இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்த பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா, சென்னையில் காலமானார். சென்னையில் காலமானார். தென்னிந்தியத் திரைப்பட வரலாற்றில் பல நேர்மறையான தொழில் நுட்ப மாற்றங்களை ஏற்படுத்திய இயக்குனர், ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திர பல விருதுகளைப் பெற்றவர். மகேந்திரா. லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1971ல் தங்கப்பதக்கம் பெற்றார்.
பாலுமகேந்திரா தன்னுடைய கலைபயணத்தை முதன் முறையாக மலையாள திரையுலகில் துவக்கினார். அவர், மலையாளத்தில், ‘நெல்லு’ என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அப்படத்துக்கு 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர். தென்னிந்தியத் திரைப்பட வரலாற்றில் பல நேர்மறையான தொழில் நுட்ப மாற்றங்களை ஏற்படுத்திய இயக்குனர், ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திர பல விருதுகளைப் பெற்றவர். மகேந்திரா. லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1971ல் தங்கப்பதக்கம் பெற்றார்.
தமிழ் நாட்டில் இலங்கைக் கலைஞர்களான ஒளிப்பதிவாளர் லெனின் மொராயஸ் போன்றோர் பல திரைப்படங்களில் பணியாற்றியும் அவர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. ஈழத் தமிழர்களுக்கு எதிரான தென்னிந்திய சினிமாத்துறையின் புறக்கணிப்பையும் மீறி பாலு மகேந்திராவின் அசாத்திய திறமை அங்கீகாரம் பெற்றது.
977ல் வெளியான முள்ளும் மலரும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். முதன் முறையாக இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். தமிழில் அவர் இயக்கிய முதல் படம் ‘அழியாத கோலங்கள்’. இந்தப் படம் 1978ல் வெளியானது. தொடர்ந்து, பாலுமகேந்திரா ‘மூன்றாம் பிறை’, ‘அழியாத கோலங்கள்’, ‘வீடு’, ‘சந்தியா ராகம்’, ‘மறுபடியும்’, ’சதி லீலாவதி’, ஜூலி கணபதி, அது ஒரு கனாக்காலம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவர் தலைமுறைகள் என்ற திரைப்படத்தை இயக்கினார்.
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார். பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குனர்களாக உள்ளனர். புகழ்பெற்ற புதிய தலைமுறை இயக்குனர்களான தங்கமீன்கள் ராம் போன்றவர்கள் பாலு மகேந்திராவால் பயிற்றப்பட்டவர்கள்
1939. Balanathan Mahendra. Bar Road, Batticaloa, Sri Lanka. February 14, 2014. Sakthi, Sooriyan, Vasantham. Radios. 1972. Kokila. A Kokilam is still alive here. She is also of the same age. ,
திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா காலமானார். அவருக்கு வயது 74 இன்று அதிகாலை அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து வடபழனியில் உள்ள விஜயா நர்சிங் ஹோமில், தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் காலமானார். வடபழனியில் உள்ள அலுவலகத்தில் பாலுமகேந்திராவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை(பிப்.14) போரூர் மின் மயானத்தில் காலை 11.00 மணிக்கு தகனம் செய்யப்படுகிறது. பாலுமகேந்திராவின் மறைவையொட்டி, நாளை(பிப்.14) தமிழ் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
From what I know he is from a Malayalee family in Batticaloa, there were only a very few of them. His dad Vincent Balanathan was a teacher at St. Michaels ? His relatives owned the vegetarian restaurant Narayanan Cafe. I knew one of his cousins who visits him in Chennai and stays with him. Once when Kamalahasan went to his house to sign a contract for a movie with him my friend was there and he had the opportunity to say hello to Kamal.
Bar Road, Batticaloa where he lived when I was a little boy and his father, Balanathan master, was my 1st Algebra teacher at St. Michael’s College, Batticaloa. Heard lot good achievements he persuaded in the southern Indian film industry. Let him to Rest In Peace!