துப்பாக்கிப் பயன்பாடுகளை தாம் நிறுத்தப் போவதாக விடுதலைப்புலிகள் முடிவு செய்துள்ளதாக விடுதலைப்புலிகளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையத்தளம் ஒன்றில் வெளியான இது குறித்த அறிக்கையை, விடுதலைப்புலிகளின் சர்வதேச இராஜதந்திர உறவுகளுக்கான தலைவர் செல்வராசா பத்மநாதன் வெளியிட்டுள்ளார்.
இந்த மோதல்கள் மிகவும் மோசமான முடிவை எட்டியுள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.
தமது ஆயுதங்களை அவர்கள் களைவதற்கான ஏற்பாடா இது என்பது தெளிவாகவில்லை.
விடுதலைப்புலிகளை முழுமையாக வெற்றிகொண்டு விட்டதாக இலங்கை ஜனாதிபதி அறிவித்த மறுதினம் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
BBC.