தற்கால ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான, நம்பகத்தன்மையற்ற செய்திகளை வெளியிடுகின்றன. உண்மையை உண்மையாக உரத்துக் கூறும் வகையில் இந்நிலை மாற வேண்டுமென யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம், யாழ். பல்கலைக்கழக ஊடகவியல் கற்கை நெறி மூன்றாம் வருட மாணவர்கள் நடத்திய விழாவொன்றில் கூறியுள்ளார்.
இலங்கையின் இன்றைய அரசியல் சூழலில் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் கருத்தாக இது அமைவதை மறுக்க முடியாது.
புதிய சிந்தனைகளுக்கான உரையாடல் வெளி, யாழ். குடாவில் இல்லை என்பதனை இக் கூற்று உணர்த்துகிறது.
இணக்க அரசியல் (CONSENSUS POLITICS), ஒடுக்கப்படும் இனத்தின் அரசியலிற்கும் ஒடுக்கும் இனத்தின் அரசியலிற்கும் இடையே பொதுத் தளத்தினை உருவாக்க முற்படுகையில் உண்மைக்குப் புறம்பான செய்திகள், அடிபணிவு அரசியலின் எதிர்வினையாக தோற்றம் பெறும்.
நம்பகத்தன்மையற்ற செய்திகள், வெறும் ஊடகங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு நிஜமானது போன்று மக்கள் முன் கொண்டு செல்லப்படுவதை, சமூக அக்கறை கொண்ட அறிவியலாளர்கள், துயரத்தோடு பார்க்கின்றார்கள்.
பகை முரண்பாடுகளை வெறும் தோற்றப்பாடாக சித்தரிக்கும் போக்கு, ஊடகப் பரப்பினை ஆக்கிரமிப்பது ஆரோக்கியமான விடயமல்ல.
அதேவேளை, உடன்பாட்டு அரசியலை எவ்வாறு கையாள்வது என்கிற சிக்கல், நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், இலங்கை ஆட்சியாளர் மத்தியில் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
கோப்பாய் பாடசாலை கட்டிடத் திறப்பு விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்வது, அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தை மக்களிடம் திரும்ப ஒப்படைப்பது போன்ற பரப்புரைகளை முன்னெடுப்பது என்பன தமிழ் மக்களுடனான இணக்கப்பாட்டு அரசியலிற்கு அரசு தயார் என்பது போன்று சர்வதேசத்திற்கு காட்டப்படும் தோற்றப்பாடுகளாகும்.
அதேவேளை, இறுதிப் போரில் நடைபெற்ற இனப்படுகொலைகளால் எழுந்த அனைத்துலகின் எதிர்ப்பலைகளை சமாளிக்க நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஐவரடங்கிய விசாரணைக் குழு போன்றவை தமிழ் மக்களுடன் இணைவு அரசியலிற்கு வழி கோலும் என்கிற கற்பிதம் அரசால் உருவாக்கப்படுகிறது.
சர்வதேச வல்லரசாளர்களுக்கிடையே நிகழும் பூகோள ஆதிக்கப் போட்டியை, அவர்களுக்கிடையே நிலவும் நலன்சார்ந்த முரண்பாடுகளை வெகு நேர்த்தியான முறையில் கையாள்வதாகக் கற்பிதம் கொண்டு, “”பயங்கரவாதத்தை தோற்கடித்தல் மற்றும் இலங்கையின் அனுபவங்கள்” என்ற ஆய்வரங்கம் ஒன்றினை 240 மில்லியன் ரூபாய் செலவில் அரசு நடத்தியது.
இக் கருத்தரங்கும் உலகின் பொதுவான அச்சுறுத்தலாகக் கருதப்படும் பயங்கரவாதத்தை தோற்கடித்த நாடு என்கிற வகையில் அனைத்துலக நாடுகளுடன் ஒரு இணைவு அரசியலை ஏற்படுத்த உதவுமென இலங்கை ஆட்சியாளர்கள் கருதுகின்றார்கள்.
ஆசிரியர்களுக்கு மாணவனொருவன் நடத்த முற்படும் பட்டறிவிலிருந்து கற்றுக் கொண்ட அனுபவப் பகிர்வாகவும் இம் மாநாட்டைப் பார்க்கலாம்.
சர்வதேச ஆதிக்கங்களுக்கு அப்பால், ஒடுக்கும் அரசுகளின் இணைவு அரசியலிற்கான பொதுத் தளத்தை உருவாக்கும் முயற்சியாகவும் இதனை நோக்கலாம்.
இதில் இராணுவ கேந்திர மூலோபாயக் கற்கை நெறிகளில் நிபுணத்துவம் கொண்டவர்களும் பயங்கரவாத ஒழிப்பில் நடைமுறை சார்ந்த பல அனுபவங்களைக் கொண்ட பெரும் அரசறிவியலாளர்களும் கலந்து கொண்டனர். தாங்கள் வழங்கிய ஆலோசனை போர்க்களத்தில் எவ்வாறு பிரயேõகிக்கப்பட்டன என்கிற விடயத்தை அதில் நேரடியாகப் பங்காற்றியவர்களின் ஊடாக அறிந்து கொள்ள, இவர்கள் முயற்சித்திருக்கலாம்.
முப்படைகளை தன்னகத்தே கொண்டிருந்த மிகப் பலம் வாய்ந்த இறுக்கமான விடுதலை இயக்கமொன்றினை எதிர்கொண்ட விதம், அதன் அனுபவங்கள், தேசிய இன விடுதலைப் போராட்டங்களை இப்போதும் ஒடுக்கிக் கொண்டிருக்கும் அரசுகளுக்கு தேவையானதொன்றுதான்.
ஆனால் இக் கருத்தரங்கில் கலாநிதி அஹமட் எஸ். ஹாசிம் நிகழ்த்திய உரை சற்று வித்தியாசமாக புலமை சார் நிபுணத்துவத்தின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியது.
அமெரிக்க கடற்படைக் கல்லூரியில் மூலோபாயக் கற்கை நெறிகளுக்கான விரிவுரையாளராக இருக்கும் பேராசிரியர் அஹமட் ஹாசிம், சதாம் உசேயினின் வீழ்ச்சிக்குப் பின்னரான கால கட்டத்தில் அமெரிக்க இராணுவத்தின் ஈராக்கிற்கான ஆலோசகராக பணியாற்றியவர்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த போராட்டம், கலப்புப் போர் முறை (HYBRID WARFARE) சார்ந்தது என அவர் குறிப்பிடுகின்றார்.
பயங்கரவாதம், கெரில்லா போர் முறை, நகரும் மரபுப் போர் முறைமை போன்ற சமாந்தரமான முப்பரிமாணங்களைக் கொண்ட படைத்துறை வடிவங்களை விடுதலைப் புலிகள் கொண்டிருந்ததாகக் கூறும் கலாநிதி ஹாசிம், வெறுமனே “பயங்கரவாதிகள்’ என்கிற வரையறைக்குள் புலிகளை மட்டுப்படுத்தி விட முடியாதென விளக்குகிறõர்.
அநுராதபுர, கட்டுநாயக்க விமானப் படைத் தளங்கள் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் மூலம், பயங்கரவாதம் என்பதற்குமப்பால் அவர்களை ஒரு கிளர்ச்சி அமைப்பாக பார்க்க வேண்டுமென்பதே அஹமட் ஹாசிமின் கருத்தாக அமைகிறது.
போரின் இறுதி நான்கு ஆண்டுகளில் 5.5 பில்லியன் டொலர்களை இலங்கை இராணுவம் செலவு செய்திருப்பதாக மத்திய வங்கியின் ஆளுனர் அஜீத் நிவாட் கப்ரால் வெளியிடும் புள்ளி விபரச் செய்திக்கு, இந்த 21 ஆம் நூற்றாண்டில் மூலவளங்களை விரயமாக்கும் வழி முறைகள் இதுவென அஹமட் ஹாசிம் விளக்கமளிக்கிறார்.
இன்று நடைபெறும் யுத்தங்களில் கையடக்கத் தொலைபேசியோடு செல்லும் இராணுவத்தினரை கட்டுப்படுத்த முடியõதென்கிற விடயத்தை அஹமட் ஹாசிம் விளக்குகையில், சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க் குற்ற ஆதாரங்கள் நினைவிற்கு வருகின்றன.
புதிய தகவல் தொழில் நுட்பமானது, பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்று விளிக்கப்படும் யுத்தத்தில் ,எதிர்மறையான விளைவுகளை உருவாக்கி விடுகிறது என்பதனை மிக நாசூக்காகச் சுட்டிக் காட்டும் இவர் இதனை கட்டுப்படுத்த முடியாது என்று திடமாக நம்புகிறார்.
இஸ்ரேல் உடனான போரில், அல்மனார் தொலைக்காட்சி ஊடாக 220 மில்லியன் அரபுக்களுக்கும் மற்றும் இஸ்ரேலியர்களுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினரின் செய்தி சென்றடைந்த விவகாரத்தை நவீன உலகின் தகவல் பரிமாற்றத்திற்கான நல்ல சான்றாக கலாநிதி அஹமட் ஹாசிம் முன்வைப்பதைக் காணலாம்.
போர்க் காலத்தில் இராணுவத்தினரின் கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்ட காணொளிக் காட்சிகளே ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போர்க் குற்றங்களுக்கான முக்கிய ஆதாரங்களாக முன் வைக்கப்பட்டுள்ளன.
சர்வதேச நாடுகளோடு மீண்டுமொரு இணைவு அரசியலை உருவாக்குவதற்கு இந்த காணொளிச் சான்றுகள் பெரும் தடுப்பரணாக இருப்பதை இலங்கை அரசு உணர்த்துகின்றது.
கடந்த 30 ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. சபை மனித உரிமைப் பேரவையின் 17 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றிய இலங்கையின் சிறப்புத் தூதுவர் மஹிந்த சமரசிங்க, “நிபுணர் குழுவின் குற்றச்சாட்டிற்கு ஆதாரமில்லை, ஆயிரக்கணக்கானோர் போரில் கொல்லப்படவில்லை’ என்று மறுத்தாலும் ஐ.நா. சபையின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் விவகார அதிகாரியும் தென்னாபிரிக்காவின் சட்ட நிபுணருமாகிய பேராசிரியர் கிறிஸ்ரோட் ஹெயின்ஸ் நிகழ்த்திய உரை, பெரும் நெருக்கடிகளை இலங்கைக்கு உருவாக்கியுள்ளதெனலாம்.
பேரவையின் தலைமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் மற்றும் அமெரிக்க பிரதிநிதி எயிலீன் சாம்பலீன் டொனகோ நிகழத்திய உரைகள், போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தின.
இலங்கை அரசின் நிலைப்பாட்டிற்கு முண்டு கொடுக்கும் வகையில் “”நிபுணர் குழு அறிக்கை சரி பார்க்கப்பட்ட தகவல்களைக் கொண்டதல்ல” என்று பாகிஸ்தான் தூதுவர் சமீர் அக்ரமும் “”இக்கவுன்சில், மறுபடியும் இவ் விவகாரத்தை எடுத்திருப்பது இதன் இரட்டைப் போக்கினைக் காண்பிப்பதாகவும், வளரும் நாடுகளை சக்திமிக்கோர் அடக்க முயல்வதாகவும் வழமையான ஏகாதிபத்திய பல்லவியை கியூபா தூதுவர் பாடி முடித்துள்ளார்கள்.
மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் இம்மாதம் 17 ஆம் திகதி முடிவடைகிறது. அதற்கு முன்பாக புதிய போர்க் குற்ற ஆதாரங்கள் அடங்கிய காணொளிக் காட்சி, ஐ.நா. சபையில் முன் வைக்கப்படும் என பிரித்தானியாவில் இயங்கும் சனல் 4 தொலைக்காட்சி கூறுகிறது.
“”போரின் பின்னரான இரண்டு வருடங்கள் கொலையாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்களா?” என்று தலைப்பிட்டு இந்த வாரம் ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தில் ஈழ விடுதலை ஆதரவு அமைப்புக்களினால் நடத்தப்பட்ட கருத்தரங்கு மேலும் புதிய இராஜதந்திர நெருக்கடியை அரசிற்கு தோற்றுவிக்குமென எதிர்பார்க்கலாம்.
இவை தவிர நேர்த்தியான ஆங்கிலத்தில் நியூஸிலாந்து “”கிறிஸ் லெயிட்ஸ் லோ” நிகழ்ச்சி (CHRIS LAIDLAW’S SHOW) கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க இனச்சிக்கலிற்கான அடிப்படை காரணிகளை மேலோட்டமாக விளக்கி நிபுணர் குழுவின் அறிக்கையில் உண்மைத் தரவுகள் குறைவாக உள்ளதாகவும் பொதுமைப்படுத்தப்பட்ட தன்மை காணப்படுவதாகக் (SHORT OF FACTS, BIG ON GENERALISATION) கூறி மேற்குலக நாடுகளோடு புதிய அரசியல் உறவினை மேம்படுத்த முயற்சித்துள்ளார்.
வல்லரசுகளின் புவிசார் இராஜதந்திர உறவு சார்ந்த மாற்றமடையும் உத்திகளை, ஜனாதிபதியின் வெளியுறவு கொள்கை வகுக்கும் ஆலோசகர்கள் புரிந்து கொள்ளவில்லைபோல் தெரிகிறது.
கொழும்பில் 3 நாட்கள் நிகழ்ந்த “போர்க் கருத்தரங்கில்” உலக நாடுகளுக்கு அறிவுரையொன்றினை பேராசான் ஜீ.எல். பீரிஸ் வழங்கியிருந்தார்.
அதாவது உலகளாவிய ரீதியில் பயங்கரவாதக் குழுக்கள் பரவி வருவதால் சர்வதேச சட்டங்களின் முழுமையான கட்டுமானங்களையும் மீளாய்விற்கு உட்படுத்த வேண்டுமென்பதே அவ்வறிவுரையாகும்.
அரசுகளுக்கிடையே நிகழும் போர்களுக்காக உருவாக்கப்பட்ட அனைத்துலக விதிமுறைகள் மற்றும் சட்டங்கள் என்பன பயங்கரவாதத்திற்கெதிரான போரிற்கு பொருத்தப்பாடல்ல என்பது தான் அவரின் நிலைப்பாடு.
ஆகவே நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரிக்குமாறு ஜீ.எல். பீரிஸ் வலியுறுத்துவது போலுள்ளது.
ஆனாலும் சில விட்டுக் கொடுப்புக்களினூடாக எங்கோ ஒரு புள்ளியில் இணைவு அரசியலிற்காக சந்திப்பு நிகழும் வாய்ப்புமுண்டு.
மனித உரிமைப் பேரவையில் நிகழும் விடயங்கள் தொடர்பாக அமைதி காப்பது போல் இருக்கும் இந்தியாவின் தோற்றப்பாடு, சீனா, பாகிஸ்தானின் வெளிப்படையான அரசு ஆதரவு நிலைப்பாடு என்பன சந்திப்புப் புள்ளியை வெகு தூரத்தில் நிறுத்திவிடும் போல் தெரிகிறது.
ஆனாலும் மனித உரிமைப் பேரவையில் எழுப்பப்படும் கேள்விகளும் பதில்களும் வருகிற 17 ஆம் திகதியோடு அடங்கி விடும்.
அதற்கு அப்பால் எவ்வõறான நகர்வுகள், மேற்குலகத்தாலோ அல்லது இலங்கை அரசின் மீது நெருக்கடிகளை கொடுக்க வேண்டுமென விரும்பும் பிராந்திய சக்திகளினாலோ முன்னெடுக்கப்படும் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழீழ மக்களின் விடுதலையைப் பற்றிய தெளிவான அறிவும் உறுதியான சித்தமும் கொண்ட பலர் இன்னும் இருக்கிறார்கள். அந்த அறிவும் உறுதியும் எல்லாத் தமிழ் மக்களுக்கும் தேவை என்பதே இன்றைய தேவை. எம்மை முற்றாக அழிக்க நினைப்பவர்கள் எமது கடந்த காலங்களைப்பற்றிப் பேசியே எமது சக்தியை விரயமாக்க வேண்டுமென்றே விரும்புகிறார்கள். நடந்தவை முழுவதும் யாருக்கும் முழுமையாகத் தெரியாது. இனி நடக்கபோவதும் யாருக்கும் தெரியாது. ஆனால் எந்த நிலையிலும் தெளிவாகவும் உறுதியுடனும் இருப்போமானால் நாம் எமது இனத்தைக் காப்பாற்ற முடியும். எந்த நிலையிலும் இனவாதம் தீங்கானது. இனப்பற்று உயர்வானது. கோபமும் வன்மமும் தீங்கையே விளைவிக்கும். ஆனால் எமது மக்கள் எல்லோரினதும் அசையாத உறுதி எமது விடுதலையை உறுதிப்படுத்தும்.
நடந்தவை முழுவதும் யாருக்கும் முழுமையாகத் தெரியாது. இனி நடக்கபோவதும் யாருக்கும் தெரியாது. ”
எப்படி எந்த நிலையிலும் தெளிவாகவும் உறுதியுடனும் இருப்பது?
எந்த நிலையிலும் நாம் விடுதலை அடைவோம் என்ற தெளிவும் எம் மக்களை எதிரிக்கு காட்டிக்கொடுக்க மாட்டோம் என்ற உறுதியும் தான் தேவை.
தமிழ்நெட் ஜெய அண்னை இங்கே ஒஸ்லொவில் 4 கக்கூசு கழுவி பிழைக்கலாம்,
எந்தத் தொழிலேன்றாலும் உழைத்து வாழவேண்டும் என்ற உங்கள் கொள்கை வரவேற்கத்தக்கது. ஒஸ்லோவில் உங்களுக்கு மணித்தியாலம் எவ்வளவு தருகிறார்கள்? இது தெரிந்தால் இங்கு பின்னுட்டம்விட்டு முக்குடைபடுவவர் சிலர் தமது தொழிலை மாற்றிகொள்ளலாம்.
ஒரு தேசிய விடுதலையில் பல தரப்பட்ட மக்களும் வருவார்கள். சிலர் ஒரு கட்டத்தில் சரியான வர்க்க சார்பை எடுப்பார்கள் சிலர் எதிரிகளுடன் சேர்ந்து விடுவார்கள். இவ்வாறான ஒரு இக்கட்டான காலகட்டத்தில் தான் எவர் எந்தப்பக்கம் என்பதை அறிந்து கொள்ளலாம். இதயச்சந்திரன் இப்போது சரியான நிலைப்பாடு எடுத்துள்ளார் என்றே தோன்றுகிறது.
இதயச்சந்திரன் புலிகளை வழிநடத்த எவ்வளவோ முயற்சித்துள்ளார். முன்பு கூட பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் புலிகளின் உறுப்பினராக எப்போதும் இருந்ததில்லை.
காலத்தை தவறவிட்டால் கண்டவனெல்லாம் கால்பதிப்பான்
Tuesday, April 14, 2009
இதயச்சந்திரன்
ஈழமுரசு (11.04.2009)
உலகப் பரப்பெங்கும் எழுச்சி பெற்றுள்ளது தமிழீழ மக்களின் போராட்டங்கள். தன்னியல்பான எழுச்சியால் ஒன்று திரளும் மக்கள் கூட்டம் சர்வதேசத்திடம் நீதிகோரி வீதியில் இறங்கிவிட்டது. மாணவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்படும் இப் பேரெழுச்சி விடுதலையை நோக்கிய திசையில் பயணிக்கிறது. தமிழினப் படுகொலையை மூடிமறைத்து, மனிதக் கேடய மாய்மாலங்களைத் தூக்கிப்பிடிக்கும் சர்வதேச வல்லரசாளர்களின் போலி ஜனநாயக முகத்திரைகளை கிழித்தெறிய இளைஞர்கள் கிளர்ந்தெழுந்துவிட்டார்கள்.
சிங்களத்தின் அழிவினைத் தடுத்து நிறுத்த சமாதானக் காவலர் வேடமிட்டு 2001ல் வன்னிக்கு யாத்திரை மேற்கொண்ட மேற்குலகின் தூதுவர் எரிக் சொல்யஹய்மின் நாட்டிலும், போராட்டங்கள் வெடிக்கின்றன. மக்கள் போராட்டங்கள் பல அதிசயங்களை நிகழ்த்திய வரலாறுகளை அவர் மறந்துவிட்டார்.
2002ல் மேற்குலக சார்பாக அவர் நிகழ்த்திய அதிசயம்தான் போர்நிறுத்த ஒப்பந்தம். அன்று சிங்களம் பலவீனமடைந்து இருந்ததால் அவர் அந்த அதிசயத்தை நிகழ்த்தினார். இன்று சிங்களமானது பலமான நிலையில் இருப்பதால் அந்தப் போர்நிறுத்த அதிசயத்தை மறுபடியும் நிகழ்த்த முடியாதென அறுதியிட்டுக் கூறுகின்றார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டால் மட்டுமே தன்னால் அந்த அதிசயத்தை நிகழ்த்த இயலும் என்பதே எரிக்சொல்யஹய்மின் நிலைப்பாடு.
விடுதலைப் புலிகளும் கல்லெறியும் போராட்டத்தை ஆரம்பிப்பார்கள் என்பதே அவரின் எதிர்பார்ப்பு. ஆனாலும் வன்னி மண்ணில் சிங்களம் சின்னாபின்னமாவதை இந்த வல்லரசுகளின் தூதர் தெரிந்திருக்கவில்லை. எரிவாயு நிரம்பிய குண்டுகளை (Incendiary Bomb) போராளிகள் மீது ஏவும் கையறு நிலைக்கு சிங்களம் வந்தடைந்திருப்பதை முன்னரங்க சிறப்புப் படையணிகளின் சிதைவுகள் வெளிப்படுத்துகின்றது. நீண்ட காலமாகவே பிராந்திய ஆதிக்கத்தை நிலைநாட்டப் போட்டியிடும் மேற்குலகின் சார்பாக 2001ல் களமிறக்கப்பட்டவரே திருவாளர் எரிக் சொல்ஹய்ம். இவர் மேற்குலக ஏகாதிபத்தியத்தின் குரலாக ஒலிக்கும் அதேவேளை ஹிலாரி கிளிண்டனுடன் தொடர்பினை ஏற்படுத்தி புதிய நகர்வொன்றினை ஏற்படுத்த முயல்வதாகவும் போக்குக் காட்டுகின்றார். மகிந்தர் போர்நிறுத்த ஒப்பந்தத்தினைக் கிழித்தெறிந்தபோது கொல்லைப்புற வாசல் வழியாக வெளியேறிய நோர்வேயின் அனுசரணையாளர் ஆயுத ஒப்படைப்புக் கதையோடு மறுபடியும் களத்தில் குதிக்க முயல்வது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பாலஸ்தீனத்தில் நோர்வே நிகழ்த்திய அதிசயங்களை காசாவில் காணக்கூடியதாக இருக்கிறது. இனிவரும் நாட்களில் தமிழீழ மக்கள் நிகழ்த்தப் போகும் அதிசயங்களை, இவர் தரிசிக்கும் வாய்ப்புக்கள் ஏற்படும் என்பதை நம்பலாம்.
தற்போதைய இறுக்கமான களச் சூழலிலும், சர்வதேசக் காய் நகர்த்தல்களிலும் எரிக்சொல்ஹய்மின் வகிபாகம் சிறிதளவு முக்கியத்துவத்தையும் பெறவில்லை என்பதே உண்மை. ஆகவே அனுசரணைத் தளத்தின் தேவைக்கு அப்பால் வேகமாக நகர்ந்து செல்லும் போராட்ட சூழலில் எரிக்சொல்யஹய்ம் போன்றவர்களின் தேவையும் அற்றுப்போகின்றது. ஐ.நாவின் மந்திர வாசலைத் தட்டும் இன்றைய சர்வதேச மயப்பட்ட எமது போராட்டத்தில் சமாதான சகவாழ்வு என்கிற காலாவதியாகிப்போன விவகாரங்கள் எதுவித தாக்கங்களையும் ஏற்படுத்தாது. மனிதக் கேடயம், ஆயுதச் சரணடைவு என்கின்ற சர்வதேசக் கோரிக்கைகளை மீறி இனப்படுகொலை என்ற செய்தி உலகெங்கும் பரவும் வகையில் புலம்பெயர் தமிழர்களால் உரத்துச் சொல்லப்படுகின்றது.
அதாவது “இனப்படுகொலையை தடுத்துநிறுத்த, போர்நிறுத்தத்தை வலியுறுத்தி’ என்கின்ற கோரிக்கையே மேலெழுந்துள்ளது. ஆனாலும் உறுதி தளரா ஆத்மா வேசத்துடன் தமிழ் மக்களால் முன்வைக்கப்படும் இறுதிக் கோரிக்கையை மேற்குலகம் செவிசாய்க்குமாவென்று ஒரு சில நாட்களில் தெரிந்துகொள்ளலாம். இற்றைவரை அனுமதிபெற்று, நாட்குறித்து, அருந்ததிபார்த்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணிகளை மேற்குலக ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், மந்திரிப் பிரதானிகளும் ஆவன செய்வதாக வாக்குறுதிகளை வழங்கியதோடு, மாயாவிபோல் மறைந்துவிட்டார்கள். காவல்துறையின் அனுமதி பெறாமல் தன்னியல்பாக கிளர்ந்தெழுந்த மக்கள் வீதியில் இறங்கி, போக்குவரத்து விதிகளை மீறியவுடன் ஊடகங்கள் ஓடோடி வந்தன. நகரின் அசைவியக்கம் சீர்குலைந்து போனதென தலைப்புச் செய்திகளை வெளியிட்டன.
இதுவரை அரசியல்வாதிகளின் காதுகளில் ஒலித்த ஈழமக்களின் அவலக்குரல் பத்திரிகையூடாக பொதுமக்களின் பார்வைக்குச் சென்றடைந்தது. மூன்று இலட்சம் மக்களின் பேரவலத்தை மூவாயிரம் மக்கள் ஒன்றுகூடி ஒரேநாளில் இப்பூவுலகத்திற்குத் தெரியப்படுத்திவிட்டனர். அதாவது சட்டத்தை மீறும்போதுதான் உரிமைக்குரலில் நியாயத்தன்மை மக்களைச் சென்றடையும் போலிருக்கிறது.
வாசற் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஐ.நா சபையின் மனித உரிமை ஆவணக் காப்பகத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் சிங்களத்தின் இனப்படுகொலைச் சான்றுகளை எடுத்துவந்து ஏதோ ஒரு வாசலினுாடாக உலக மக்களின் பார்வைக்கு எடுத்துச் செல்லலாம்.வாசல்கள் திறக்கப்பட்டுள்ளதால், இனி ஒரு குட்டித்தூக்கம் போடலாம் என எண்ணாமல், ஊடகப் பரப்புரையின் விதித்தளத்தைப் பலப்படுத்தி உலக மக்களின் மனச்சாட்சியைத் தட்டியயழுப்ப முன்வரவேண்டும்.
இதன் பிரதிபலிப்பாக பிரித்தானியாவின் தொழிலாளர் புரட்சிக் கட்சியானது ஈழத் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதாக தமது பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் வெளிப்படுத்தியுள்ளது. சிறீலங்கா என்றால் சுவையான தேயிலை வழங்கும் நாடு என்பது மறைந்து, பின்பு துடுப்பெடுத்தாட்ட சூரர்கள் நிறைந்த நாடு என்று புதிய புகழாரம் சூட்டப்பட்டு, இன்று இனவெறி பிடித்த பேரினவாத கொடுங்கோல் அரசு ஆட்சி புரிவதாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆர்ப்பாட்டங்களில் அரசினை நோக்கி கோரிக்கைகளை விடுக்கும் அதேவேளை அங்கு வருகைதரும் உள்நாட்டு ஊடகங்கள், மற்றும் சுயாதீன ஊடகவிய லாளர்களிடம் எமது போராட்ட நியாயத்தை வரலாற்று ரீதியாக மிகவும் தெளிவாகவும், சுருக்கமாகவும் முன்வைக்கவேண்டும்.
ஆர்ப்பாட்டத்தில் நான் சந்தித்த பல ஊடகவியலாளர்களுக்கு எமது போராட்டத்தின் அடிப்படை குறித்தும், சர்வதேச வலைப்பின்னலின் பின்புலத்தில் செயற்படும் பிராந்திய வல்லரசுகளின் சூழ்ச்சிகள் பற்றியும் ஆழமான புரிதல் காணப்படவில்லை. பயங்கரவாதப் போராட்டம் என்கிற சர்வதேச ஏகாதிபத்தியங்களின் பரப்புரைக்குள் எமது மக்களின் அவலங்களும் தாயகத்தை மீட்கும் போராட்டத்தின் நியாயப்பாடுகளும் மறைக்கப்பட்டுள்ள விவகாரம் இந்த வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்குத் தெரியாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே ஆர்ப்பாட்டக் களத்திற்கு ஆட்சியாளர் வருகைதந்து, மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும்வரையிலாவது அங்கு பார்வையிட வருகைதரும் ஊடகத்தாளரிற்கு தொடர்ச்சியாக எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவேண்டும். சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பு உச்சம் பெற்றுள்ள இவ்வேளயில் மூன்று இலட்சம் வன்னிமக்களின் இருப்பு வாழ்வா? சாவா? என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மாணவர்கள், இளைஞர்கள் முன்னெடுக்கும் இப்போராட்டங்கள் தொய்வு நிலையை அடையாமல், வீரியம்பெற்று முன்னகர்ந்து செல்ல சகல ஈழத்தமிழினமும் பங்காளிகளாக மாறவேண்டும். இப்போராட்டங்களை வேகப்படுத்தும் வகையில் மாணவர்களால் உண்ணாநிலைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேவேளை சர்வதேச ஊடகங்களினுVடாகப் பிரிந்துசென்று வாழும் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் வகையில் கருத்துக்கள் சொல்லப்படல் வேண்டும்.
வல்லரசுகளின் இன அழிப்பிற்கு ஆதரவான இரட்டை வேடத்தை உலக அளவில் அம்பலப்படுத்த வேண்டிய தருணமும் இதுதான். காலத்தைத் தவறவிட்டால் எரிக்சொல்யஹய்ம் போன்ற போலிச் சமாதானவாதிகள் மறுபடியும் உட்புகுந்து எமது போராட்டங்களை தவறான வழியில் மீண்டும் திசைதிருப்பி விடுவார்கள். சனிக்கிழமை இலண்டனில் நடைபெறவுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியோடு போராட்ட முனைப்பு ஓய்வுநிலைக்கு வந்தடையக்கூடாது. அதையும்தாண்டி அடுத்த கட்ட படிநிலைக்கு இப்போராட்டங்கள் கொண்டுசெல்லப்படவேண்டும்.
இன்னும் சில தினங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வன்னி மக்களைக் கொன்று குவித்து போராட்டத் தலைமையை அழித்து விடலாமென்று சிங்களமும், இந்திய அரசும் இணைந்து நடாத்தும் சதிகளை முறியடிக்கவேண்டிய வரலாற்றுக்கடமை எம்மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. மாற்றுக்கருத்துக்களையும், வேற்றுமைகளையும் கடந்து எமது இனத்தின் வாழ்நிலை இருப்பினைக் காப்பாற்றும் அறம் சார்ந்த பொறுப்பு எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுவரை எமது விடுதலைக்காக நாமே போராடினோம். இனி ஒடுக்கப்பட்ட சர்வதேச மக்களும், மானுட நேசிப்பாளர்களும் எம்முடன் அணிசேரத் தயாராகுகி றார்கள். திறக்கப்படும் வாசல்களுடாக வரும் நேர்மையாளர்களையும் ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வாளர்களையும் உள்வாங்கிக் கொள்வோம்
இதயச்சந்திரன்
ஈழமுரசு (11.04.2009)
புலிகள் தலைமைக்கு உண்மையில் என்ன ந்டந்ததென்ற உண்மை உங்களிற்கு ஓரளவு தெரியும் எனநம்புகிறேன்.அவற்றை ஒளிவின்றி, பயமின்றி வெளியிட முடியுமா?
நீங்கள் ஒரு நாகரீகமான மனிதர் என்று யோசித்தேன். ஒரு மனிதரை அவமானப்படுத்துவதில் என்ன சந்தோசம். தமிழினத்தின் விடிவை விரும்பியதை விட அவர் என்ன தவறு செய்தார். எம்மினத்தில் வந்த பிரிவுகளை பெரும்பான்மைத் தமிழர்கள் விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்களா.
கட்டுரையை விமர்சிக்க இயலாதவர்கள், தனிநபர் மீது தாக்குதலை தொடுத்து, தமது அரிப்புகளை எழுதிக் கொட்டுகிறார்கள். இந்த சமுதாயம் திருந்தாது.
நானும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவன்தான்.காட்டுவாசி,மலைவாசி என்று குதர்க்கம் பேசும் இவர்களுக்கெல்லாம் விடுதலை ஒரு கேடு. அவர் ஈரோசில் இருந்தாரா,புலியில் இருந்தாரா என்பது அல்ல இங்கு முக்கியம்.அவர் புதிய திசைகள் நடத்தும் கலந்துரையாடலில் நேரடியாகக் கலந்து கொள்பவர். அங்கு வந்து இந்தக் கேள்விகளை கேட்டுப்பாரும் புதியவனே.அது இதுவென சேறடிப்புகளை இங்கு நடத்த வேண்டாம்.
புனைபெயர்களில் முன்வைக்கபடும் விமர்சனங்கள் கட்டுரையைச் விமர்சிக்கும் வகையிலும் கருத்துக்களைச் செழுமைப்படுத்தும் அமைந்திருக்க வேண்டும். தனி நபர்களின் குறிப்பான அரசியல் சார்ந்த விமர்சனங்களை முன்வைப்போர் தமது சொந்த அடையாளத்துடனேயே விமர்சனங்களை முன்வைக்கவும்.
பின்னூட்டம் குறித்த இனியொருவின் பார்வை….
https://inioru.com/?p=14649
இனிஒருவின் நேர்மையை பாராட்டுகிறேன்.புனை பெயரில் எழுதும் நபர்கள் தங்களின் சுய ரூபத்தை மறைத்து மக்களை ஏய்ப்பது தவறான விளைவுகளை ஏற்ப்படுத்தும்.
ஒளித்து ,திரைமறைவில் இயங்கிய இயக்கங்களால் ,குறிப்பாக புலிகளின் மர்ம நபர்கலாகிய கே.பி.போன்ற உளவாளிகள் எப்படி மக்களை படுகுழிக்குள் தள்ளினார்கள்.மீண்டும் மீண்டும் அதே தவறுகள் பல வடிவங்களில் முன் வருகிறது. நாம் மீண்டும் ஒரு முறை ஏமாறக்கூடாது.
புலி ஆதரவாளர்கள் மாற்று கருத்துக்களை எள்ளி நகையாடினர் என்பது இனிஒரு அறியாததல்ல.
உள் ஒன்றும் ,புறம் ஒன்றும் வைத்து மக்களை ஏமாற்ற கூடாது. தாங்கும் சக்தி மக்களிடம் இல்லை.
புலி அரசியல் நமக்கு இனிமேல் ஒத்துவராது. வெளிப்படையான அரசியலே நமக்கு தேவை.
அதை ஏற்கனவே புலி அரசியலுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் செய்ய முடியாது என்கிறோம்.
வணக்கம் .
இனி ஒருவின் நேர்மையைப் பாராட்டும் உங்களை பாராட்ட முடியாமல் இருக்கிறதே. இவ்வளவுக்குப் பிறகும் நான் தான் இதையெல்லாம் எழுதினேன் என முகம் காட்ட துணிவு இல்லை என்றால் நீங்கள் முன்பு எழுதினது எல்லாம் பொய் என்று தானே ஆகிவிடுகிறது.
எப்போதும் ஓரே முகமாய் இருந்தால் நம்மைத் தமிழர் இல்லை என் கிறார்கள் என்ன செய்வது? நாம் தமிழர் எனத் தமிழரையே ஏமாற்றச் சொல்கிறார்களா? அல்லது விசயகாந்த், ஜெயலலிதா மாதிரி நாடகமாடச் சொல்கிறார்களா? நான் தமிழன் என் இனத்துக்காக என குரல் ஒலிக்கும் என நாமெல்லாம் முழங்க வேண்டாமா? தமிழ் நிமிர்ந்து நடக்கிறது நம் இதயச் செல்வன் போல மகிழ்ச்சியா உறவுகளே.
இனிஒரு சங்கதி ,தமிழ் வின் போன்ற வெப் சைட்டுகளாக மாறாது என நம்புகிறோம்.