கட்டுநாயக்க சம்பவத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிக் குண்டுத் தாக்குதலில் காயமுற்ற ஒரு ஊழியர், இன்னும் ராகம வைத்தியசாலையின் 27 ஆவது வாட்டில் சிகிச்சை பெற்றுவருவதாக சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொது ஊழியர் சங்கம் தெரிவிக்கின்றன.
நீண்ட கால சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட வேண்டிய நிலையிலுள்ள தம்மிக செனரத் எனப்படும் இந்த ஊழியருக்கு நஷ்ட ஈட்டுத் தொகையொன்றை பெற்றுக் கொடுப்பதற்காக தமது சங்கம் அரசாங்கத்தை வலியுருத்துவதாகவும், ராகம வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் மேலும் 4 ஊழியர்களுக்கும், நீர்கொழும்பு வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் 5 ஊழியர்களுக்கும், கொழும்பு மற்றும் கம்பஹ வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறும் 3 ஊழியர்களுக்கும் கூட, ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய நஷ்ட ஈட்டுத் தொகைகள் அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டுமென சங்கத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
வர்த்தக வலய உரிமையாளர்கள் சங்கத்தோடு நடைபெற்ற கருத்துப் பரிமாற்றலின் போது, அத் தரப்பிலிருந்து எவ்வித நஷ்ட ஈட்டுத் தொகையும் ஊழியர்களுக்குக் கிடைக்கும் எனத் தாம் எண்ணவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.