டே போகலாம்…அதே போலத்தான் அப்துல்லா அவர்களுக்கும் பார்க்கிறவனெல்லாம் கொலையாளி,உங்களுக்குத் தெரிந்த ஒரே முன்னேற்றப் பாதை ? Kill.. hate.. bloodbath.. what else ?.
தல பிடிச்ச வெள்ளைக்கொடி கூட வெளிநாடில் தமிழன் வெள்ளைக்காரன் திண்ட பீங்கானை கவுவி உழைத்த காசில் அவர்கள் போட்ட பிச்ச்சைல் எடுத்ததாக சொலராங்கள்ளே ? உண்மையா ?
{mosimage}தீவிரவாதத்தை முஸ்லிம்களின் ஏகபோக உரிமையாக சித்தரிக்கும் போக்குக்கு உலகப்புகழ் பெற்ற இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் ஜாகிர் நாயக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய ஆய்வு மையம் (Islamic Research Foundation) சார்பில் தீவிரவாதம் முஸ்லிம்களின் ஏகபோக உரிமையா? என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட கருத்தரங்கில் டாக்டர் ஜாகிர் நாயக் பேசினார்.
சமீப காலமாக உலகம் தீவிரவாதிகளின் கொடூரக் கொலைகளைக் காணும் நேரடி சாட்சியாக விளங்கி வருகிறது. அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். இந்நிலையில் முஸ்லிம்கள் மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் நோக்கில் கருத்துக்கள் புனையப்படுகின்றன. எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளல்லர். ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்கள்தான் என்ற கருத்து வலிந்து திணிக்கப்பட்டு முஸ்லிம்களை சமூகத்தில் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எந்த மதமும் தீவிரவாதத்தை ஊக்கப்படுத்தவில்லை. இஸ்லாம் என்பதன் பொருளே அமைதி, இறைவனுக்கு முழுமையாகத் தன்னை அர்ப்பணித்தல் ஆகியவை ஆகும்.
யாராவது ஒருவர் முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம் அல்லாதவராக இருப்பினும் அவர் முஸ்லிமையோ, முஸ்லிம் அல்லாதவரையோ கொன்றால் முழு மனித சமூகத்தையும் கொன்றவரைப் போன்றவராவார். (அதாவது அத்தகைய மாபாதகச் செயலை செய்ததற்குரிய தண்டனையை இறைவனிடமிருந்து பெறுவார்.) அதோடு ஒருவர் ஒரு மனிதரைக் காப்பாற்றினால் முழு மனித சமூகத்தையும் காப்பாற்றியவர் போலாவார் என இஸ்லாம் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய டாக்டர் ஜாகிர் நாயக் நீதி மறுக்கப்படும் நிலையே தீவிரவாதத்தின் மூல காரணம் என்றார்.
பாலஸ்தீனர்களை தீவிரவாதிகள் என அழைக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் நாட்டை மீட்கப் போராடுகிறார்கள். LTTE, பிரிட்டனில் செயல்படும் IRA, தென்அமெரிக்காவில் செயல்படும் Lord’s Salvation Army போன்றவை குழந்தைகளைக் கூட தீவிரவாதச் செயல்களுக்கு பயன்படுத்தியதை / பயன்படுத்துவதை டாக்டர் ஜாகிர் நாயக் சுட்டிக் காட்டினார்.
மேற்கு ஊடகங்கள் முஸ்லிம்களை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். LTTE இயக்கம் மனித வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவது குறித்தோ, ULFA தீவிரவாத இயக்கம் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுவது குறித்தோ கண்டுகொள்ளாத ஊடகங்கள் காஷ்மீர் விஷயங்களை மட்டுமே பெரிதுபடுத்துகிறார்கள்.
நேர்மையான லட்சியங்களுக்கு தவறான வழிகளை மேற்கொள்ளும் செயலை இஸ்லாம் எவ்விதத்திலும் நியாயப்படுத்தவில்லை. மக்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளக்கூடாது. கடந்த சில வருடங்களாக இந்தியா எண்ணற்ற மதக்கலவரங்களைச் சந்தித்துள்ளது. அரசியல்வாதிகள் தங்கள் ஓட்டு வங்கியைக் காப்பாற்ற பிரித்தாளும் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றனர். தீவிரவாதம் அரசியல்வாதிகளின் ஏகோபித்த உரிமையானது. மக்கள் அனைவரும் அமைதியாக வாழவே விரும்புகின்றனர். அரசியல்வாதிகள் வெறுப்பினை ஊட்டி வளர்க்கின்றனர். அதற்கு சமீபகால உதாரணமாக அயோத்தி பிரச்சினையை உருவாக்கி பாபரி மஸ்ஜிதை தகர்த்ததைக் கூறலாம்.
மும்பை காவல்துறை முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பெற அவர்களுக்கு கடிதங்கள் அனுப்பியதைப் பாராட்டுகிறேன். நீதித்துறையும் சமீப மும்பை நிகழ்வு தொடர்பான வழக்கில் பாரபட்சமற்ற முறையில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இஸ்லாம் முஸ்லிம் அல்லாதவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. சமய நல்லிணக்கம் அனைத்து சமூக மக்களிடமும் உருவானால் இந்தியா நிச்சயம் மாபெரும் வல்லரசாக உருவாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உலகின் எந்த மூலையில் தீவிரவாத வன்முறைத் தாக்குதல்கள் நடந்தாலும், முஸ்லிம் அமைப்புகளை நோக்கியே கைகாட்ட நாம் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். இடிக்கப்பட்டது பாபர் மசூதிதான் என்றாலும், இடித்தது இந்து வெறியர்களே எனினும், அவப்பெயர் என்னவோ முஸ்லிம்களுக்குதான்! இந்து – முஸ்லிம் மதக்கலவரத்தில் இந்துக்களால் சூறையாடப்படுவது முஸ்லிம்களின் வாழ்வியல் ஆதாரங்கள், பறிக்கப்படுவது முஸ்லிம் உயிர்கள், பலாத்காரம் செய்யப்படுவது முஸ்லிம் பெண்கள், கருவோடு சிதைக்கப்படுவது முஸ்லிம் சிசுக்கள், உருக்குலைக்கப்படுவது இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்கள்தான்… எனினும், இந்தியாவில் முஸ்லிம்களே பயங்கரவாதிகள்!
பட்டாசு வெடிக்கிற சத்தம் கேட்டாலும் குண்டு வைத்துவிட்டார்களோ எனத்தெருவில் கூடியிருக்கும் முஸ்லிம் குடும்பத்தை சந்தேகப்பட வேண்டுமென்ற இந்துத்துவவாதிகளின் மூளைச்சலவையில் நாம் தேர்ந்திருக்கிறோம். இந்து சிறுவனுக்கும் முஸ்லிம் சிறுவனுக்கும் சண்டை வந்தால்கூட, நமது நியாயம் இந்து சிறுவனுக்கே பரிந்து பேச வைக்கிறது. குல்லாவும் தாடியும் நீள அங்கியும் முஸ்லிம்களின் அடையாளம் என்பதை மீறி, அவை தீவிரவாதத்தின் சின்னங்களாக்கப்பட்டிருக்கின்றன. துக்கத்திலும் துக்கம்! அவமானத்திலும் அவமானம்! இப்படியாகத்தான் இந்தியாவின் ஜனநாயகம், முஸ்லிம்களுக்கெதிரான சர்வாதிகாரமாகத் தழைத்தோங்கியிருக்கிறது. விளைவு, இன்று தலித் மக்களைப் போலவே பின்தங்கிய வாழ்நிலையில் முஸ்லிம்கள் உழல்கின்றனர்.
எந்நேரமும் வேவு பார்க்கும், எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும், அடித்து உதைக்கும், சிறைப்படுத்தும் கணவனுடன் மனைவியே வாழ முடியாது என்ற சூழலில் – முஸ்லிம்கள் என்ற சமூகத்தை, இந்நாட்டின் பூர்வீகக் குடிமக்களை, அவர்கள் சார்ந்த ஒரு மதத்திற்காகவே இந்த நாடு தீவிரவாத முத்திரை குத்தி வதைக்குமெனில், எப்படி அச்சமுதாயம் வளர்ச்சியடையும்? மக்கள் தொகையில் 13.4 சதவிகிதம் இருக்கும் முஸ்லிம் குடிமக்களுக்கு, நமது ஜனநாயகம் என்ன செய்திருக்கிறது என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் முக்கியக் கேள்வி. சமூக, பொருளாதார, கல்வித் தகுதியிலும் வேலைவாய்ப்புகளிலும் அவர்களின் நிலை குறித்துப் பேச, நாடு விடுதலையடைந்து இந்த அறுபதாண்டுகளில் இப்போதுதான் நமக்கோர் வாய்ப்பேற்பட்டிருக்கிறது, சச்சார் குழு வாயிலாக.
இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையில் ஏழு பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு 9.3.2005 அன்று நியமித்தது. ஓராண்டுக்கும் மேலாக நடத்தப்பட்ட தீவிர ஆய்வுக்குப் பிறகு அண்மையில் தனது அறிக்கையை அக்குழு பிரதமரிடம் ஒப்படைத்தது. இவ்வறிக்கை 30.11.2006 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதில் பொதிந்திருக்கும் கசப்பான உண்மைகள் ஜனநாயகக் கட்டமைப்பில், சமத்துவத்தில், மனித உரிமையில் நம்பிக்கையுள்ளவர்களை உறைய வைப்பதாக இருக்கிறது. இந்துக்களாக்கப்பட்ட தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர்தான் இந்த நாட்டின் அடிமைக் கட்டமைப்பை உடைக்க முடியாமல் பின்தங்கியுள்ளனர் என்றால், சமூகப் புறக்கணிப்பின் நீட்சியாக முஸ்லிம்களும் வதைபடுகின்றனர் என்ற உண்மையை சச்சார் குழுவின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
மனித சமூகத்தை நாகரிகப்படுத்துவதும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதுமான கல்வித் தகுதியில், முஸ்லிம்கள் மிக மிகப் பின் தங்கியுள்ளனர். 1965 இல் 72 சதவிகிதமாக இருந்த நகர்ப்புற முஸ்லிம் மாணவர் சேர்க்கை 2001 இல் 80 சதவிகிதமாகியிருக்கிறது. ஆனால், நகர்ப்புற தலித் மாணவர்களின் எண்ணிக்கையோ 90 சதமாக உயர்ந்திருக்கிறது. 36 ஆண்டுகளில், கிராமப்புற, நகர்ப்புற, ஆண்-பெண் என எந்தப் பிரிவை எடுத்துப் பார்த்தாலும் முஸ்லிம்களிடையே கல்விப் புரட்சி என எதுவும் ஏற்படவில்லை. கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமூகம், மற்ற துறைகளில் எப்படி வளர்ச்சி அடையும்? பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்களுக்கெதிரான பாரபட்சங்கள் ஒருபுறமும், வறுமையில் உழலும் குடும்பச் சூழல் மறுபுறமும் சேர்ந்து பள்ளிக் கல்வியைக்கூட முடிக்க முடியாத அவல நிலைக்கு முஸ்லிம்களைத் தள்ளிவிட்டது.
தேர்தல் அறிக்கைகளைப் பார்த்தால் அசந்து போவோம். சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் பற்றி வாய் கிழியப் பேசும் அரசியல்வாதிகள், தேர்தல் முடிவுகளோடு வாக்குறுதிகளுக்கும் முடிவு கட்டிவிடுகின்றனர். எந்த மாநிலமும் இடதுசாரிகள் ஆளும் மாநிலங்கள் உட்பட, எங்கும் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கேற்ப அவர்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்கிறது சச்சார் அறிக்கை. எடுத்துக்காட்டாக, மேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால், அதன் மொத்த மக்கள் தொகையில் 25.2 சதவிகிதம் முஸ்லிம்களே! முப்பது ஆண்டுகளாக இடதுசாரிகள் அங்கே கோட்டை கட்டி கொடியை நாட்டி ஆட்சி புரிகிறார்கள். எனினும், மற்ற மாநிலங்களைவிட மிகக் குறைந்த சதவிகிதமே அரசுப் பணிகளில் முஸ்லிம்கள் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அதாவது, வெறும் 4.2 சதவிகிதம்தான். பீகாரிலும் உத்திரப்பிரதேசத்திலும் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப மூன்றில் ஒரு பங்குகூட, அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. கர்நாடகத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 12.2 சதவிகிதமாக இருப்பினும், அரசு வேலைகளில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் 8.5 சதவிகிதம்தான் உள்ளது. குஜராத்தில் 9.1 சதவிகிதம் மக்கள் தொகைக்கு அளிக்கப்பட்டுள்ள பங்கு 5.4 சதவிகிதம் மட்டுமே. சிறுபான்மையினச் சகோதரர்கள் என வாயாற அழைத்தே ஆட்சியை மாறி மாறிப் பிடிக்கும் தமிழகத்திலோ 5.6 சதவிகிதம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால் வெறும் 3.2 சதவிகிதம் பிரதிநிதித்துவமே உள்ளது. எல்லா மாநிலங்களிலும் நிலைமை இதேதான்.
முஸ்லிம்களுக்கு உடல் ரீதியான பாதுகாப்பு உத்திரவாதத்தை அளித்திருக்கும் மேற்கு வங்கத்திலாகட்டும், அரசியல் ரீதியான அங்கீகாரத்தை வழங்கியிருக்கும் பீகார் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகட்டும், வேலைவாய்ப்பிலும் பொருளாதார ரீதியிலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை விளக்குகிறது. பொதுப் பணித்துறையும் இந்தப் பாகுபாட்டிற்கு விதிவிலக்கல்ல. அதிகபட்சமாக கேரளாவில் 9.5 சதவிகித முஸ்லிம்கள் உயர் பதவிகளில் உள்ளனர். மேற்கு வங்கத்தில் பூஜ்யம். மற்ற மாநிலங்களில் பாதிக்குப் பாதி என்ற அடிப்படையில்கூட முஸ்லிம்களின் பங்களிப்பில்லை.
கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, உள்துறை என மாநில அரசுகளின் எல்லா துறைகளிலும் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதுதான் சச்சார் குழுவின் முக்கியக் கண்டுபிடிப்புகளில் ஒன்று. நீதித்துறையும் முஸ்லிம்களுக்கு அநீதியே இழைத்துள்ளது. சச்சார் குழு தனது ஆய்வை மேற்கொள்வதற்காக கீழ் நீதிமன்றங்களில் அடிமட்ட ஊழியர்கள் தொடங்கி நீதிபதிகள் வரை கணக்கெடுப்பு நடத்தியதில், முஸ்லிம்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகவே காண முடிந்தது. முஸ்லிம்கள் அதிகமுள்ள 12 மாநிலங்களில் நீதித்துறையில் வெறும் 7.8 சதவிகிதம்தான் உள்ளனர். மக்கள் தொகையில் 66.97 சதவிகித முஸ்லிம்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில்கூட, 48.3 சதவிகித பிரதிநிதித்துவமே நீதித்துறையில் அளிக்கப்பட்டிருக்கிறது. வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஆந்திராவில் மட்டுமே மக்கள் தொகைக்கு அதிகமான எண்ணிக்கையில் முஸ்லிம்கள் நீதித் துறையில் உள்ளனர்.
ஒரு முஸ்லிம் நீதிபதியையோ, வழக்கறிஞரையோ அவர்களின் பதவியைக் கொண்டு பார்க்காமல் முஸ்லிமாகப் பார்க்கவே இச்சமூகம் தலைபடுகிறது. மதக்கலவரங்களை விசாரிக்க இதுவரை ஒரு முஸ்லிம் நீதிபதிகூட நியமிக்கப்பட்டதில்லை. காரணம், ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைத்தான் ஆதரிப்பார் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை. இதுதான் பாரபட்சத்தின் ஆணிவேர். இந்துக்கள் எல்லோரும் நீதிமான்கள் என்பது போலவும், முஸ்லிம்கள் மட்டும் மதவெறியர்கள் என்பது போலவும் ஒரு மோசமான கருத்து இங்கு விதைத்து வளர்க்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் அதிகளவில் முஸ்லிம்கள் ‘குற்றவாளி’களாகவும், இந்துக்கள் ‘நீதிமான்’களாகவும் உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஜெயலலிதா ஆட்சியின்போது நடந்த அநீதி ஒன்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இந்துத்துவவாதிகளும் அரசியல்வாதிகளுமே முஸ்லிம்கள் மீதான தவறான பார்வையை மக்கள் மத்தியில் உருவாக்கினர் என்பதற்கு, ஒரு சோற்றுப் பதமே அய்.ஏ.எஸ். அதிகாரி முனீர் ஹோடா மீது ஏவப்பட்ட மதவெறி ஆயுதம். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் நாசர் மதானிக்கு செயற்கைக் கால் பொருத்துவதற்காக அனுமதி கேட்டு அனுப்பப்பட்ட மனுவை பரிசீலித்து ஒப்புதல் அளித்தார் அப்போதைய உள்துறை செயலாளர் முனீர் ஹோடா. முஸ்லிம் என்பதாலேயே ஒரு தீவிரவாதிக்கு ஹோடா உதவ முன்வந்ததாக குற்றம் சாட்டப்பட்டதோடு, தீவிரவாதத்திற்கு அவர் துணை புரிவதாகவும் பழிசுமத்தி, பதவியில் இருந்து தூக்கியெறிந்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு முனீர் ஹோடாவுக்கு சிறப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இப்போதும் ஜெயலலிதா, ‘தீவிரவாதி தப்பித்துப் போக உதவிய ஹோடாவுக்கு உயர் பதவி வழங்கியிருப்பதாக’க் குற்றம் சாட்டுகிறார். ஓர் அய்.ஏ.எஸ். அதிகாரியை முன்னாள் முதல்வரே வீண் பழியால் மதவெறித் தாக்குதல் நடத்தும் சமூகத்தில், முஸ்லிம்கள் எப்படி முன்னேற முடியும்?
முஸ்லிம்கள் அவர்கள் மக்கள் தொகையைவிட அதிகம் பங்கு அளிக்கப்பட்டுள்ள ஒரே இடம் சிறைச்சாலை மட்டுமே. சச்சார் குழு தனது ஆய்வுக்காக மொத்தம் 1,02,652 கைதிகளை கணக்கில் எடுத்தது. அதில் பெரும்பாலானவர்கள் இழைத்த குற்றம் தீவிரவாதம் அல்ல. முஸ்லிம்கள் அதிகம் உள்ள 12 மாநிலங்களின் சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம்கள் பற்றின தகவல்களைத் திரட்டித் தருமாறு ஆய்வுக் குழு கேட்டுக் கொண்டது. மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம், பீகார், ஆந்திரப்பிரதேசம் ஆகியவை தகவல்களைத் தராததால் – மீதமுள்ள எட்டு மாநிலங்கள் கொடுத்த தகவல்களைக் கொண்டு குழு அறிக்கையை தயார் செய்தது. 10.6 சதவிகித முஸ்லிம்களைக் கொண்ட மகாராட்டிர சிறைச்சாலையில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையோ 32.4 சதவிகிதம். குஜராத்தில் பத்து சதவிகிதத்திற்கும் குறைவாகவே முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால், சிறைக் கைதிகளின் தொகையோ 25 சதவிகிதத்திற்கும் அதிகம். காஷ்மீருக்கு அடுத்ததாக முஸ்லிம் மக்கள் தொகையை அதிகம் கொண்ட அஸ்ஸாமிலும் இதே நிலைதான்.
முஸ்லிம்களுக்கு முறையாகச் சேர வேண்டிய உரிமைகளும் வாய்ப்புகளும் மறுக்கப்பட்டதால், முஸ்லிம்கள் அதிகளவில் வறுமையில் வாடுகின்றனர். வறுமையில் உழலும் நகர்ப்புற முஸ்லிம்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த தேசிய அளவைவிட ஒரு மடங்கு அதிகம். குற்றங்களுக்கு மிக அருகில் வசிப்பவர்கள் ஏழைகளே. குற்றமிழைக்கவில்லை என்றாலும் அருகில் வசிப்பதாலேயே அவர்கள் குற்றவாளிகளாக்கப்படுவது, அதிகாரவர்க்க நீதியின் நடைமுறை.
அடுத்து, காவல் துறையின் மதப்பாகுபாடு. முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதில் பெரும் பங்காற்றுகிறவர்கள் காவல் துறையினரே! ஒரு தலித்தை திருட்டு வழக்கிலும் கொலை வழக்கிலும் சிக்க வைப்பது, காவல் துறைக்கு எவ்வளவு எளிதான ஒரு செயலோ அதே போலத்தான் ஒரு முஸ்லிமை பயங்கரவாத, தீவிரவாதச் செயல்களுக்காக கைது செய்வதும். கலவரத்தைத் தூண்டினார், சமூக அமைதிக்குப் பங்கம் விளைவித்தார் என எந்த வழக்கிலாவது அவர்களை இணைத்து, விசாரணைக் கைதியாகவே நாட்களை நகர்த்த நேர்வது, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் பாரபட்சமின்றி வாடிக்கையாகிப் போயிருக்கிறது.
”முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் மறுக்கப்படுவதாலேயே குற்றங்களில் அவர்கள் எளிதாகச் சிக்குகின்றனர். குறைவான வாய்ப்புகள் வழங்கப்படும் இடத்தில் குற்றமே தொழிலாகிறது. முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற மனப்போக்கு காவல்துறையிடம் வேரூன்றியுள்ளது. ஏதாவது பிரச்சனையில் ஒரு முஸ்லிம் ஈடுபட்டால், காவல்துறை பத்து முஸ்லிம்களை கைது செய்கிறது. தேவையில்லாமல் பலரை கைது செய்துவிட்டு, பிறகு குற்றத்தை நிரூபிக்க முடியாமல் வழக்குகளைக் கிடப்பில் போடுகின்றனர்” என்கிறார் முன்னாள் அமைச்சர் சையது ஷகாபுதீன்.
அரசுப் பணிகளிலேயே புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு புலனாய்வுத் துறை, உளவுத் துறை, ராணுவம் போன்றவை வெறும் கனவுதான். உளவுத் துறையை (RAW) பொறுத்தவரை, 1969 தொடங்கி இன்று வரை அதன் பணியாளர்களின் எண்ணிக்கை பத்தாயிரம். உளவுப் பணியில் முஸ்லிம்களை சேர்க்கக் கூடாதென்பது, இந்த மதச்சார்பற்ற தேசத்தின் எழுதப்படாத சட்டம். தகுதி, திறமை, தேச பக்தியுள்ள ஒருவர் அவர் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த ஒரே காரணத்துக்காக தகுதியற்றவராகிறார். முஸ்லிம்களை உளவுத் துறையில் இணைத்துக் கொள்ள வேண்டுமென பல அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தபோதும், எழுதப்படாத அந்தச் சட்டத்தை மீற இதுவரை யாரும் துணியவில்லை.
ராணுவமோ, ‘எங்களின் ரகசியங்களை யாருக்கும் வெளியிட இயலாது’ என அரசால் நியமிக்கப்பட்ட சச்சார் குழுவுக்கே ‘தண்ணி’ காட்டிவிட்டது! புள்ளிவிவரங்களைத் தர மறுத்துவிட்டதால், ராணுவத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைக் கண்டறிய முடியவில்லை. மத்திய அரசுக்கும் கட்டுப்படாமல் ராணுவம் சர்வாதிகாரப் போக்கில் ஒரு தனி ராஜாங்கம் நடத்தி வருகிறது. ”புள்ளி விவரங்களைக் கொடுத்தால் அது பாதுகாப்புப் படையினருக்கு தவறான எண்ணத்தைத் தூண்டும். இதுவரை கட்டிக்காத்த ஒற்றுமையையும் உற்சாகத்தையும் சமத்துவ நீதியையும் அது குலைக்கும். ராணுவத்தைப் பொறுத்தவரை, இடஒதுக்கீட்டுக்கான தேசிய கொள்கை பொருந்தாது” என ராணுவம் வாதிட்டதால், சச்சார் குழுவுக்கு, உண்மை நிலவரம் மறுக்கப்பட்டது. ராணுவ உயர் பதவிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அறிந்து கொள்ளாமல், அரசால் அவர்களுக்கான நலத்திட்டத்தை வகுக்க இயலாது. இடஒதுக்கீடு ராணுவத்திற்குப் பொருந்தாது என்பதால்தான் அங்கு உயர் பதவிகள் அனைத்திலும் சாதி இந்துக்கள் நிறைந்திருக்கிறார்கள். இந்நிலையில், உண்மைத் தகவல்களைத் தர முடியாது என ராணுவம் மறுத்திருப்பது, இந்நாட்டின் சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிரான செயல். ரகசியத்தைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அங்கு நடக்கிற எந்த அநீதிகளையும் மக்களின் பார்வைக்கு வரவிடாமல் தடுத்து விடுகின்றனர். காஷ்மீரும், வடகிழக்கு மாநிலங்களும் இதற்கு நேரடி எடுத்துக்காட்டு.
முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார, சமூக நிலையைக் கண்டறிந்து மேம்படுத்தவே சச்சார் குழு நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ”மத்திய மாநில அரசுப் பணிகளிலும் பொதுப்பணித் துறையிலும், சிறுபான்மையினருக்குரிய பங்கு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும்” என பிரதமர் மன்மோகன்சிங் அண்மையில் தெரிவித்திருப்பது நல்ல அறிகுறி. முஸ்லிம்கள் மேம்பாட்டுக்காக வகுக்கப்பட்ட பதினைந்து அம
ஜாயா, அஹமட்,
உங்கள் கருத்துக்கள் முக்கியமானவையும் பயனுள்ளவையும்.
எனினும் அவற்றைப் பார்க்க வேண்டியோர் பலர் பார்க்க இந்த இடத்தில்வாய்ப்பில்லை.
தனிக் கட்டுரைகளாக எழுதினால் பயனிருக்கும்.
அயல்நாடான பாக்கிஸ்தானிலும் பங்களாதேஸ்ஸீலும் இந்துக்கள் வாழ்கிறார்கள் அவர்கள் படும் துயரங்கள் த்ரியாதா? அது ஒரு புறமிருக்கட்டும் நாட்டின் அதி உயர் பத்வியில் இருந்த 12 பேரில் நால்வர் முஸ்லீம்கள் என்பதை மறக்கவேண்டாம். பாக்கிஸ்தானிலோ பங்களாதேஸிலோ இலங்கையிலோ தலை கீழா நின்றாலும் குடியரசுத்தலைவராகவோ குப்பத்து(ஊர் தலைவர்) தலைவராகவோ ஒரு இந்து வரமுடியுமா???????????????????????????
தயவு செய்து குஜராத், பம்பாய் முஸ்லிம்-விரோத வன்முறைகளில் பத்தில் ஒரு பங்கு கொடுமையான ‘இந்து’ விரோத வன்முறை ஏதாவது 1947 பிரிவினைக்குப் பிறகு பாக்கிஸ்தானிலோ பங்களாதேஷிலோ, நடந்திருந்தால் சொல்லுங்கள். பாபர் மசூதி இடிப்புப் போல எதாவது நடந்திருந்தால் சொல்லுங்கள்.
புரளி கிளப்பும் இந்துத்துவவாதிகளின் அளவுக்கு அல்லது அதிலும் பெரிய குற்றவாளிகள் அவற்றைச் சிந்தனை இன்றிப் பரப்புவோராவர்.
இன்று இந்தியாவில் பல துறைகளில் முஸ்லிம்கள் தலித்துக்களிலும் கீழாக உள்ளனர்.
நம் முன்னுள்ள கேள்வி ஒரு முஸ்லிமோ தலித்தோ பெண்ணோ குடியரசின் பொம்மைத் தலைவராவது பற்றியதல்ல. சமூகம் நீதியானதா என்பதே நம் முன்னுள்ள கேள்வி.
ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்கள் மீதான கொடுமைகளை ஒரு வேளை அறிவீர்கள். அடுத்த குடியரசுத் தலைவர் ஒரு கிறிஸ்தவராகி விட்டால் அதைப் பற்றியும் நாம் மறந்து விடலமா?
இலங்கையில், கதிர்காமர் கொல்லப் படாமல் — ஒரு அலங்காரப் பதவியில் அல்ல — பிரதமராக்கப் பட்டிருந்தாலும் எதுவும் வேறுபாடு இருந்திருக்குமா?
பாக்கிஸ்தானோ பங்களாதேஷோ உன்னதமான நாடுகளல்ல. ஆனால் அவற்றை காட்டி இந்திய இனக் கொடுமைகளை நியாயப்படுத்தாதீர்கள்.