நேற்று வெள்ளிக்கிழமை -25.05.2012- பிற்பகல் 3.00 மணியளவில் இரண்டு பஸ் வண்டிகளில் பௌத்த துறவிகள் தலைமையில் சென்ற குண்டர்கள் தெஹிவளை மிருகக்காட்சிச் சாலைக்கு அருகில் உள்ள கல் விஹாரை வீதியிலுள்ள தருள் ரஹ்மான் மசூதி மீது கற்களைக் கொண்டு கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.
மசூதி அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். இத்தாக்குதல் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
இதனையடுத்து கல் விஹாரை முன்பாகக் கூடிய பிக்குகள் தலைமையிலான காடையர்கள், அங்கிருந்து ஊர்வலமாக மீண்டும் மசூதிக்கு முன்பாக வந்து அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரி மறியல் போராட்டம் ஒன்றை மேற்கொண்டார்கள்.
நிலைமைகள் கட்டுமீறிச் செல்வதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் உடனடியாகவே பொலிஸார் அப்பகுதிக்குக் குவிக்கப்பட்டு மசூதி மீதான தாக்குதலைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
தொடர்ந்தும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், தெஹிவளையில் பதற்ற நிலை காணப்படுகின்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் ஐம்பது தொடக்கம் நூறு பேர் வரை கலந்துகொண்டனர். மேலும் இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் இந்தப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், வேறு இடங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.








ஆகா! தலைவர் வழியில் உலகைப் பகைக்கிறார்கள். முடிவு காலம் மிக அருகில் வருகிறது. தலைவராவது 30 வருடம் தாக்குப்பிடித்தார் . இவர்கள்?
மதங்கள் மிருகதன்மை உடையது …மலசலத்தை அடக்கிவைப்பதும் மதத்தன்மைஜை அடக்கிவைப்பதும் வேருபாடில்லை.. புலி சிங்கம் அதைவிட மதங்கள் மிருகதன்மை உடையது அனைத்து மதங்களையும் அழிக்கவேண்டும்………பத்திரிகைகள் துனியவேண்டும்
A Shrine for Theravada Buddhism. These are Provincial Level Problems.
அல்லா உடைய ஒழியை அவர்களின் வாய்கலால் ஊதி அனைக்கநினைக்கின்றார்கள்.காfபிர்கள் வெறுத்தபோதிலும் அல்லா தனது ஒழியை புர்திசெய்தே தீருவான்.
ஆது தமூது கூட்டத்தார்களை காட்டிலும் இவர்கள் ஒன்னும் பெரிய பலசாலிகள் கிடையாது.
பள்ளிவாசலை அகற்றிவிட்டால் முஸ்லிம்களை இளங்கையைவிட்டும் அகற்றிவிடலாம் என்று நினைத்து விட்டார்கள் போழும்.
எங்கழுடைய உயிர் பூமியில் இருக்கும் வரை பள்ளியையிம்,எங்களையிம்
அகற்ற முடியாது.
மதம் ஒருவரது தனிப்பட்ட நம்பிக்கை. ஒருவரின் துன்பங்களுக்கும் சோகங்களுக்கும் எம்மால் தீர்வு காண முடியாத வரை மற்றவர்களின் மத நம்பிக்கையை எள்ளி நகையாட முடியாது. தமிழ்இனவாதம் தற்போது இலங்கையில் நீரில நனைந்த பட்டாசு. அதனால் தற்போது முஸ்லிம் இனவாதத்தை கையில் எடுக்கிறார்கள். இந்த சூழ்ச்சியை பரிந்து கொண்டு தமிழ் முஸ்லிம் மக்கள் தமக்குள் ஐக்கியப்படுவதோடு சிங்கள மக்களையும் இணைத்துக் கொண்டு போரட வேண்டும். இல்லையென்றால் காலப் போக்கில் இலங்கையில் யாருமே வாழ முடியாது போய் விடும் போல உள்ளது.
When I was young I was told that Hinduism is just a way of living. Now everybody is saying that.