துணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக தெரிவிப்பு!

22.08.2008.
இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கு மேற்கே உள்ள துணுக்காய், அதனை அண்டிய உயிலங்குளம் மற்றும் அக்கராயன்குளம் பிரதேசத்தின் தென்பகுதி ஆகியவற்றை இராணுவத்தினர் வெள்ளியன்று விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

துணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியதையடுத்து இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவ தலைமையகத்தின் முக்கிய இராணுவ அதிகாரிகளுடன் வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய ஆயுதப்படைகளின் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார். முக்கிய களமுனை இராணுவ தளபதிகளுடன் அவர் கலந்துரையாடியுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

துணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பது பற்றி விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

2 thoughts on “துணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக தெரிவிப்பு!”

  1. வன்னிப்பகுதியில் உள்ள முழுபிரதேசத்தையும் புலியின் பிடியில் இருந்து
    விடுவிக்கும் பொருட்டு-வன்னிஅப்பாவிமக்களை காக்கும்படி
    இலங்கை இராணுவத்தை கேட்டு கொள்ளுவதுமல்லாமல் தங்களுக்கு முழு ஆதரவையும்
    நாம் வழங்குவோம் என புலம்பெயர் தமிழர்களாகிய நாம் உங்களை கேட்டுக்கொள்ளுகிறோம்.
    இலங்கை வாழ்நலன் கருதி கூடியகெதியில் எங்கள் முகவரியை அறியத்தருவோம்.

  2. விடுதலைப்புலிகள் தமது தோல்விகளை ஒத்துக்கொள்ளாமல் இருப்பதும் அவர்களது தந்திரோபாய நடவடிக்கைகளில் ஒன்றுதான்.2008ம் ஆண்டு கார்த்திகை மாத பிரத்தியேக உரையில் இப்போதய தோல்விகளுக்கு ஒரு புதுப்பெயர் வழங்குவினம்.அதுவரைக்கும் பொறுத்திருப்போம்.

Comments are closed.