தடைசெய்யப்பட்டுள்ள பகுதிகளில் மீன் பிடிக்க முடியாமையின் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்தும் திருகோணமலை மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்காணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையால் திருகோணமலை புல்மோட்டை வீதியூடான வாகன போக்குவரத்திற்கும் தடையேற்பட்டது.
குறிப்பிட்ட சில பகுதிகளில் மீன்பிடித்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மீன்பிடித்தலில் பெரும் பாதிப்பை எதிர்கொள்வதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மீன்பிடித்துறை அமைச்சிற்கு தகவல் வழங்கப்பட்ட போதும் இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றுஞ்சுமத்துகின்றனர்.
இந்நிலையில் தமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என அதிகாரிகள் எழுத்துமூலம் உறுதியளிக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் நாட்டின் பல் தேசியப் பண முதலைகளுக்கு நாட் கூலிக்கு வேலை செய்யும் மீனவர்களைக் குறிவைக்கும் இலங்கை அரசும் அதன் அடிவருடிகளும் திருகோணமலை மீனவர்கள் குறித்து மெளனம் சாதிக்கின்றனர். தமிழ்நாட்டிற்கு படகுகளில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகக் கூறும் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தனது நாட்டின் எல்லைக்குள் பாதிக்கப்படும் மீனசவர்களுக்கு ஆதரவாக எஜமான் மகிந்தவிடம் சிறிய கோரிக்கை கூட முன்வைக்க மாட்டார்.
என்னண்ணை இப்படி தமிழ்நாட்டிற்கு படகுகளில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகக் கூறும் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தனது நாட்டின் எல்லைக்குள் பாதிக்கப்படும் மீனசவர்களுக்கு ஆதரவாக எஜமான் மகிந்தவிடம் சிறிய கோரிக்கை கூட முன்வைக்க மாட்டார் எண்டு எழுதி இருக்கிறீங்கள். மன்னாரில தனக்கு வோட்டு இல்லை எண்டு இடகிலசுக்கு தெரியும்.பிறகு என் மன்னாருக்கு.
ஆனா இந்த மீனவர் பிரச்சினை தீர்ந்தா தனது வேண்டுகோளுக்கு இணங்க மகிந்த பிரச்சனையை தீர்த்து வைத்தததா அறிக்கை விடுவார்.
தான் சிறையில இருந்து தப்பி இந்தியா ஓடினதை இந்தியா சிறையில இருந்ததை மறந்து இப்ப சிறையில இருக்கிற அப்பாவிகளை காணாமல் போனவையை பற்றி அக்கறை கொள்ளாத இடக்கிழசு தானே.
போறபோக்கில ஒரு புண்ணாக்கு என்னை பாத்து ஈழத்து எம்.ஜி.ஆர் அவுத்துவிட்டு போயிட்டான், அப்பதிலயிருந்து தொட்டதெல்லாம் அட்டமத்துசனியாய்தான் இருக்குது…
‘1994ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ்.மாவட்ட மக்களின் மேம்பாட்டில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார். பலரின் அவதூறுமிக்க பரப்புரைகளுக்கு மத்தியிலும் தனிமனிதனாக நின்று செயற்படுபவர். அவரது அர்ப்பணிப்பு மிக்க தொடர் உழைப்பே இன்று யாழ்.மாவட்டத்தை நிமிர வைத்துள்ளது என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.’
இப்படியோரு வாழ்த்து இவருடைய வால் சொல்லும் நிலைமை. அப்ப பலர் அவதூறுமிக்க பரப்புரை செய்யினம், சிலர்தான் வாழ்த்தினம். அதோட 94 தொடக்கம் வடக்கில மற்ற கிளிநொச்சி, மன்னர், முல்லைத்தீவு மாவடங்களை விட்டிட்டு யாழ்.மாவட்ட மக்களின் மேம்பாட்டில மட்டும்தானோ அதிக அக்கறையுடன் செயற்பட்டுவருகினம்?
அதோடை இந்தியாவில இருந்து சரதொட பாட்டா செருப்போட வந்தவர் ஏன் இன்னும் தனி மனுஷனா நிக்கவேணும். ஏன் இன்னும் இவருக்கு பின்னால ஒழுங்கான மக்கள் இல்லையோ.
இவருக்கு பாண்ட் வாத்தியத்தோட மாலை அணிவிச்சு பள்ளி மாணவ மங்கைகள் அல்லது நடன மங்கைகள் நடனமாட அழைத்து சென்றால் தனது பரிவாரத்தோடு செல்லமாக செல்வார். இங்கோ திருகோணமலையில் பாதிக்கப்பட்ட மீனவர் போராட்டம், இந்த இலட்ச்சனதில இவராவது தமிழ்நாட்டிற்கு படகில சென்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாவது.
எல்லாம் சும்மா!
மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!
எல்லாம் சும்மா!
இப்ப யாழ் மாவட்டதில காட்டாட்சி!
தீவகத்தில என்னாட்சி?
Yeah, three years a very long time to clear a lot of things. They say in America: if you do not know something please ask others. 1964. LBJ. Indiana, USA.
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயலால் வடபகுதி மீனவர்கள் சட்டத்தை கையில் எடுக்கும் நிலைமை ஏற்படும்’
கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் யாழ். மாவட்ட சம்மேளனத் தலைவர் எமிலியாம்பிள்ளை http://www.sikaram.lk/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF/
வட மாகாணம் என்றல்
டக்ளஸ் வருவர் திருமலை கிழக்கு மாகாணத்தில் அவர் எப்படி வருவர் கிழக்கு மாகாண மீனவர் பிரதிநிதி தான் வருவார்கள்