தா. பாண்டியன் உட்பட தமிழ் அறிஞர்கள் ஒன்பதின்மருக்கு தமிழக அரசு விருதுகள் வழங்கி கெளரவிக்க உள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இச்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
தா.பாண்டியனுக்கு அம்பேத்கார் விருது வழங்கப்படுகிறது. அம்பேத்காரை திட்டமிட்டு அவமானப்படுத்த என்றே தா.பாண்டியனுக்கு விருது வழங்கப்பட்டதா அன்றி ஜெயலலித்தாவின் அடிமை என்பதற்காக விருது வழங்கப்பட்டதா என்று விவாதம் எந்தக் கோணத்தில் முன்வைக்கப்பட்டாலும் அம்பேத்கார் அவமானப்பட்டவரே.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான படுகொலையை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து ஆதிக்க சாதியினருக்கான ஜெயலலிதாவின் ஆட்சிக்கு பொழிப்புரகாஇ எழுதும் பாண்டியனுக்கு அம்பேத்கார் விருது வழங்கியது அம்பேத்காரை அவமானப்படுத்துவதற்கே.