திருகேோணமலை மாவட்டத்தின் புல்மோட்டைப் பிரதேசத்தில் பொதுமக்கள் இன்று நில அளவை அதிகாரிகளுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். இன்று புல்மோட்டைப் பிரதேசத்தின் 14ம் கட்டை பிரதேசத்தை அண்டிய நாக விகாரைக்கான காணியை அளவிடுவதற்காக நில அளவைத் திணைக்களத்தினால் ஏற்கெனவே விதிக்கப்பட்ட பல தடைகளையும் தாண்டி அதிகாரிகள் மீண்டும் திடீரென வருகை தந்தனர்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பிரதேச பொதுமக்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முற்பட்டனர். இவ்விடயம் தொடர்பாக புல்மோட்டை ஜம்மியத்துல் உலமா, பள்ளிவாயல்களின் தலைவர்கள் உப தவிசாளர், பொலிஸ் மற்றும் கி.மா.ச.உ அன்வர், ஊர் பிரமுகர்கள் ஆகியோர் நில அளவைத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளிடம் பேசி காணி அளவிடுவதனை உடனடியாக நிறுத்தம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்கள் சம்பவ இடத்தை விட்டு அகன்று சென்றதாக பிரதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.
1965. Trincomalee. Scared City. Anuradhapura. Polonnaruwa. Leader Samuel James Velupillai Chelvanayagam. I also heard this over the radio. Nane Inthiran. Nane Santhiran. 1990. Batticaloa. Sri Lanka Police.
Do I see another Weliveriya in the making ?
இந்துக்கள்தான் இளிச்சவாயர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கன்னிகா வெந்நீர் ஊற்றுக் கிணறுகளை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தொல்பொருள் திணைக்களத்தின் சார்பில் அங்கிருந்த பிரதேச சபை அறிவிப்புப் பலகையை தூக்கி எறிந்துவிட்டு அதனைக் கைப்பற்றிய போது இந்துக்கள் சும்மா இருப்பதே சுகம் என்று இருந்துவிட்டனர். நாமமது தமிழர்கள் இருப்பது போல சமயமது இந்துக்களாக இருப்பவர்களே பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இஸ்லாமியர் இடம் இருந்து இந்துக்கள் பாடம் படிக்க வேண்டாமா?