ஊடகங்களை அறியப்பட்ட குற்றவாளிகளினூடாக அதிகாரங்கள் தமது கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தும்
கோலோச்சும் நாடுகளின் பொதுவான போக்காக அமைகின்றது. அரபு நாடுகளிலும் ஆப்கானிஸ்தானிலும் கூட இதை ஒத்த நிலைகளைக் காணலாம். இலங்கையில் ஊடகங்கள் பலவற்றை நேரடியாக மிரட்டிக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட மேர்வின் டி சில்வா மகிந்த ராஜபக்சவினால் ஊடகத்துறை அமைச்சராக்கப்பட்டது அறியப்பட்டதே.
இந்த நிலையில் கே.பி என்ற
குமரன் பத்மநாதன் இலங்கையின் இரண்டு முக்கிய ஊடகங்களையும் பிரித்தானியாவிலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றையும் தனது வியாபார முதலீட்டின் ஊடாகக் கொள்வனவு செய்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தினக்குரல் நாழிதளும், குகநாதனின் யாழ் ஒலி தொலைக்காட்சியும் குமரன் பத்மநாதனின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரவிருப்பதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதே வேளை பிரித்தானியாவிலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிச் சேவையிலும் கே.பி முதலிட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.









பல ஊடகங்கள் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை தெரிவிக்கின்றன
கற்பனைக்கு எட்டாத அற்புதங்கள் செய்து வரும் குமரன் பத்மநாதன் பாதங்கள் பணீந்து, ஓரே ஒரு கேள்வி உலகெங்கும் ஒளீத்து திரிந்த தாங்கள் சைனிங்காக இருக்கிறீர்கள், முதலிடுகிறீர்கள் என்றால் இந்தப் பணம் வந்த திசையைக் காட்டுங்கள்?
நண்பர் தமிழ்மாறன் கேட்ட கேள்வி நியாயமானது.அவர் அப்பப்போ இந்த மாதிரி கேட்பது மகழ்ச்சி தருகிறது.இந்த மாதிரி கருணாநிதியை பற்றி வரும் போது மட்டும் நிதானம் இழந்து விடுவார்.
அண்ணன் தமிழ்மாறன் அவர்களே! பங்கருக்கையே வாழ்க்கையோட்டிய கோ–க்கடவுளே சுவிமிங்பூல்கலும் ,பங்களாக்களும் கட்டினார் என்றால் அட்டதிக்குகளுக்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவருக்கு எத்திசையிலிருந்து பணம் வந்ததென்று கேட்கின்றீர்களே???தயவு செய்து உங்களிடம் ஒன்றைக்கேட்கின்றேன் நீங்கள் என்னத்தை சொல்ல வாறீங்கள், கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்களேன்.