யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின்; திருத்தியமைக்கப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலில் 2009 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் பிரகாரமிருந்த 4,30015 பேரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் நாளை வெளியாகவுள்ள யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் திருத்தியமைக்கப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் தொடர்பான விபரங்களை வெளியிட்டிருக்கிறார்.
இந்த விபரங்களின் அடிப்படையில், யாழ்.தேர்தல் மாவட்டத்தின் 2009 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியிலில் 8,16,500 வாக்களார்கள் பட்டியலிடப்பட்டிருந்ததாகவும் இம்முறை 4,78,224 பேரே பட்டியலிடப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ள்து. இதனடிப்படையில் இம்முறை வாக்காளர் பட்டியலில் 4,300015 பேரது பெயர்கள் நீக்கப்பட்டும் 92,243 பெயர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டும் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. யாழ்.குடாநாட்டை விட்டு நிரந்தராமாக வெளியேறியவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
நாளை வெளியிடப்படவுள்ள வாக்காளர் பட்டியலில் தமது பெயர்களை இணைக்க வேண்டியவர்கள் விண்ணப்பங்களை இம்மாதத்திற்கு இடையில் சமர்ப்பிக்க முடியும். இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்தோர் ஈழத்திலுள்ள தமது நெருங்கியவர்களுக்கு இது குறித்த அவசியத்தை அறிவிப்பது இதன் ஒரு பகுதியாக அமையலாம்.
வாக்குத் தெரியாத சனத்துக்கு வோட்டுப் பதிவு பற்றீயா தெரியும்?