மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்துள்ளனர். இது மேற்குவங்க அரசியல் சூழலையே பதட்டமாக்கி இருக்கிறது.
மோடி இந்தியாவின் பிரதமரான பின்னர் பாஜகவின் அணுகுமுறை அதிர்ச்சியைக் கொடுக்கிறது அத்தனை மாநிலக் கட்சிகளுக்குமே, பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கட்சியே தன்னை காப்பாற்றிக் கொள்ள தடுமாறும் நிலையில் மாநிலக் கட்சிகளின் நிலையோ கவலைக்குறியதாக இருக்கிறது.
மேற்கு வங்க தேர்தல் களம் கொஞ்சம் வித்தியாசமானது. தமிழகம் போன்று மாநிலக் கொள்கையை பிரதிபலிக்கும் கட்சிகள் எதுவும் அங்கு இல்லை. காங்கிரஸ் தலைவராக இருந்த மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை துவங்கி 30 ஆண்டுகளாக சிபிஎம் கையில் இருந்த ஆட்சியைக் கைப்பற்றினார். மேலோட்டமாக வங்காள அரசியல் பேசினார்.
2011-ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து வென்று வந்த மம்தா பானர்ஜியால் இந்த முறை வெல்ல முடியுமா என்பது கேள்விக்குறி என்கிறார்கள். காரணம் சிபிஎம் தொண்டர்கள் தலைவர்காள் என இடது கட்சியைச் சேர்ந்தவர்கள் பாஜகவுக்குச் சென்றார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் பாஜகவில் இணைந்தனர். முக்கியமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவரான முகுல் ராய் பாஜகவில் இணைந்தார். அவர் கட்சியின் கணிசமான கட்டமைப்பை பாஜகவில் கொண்டு போய் சேர்த்தார். விளைவு 2019-ஆம் ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 18 இடங்களில் பாஜக வென்றது. பாஜக இத்தனை பெரிய வெற்றியைப் பெறுவது இதுவே முதன்முறை.
சில மாதங்களுக்கு முன்னர் நடந்த மூன்று தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வென்றாலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக பாஜக இரண்டாம் இடத்திற்கு வந்தது. இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியினரும் தனித்தனியாக போட்டியிடும் நிலையில், இப்போது மம்தாவின் நம்பிக்கைக்குரிய விசுவாசியான சுபேந்து அதிகாரியும் பாஜகவில் இணைந்துள்ளார்.
மொத்தத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு வேகமாக பாஜகவில் கரைந்து வருகிறது.
விரைவில் மேற்குவங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜகவின் பெரும்பான்மையான தலைவர்களையும் அதிகாரிகளையும் மேற்குவங்கத்தில் பாஜக களமிரக்கியுள்ளது. இதுவரை இந்திய தேர்தல்களில் வலிமையான மக்கள் தலைவரகளாக வலம் வந்த கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, லாலுபிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள் இதுவரை பாஜக போன்று அதிகார பலமும் பிற கட்சிகளை உடைக்கும் தந்திரத்தை செய்வதோடு, தேர்தல் களத்தையே தங்களுக்கு சாதகமாக மாற்றும் தன்மையும் கொண்ட கட்சியை இதுவரை சந்தித்ததில்லை.
இதே சூழலைத்தான் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் எதிர்கொள்கிறார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக தமிழகத்திலும் ஆட்சியமைக்க முயல்வது குறிப்பிடத்தக்கது.
Attachments area