மகிந்த ராஜபக்சே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நோக்கி இனிச் செயல்படுவார். டக்ளஸ் தேவானந்தா யாழ்வெகுமக்களின் விருப்ப வாக்குகளை அதிகம் பெற்றிருக்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பனிரெண்டு ஆசனங்களை வென்றிருந்தாலும் வடகிழக்கு மேலாதிக்கத்தை அக்கட்சி இழந்துவிட்டது.
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தோல்வியை மறுபரீசீலனை செய்கிறது. புதிய ஜனநாயக் கட்சி, சம சமாஜக் கட்சி போன்ற தமிழ் சிங்கள இடதுசாரிக் கட்சிகள் அனைத்துமே தோல்வியைத் தழுவியிருக்கின்றன. மார்க்சிஸ்ட்டுகள் யதார்த்தம் குறித்த அறிவற்றவர்கள் என்கிறார் பின்னூட்ட மன்னர் மன்னன். புகலிட விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு பலத்த அடி என தேசபக்தர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
அரசியல்?
அரசியலுக்கு சிங்கள பெரும்பான்மை தேர்தல்களில் என்றேனும் இடமிருந்திருக்கிறதா? தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் அதிகாரப் பகிர்வு போன்ற கோரிக்கைகளுக்கு என்ன ஆனது?
அது பற்றிப் பேச இது தருணமில்லை. அபிவிருத்தி அரசியலின் காலம் இது. மகிந்தா இதைத்தான் சொல்கிறார். டக்ளஸ் தேவானந்தாவும் இதனைத்தான் சொல்கிறார்.
மகிந்த ஜனாதிபதி. டக்ளஸ் அமைச்சர். இவர்களிடம் அரசுத்துறைகள் இருக்கின்றன. இவர்களிடம் அரசுப் பணம் இருக்கிறது. இவர்களது தொகுதிகளுக்கு அதனது அபிவிருத்திகளுக்கு இவர்கள் தமது சொந்தப் பணத்தை அள்ளிக் கொடுப்பதில்லை. அரசுப் பணத்தைத்தான் கொடுக்கிறார்கள்.
அமைச்சரவை அதிகாரமும் அரசுப் பணமும் கொண்ட டக்ளஸ் தேவானந்தா தனிநபராக தேர்தலில் வெல்வது ஆச்சர்யமில்லை. அவரதும் அவரது எஜமானனான மகிந்தாவும் வடக்கில் வெல்வதுதான் ஆச்சர்யம்.
அது நிகழாது. ஓரு போதும் அது நிகழப் போவதில்லை.
விடுதலைப் புலிகளின் அழிவின் பின் தமிழ் சிங்கள முரண் முடிந்து போய்விடவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பணிரெண்டு தொகுதிகள் வெற்றி அதன் வெளிப்பாடு அன்றி வேறில்லை.
தமிழ்தேசியக் கூட்டமைப்பு மரபான தமிழ் உயர்வர்க்கத்தினரின் அரசியல் வேட்கைகள் கொண்ட கட்சிதான். என்றாலும் அது இலங்கைத் தீவின் இன்றைய முரண் அரசியலான இன அரசியலை முன்வைத்திருக்கிறது.
இனமுரண்பாடுதான் இலங்கையின் பிரதான அரசியல் முரண்பாடு.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழ தமிழ் மக்களினது பிரதிநிதி அல்ல. தலித் மக்களைக் குறித்த கரிசனை கொண்ட கட்சி அல்ல அது. தமிழினத்திலுள்ள ஓடுக்கப்படும் மக்கள் பாலான பார்வை கொண்டது அல்ல அக்கட்சி. தமிழ் முஸ்லீம்கள் பற்றிய மலையகத் தமிழர் பற்றிய கரிசனை கொண்டது அல்ல அக்கட்சி.
இதனைப் பற்றிய கரிசனையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கும்போதுதான் அது முழு தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துக் கூடிய கட்சியாக மாறும்.
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி புகலிட விடுதலைப் புலிகளின் வடகிழக்குக் குரல். அவர்கள் முன்வைத்திருந்த ஆயுதப் போராட்ட அரசியல் அழிவில் முடிந்திருப்பதை அவர்கள் இன்னும் உணரவில்லை.
விடுதலை அரசியல் என்பது மக்களின் அன்றாட நலன்களுடனும் அவர்களது அபிவிருத்தியுடனும் இணைந்தது. விடுதலைப் புலிகள் தமது அதிகாரத்தைக் குறித்து செலுத்திய கவனத்தை மக்களின் அன்றாட நலன்கள் அபிவிருத்தி போன்றவற்றில் செலுத்தவில்லை.
மக்கள் பெரும் அழிவுகளைச் சந்தித்திருக்கிறார்கள். சாவைச் சந்தித்திருக்கிறார்கள். அடிப்படை வசதியற்றவர்களாக இருக்கிறார்கள். சோர்ந்து போயிருக்கிறார்கள். வீடற்றவர்களாக வாழ்வுத் துணையற்றவர்களாக உடுக்க உடையற்றவர்களாக இருக்கிறார்கள்.
இதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் என்ன செய்தார்கள்?
அவர்களது இந்த வெற்றிடத்தில்தான் டக்ளஸ் வெற்றி பெறுகிறார். அவரது அபிவிருத்தி அரசியல் வெற்றி பெறுகிறது. காலம் காலமாக அபிவிருத்தி மறுக்கப்பட்ட நிராகரிக்கப்பட்ட தலித் மக்களது வாக்குகள் டக்ளசுக்குப் போவதில் ஆச்சர்யமில்லை.
டக்ளஸின் இந்த அரசியல் தற்காலிக அரசியல்.
வடகிழக்கு இணைப்பு பற்றி அரசியல் தீர்வாக டக்ளஸ் பேசுவதனைத் துப்புரவாக நிராகரிக்கிற அவரது எஜமானன் மகிந்தவுடனான அடிப்படை முரண் உக்கிரமடைகிறபோது அவரது முகம் என்னவாக ஆகும்?
புதிய ஜனநாயக் கட்சியும் சிறுபான்மைத் தமிழர் மகாசபையும் இந்தத் தேர்தல் திருவிழாவில் காணாமல் போன குழந்தைகள்.
புதிய ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அறிக்கை மிகுந்த அரசியல் முரண் கொண்டது. அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்திய ஆதிபத்தியம் என்றெல்லாம் எதிரிகளை வரையறுக்கிற அக்கட்சி சீனா என்று வருகிறபோது சீன அரசியலையும் இலங்கையில் சீன மூலதனத்தையும் வரையறுப்பதில் அது தடுமாறுகிறது.
இலங்கையின் இனமுரண்பாட்டில் சீனா எங்கே நிற்கிறது?
தமிழர்கள் அழிவுபற்றியும் இலங்கை ஒடுக்குமுறையும் பற்றியும் பேசுகிற அக்கட்சி தமிழர்களைக் கொன்றொழிக்க ஆயுதம் வழங்கிய சீனா பற்றிப் பேசாமல் தமிழர்களிடம் வாக்குக் கேட்பது ஒரு மிகப் பெரும் அரசியல் முரண். யதார்த்தமற்ற முரண்.
புதிய ஜனநாயகக் கட்சி அபிவிருத்தி அரசியலா பேசுகிறது? அல்லவென்றால் அது பேசுவது தமிழர் ஆதரவு அதிகாரப் பகிர்வு அரசியலும் அல்ல.
சிறுபான்மைத் தமிழர் மகாசபை குறைந்தபட்சம் தலித் வாக்காளர்களைச் சுவீகரித்த டக்ளசுடனோ ஈ.பி.ஆர்.எல்.எப் சிறிதரனுடனோ குறைந்தபட்ச உடன்பாட்டுக்கு வரமுடியவில்லை என்பது அதனது தனிநபர் அதிகார அரசியலையே முன்வைக்கிறது.
இலங்கையிலும் புகலிடத்திலும் அபவிருத்தி அரசியலின் அதரவாளர்கள் அதிகாரப் பகிர்வு அரசியல் பற்றிய எந்தவிதத் தெளிவும் அற்றிப் பேசிவருகிறார்கள்.
டக்ளசின் வெற்றி தமிழ் மக்களின் வெற்றி அல்ல. தமிழ் மக்களினிடையில் மகிந்தவின் பெருந்தேசிய அரசியலை முன்னிறுத்தும் குரலின் வெற்றி.
சித்தார்த்தன் ஈ.பி.ஆர்.எல்.எப் சிறிதரன் போன்றவர்களின் தனிப்பட்ட தோல்விகள், இடசாரிகள் தலித்துகள் போன்றோரின் விலக்கப்பட்ட அரசியல் போன்றன தெளிவான ஒரு உண்மையைச் சுட்டி நிற்கின்றன.
இன அரசியலில் நீக்குப் போக்கு நிலைபாடு என்பது சாத்தியமில்லை.
இனமுரண்பாட்டின் அடிப்படையை முன்வைத்து இனி தமிழர்களுக்கிடையில் இரு அரசியல் அணிதிரட்டல்கள்தான் சாத்தியம். டக்ளசின் மகிந்த ஆதரவு அரசியல் ஒன்று. பிறிதொன்று தமிழர்க்கான அதிகாரப் பகிர்வை முன்வைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் அடிப்படை இன முரண்பாட்டை முன்னிறுத்தும் வலதுசாரி அரசியல்.
தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு குறித்த அவர்களது அரசியல் தமிழ் மக்களுக்குள்ளாக ஜனநாயகபூர்வமாக நடந்தே தீர வேண்டிய தலித் முஸ்லீம் மலையக சிறுபான்மையின மக்களது அதிகாரப் பகிர்வும் குறித்ததான அரசியலாகத் தன்னை மாற்றிக் கொள்ளும்போதுதான் தமிழ் தேசிய அரசியல் இடதுசாரி அரசியலாக, முழுத் தமிழ் மக்களினதும் அரசியலாக ஆக முடியும்.
இது நடக்கக் கூடிய சாத்தியமான ஜனநாயக நகர்வு.
பிரதான எதிரிக்கு எதிராக இந்த நடந்தே தீரவேண்டிய நகர்வுகள் தமிழ் தேசியவாதிகளிடமும் அதுவல்லாத அரசியல் சக்திகளிடமிருந்தும் நடப்பது என்பது சாத்தியமா?
இது சாத்தியமாகாத வரையிலும் சிங்களப் பெரும்பான்மை தேர்தல் அமைப்பில் தமிழர்களுக்கு எந்த விதமான அதிகாரப் பகிர்வும் சாத்தியமாகப் போவதில்லை.
இன்றைய இலங்கை ஜனநாயகத்திலோ தேர்தல் அமைப்பிலோ சிங்களத் தரப்பிலிருந்து ஒருவர் ஜனாதிபதியாவதற்கோ நீண்டகாலம் அவர்கள் ஆட்சி செய்வதற்கோ தமிழர்களின் வாக்குகள் அவசியமில்லை.
இலங்கையை ஜனநாயக அமைப்பு என்று நம்புபவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்.
இட்லரது தேசிய சோசலிசத்தையும் அவரது பாராளுமன்றத்தையும் அவரது நீதியமைப்பையும் ஜனநாயக அமைப்பாகக் கருதுகிறவர்கள் மட்டுமே அதனது முதிர்ச்சியடையாத ஜனநாயக வடிவமான, தேர்தல் வடிவமான இலங்கை அரசியல் அமைப்பை நிஜமான ஜனநாயக அமைப்பு எனக் கருதுவார்கள்.
பாசிசம் பற்றிய படிப்பு என்பது துவங்க வேண்டிய இடமும் இதுதான்.
/ புதிய ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அறிக்கை மிகுந்த அரசியல் முரண் கொண்டது. அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்திய ஆதிபத்தியம் என்றெல்லாம் எதிரிகளை வரையறுக்கிற அக்கட்சி சீனா என்று வருகிறபோது சீன அரசியலையும் இலங்கையில் சீன மூலதனத்தையும் வரையறுப்பதில் அது தடுமாறுகிறது.
இலங்கையின் இனமுரண்பாட்டில் சீனா எங்கே நிற்கிறது?
தமிழர்கள் அழிவுபற்றியும் இலங்கை ஒடுக்குமுறையும் பற்றியும் பேசுகிற அக்கட்சி தமிழர்களைக் கொன்றொழிக்க ஆயுதம் வழங்கிய சீனா பற்றிப் பேசாமல் தமிழர்களிடம் வாக்குக் கேட்பது ஒரு மிகப் பெரும் அரசியல் முரண். யதார்த்தமற்ற முரண்./–
Nepal: China and India are currently locked under a tussle over Nepal. China can do little but has increased considerable influence with the Nepali Maoist. India is not expected to loose its clout in Nepal.
— Frontier India World Affairs – International News and Current Affairs.
சிரிக்கத் தொடங்கி இருக்கும் தமிழ் மக்கள் சிந்தனை விரிக்கும் தங்கள் கட்டுரை.எதிர்காலத்திற்கான் நம்பிக்கை இப்போதுதான் நமது மக்களீடம் துளீர்விடுகிறது.சம்பந்தர் அய்யா மான் ஒவ் த மாட்ச் ஆக நிமிர்கிறார் அவருக்கான கடமைகள் காத்திருக்கின்றன.மாறீக் கொண்டிருக்கும் உலகம் தமிழ் மக்கள் வாழ்க்கையிலும் சமானத்தையும் அமைதியையும் தரும்.விடியத் தொடங்குகிறது பொங்கல் நாள் சந்தோசம் மனமெங்கும் மலர்கிறது.உதய சூரியன் உதிக்கின்ற வேளயில் உறங்காதே தமிழா.
தமிழ்மாறன் உங்கட பெயர் நல்ல இருக்கு.
ஆனா நிங்க சொல்ற விஷயம் கொஞ்சம் யோசிக்க வைக்குது. எதிர்காலத்திற்கான் நம்பிக்கை இப்போதுதான் நமது மக்களீடம் துளீர்விடுகிறது. எண்டு சொலீர்ந்க அது என்ன நம்பிக்கை எண்டு கொண்ஷம் விபரமா சொல்றீங்களோ? 82 வீதமானவை வோட்டே போடல. இந்த லட்சணத்தில என்ன நம்பிக்கை?
சம்பந்தர் அய்யா மான் ஒவ் த மாட்ச் ஆக நிமிர்கிறார் அவருக்கான கடமைகள் காத்திருக்கின்றன. எண்டு சொல்ரிஈங்க. அவருக்கு என்ன கடமை வெளிநாட்டில இருக்கிற பேரபில்லைகளோட பொய் கொஞ்சி விளையாடுறதோ, இல்லாட்டி அறிக்கையள் விடுறதோ?
மாறீக் கொண்டிருக்கும் உலகம் தமிழ் மக்கள் வாழ்க்கையிலும் சமானத்தையும் அமைதியையும் தரும்.விடியத் தொடங்குகிறது பொங்கல் நாள் சந்தோசம் மனமெங்கும் மலர்கிறது. ஐயா தமிழ்மாறன் இது என்ன ஏப்பிரல் முலாம்திகதி ஜோக்கை பதினோராம் திகதி எழுதியிருக்கிங்க.
அதோட உதய சூரியன் உதிக்கின்ற வேளயில் உறங்காதே தமிழா. எண்டு வேற எழுதிரிங்க. உதயசூரியனில கேட்டவைக்கு கட்டுக்காசையும் காணேல்ல. நிங்க எங்கை இருக்கிறீங்க? உதயசூரியனில கொழும்பில கேக்க கனடாவில இருக்கிற இரண்டு தாரத்து மகன்ல இருந்து ஓர் தாரத்தோட மகனையும் கூப்பிட்டு கொழும்பிலையும் உதயசூரியன் உதயமாகல. நிங்க ஒரே ஜோக் அடிக்கிறீங்க.
பின்னூட்டங்களை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறுவதற்கான பின்னூட்டம் இது.
தேர்தல் திருவிழா முடிந்து இந்தியா சென்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சென்னை விமான நிலையத்தில் வைத்து இந்திய அரசாங்கத்தினால் நாடுகடத்தப்பட்டு இன்று நள்ளிரவு நாடு திரும்புகிறார்.
கடந்த டிசம்பர் மாதத்திலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறி புதிதாகக்கட்சியொன்றை ஆரம்பித்து கடந்த ஜனாதிபதிதேர்தலில் போட்டியிட்ட சிவாஜிலிங்கத்தை இந்திய அரசாங்கம் திருப்பி அனுப்பியிருந்தது.
.அத்துடன் கடந்தகாலங்களில் சிவாஜிலிங்கம் இந்திய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தேர்தல் திருவிழா முடிந்துவிட்டது, ஆனால் தொடரும் மர்ம கிணற்றிலிருந்து சடலங்கள் எடுக்கும் தொடரில் யாழ் அளவெட்டிப் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
இளவாலை வடக்கு அம்மன் கோவிலடியை சேர்ந்த 82 வயதுடைய இளையதம்பி தர்மலிங்கம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த சடலம் யாழ் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
திருவிழா எங்கே முடிந்துவிட்டது…..
அடுத்த திருவிழாவிற்கு இப்பவே பந்தல் கட்டத் தொடங்கப்போகிறார்கள் போல தெரிகிறது.
மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத்தயார் என ஈ.பி.டி.பியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறும் தருணத்தில் தாம் பதவிவிலகி, தேர்தல்களில் போட்டியிட உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிராந்திய மக்களுக்கு சேவையாற்றுவதே தமது முதன்மை நோக்கமாகும். பிராந்திய அரசியலில் ஈடுபடும் நோக்கில் அமைச்சுப் பொறுப்புக்களை இழக்க ஒருபோதும் தயங்கப் போவதில்லை. பயங்கரவாதத்தினால் தசாப்தங்களாக பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வந்த மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல் மற்றும் வடக்கின் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆனால் மாகாணசபையில் வீணை வாசிக்கப் போகிறாரா? அல்லது திரும்பவும் வெற்றிலை மெல்கப்போகிறாரா?
அல்லது தற்போது இருப்பது போல் வெற்றிலையை மென்று மென்று வீணையையும் தூசு படியாமல் வைத்து அழகு பார்க்கப்போகிறாரா?
எதோ மக்களுக்கு அவரின் சேவை தொடரட்டும். மக்களும் மாக்களாக அதைதான் எதிர்பார்க்கிறார்கள்.
வாழ்த்துக்கள்!
2010ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு புதிய நாடாளுமன்றத்தில் 144 (60.33 %)ஆசனங்கள் கிடைக்கவுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு 60 (29 .34 %) ஆசனங்கள் கிடைக்கவிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 14 (2.94 %) ஆசனங்களும்,
ஜனநாயக தேசிய முன்னணிக்கு 7 (5.49 %) ஆசனங்களும் கிடைக்கவிருப்பதாகவும் தேர்தல்கள் திணைக்களம் குறிப்பிட்டது.
இதில் முன்றில் இரண்டு பெருன்பான்மைக்கு இன்னும் 6 ஆசனங்கள் தேவையான நிலையில் மகிந்தவிற்கு சம்பந்தர் கூட்டணி கை கொடுக்கிறார்களா அல்லது ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தேசிய முன்னணியிலிருந்து அழைத்து வருகிறார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.
சுரேஷ் பிறேமச்சந்திரனிர்க்கு இன்னும் தொப்பையை வளர்க்கக் கூடிய… தம்பியாருக்கும் ஓர் நல்ல பதவி கொடுக்கக்கூடிய….. மனைவி மகளின் பெயரில் அவர்கள் குடிபுகுந்த கனடாவில் சொத்துக்கள் வாங்கக்கூடிய ஓர் அமைச்சர் பதவி கொடுத்தால் அவரும் இணக்க அமைச்சு அரசியல் செய்ய காத்திருக்கிறார் எனத் தகவல்கள் தெரிவிகின்றன.
புதிய நாடாளுமன்றத்துக்கான தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விபரம் வெளியீடு!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் 17 தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ரட்ணசிறி விக்கிரமநாயக்க, டி.எம்.ஜெயரத்ன, டளஸ் அழகபெரும, ஜீ.எல்.பீரிஸ், டியூ குணசேகர, திஸ்ஸ விதாரண,கீதாஞ்சன குணவர்த்தன, வண.எல்லாவள மேதானந்ததேரர், முத்து சிவலிங்கம், அச்சல ஜாகொட, விநாயகமூர்த்தி முரளீதரன்,ஜே.ஆர்.பி.சூரியபெரும, ஜனக பண்டார, பேராசிரியர்.ராஜிவ் விஜயசிங்க, ஏ.எச்.எம்.அஸ்வர், மாலினி பொன்சேகா, கமல் ரணதுங்க ஆகியோர் ஐ.ம.சு.மு. தேசிய பட்டியல் உறுப்பினர்களாவர்.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.ஐ.தே.க. சார்பில் 9 பேர் தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜோசப் மைக்கல் பெரேரா, ஹர்ஷ டி சில்வா, ஏர்ன் விக்கிரமரத்ன, டி.எம்.சுவாமிநாதன், ஆர்.யோகராஜன், அனோமா கமகே, ஹசன் அலி, சலீம் மொஹமட் ஆகியோர் ஐ.தே.க தேசிய பட்டியல் உறுப்பினர்களாவர்.
அத்துடன் ஜனநாயக தேசிய முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக அநுர குமார திஸாநாயக்க , டிரான் அலஸ் ஆகியோரும்,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினராக எம்.சுமந்திரனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்
இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.நாளை காலை 9.30க்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகிறது. சபையின் முதலாவது நடவடிக்கையாக சபாநாயகர் தெரிவு இடம்பெறும். சபாநாயகராகத் தெரிவு செய்யப்படும் நபர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் ஏழாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட 225 உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வர்.
இதனைத் தொடர்ந்து பிரதி சபாநாயகர் தெரிவு, குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவு, ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு பிரதம கொரடா, அவைத்தலைவர் தெரிவுகள் இடம்பெறும். நாவலப்பிட்டி மற்றும் திருகோணமலை கும்புறுப்பிட்டி பகுதிகளில் நடைபெற்ற மீள்வாக்குப் பதிவுகளின் பின்னர் இன்று வெளியிடப்படும் தேர்தல் முடிவுகளின் பின்னர் ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு, மற்றும் தேசியப் பட்டியல்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள 225 உறுப்பினர்களும் நாளை பாராளுமன்றம் செல்கின்றனர்.
இவர்களுள் சுமார் 70 பேர் வரையில் புது முகங்களாக உள்ளனர்.இதுவரை கிடைத்துள்ள தேர்தல் முடிவுகளின்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் இன்று தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.தமக்குக் கிடைத்த வாக்குகளின் படி கிடைக்கவுள்ள தேசியப்பட்டியல் தொடர்பாக இலங்கை தமிழரசு கட்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாகக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் அறிவித்துள்ளார்.
எனினும், ஐ. தே. க. தேசியப் பட்டியல் விவகாரத்தில் இழுபறி நிலையிலேயே உள்ளது. அத்துடன் ஐ. தே. க.- ஜனநாயக தேசியக் கூட்டமைப்புக்கு இடையே எதிர்க்கட்சித் தலைமை பொறுப்பு ஏற்பது தொடர்பாக இழுபறி நிலை தொடர்கிறது.
ஈ.பி.டி.பி.யினரால் வவுனியாவில் கப்பம் கோரி கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் பொலிஸாரால் மீட்பு!
வவுனியா வைத்தியசாலைக்கு சென்றபோது நேற்று முன்தினம் காலை ஈ.பி.டி.பி.யினரால் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் வவுனியா பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளார். வவுனியா ஈ.பி.டி.பி.அலுவலகத்தில் உள்ள உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இவர் வழங்கிய தகவலின் பிரகாரம் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
ஈ.பி.டி.பி. யினரால் கப்பம் கோரி கடத்தப்பட்ட குடும்பஸ்தரான 28 வயதுடைய தம்பிராசா ஜெயந்தன் என்பவரது குடும்பத்தினருடன் தொடர்பு கொண்ட ஈ.பி.டி.பி.யினர் கடத்தப்பட்டவரை விடுவிப்பதற்கு ஆறு இலட்சம் ரூபாய் தந்தால் விடுவிக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஈ.பி.டி.பி. உறுப்பினர் பேரம் பேசலில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் வவுனியா அலுவலகத்தில் இருந்து கைது செய்யப்பட்டு அவர் வழங்கிய தகவலின் பிரகாரம் இன்றையதினம் கடத்தப்பட்ட நபர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இவ் கடத்தல் குறித்து இராணுவ புலனாய்வுதுறையினர் என்று சிலர் ஈடுபடுவதாகவும் அப்படி ஈடுபடுவோர் பற்றிய தகவலை தமக்கு தந்து உதவ வேண்டும் என்றும், இல்லையேல் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா கடந்த சில நாட்களுக்கு முன்னர் லண்டன் பி.பி.சி.க்கு தெரிவித்திருந்ததுடன். இவ் கடத்தல் கப்பம் கோரல் சம்பவங்களிற்கும் தமது அமைப்பிற்கும் தொடர்பு இல்லை. எமது அமைப்பு மீது சேறு ப+சுவதற்காக சில ஊடகங்களால் செய்திகள் பரப்பபடுவதாக தெரிவித்திருந்த நிலையிலேயே ஈ.பி.டி.பி உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவில் வைத்து கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார் குறித்தநபர் கடந்த சனியன்று வவுனியா வைத்தியசாலைக்கு செல்லும்போது கடத்தப்பட்டிருந்தார் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில் வவுனியாவிலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் கைது செய்யப்பட்ட குறித்த உறுப்பினர் வழங்கிய தகவலையடுத்தே மேற்படி கடத்தப்பட்டிருந்த நபர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். இவர் வழங்கிய தகவலினை அடிப்படையாகக் கொண்டு ஈ.பீ.டீ.பீயின் தற்போதய மன்னார் மாவட்ட பொறுப்பாளரர் லிங்கேசை பொலிசார் தேடுவதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னர் வவுனியா ஈ.பீ.டீ.பீ முகாமில் முக்கியஸ்தராக இருந்த லிங்கேஸ் மன்னார் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் கடத்தல் சம்பவம் இடம்பெற்ற கடந்த 24 ஆம் திகதி வவுனியாவிலேயே இருந்து இந்த கடத்தலுக்கு கட்டளையிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பொலிசாரால் கைதான செல்லக்கிழி என்ற தீபன் தமது உறுப்பினர் அல்ல எனவும் தம்மிடம் பாதுகாப்பு கேட்டு காவற்துறையினர் வருவதற்கு சற்று முன்னரே தம்மிடம் வந்ததாக ஈ.பீ.டீ.பீயின் வவுனியா செயலகம் தெரிவித்துள்ளது.