துருக்கியில் அரச படைகள் கேசி பூங்காவிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை நீரழுத்தம், கண்ணீர்ப் புகை, புல்டோசர்கள் ஆகிவற்றின் துணையோடு பலவந்தமாக அகற்றியுள்ளது. நேற்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் பின்னர் அங்கிருந்து வெளியேறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அருகிலுள்ள தெருக்கள் முழுவதும் தடுப்புக்களை அமைத்துப் போராடிவருகின்றனர். மறுபுறத்தில் பொஸ்புருஸ் பாலத்தில் குவிக்கப்பட்டுள்ள போலிஸ்படைகள் தடைகளை அமைத்து மக்கள் அதனூடாக தக்சீன் சதுக்கத்திற்குள் நுளைவதைத் தடுத்து வருகின்றன.
தக்சீம் சதுக்கத்திற்கு அருகாமையிலிருள்ள கேசி பூங்காவிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் அருகிலுள்ள தெருக்களில் போலிசாருக்கும் மக்களுக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஏனைய நகரங்களில் தெருக்களில் மக்க்கள் போராடிவருகின்றனர்.
இதுவரை 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் நான்குபேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அரச ஊழையர்களின் தொழிற்சங்கம் வேலை நிறுத்ததிற்கு அறிவித்துள்ளது. எது எவ்வாறாயினும் துருக்கியில் உறுதியான இடதுசாரி தொழிலாள வர்க்க அரசியல் தலைமை அழிக்க்கப்பட்ட நிலையில் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்படாத திடீர் எழுச்சிகள் தன்னார்வ நிறுவனங்களால் கையகப்படுத்தப்படும் நிலையே காணப்படுகின்றது.
ஒழுங்கமைக்கப்படாத திட்டமிட்டு ஏகாதிபத்தியத் தன்னார்வ நிறுவனங்களால் உள்வாங்கப்படும் திடீர் எழுச்சிகளுக்கு வர்க்கம் சார்ந்த அரசியல் தலைமை வழங்குவது எவ்வாறு என்பது குறித்த விவாதங்கள் நடைபெறுகின்றன. மக்களின் உணர்வுபூர்வமான எழுச்சிகளை ஆதரிப்பது ஒவ்வொருவரது கடமை என்றாலும் அதன் அரசியல் எதிர்காலம் குறித்து கரிசனை கொள்வது மார்க்சிய அரசியலின் கடமை.
The way the Turks treat the Kurds is more important to me.